16

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அடுத்த நாள் காலையில் அழுகுரலாய் கேட்க கண்விழித்த வித்யுத் அதிதி தூக்கத்தில் முனங்க அவளை தட்டி கொடுத்து மீண்டும் உறங்க வைத்தவன் கண்ணை கசக்கி கொண்டே அம்மாஆ...என்று வெளியே வந்தவன் அவன் கண்ட காட்சியில் உறைந்து நின்றான்.

தினம் அவன் எழுந்ததும் முத்தமிட்டு அவனை தூக்கி கொஞ்சி,அவனுக்கு தலை வாரி,அவனின் ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்து ஒரு தாய் என்பதை விட நல்ல தோழியாய் மாரிலும் தொழிலும் போட்டு விளையாடி சிரிக்க வைத்த அவன் தாய் இன்று பேசாது தரையில் படுத்திருந்தாள் உயிரற்ற ஜடமாய் .

அவனை கண்ட வாசுகி மேலும் அழ அவன் திக்ப்ரம்மை பிடித்ததை போல் அவள் அருகில் சென்று அமர்ந்தான் .சிறிது நேரத்தில் உறக்கம் களைந்து எழுந்து வந்த அதிதி அனைவரும் அழுவதை பார்த்து பயந்து சாருவின் பிணத்தின் அருகே சென்று அமர்ந்தவள் ஏதும் புரியாமல் அவளின் பிணத்திடம் "அம்மா யாருமா இவுங்கல்லாம் ஏன் அழுறாங்க பயமா இருக்குமா ஏன்மா இவ்ளோ நேரமா தூங்குற எந்திரிமா "என்று அவளை உலுக்க அவளோ என்றும் எழ முடியாத நிலையில் படுத்திருந்தாள் அவள் மேலும் மேலும் உலுக்கியும் அவள் எழாது போக நிதர்சனம் உரைக்க பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள் அதிதி.

அது வரை உறைந்து இருந்த வித்யுத் அதிதியின் செயலை பார்த்து கண்ணீர் திரை இட நிதர்சனம் உரைக்க "அம்மாஆஆ "என்று பெருங்குரலில் அழ ஆரம்பித்தான் .விஷயம் எப்படியோ தெரிந்து வந்த விஸ்வாவிற்கே அவளை அந்த நிலையில் கண்டதும் இதயம் ஒரு முறை நின்று விட்டது .

அவளை கண்டது முதல் இன்று வரை அவளுடன் வாழ்ந்த நாட்கள் நினைவில் வந்தது .சொத்தை வாங்கி விட்டு அவளை ஏமாற்ற நினைத்தானே ஒழிய அவள் இறக்க வேண்டும் என்று கனவிலும் நினைக்கவில்லை .ஒவ்வொரு நாளும் காலை எழுந்ததும் அவன் தலையை களைத்து குட் மோர்னிங் சொல்லுவது முதல் உறங்கும் பொது அவன் மார்பில் தலை வைத்து உறங்குவது வரை அவனின் ஒவ்வொரு செயலிலும் அவள் நிறைந்திருந்தால்.அவளுக்கு கருத்தடை மாத்திரை கொடுத்தான் தான் ஆனால் அவள் முதல் முறை வித்யுதே பெற்றெடுக்கும் போது கதறியது அவனுக்கு அதீத வலியை தான் கொடுத்தது அதனாலேயே மீண்டும் ஒரு முறை பிள்ளை பெற்றெடுக்க கூடாது என்று முடிவுடன் இருந்தான் .ஆனால் அதிதியின் பிரசவம் மிகவும் சிக்கலாக இருக்க அவள் உயிர் போய் உயிர் வந்தது மரண வலியை அவளுக்கு கொடுத்த அதிதியின் மேல் அவனுக்கு பாசம் இல்லாது போனது .ஆனால் இது எதையும் அவள் உயிருடன் இருந்த பொது உணராதவன் அவள் சாவதை கண்டதும் உணர்ந்ததை காலத்தின் கோலம் அன்றி என்ன வென்று கூற.காரணம் இன்றியா காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில் என்று கூறினர்.

தான் நடந்து கொண்ட இன்றும் அவளுக்கு துரோகம் செய்து கொண்டிருப்பதை நினைக்கையில் அவனுக்கே அத்தனை அற்ப பிறவியா தான் என்ற எண்ணம் முளைத்தது .முதல் முறையாய் ரம்யாவை வெறுத்தான் .அவன் கண்களில் தானாய் நீர் சேர அவள் அருகில் வந்து அமர்ந்தவன் முதல் முறையாய் உண்மையான காதலுடன் தன் மனைவியின் நெற்றியில் இதழ் பதித்தான் ."ஏன்டி இப்டி பண்ண"என்று உடைந்த குறலில் கேட்டவன் அவளை அதற்கு மேலும் அப்படி பார்க்க முடியாமல் அங்கிருந்து வெளியே எழுந்து சென்றான்.

அவன் வந்ததும் அவனது கழுத்தை பிடித்து நெறிக்கும் கோவத்தில் இருந்த வாசுகியின் கரத்தை பற்றிய சுரேஷ் அமைதியாக்கினான் என்னவென்றாலும் சாருவிஷ்வாவின் மனைவி அல்லவா.பின் அனைத்து சடங்குகளும் நடந்து முடிய வித்யுத் தன் தாயின் சடலத்திற்கு தீ வைத்தான் .பின் வீட்டிற்கு வந்தவன் அருகில் வந்த அதிதி அம்மாஇனிநம்மகிட்டவரவேமாட்டாங்களாஅண்ணாஎன வினவ அவனுக்கோ என்ன சொல்வது என்றே தெரியவில்லை .அங்கே வந்த விஷ்வா வாசுகியிடம் சென்று "என் பசங்கள அனுப்புங்க நா கூட்டிட்டு போறேன் "என்க

அத்தனை நேரம் பிடித்து வைத்திருந்த பொறுமை காற்றில் பறக்க எழுந்த வாசுகி அவன் சட்டையை கொத்தாய் பிடித்தவள் " ஏன் என் சாருவை கொன்னது பத்தாதா அவ பசங்களையும் கொல்லணுமா ஏன்டா ஏன் உன்ன லவ் பண்ணதையும் கல்யாணம் பண்ணதையும் தவிர்த்து அவ எந்த பாவத்தையும் பண்ணலையேடா . பணத்துக்காக தான் இவ்ளோவும் பண்ணியா அவ சொத்தை விட பல மடங்கு அதிகம்டா என் சொத்து மொத்தத்தையும் எழுதி தரேன் ஒரு வார்த்தை ஒரு வார்த்தை உன்னால அவளை என்ட்ட பேச வைக்க முடியுமாடா ?எப்படி எப்படி வித்யுத்க்கு பதினெட்டு வயசானதும் அவன்ட்ட விடுதலை பத்திரத்துல கையெழுத்து வாங்கிட்டு அதிதிய கொன்னுடுவ அப்டி தான ".என்றவள் அவன் கையை பிடித்து இழுத்து வந்து அதிதியை காட்டியவள் பாருடா பாரு உன் ரத்தம் தானடா இவ .உனக்கும் பொண்ணு தானடா இவ சொத்துக்காக இவளை கொல்லுவியா அப்பறோம் என்ன ம......பெத்துக்கிட்ட ?"என்க

அவனுக்கோ அவளின் ஒவ்வொரு வார்த்தையும் சவுக்கடி போல் வலித்தது .தனது ஒவ்வொரு செயலும் அவனுக்கு அவன் மேலே அருவருப்பை வரவழைத்தது . இது ஏதும் புரியாத அதிதி அவனிடமே வந்து அவன் சட்டையை பிடித்திழுத்தவள் "அப்பா அழாதீங்கப்பா" என்று அவன் கண்ணீரை துடைத்துவிட.இத்தனை நேரமாய் அவர்கள் பேசியதை கேட்டு விஷயத்தை ஊகித்த வித்யுதிற்கு தந்தையின் மீது அளவிலடங்கா வெறுப்பு சுரந்தது .

15 வயதே ஆயினும் அவனின் தாத்தா விஜய ராகவரின் வளர்ப்பில் வளர்ந்ததால் ஒரு பெரியவர் யோசிக்கும் அளவிற்கு மன முதிர்ச்சியை பெற்றிருந்தான் .கூடவே தாத்தா அவனிடம் ஜாடையாய் அவன் தந்தையை பற்றி தன் கடைசி நேரத்தில் கூறியுமிருக்கிறார்.எனினும் எதையும் ஆராயாமல் முடிவெடுக்க கூடாது என்று எண்ணியவன் இப்போதைக்கு தன் தந்தை வெளியே சென்றால் போதும் என்று எண்ணியவன் அவனிடம் சென்று "அப்பா ரொம்ப tiredaah தெரியுறீங்க போய் சாப்டுட்டு அங்க அந்த வீட்ல போய் தூங்குங்க நாளைக்கு பேசிக்கலாம் "என்றான் .

அவன் ஏதோ கூற வர வாசுகியின் முறைப்பை பார்த்தவன் அடி பட்ட பூனையாய் அங்கிருந்து நகர்ந்தான் .அவன் சென்றது உறுதியானதும் வாசுகியிடம் திரும்பியவன் "ஆண்ட்டி ஒரு நிமிஷம் நா உங்கட்ட பேசணும் அதிதிய தூங்க வச்சுட்டு வரேன் "என்றவன் தன் தங்கையின் கையை பற்றி அழைத்து சென்றவன் அம்மா அம்மா என்று அரற்றியவளை பெரும் பாடு பட்டு தூங்க வைத்து அவளிடம் வந்தான்.

அவனின் செயல்களை பார்த்தவள் 15வயது சிறுவனிடம் இத்தனை முதிர்ச்சியா என்று வியந்து கொண்டிருக்க அவள் அருகில் வந்து அமர்ந்தவன் "என் அம்மா சாவுக்கும் என் அப்பாக்கும் என்ன சம்மந்தம் ஆண்ட்டி "என்று கேட்க

அவளுக்கோ தூக்கி வாரி போட்டது தன் தோழி அவளிடம் அடிக்கடி கூறுவது "வித்யுத் பார்க்க தாண்டி சின்னவன் ரொம்ப மன முதிர்ச்சி ஜாஸ்தி அதே எனக்கு அடிக்கடி கவலையா இருக்கும் அப்பா ஏன் இவன இப்டி வளத்தார்னு அந்தந்த வயசுல கிடைக்க வேண்டிய சந்தோஷம் அவனுக்கு கிடைக்காம போய்டுமோனு பயமா இருக்கு "என்று சாரு அடிக்கடி கூறி இருக்கிறாள் .அது எத்தனை சரி என்று இப்பொழுது வியந்தாள் ஆனால் அவன் இப்படி வளர்க்கப்பட்டதும் இன்று நன்மையாய் போனதே .

எனினும் சிறுவனிடம் எப்படி அவன் தந்தையை பற்றி இத்தனை கீழ்த்தரமான கூற என்று எண்ணியவள் "அ.....அது வந்து வித்யுத் அதெல்லாம் ஒ.....ஒன்னும் இல்லப்பா நீ நீ தூங்கு "என்க

அவளை மிகவும் கூர்மையாய் பார்த்தவன் "ஆண்ட்டி சின்ன பையன்ட்ட எப்படி சொல்றதுன்னு யோசிக்காதீங்க புருஞ்சுக்குற பக்குவம் எனக்கிருக்கு எதுவா இருந்தாலும் சொல்லுங்க "என்க அவனின் உறுதியை பார்த்த வாசுகி சாரு அவளிடம் கடைசியாய் கொடுத்த விடியோவை அவனுக்கு play செய்தால் .

அதில் சாரு"விது குட்டி நீ இதை பாக்கேல கண்டிப்பா அம்மா உயிரோட இருக்க மாட்டேன்டா .அம்மாவை நீ கோழைன்னு நெனச்சாலும் சரி எதுனாலும் சரிடா ஆனா அம்மாவால இனிமே இந்த உலகத்துல இந்த ஏமாற்றத்தை தங்கிட்டு வாழ முடியாதுடா ..என்றவள் அவனது தந்தையை பற்றி மொத்தமாய் கூறியவள் .பின் இதை எல்லாம் தெருஞ்சுக்குற வயது உனக்கில்லடா ஆனா இதை எல்லாம் புருஞ்சுக்குற பக்குவம் உனக்கு நிறையவே இருக்கு அதுனால தான் உன்ட சொல்றேன் .உன் அப்பா கூட தயவு செஞ்சு போயிராதடா அதிதிய நல்ல பாத்துக்கோ என்ன மாறி வாழ தைரியம் இல்லாத பொண்ணா அவளை வளக்காம தைரியமானவளா வளரு டா.அம்மா போறேன்டா என்று அவள் கூறியதோடு அந்த வீடியோ முடிந்தது .அவன் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாய் வழிந்தது தன் தந்தையின் மீது கொலை வெறியே வந்தது .

வாசுகியிடம் திரும்பியவன் "ஆண்ட்டி இனி அவரோட முகத்தை நா பாக்க விரும்பல ஆண்ட்டி உங்கள அம்மா guardiannaah போட்ருக்காங்கனு சொல்லிருக்காங்க எனக்காக ஒரு ஹெல்ப் "என்று அவன் நிறுத்த

அவள் "என்னப்பா "என்க

அவனோ "எனக்கும் அதிதிக்கும் அங்க இருக்குற ஸ்கூல்ல இருந்து tc வேணும் இங்க இருக்குற ஏதாவது ஹாஸ்டல் இருக்குற ஸ்கூல்ல பாத்து சேது விடுங்க "என்க

அவளோ "ஹாஸ்டெல்லாம் எதுக்கு நீயும் எனக்கு பையன் மாறி தான் நானே உங்கள ..."என்று அவள் கூறுமுன் அவள் பேச்சை வெட்டியவன் "இல்ல ஆண்ட்டி நா சாருவோட பையன் யாருக்கும் பாரமாவோ இல்ல உங்க தயவுலயோ இருக்க நா விரும்பல .இது உங்களுக்கு ஹர்டின்காஹ் இருக்கலாம் பட் ப்ளீஸ் ஆண்ட்டி "என்க

அவளுக்கோ அவன் சிறுவனாகவே தெரியவில்லை எத்தனை கோணங்களில் யோசித்து முடிவெடுக்கிறான் என்று வியந்தவள் அவன் கூறியதை போலவே அவனுக்கும் அவளுக்கும் tc வாங்கினால் .விஷ்வாவிற்கு சாரு அவன் கம்பெனியை பொறுப்பேற்றதும் வாங்கிய சொத்துக்களையும் விரிவாகிய ஹோட்டல்கள் ,போன்ற பிற தொழில்களையும் அவன் பேரிலேயே தான் வாங்கி இருந்தால் எனவே அது போக எஞ்சிய மற்ற சொத்துக்கள் அனைத்தும் வித்யுத் மற்றும் அதிதியின் guardianaana வாசுகியின் பொறுப்பிற்கு மாறியது மாதம் 1 லட்சம் வரை அவளின் வாங்கி கணக்கில் வந்து விழுந்து விடும் அவர்கள் பராமரிப்புக்காக .அங்கு அவன் கூறியபின் சென்ற விஷ்வா ரம்யாவை ஊரறிய திருமணம் செய்து கொண்டான் இதை பார்த்த வித்யுதிற்கு தன் தந்தையின் மேல் இருந்த வெறுப்பு பன்மடங்காய் உயர்ந்தது

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro