தென்றல் 18

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அறிவுரை என்ற பெயரில் நான் கூறிய எனது கருத்துக்கு நான் எதிர்பார்க்காத அளவில் ஆதரவு தெரிவித்த எல்லோருக்கும் நன்றிலாம் கிடையாது.ஏன்னா அண்ணா சொன்னான்னுதானே எல்லோரும் கேட்டுகிட்டீங்க.சோ ஒரு அண்ணனா இதுக்கு நான் தாங்க்ஸ் சொல்லமட்டேன்.

tharakannan தம்பியின் உதவிக்கு நன்றிகள்.உங்கள் நட்பு வட்ட்டத்தில் மிகவும் நெருக்கமாக இருப்பவர்களுக்கு எனது கருத்தை கொண்டு சேர்த்தமைக்கு.

எல்லோரும் கூறிய பொதுவான காரணம் இது போன்ற விடயங்களில் உள்ள பின் விளைவுகள் அவர்களுக்கு தெரியாது என்பது.இனி வரும் காலங்களிலும் இது போன்ற ஏதும் கருத்துக்கள் தோன்றினால் கூறலாம் என என்னுகின்றேன்.

மேலும் நான் என் பதிவில் யாரையும் யாருடனும் பேசவேண்டாம் என்று கூறவில்லை.உங்கள் சொந்த தகவல்களை பாதுகாப்பாக பேணும்படியே கூறினேன்.
---------+-+++++------
திவ்யா அப்படி கூறியதும் அர்ஜுனுக்கு மிகவும் வலித்தது.திவ்யாவும் அவனைக் காதலிக்கின்றால் என்பதைவிட அவினாஷ் அதே ஆபீசில் வேலை செய்யும் இன்னொரு பெண்ணிடமும் அவளை காதலிப்பதாக கூறியது மிகவும் வேதனையை அளித்தது.தான் விரும்பிய பெண் தன்னை காதலிக்கவில்லை என்றாலும் அவள் காதலிக்கின்றவன் நல்லவனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவனே உண்மையான ஆண்மகன் என்பது பலரது எண்ணம் (சத்தியாமா என்னோட எண்ணம் அப்படி இல்லப்பா).

அந்த காபி சாப்பில் எல்லோரும் இவர்களையே பார்த்துக்கொண்டிருக்க
அர்ஜுனோ யாரிடமும் எதுவும் கூறாமல் அவ்விடத்தை விட்டு சென்றான்.அவன் கோவத்தில் செல்வதை பார்த்த திவ்யா அவனை அழைக்க அவனோ அதை காதில் வாங்கி கொள்ளாது சிட்டென பறந்தான்.சரி அர்ஜுனின் விடயத்தை பிறகு பார்க்கலாம் என் நினைத்த திவ்யா அவினாஷின்டம் வந்து

"இப்ப சொல்லுங்க அவினாஷ் ,நீங்க என்ன லவ் பண்ரீங்களா இல்ல இவல லவ் பண்றீங்களா?"என்று கேள்வியாய் கேட்க அவனோ அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு

"திவ்யா ப்ளீஸ்,ரொம்ப ஓட்டாத.நானே இவள எப்படி கன்வின்ஸ் பண்ரதுன்னு யோசிச்சிக்கிட்டு  இருக்கேன்.இதுல அர்ஜுன் வந்து குழப்பினது போதாதுன்னு நீ வேற ஏன்மா என் வாழ்க்கைல கபடி ஆடுற" என்று பாவமாக முகத்தை வைத்து கேட்க  திவ்யா

"டேய் டேய் ரொம்ப சீன போடாத.இங்க பாரு மகாராணியார் நான் உன்ன லவ் பண்றேன்னு சொன்னதும் எப்படி பீல் ஆகி கண்ணுலாம் கலங்கி இருக்காங்கன்னு.லூசுப்பயலே இத வெச்சே உனக்கு தெரியல மேடம் உன்ன எவ்வளவு லவ் பண்றாங்கன்னு"என்று கூற அவினாஷோ அந்த பெண்ணை பார்த்து திவ்யா கூறியது நிஜம்தான் என உறுதிப்படுத்தியவன் அந்த பெண்ணின் திருவாய் மூலமாகவே அந்த நற் செய்தியை கேட்க எண்ணினான்.

"கீர்த்துமா நிஜமா என்ன லவ் பண்றியாடா "என்று கேட்க அவள் இவர்கள் இருவரையும் பார்த்து

"உங்க ரெண்டு பேருகிட்டயும் நான் கொஞ்சம் பேசனும் .அதுக்கு அப்புறமா சொல்லுங்க நீங்க என்ன லவ் பண்றீங்களா இல்லையான்னு"என்று புதிர் வைத்து பேசியவளை இருவரும் கொஞ்சம் ஆர்வமாக பார்த்தனர்.அந்த காபி சாப்பில் இவர்களால் ஏற்கனவே ஒரு கலோபரம் ஆனதால் எல்லோரும் இவர்களையே வித்தியாசமாக பார்க்க அவினாஷ் இவர்கள் இருவரையும் பக்கத்தில் இருந்த பீச்சிற்க் அழைத்து சென்றான்,

பீச்சிற்கு வந்து 20 நிமிடம் ஆகியும் கீர்த்து எதுவும் பேசாமல் இருக்க அவளின் மௌனத்தை கலைக்க எண்ணிய அவினாஷை பார்த்து திவ்யா எதுவும் பேசவேண்டாம் என சைகை செய்தாள்.

சில நிமிடங்களின் பின் கடலையே பார்த்துக்கொண்டிருந்த கீர்த்தி அழ ஆரம்பிக்க அவினாஷும் திவ்யாவும் என்ன செய்வது என்று புரியாமல் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக்கொண்டிருந்தனர்.சற்று நேரத்தில் சற்று நிதானத்திற்கு வந்தவள்

"அவினாஷ் என் குடும்பத்தை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்.ஐ மீன் அம்மா,அப்பா ,அக்கா யாரப்பத்தியாச்சும் ஏதும் தெரியுமா?"என்று கேட்க அவனோ இல்லை என்று தலை அசைக்க அவளே தொடர்ந்தவள்

"சோ என்ன பார்த்து நான் கொஞ்சம் கலரா அழகா இருக்கேன்னதும் லவ்வ சொல்ல வந்துட்டீங்க.சரி அது பரவாயில்லை.ஆம்பிளைங்க மென்டாலிட்டி அதுதானே.நானும் உங்கள் கல்யாணம் பண்ணி ஒரு குழந்தைக்கு அம்மா ஆகிட்டேன்னா என்னோட இந்த அழகெல்லாம் காணாம போயிடும்.அப்ப இன்னொரு அழகான பொண்ண பார்த்தா அவ மேலயும் உங்களுக்கு காதல் வரும்ல.ஓஹ் சாரி காதல்  என்ற வார்த்தைய நான் கேவலப்படுத்துர மாதிரி பேசுறேன்.அதுக்கு பேரு காதல் இல்ல காமம்" என்று கூற கோவம் வந்த அவினாஷ் தன் காதலை கொச்சைபடுத்திய கோவத்தில் என்ன பேசுகின்றோம் என தெரியாமல்

"அப்போ நான் பண்ணது தப்பு, கேவலம்னா நீ மித்ரன விரும்பினதுக்கு  பேரு என்ன.அது மட்டும் உன்னதமான காதலோ.அவன் வசதிய பார்த்துதானே நீ அவன காதலிச்ச.நீ அவன காதலிக்கிறேன்னு தெரிஞ்சதும் ஆரம்பத்துல நான் கண்ணியமா ஒதுங்கிதான் போனேன்.அப்படி இருந்த நான் உன்ன மறக்க முடியாம எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா.அப்படி இருந்தும் அவனுக்கு கல்யாணத்துல் இஷ்டம் இல்லன்னு தெரிஞ்சதுக்கு அப்பறமாத்தான்  டீசன்டா வந்து உன்கிட்ட நான் என் லவ்வ சொல்ல  வந்தேன். ஆனா நீ என் காதல ரொம்ப கேவல படுத்தி காமம்னு சொல்ர.இப்போ பதில் சொல்லு கீர்த்தி உன்மேல எனக்கு இருந்தது காமம்னா நீ மித்ரன் மேல வெச்சதுக்கு பேரு என்ன"
என்று விடக்கூடாத வார்த்தையை விட்டான்.இருவரும் பேசிக்கொள்வதை வேடிக்கை பார்த்த திவ்யா

"சரி நான் போறேன்.இது உங்க லைப் விசயம் .நான் தலையிடுறது நல்லா இருக்காது"என்று கூற கீர்த்தியோ

"முதல்ல்ல திவ்யா நீ உன் வாய மூடிகிட்டு இங்க இரு.ஏன்னா இதுல நீயும் சம்பந்தப்படிருக்க.என்ன கேட்ட அவினாஷ் நான் மித்ரன் மேல வெச்சதுக்கு பேரு என்னன்னா?அதுக்கு முதல்ல எங்க குடும்பத்த பத்தி தெரிஞ்சிக்க.என்னோட அம்மா ஒரு ஹோம்லதன் வளர்ந்தாங்க.பார்க்க அழகா இருப்பாங்க.அவங்க அழக பர்த்துதான் எங்கப்பா எங்கம்ம்மாவ கல்யானம் பண்ணிகிட்டாரு.ஆனா ஒரு எங்கம்மாக்கு ஏதோ ஒரு இன்பக்சன் ஆகி அவங்க முகத்துல இருந்து தோல் உரிய ஆரம்பிச்சிடுச்சு.எங்கம்மாவோட காதல் கணவன் எங்க எல்லோரையும் விட்டுட்டு சொல்லாம கொல்லாம போயிட்டாரு.எங்கம்மா என்னையும் எங்க அக்காவையும் வளர்க்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க.ஒரு நாள் ஒருத்தங்க கிட்ட எங்க ஸ்கூல் பீஸ் கட்ட காசு வாங்கியிருக்காங்க.அத கொடுக்க கொஞ்சம் லேட் ஆனதும் அந்த ஆளு வீட்டு முன்னாடி வந்து கத்திட்டான்.ஆனா அதுல என்ன கொடுமைன்னா அவன்  பொம்பளைங்கள வெச்சு தொழில பண்ற ஒரு ப்ரோக்கர்.இது எங்க அம்மாக்கு தெரியல.அவன் வீட்டு முன்னாடி சத்தம் போட்டு கடைசியா 'பணம் கொடுக்க முடியலன்னா என்ன உன் பொண்ணுங்கள என்கூட அனுப்பு.அவங்கள வெச்சி நான் அந்த பணத்த வசூல் பண்ணிக்கிறேன்.உன்னையே கூப்பிட்டு இருப்பேன்.ஆனா என்ன உன் மூஞ்சிதான் இப்படி ஆச்சே'அப்படின்னு சொல்ல எங்கள அந்த ஏரியாவே ரொம்ப கேவலமா பார்த்திச்சி.கடைசில எங்க ஏரியால இருந்த கறிக்கடை பாய்தான் அவன்கிட்ட எங்கம்மா வாங்கின காச கொடுத்தாங்க.ஒரு சின்ன காசு விசயத்துல எங்க மானமே போச்சி"என்று கூற அவினாஷ் அவளை கண்களில் கண்ணீருடன் பார்த்தான்.மேலும் தொடர்ந்த அவள்

"ரொம்பலாம் கவலைப்பட வேணாம் அவினாஷ் நான் சொல்லி முடிச்சிர்ரேன்.ஏன்னா நீ கேட்டதுக்கு இன்னும் நான் பதில் சொல்லி முடிக்கல.எனக்கு மித்ரன் சார் மேல காதல் வர ஒரே ஒரு காரணம்தான்.எந்த பொண்ணையும் அவரு ஏறெடுத்தும் பார்க்க மாட்டாரு.வேற ஏதுமே இல்ல.மித்ரனும் மத்த ஆம்பிளைங்க மாதிரி பொண்ணுங்கள பார்த்து வழியிற ஆளா இருந்தா நான் அவரு பக்கமே திரும்பி பார்த்திருக்க மாட்டேன்.ஆனா அவரு எல்லோர விடவும் ரொம்ப வித்தியாசமா இருந்தாரு.அதனாலதான் அவர் விரும்பினேன்.அப்புறம் விஷ்வனாதன் சார் அவரு கல்ய்யாணம் பண்ணாதான் கம்பனி பொறுப்ப கொடுப்பேன்னு சொன்னதும் எனக்கு தெரியும்.சோ எனக்கு அது ஒரு நல்ல வாய்ப்பா தோனிச்சி.அட்லீஸ்ட் அவரு மனசுல பொண்டாட்டியா இல்லைன்னாலும் அவர கட்டிக்கிட்டு கொஞ்ச நாளாச்சும் அவரு பொண்டாட்டி என்ற பேரோட வாழலாம்னு தோனிச்சி.ஏன்னா எனக்கும் கல்யாணத்துல ஐ மீன் ஆம்பளைங்கல தங்கி வாழ்றது பிடிக்காது.இப்போ தெரிஞ்சதா மித்ரன் மேல எனக்கு வந்தது காதலா இல்ல காமமான்னு.நான் மித்ரன் கூட ஆயுசுக்கும் அவர தொடாமலே வாழ்ந்துடுவேன்.ஆனா உன்னால என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு என்ன தொடாம வாழ முடியுமா உன்னால. சொல்லு?ஆனா உண்மைய சொல்லனும்.முடியாதுன்னு எல்லோருக்குமே தெரியும்.ஏன்னா ஆம்பளைங்க நீங்க எப்படின்ன்னு உலகத்துக்கே தெரியும்" என்று கூற அவினாஷ் தலை குணிந்து இருந்தான்.

"சரி இப்போ உங்க கேள்விக்கு பதில் கிடைச்சிடுச்சில்ல.எல்லோரும் போலாமா" என்று கேட்க அவினாஷ்

"இல்ல இன்னும் ஒரு விசயம் நான் உனக்கு க்ளியர் பண்ணிடுறேன் கீர்த்தி.நான் உன் அழக பார்த்துதான் காதலிச்சேன்.பசங்க நாங்க இப்படித்தாம்மா.எங்களுக்கு காதல் பொண்ணுங்க அழக பார்த்துதான் வரும்.ஆனா ஒரு பொண்ண காதலிச்சா அவள தவிர வேற ஒருத்திய மனசால கூட நினைக்க மாட்டோம்.ஆயிரத்துல ஒன்னு ரெண்டு பேரு அப்படி இல்லாம இருக்கலாம் உங்கப்பா மாதிரி.ஆனா மத்த பசங்க அப்படி இல்ல.ஒன்னு ரெண்டு பேரு செய்றதால அப்படித்தான் எல்லா பசங்களும் இருப்பாங்கன்னு சொல்ரது முட்டாள்தனம்.நீ என்ன கேட்ட,உன்ன கல்யாணம் பண்ணிகிட்டு உன்ன தொடாம இருக்க முடியுமான்னு.நான் எதுக்கு உன்ன பக்கத்துல வெச்சிக்கிட்டு சும்மா இருக்கனும்.ஆனா நீ என் காதல சந்தேக பட்டேல அதுக்காக சொல்ரேன்.உன்ன கல்யாணம் பண்ணி ஆயுசுக்கும் உன்ன டச் பண்ணாம வாழ்ந்து காட்டுறேன்.சாலஞ்ச் பண்ணிக்கலாமா?" என்று கேட்க மனக்குழப்பத்திலும் அத்திரம் மற்றும் ஆற்றாமையில் இருந்த கீர்த்தி கூறிய பதில் இருவரையும் ஆச்சரியப்படுத்தியது.

_----------_

Dikshitama வின் " என் அன்பே ,எந்தன் ஆருயிரே" படிச்சி எல்லோரும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.

https://my.w.tt/xmkQvlSHmQ
  @zaro_nase இன் "கானலாகிய என் வாழ்க்கை" சூப்பரா இருப்பதாக  Nivethamagathi கூறினார்கள்
படிச்சிட்டு நாமும் கருத்துக்களை கூறுவோம்.

"என் வாழ்க்கை " கதைக்கு சூப்பரா ஒரு முடிவு கொடுத்த narznar கு பாராட்டுக்கள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro