தாரகை 10

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"சார் ஷி இஸ் ஜானவி என் மருமகள் பெஸ்ட் ஸ்டுடென்ட் இன் த அகாடமிக் இயர். ஷி ஹேட் குட் பெர்ஸன்ட்டேஜ் இன் லாஸ்ட் செம்.. இவள நீங்க இந்த காலேஜ்ல சேத்துக்கணும்".என்றார் பிரசாத்.

அபிநயன் கண்கள் அதிர்ச்சியில் விரிய... ஜானவி பிரசாத்தை ஆச்சர்யமுடன் பார்த்தாள்....

ஜானவி சற்று சோகமாவே இருந்தாள்.. அவள் தோழிகளை இனி பார்க்க முடியதை எண்ணி கவலை அடைந்தாள்.

அபிநயனோ அவளை பிரின்சிபல் அந்த கல்லூரியில் அனுமதிக்க கூடாது என இறைவனிடம் வேண்டி கொண்டிருந்தான்..

அபிநயன் இறைவனிடம் வேண்டி கொண்டிருக்க....

"ஷோர் சார்...நீங்க எவ்வளவு பெரிய பிஸிசினஸ் மேன்.. எனக்கு உங்க மேல நிறைய மரியாதை இருக்கு சார் இந்த பொண்ணு மெரிட் ஸ்டுடென்ட்னு வேற சொல்றிங்க எப்படி என்னால ரிஜக்ட் பண்ணிட முடியும்.."என்றார் பிரின்சிபல் பணிவான குரலில்..

"டேய் வேணாம்டா.. நீ அந்த பொண்ணுக்கு அட்மிஷன் கொடுக்க கூடாது...டேய் நீ சரியான இடியட்...நீ இந்த காலேஜ்ல அட்மிஷன் கொடுக்க போறேன்னு சொல்றது ஒரு பேய்க்கு இல்லை பிசாசுக்கு..ப்ளீஸ் வேண்டாம்..." மனதுக்குள்ளே புலம்பி கொண்டிருந்தான் அபிநயன்..
"நான் எப்படி அவளை வீட்லயும் காலேஜ்லையும் ஒரே அடியா சமாளிப்பேன் 😭.."

பிரசாத்திற்கு ஜானவி நன்றி கூறியவள் அபிநயனை ஏளனமாக பார்க்க அவனோ கோபத்தில் கொந்தளித்து கொண்டிருந்தான்..

அபிநயன் உன் பேர நீ எப்படி இந்த காலேஜ்ல காப்பாத்திக்க போறான்னு பார்கிறேன் என்று பார்வையால் அவனுக்கு கூறவும் அவள் பார்வை அவனுக்கு புரிந்தது..

பிரசாத் அவர்களை விட்டு விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

ஜானவிக்கு அன்றைய நாள் புது நண்பர்களுடன் மகிழ்ச்சியாகவே முடிந்தது...

மறுநாள் அழகிய விடியளுடன் கதிரவன் வருகை தந்திருக்க இருவரும் கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருந்தனர்..

அபிநயன் தன் சட்டையின் மேல் பொத்தானை போடாமல் விட்டிருந்தான்.. பார்க்கவே மிகவும் அழகிய இளைஞனாக இருந்தவன் கண்ணாடியை பார்த்து தன் தலையை வாரிக்கொண்டே கண்ணாடி வழியே ஜானவி அங்கு வருவதை காண அவளோ ஆனார்கலி சுடிதார் அணிந்திருந்தவள் சிறிது முடியை மட்டும் எடுத்து களிப் போட்டு மீதியை விரித்து போட்டிருந்தாள்...
தாலியை அவள் ஆடைக்குள் மறைத்து கொண்டு நின்றவள் அவள் அழகில் மற்றவரை மயக்கிவிடும் வண்ணம் நின்று கொண்டிருந்தவளின் கூந்தல் காற்றில் நடனமாட அவனோ ஒரு நிமிடம் அவளை விழி அசையாமல் கண்டு கொண்டிருந்தான் அவள் அழகில் மயங்கி..

அவனை பார்த்தவளும் ஒரு நிமிடம் உறைந்து நின்றாள் அவன் முன்..
சில நொடிகளுக்கு பின் முகத்தை சுருக்கி கொண்டு வேறு பக்கம் அவள் பார்த்து நிற்க அவனும் முகத்தை திருப்பி கொண்டான்..

ஜானவி கண்ணாடியை எட்டி பார்த்து கொண்டிருக்க அவனோ கண்ணாடி முன்பு நின்றிருந்தவன் அங்கிருந்து நகராமல் இருக்க அவளோ ஓரத்தில் தெரியும் கண்ணாடியில் பார்க்க முயற்சி செய்ய அவனோ அவளை பார்க்க விடாமல் மறைத்து கொண்டிருந்தான்.

அவனை முறைத்தவள் அவனை பின் புறம் இழுத்து விட்டு அவள் கண்ணாடி முன் சென்று நெற்றியில் பொட்டு வைத்து வைத்தவளை பார்த்தவன் கோபம் காற்றில் பறந்து சென்றது...

அவனோ அவள் அழகில் மயங்கி நின்று அவளை பார்த்து கொண்டு நின்றான்..

அவளும் அவனை கண்ணாடி வழியே பார்க்க இருவரின் விழியும் ஒன்றை ஒன்று ஈர்த்து நிற்க்க அவர்கள் இருவரும் அதிலிருந்து வெளியே வர முடியாமல் சிலை போல் நின்றிருந்தனர் சில நொடிகள்..

பிரசாத் அவர்களை அழைக்கவும் இருவரும் தங்கள் உலகிலிருந்து வெளியில் வந்தவர்கள் இருவரும் கீழே செல்ல பிரசாத் அபிநயனிடம் ஜானவியை கல்லூரிக்கு அவனுடன் அழைத்து கொண்டு செல்லுமாறு கூற அவனும் தலையை அசைத்தான்...

அவள் அவனை பார்த்து ஏளனமாக சிரித்து நின்றாள்..

"நீ தான் அவள எல்லா நேரமும் பாத்துக்கணும் அதே மாதிரி அவள கூட்டிட்டு போறதும் கொண்டு வந்து விடறதும் இனிமேல் உன் வேலை... எவெரிடே.." என்றார் பிரசாத் திடமான குரலில்..

"என்னது...நான் என்ன அவளுக்கு பர்சனல் டிரைவரா..." மனதிற்குள் நினைத்து கொண்டவன் முகம் ஒருவித எரிச்சலை காண்பித்தது.

அவன் முகத்தை பார்த்தவள் வெளிப்படையாக அவன் முன் சிரிக்க அவளை பார்த்து முறைத்தவன் "சரி டேட்" என்றவாறு அங்கிருந்து சென்று விட அவளும் அவன் பின்னே சென்றாள்.

சட்டென திரும்பி அவளை நிறுத்தியவன் "எங்க போற" என வினவவும் சற்றே புருவத்தை உயர்த்தியவள் "மாமா சொன்னத மறந்துட்டியா என்ன" என்றாள் ஜானவி புருவம் உயர்த்தி..

"இங்க பாரு ஜானவி காலேஜ்ல எனக்குனு ஒரு நல்ல பேர் இருக்கு அத நான் ஸ்பாயில் பண்ணிக்க வேண்டாம்னு நினைக்கிறேன்.."

"வாட் யூ மீன்?.." என்றாள் அவள் குழப்பமாக..

அபிநயன், "ப்ளீஸ் தயவு செய்து காலேஜ்ல நீ என் ஒய்ப்னு மட்டும் சொல்லிடாத.. என் பிரண்ட்ஸ்க்கு நமக்கு கல்யாணம் ஆகிருச்சுனு தெரிய வேண்டாம் நினைக்கிறேன்.."

அவள் முகத்தை சுருக்கியவள் அவனை புரியாமல் பார்த்து நின்றவளின் மனம் லேசாக வலித்தது..

"பாரு அபிநயன் எனக்கும் விருப்பம் இல்லை தான் நம்ம பர்சனல் விஷயத்தை மத்தவங்க கிட்ட சொல்ல..என்னுடைய கனவு லட்சியம்லாம் வேற..நானும் இத அட்சப்ட் பண்றேன்..."

"சோ அப்போ உனக்கும் ஓகே தான?.."

"ம்ம்..எஸ் " என்று தலை அசைத்தாள் ஜானவி..

"அப்படினா நீ என் கூட காலேஜ்க்கு வர முடியாது.. ஏன் நீ காலேஜ் பஸ்ல வர கூடாது?..பத்து நிமிஷம் நடந்து வா அதுக்குள்ள பஸ் வந்துரும் பை" என்றவன்...அவன் இருசக்கர வாகனத்தில் ஏறி அங்கிருந்து விரைந்தான்..

"அபிநயன்..." என கோபமாக கத்தியவள் நடந்தே பேருந்து நிலையத்திற்க்கு சென்றாள்..

சற்று நேரத்தில் பேருந்து வரவும் அதில் அவள் ஏற அவளை அனைவரும் வித்தியாசமாக பார்க்க அவளுக்கு அப்பார்வைகள் சங்கடத்தை ஏற்படுத்தியது..
அவள் சென்று ஒரு தனி இருக்கையில் அமர்ந்தாள்..
சிலர் கத்திகொண்டு அரட்டை அடித்து கொண்டிருக்க அவள்
அசௌகிரியமாக உணர்ந்தாள்..

கல்லூரியில் அபிநயன் அவன் வகுப்பில் அமர்ந்து அவன் நண்பர்களுடன் அரட்டை அடித்து கொண்டிருக்க ஜானவி கல்லூரிக்கு வந்து சேர்ந்தாள்..

வகுப்பிற்கு சென்றவள் அனைவரையும் பார்க்க அவரவர் பேசிகொண்டிருந்தனர்...அவள் அபிநயனை பார்க்கவே அவனோ அவன் நண்பர்களுடன் பேசிகொண்டிருந்தான்..

அவனை கோபமுடன் முறைத்தவள் "சிடுமூஞ்சி என்னையா பாதில விட்டுபோன உனக்கு இருக்கு டா... இனிமேல் எப்பவும் உன்னை நான் நம்ப மாட்டேன்" என நினைத்து கொண்டிருக்க..

"என்ன ஜானவி நீ உன் காலேஜ் பஸ் ட்ரிப்ப ரொம்ப என்ஜாய் பண்ண போல.."என்ற அபிநயனை பார்த்தவள் முனகி கொண்டே அவள் இருக்கையில் சென்று அமர்ந்தாள்..

நண்பர்களுடன் பேசிகொண்டிருந்த அபிநயன் யாரும் பார்க்காத நேரம் அவளை ஓரகண்ணில் பார்த்து கொண்டிருந்தான்..

"ஹாய் ஜானவி" என்ற குரல் வந்த திசையை திரும்பி பார்க்க அவள் புதிய தோழி நிக்கிதா நின்று கொண்டிருந்தாள்..

அவள் ஜானவி அருகில் வந்து அமர்ந்து பேச தொடங்கினாள்..

"என்ன ஜானவி.. நீ எதுல வந்த" என நிக்கிதா வினவ ஜானவி அபிநயனை பார்த்து முறைத்தவள் "பஸ்ல தான்" என்றாள் அவள் சலிப்பு நிறைந்த குரலில்..

"ஓ...ஏய் உனக்கு இந்த காலேஜ் பத்தி ஏதாவது தெரியுமா?.."

"காலேஜ் பத்தி என்ன...இல்லை தெரியாது...ஏன்?" என்றாள் ஜானவி குழப்பமுடன்..

"இந்த காலேஜ்ல நீ கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கனும் ஜானவி.. நீ மட்டும் இல்லை எல்லா கேர்ள்சும் தான்..நீ இந்த காலேஜ்க்கு புதுசுல அதான் உன் கிட்ட சொன்னேன்..."

தன் தோழியை புரியாமல் பார்த்தவள் ஏன் என்று கேள்வி எழுப்ப..

"ஜானவி இந்த காலேஜ்ல ரெண்டு கேங் இருக்கு... ஒன்னு குட் இன்னொனு பேட்..நல்ல கேங் வெரி பெஸ்ட் பட் இன்னொரு கேங் ரொம்ப மோசமானது..."

"என்ன? யாரு அவங்க.."

"குட் கேங் லீடர் நம்ம அபிநயன் காலேஜ் ரெப்பும் கூட.." என்ற நிக்கிதாவை பார்த்தவள்
"அப்படினா அது தான் மோசமான குரூப்பா இருக்கும்.." என்றாள் ஜானவி எரிச்சளுடன்..

"இல்லை ஜானவி அவங்க ரொம்ப ஜாலி டைப்..நல்லவர்களும் கூட..." என்றாள் நிக்கிதா..

"ம்ம் 😊😁..." போலியான சிரிப்பை உதிர்த்தாள் ஜானவி..

"உனக்கு ஒன்னு தெரியுமா ஜானவி?..அபிநயன் நம்ம காலேஜ்ஜோட ரோமியோ அவன் பின்னால எவ்வளவு பொண்ணுங்க சுத்திட்டுருக்காங்கனு தெரியுமா...எல்லாருக்கும் அவன ரொம்ப பிடிக்கும்..." என்றவளை முறைத்தவள் "இதெல்லாம் ஓவர்..
எல்லோரையும்னு சொல்லாத..
பிடிக்காதவங்களும் இருப்பாங்க..இருக்காங்க.." என கூறி முடிக்கும் முன்

"இல்லை ஜானவி எல்லோருக்கும் அவன பிடிக்கும்..அவனுக்கு என்ன குறை சொல்லு?... பாக்கவும் செமயா இருக்கான் சூப்பரா படிக்கிற பையன், ரொம்ப ஜாலி டைப்..வசதியான வீட்டு பையன் ரொம்ப நல்ல பையன்... அவனை தப்பா சொல்ல என்ன இருக்கு சொல்லு..அப்படி பிடிக்கலைன்னா அந்த பொண்ணு கண்ணுல தான் பிரச்சனை... எனக்கும் அவன ரொம்ப பிடிக்கும்" என்றாள் வெட்கமுடன்..

ஜானவி வித்தியாசமான உணர்வை உணர்ந்தவள் முகத்தை சுருக்கி பொய்யாக நகைத்தாள்..

"அவன் உண்மையா அவ்வளவு ஹாண்ட்சமாவா இருக்கான்..???"என நினைத்தவள் "ஆமா ஜானவி சில நேரம் நீயும் அவன வெச்ச கண்ணு வாங்காம தான பாக்குற" என்றது அவளது மனம்..

"அப்படிலாம் இல்லை நிக்கிதா..சரி இவங்கள விடு அந்த டேஞ்சரஸ் கேங் பத்தி சொல்லு"

"டேஞ்சரஸ் கேங் லீடர் விக்னேஷ்... அவன் ஒரு லோக்கல் எம்பி மகன் தான் ஆனால் அவன் ரொம்ப மோசமானவன்..அவன் செய்ற தப்ப ஒருத்தரும் கேள்வி கேட்க முடியாது அபிநனயன் தவிர.."

"அபிநயன்...??"

"ஆமா ரெண்டு பேரும் வசதியான வீட்டு பசங்க...அந்த விக்னேஷ் இந்த காலேஜ்ல பல பொண்ணுங்க வாழ்க்கைல விளையாடிருக்கான்...
அவன் ஒரு இறக்கம் இல்லாதவன்...யாருக்குமே அவன பிடிக்காது...அவன எதிற்கிற தைரியம் அபிநயனுக்கு மட்டும் தான் இருக்கு..ஆனால் அந்த விக்னேஷ் ரொம்ப அசிங்கம் பிடிச்சவன்" என்றாள் அருவருப்புடன்..

ஜானவியோ அபியனை பற்றி கேட்டதும் உள்ளுக்குள்ளே மகிழ்ந்து கொண்டாள்..

சட்டென அபிநயன் அவளிடம் நடந்து கொண்டது அவள் நினைவிற்கு வர "ஓகே நிக்கி விக்னேஷ் எங்க??"

"அவன் இந்த ரெண்டு வாரமா கிளாஸ் அட்டன் பண்ணவே இல்லை......"

"ஓ...அப்படியா " என்றாள் ஜானவி...

நாட்கள் மெதுவாக நகர தொடங்கியது...

அபிநயன் ஜானவி சண்டை தொடர்ந்து கொண்டே சென்றது.. இந்த நாட்களில்
இருவரின் மனமும் ஓரளவு மாறியிருந்தது..
கல்லூரியில் அவனுடன் வேறு பெண்கள் பேசிகொண்டிருப்பதை பார்த்தாலே ஜானவிக்கு எரிச்சல் தோன்ற தொடங்கியிருந்தது..அதே போல அபிநயன் அவளுக்கு தெரியாமல் அவள் அழகையும் அவள் செயல்களையும் ரசிக்க தொடங்கியிருந்தான்..

அப்போது வரை அவர்கள் இருவரும் அறிய வில்லை அவர்களின் வாழ்க்கை திசை மாறி வேறு பாதையில் செல்ல போகிறது என்று..

தொடரும்..

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro