15

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அவள் கண்ட காட்சியில் அவள் இதயம் சுக்கு நூறாக உடைந்தது .விஷ்வா ஒரு பெண்ணை அணைத்து கொண்டிருந்தான் .அவள் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் பெருக்கெடுக்க அக்கொடூர காட்சியை பார்த்து கொண்டிருந்தாள் .

பின் அவளை விளங்கியவன் அவளை நோக்கி பேச ஆரம்பித்தான் "ரம்யா உன்ன விட்டு இருக்குறது எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா அதான் எனக்கு தேவையே இல்லாத orderah வாங்கி டெல்லில வந்து உக்காந்துருக்கேன் ."என்க

அப்பெண்ணோ அவன் கழுத்தில் தன் கையை கோர்த்துக்கொண்டவள் "ஹே விஷ்வா நாம தான் காலேஜ் daysல இருந்து லவ் பண்றோம் .மாச சம்பளம் வாங்கி வாழ்க்கைல ஜாலியாலாம் இருக்க முடியாதுனு தான் நல்ல பணம் இருக்குற சாருவை காதலிக்குறமாரி அவளை ஏமாத்தி கல்யாணம் பண்ணீங்க .சொத்த எழுதி வாங்கிட்டு அவளை டிவோர்ஸ் பண்ணிருக்க வேண்டியது தான இப்போ பாருங்க 16 வருஷமா நாம மறைஞ்சு மறைஞ்சு வாழ வேண்டியதா இருக்கு ."என்க

சாருவிற்கோ ஏமாற்றப்பட்டேனா இது கனவாக இருக்க கூடாதா கடவுளே என் காதல் பொய்யா என்று மனதால் முழுதும் அவள் உடைய கால்கள் பலமிழந்து மடிய போக கதவை கெட்டியாக பற்றிக்கொண்டு மேலும் அவர்கள் உரையாடலை கேட்டால் .

அவள் தலை முடியை கோதிக்கொண்டே இருந்த விஷ்வா "ஆமா எல்லாம் நடிப்பு தான் ஆனா சும்மா சொல்ல கூடாதுடி சாரு செம addictive தெரியுமா ரெண்டு குழந்தைக்கு அம்மா மாறிய இருக்கா இன்னும் ."என்க அவளுக்கு அவனின் கீழ்த்தரமான பேச்சை கேட்டு உடலெல்லாம் பற்றி எரிந்தது

ஆனால் அப்பெண்ணோ அதற்கும் வெட்கமில்லாமல் சிரித்தவள் "அதான் 16 வருஷமா மயங்கி கெடக்குறியா சரி ஆனா ஏன்டா 2 பிள்ளையை பெத்துக்கிட்ட சொத்துக்கு அதுங்களுக்கு பங்கு இருக்கும்ல "என்க

அவனோ "அந்த சோக கதையை ஏன் கேக்குற நானும் அவளுக்கு தெரியாம பாலுள கருத்தடை மாத்தறை எல்லாம் கலந்து குடுத்தேன் பட் எப்டியோ மிஸ் ஆயிருச்சு .அப்ரோமும் அவளுக்கு abortion tablets கலந்து கொடுக்கலாம்னு தான் நெனச்சேன் ஆனா அவுங்கப்பன் விஜயராகவன் இருக்கானே சரியான கேடி .அந்தாளுக்கு மொதல்ல இருந்தே ஏன் மேல நம்பிக்கை இல்ல அவ அவ்ளோ உறுதியா இருக்கவும் வேற வழியே இல்லாம தான் எங்க கல்யாணத்துக்கு சம்மதிச்சாரு.அது மட்டுமில்லாம கம்பெனி பொறுப்பை குடுக்கேலையும் தேவைக்கு மேல பணம் எடுத்தா ஏன் எதுக்குன்னு எந்த டிரெக்டாக கேக்கலேனாலும் தோண்டி துறுவிறுவான்.அவனுக்கு தெரியாம உனக்கு நா பணம் அனுப்புறதுக்குள்ள நா பட்ட பாடு இருக்கே எப்பா .அப்பறோம் அவ கர்ப்பமா இருக்கேல தான் எனக்கு அந்தாளு எழுதி வச்சுருக்குற உயில் பத்தி தெரிஞ்சது "என்க

ரம்யாவோ "என்ன எழுதிருக்காரு ?"என்று வினவ

அவனோ "அதாவது இந்த சொத சாருவால யாரு பேருக்கும் எழுத முடியாது அவ குழந்தைங்க பேர தவிர்த்து .அப்டி குழந்தையே பொறக்கலேனாஎல்லா சொத்தும் அவளோட காலத்துகப்ரோம் அனாதை ஆஸ்ரமத்துக்கு போயிரும் .அது மட்டுமில்லாம அவளுக்கு மட்டும் தான் தன் பிள்ளைங்களுக்கு கார்டியன் வைக்குற உரிமை இருக்கு .அந்த கார்டியன் அவ கணவனா இருக்க முடியாது .அந்த கார்டியன் தான் 1 குழந்தைக்கு 18 வயசு ஆற வரைக்கும் அவுங்களுக்கு பொறுப்பு அதுகப்ரோம் அந்த மூத்த குழந்தை அடுத்த குழந்தைக்கு கார்டியன் ஆயிரும் .ஒரு கொழந்த விடுதலை பாத்திரத்துல கையெழுத்து போட்டாலும் மொத்த சொத்தும் இன்னொரு குழந்தைக்கு போயிரும் .இவ்ளோ சிக்கல் இருக்கு .அதுனால வித்யுத்க்கு 18 வயசாகுற வரைக்கு பல்ல கடுச்சுட்டு இருக்க வேண்டியது தான் ."என்க

அதற்கு ரம்யாவோ "அப்போ அதிதி ?"என்க

அவனோ கோரமாய் சிரித்தவன் "கொண்ணுற வேண்டியது தான் "என்க சாருவிற்கு குலயே நடுங்கி விட்டது தன் சொந்த ரத்தத்தையே சொத்திற்காக கொள்ள துடிக்கும் ஒரு அய்யோக்கியனை இத்தனை வருடங்களாக காதலித்து வந்ததற்கு தன்னை தீயிலிட்டாலும் தன் மேல் இருக்கும் அழுக்கு போகாது என்பதை போல் உணர்ந்தாள்.அவனோடு வாழ்ந்த நாட்கள் ஞாபகம் வர அமிலத்தை ஊற்றியதை போல் அவள் தேகம் எரியும் உணர்வை பெற்றால் .

கண்களை இருக மூடி திறந்தவள் தன் தந்தையின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தாள் "சாரு அப்பா சொல்றது உனக்கு இப்போ புரில.உன் வாழ்க்கை உன் இஷ்டம் ஆனா நல்ல ஞாபகம் வச்சுக்கோமா இவனுக்கு கல்யாணம் பண்ணி தர்ரதுல எனக்கு அவ்ளோ சந்தோஷம் இல்ல "என்று அவர் கூறியது இன்று ஞாபகம் வந்தது .

பெற்றோருக்கு தெரியாததா ஒருவன் நல்லவனா இல்லையா என்று ?இப்படி நம்பி ஏமாந்த பெண்கள் எத்தனையோ ?தன் எதிரிக்கும் இனி எந்த பெண்ணிற்கும் தன் நிலை வர கூடாது என்று வேண்டியவள் அவன் சென்றது உறுதியானதும் அவ்வீட்டை விட்டு வெளியேறியவள் பிரம்மை பிடித்தார் போன்றே வாசுகியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் .

அவளை கண்ட வித்யுதும் அதிதியும் ஓடி சென்று அவள் காலை கட்டி கொள்ள அதை உணரும் நிலையில் சத்தியமாய் அவள் இல்லை.அவளின் முகத்தை வைத்தே ஏதோ சரி இல்லை என்று உணர்ந்த வாசுகி பிள்ளைகளிடம் "செல்லங்களா அம்மா இப்போ தான வந்துருக்கா போய் வெளயாடுங்க அம்மா கொஞ்சம் ரெப்பிரேஷ் பண்ணிட்டு வரட்டும் ."என்றவள் அவளை தன் அறைக்கு அழைத்து சென்று கட்டிலில் அமர்த்தியவள் என்னாச்சுடி ?"என்று அவள் கை பற்றி கேட்க

இருந்த கோபத்தில் அவளின் கையை தட்டி விட்டவள் "என்ன ஆகணும் ஏன் எல்லாத்தையும் உண்ட சொல்லனுமா வேலைய பாத்துட்டு போடி "என்று கத்த அவள் கத்தியதை சட்டையே செய்யாதவள்

மீண்டும் அவள் கை பற்றி தன் கைக்கு நடுவில் வைத்து கொண்டவள் "என்னாச்சுடா சாரு .நா உன் friend தான என்டசொல்ல கூடாதா "என்

அவளுக்கு அழுத்தி வைத்திருந்த பாரமெல்லாம் அழுகையாய் வெடிக்க அவள் மடியில் சாய்ந்தவள் கேவி கேவி அழ ஆரம்பித்தாள் .முதலில் அவள் அழுகையில் அரண்டாலும் பின் மெதுவாய் அவள் முதுகை தடவி விட்டவள் .அவள் அழுது ஓயட்டும் என்று காத்திருந்தாள் .அழுது அழுது ஓய்ந்தவள் நிமிர்ந்து தன் கண்ணீரை துடைத்தவள் நடந்த அனைத்தையும் கூற வாசுகிக்கோ கோபம் தலைக்கேறியது "பொறுக்கி ராஸ்கல் இரு அவன...."என்று அவள் எழ போக

அவள் கரம் பற்றி தடுத்தவள் "ஏமாத்துனது அவனா இருக்கலாம் ஆனா ஏமாந்தது நா தானடி .அதுக்கு இடம் குடுத்தது நா தான .என் அப்பா பேச்ச கேட்காம அவன கல்யாணம் பண்ணது நா தான .என் தப்புக்கு நா அனுபவிக்குறேன் ஆனா என் பிள்ளைங்களுக்கு எதுவும் ஆக கூடாதுடி .அவன்கிட்ட இருந்து என் பிள்ளைங்களை காப்பாத்தணும்.எனக்காக நீ என் புள்ளைங்களோட கார்டியன் ஆகுற papersah அண்ணாட்ட ரெடி பண்ண சொல்றியா?"என்க

அவளின் பேச்சில் ஏதோ தப்பாய் உணர்ந்தவள் "ஹே எதுக்கு இப்போ கார்டியன் நீ நல்லா தான இருக்க அப்பறோம் எதுக்கு "என்க

அவளோ ஒரு வறட்டு புன்னகை செய்தவள்"இன்னும் எத்தனை நாளைக்குன்னு தெரியாதுடி ப்ளீஸ் எனக்காக "என்க அவளுக்கு எனோ அதில் விருப்பம் இல்லை எனினும் செய்தால் .அனைத்தும் முடிந்து இரவு அவர்களுக்காக கொடுக்கப்பட்டிருந்த அறைக்கு வந்தவள் வித்யுத் உறங்காமல் புரண்டு கொண்டிருப்பதை பார்த்தவள்

அவனை எழுப்பி "விது"என்க

எழுந்தமர்ந்தவன் "என்னம்மா எதுவும் வேணுமா "என்க அவள் மறுப்பாய் தலையாட்டி அவன் நெற்றியில் இதழ் பதிக்க தன் அன்னையின் முகத்தில் ஏதோ சரி இல்லை என்று

உணர்ந்தவன் "அம்மா என்னாச்சு ?"என்க

அவளோ "ஒன்னும் இல்லடா செல்லம் அதிதிய நல்லா பாத்துக்கோ என்க

அவனோ புரியாமல் பார்த்தவன் "ஏன்மா நா அவளை எப்போவும் நல்லா தான் பாத்துப்பேன் "என்க அவளுக்கு அது திருப்தியாய் இருந்ததோ என்னவோ அவன் நெற்றியில் இதழ் பதித்தவள் அவனை படுக்கையில் சாய்த்து தட்டி கொடுத்து உறங்க வைத்தவள் தன் மொபைலில் ஒரு விடியோவை எடுத்தவள் அதை வாசுகியிடம் கொடுத்து விட்டு உறங்கினால் .

இதை கூறிய வித்யுதின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாய் வழிய கதையை கேட்ட சைந்தவிக்கே அவன் அப்பாவின் மேல் கொலை வெறி வந்தது .அவனது தலையை திருப்பி தன் வயிற்றோடு இறுக்கி கொண்டால் சைந்தவி அவனுக்கு அது கர்ப்பப்பையில் இருப்பதை போல் ஒரு சுகத்தை தர இத்தனை நாளாய் தேக்கி வைத்த கண்ணீரை அவள் மடியில் படுத்தவாறே அழுது தீர்த்தான் அவன்.

அவன் அழுது ஓய்ந்ததும் அவன் தலையை கோதிய சைந்தவி "அப்பறோம் என்னாச்சுடா?" என்க

அவனோ அடுத்த நாள் காலைல நா எந்திரிக்கேல எல்லாரும் அழுகுற சத்தம் கேட்டுச்சு வெளிய வந்து பாக்கேல என் அம்மாவை வீட்டுக்கு நடுவுல பொணம்ஆ தான் பார்த்தேன் ....... 

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro