தென்றல் 21

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

திருமண நாள் நெருங்கிக்கொண்டிருக்க எல்லோரும் அவர் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையில் மூழ்கியிருந்தனர்.விஷ்வனாத்திடம் வந்த ஜானவி

"அங்கிள் இப்போ கேஷ் ஆ ஒரு ஐம்பது லட்சம் தான் புரட்ட முடிஞ்சது.மீதி பணத்த ஜேர்மன் போக முன்னாடி அரேஞ்ச் பண்ணிடுறேன் "என்றவளை அவரோ

"அதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லம்மா.டிரீட்மண்டுக்கு ஜேர்மனி போக இன்னும் ஒரு மாசம் இருக்குல்ல.சோ ஒரு பிராப்ளமும் இல்லம்மா"என்றார்.

"அப்புறம் அங்கிள் இந்த கம்பனி செயார்ஸ் என் பேருல மாத்த வேணாமே.எனக்கு ஒரு மாதிரி இருக்கு "என்று கூற அவரோ

"அம்மாடி என்னதான் நீ அவன கல்யாணம் பண்ணிக்க போறேன்னு இருந்தாலும் என் பையனோட டிரீட்மண்டுக்கு நாந்தான் செலவு செய்யனும்னு நினைக்கிறது தப்பில்லையேமா.அப்புறம் வேற யாருக்கோ விற்க இருந்த செயார உன் பேர்லயே மாத்துரதால ஒரு கவலையும் இல்ல.கம்பனியும் நம்மல விட்டு போகாது .ஏற்கனவே நம்ம கம்பனியோட 55% மான செயார்தான் என்கிட்ட இருந்திச்சி.அதுலயும் இப்போ இந்த டிரீட்மண்ட் செலவுக்கு 20% விற்றால் 35% ஆகிடும்.மித்ரனோட சின்ன வயசு கனவு கம்பனிய பொறுப்பெடுத்து நல்ல படியா அத கொண்டு போகனும்னு.எனக்கு அவன் மெடிக்கல் செலவுக்கு மீதி செயார வித்த நம்மகிட்ட மெஜாரிட்டி இருக்காது.அப்புறம் போர்ட் மீடிங்க் வரும் போது கம்பனி எம்டி ஆ அவன் விரும்பின மாதிரி எங்க இருக்க முடியாம போயிடுமோன்னு ரொம்ப பயந்தேன்.ஆனால் கடைசியில கடவுள் உன் மூலமா எல்லாத்தையும் ஈசியாக்கிட்டாரு.எப்படி பார்த்தாலும் உன் புருசன் செலவுக்கு நீதான்மா செலவு செய்ற.எப்படியும் இந்த கம்பனி செயார் எல்லாம் உங்களுக்கு சேர வேண்டியதுதானே"என்று கூற அவளும் புன்னகைத்து

"சரி அங்கிள் உங்க திருப்திக்காகத்தான் நான் இதுக்கு ஒத்துக்கிறேன்"என்றாள்.உள்ளே சென்ற விஷ்வனாத் கையில் பத்திரத்துடன் வர ஜானவி 

"என்ன அங்கிள் கைல பத்திரத்தோட வாரீங்க.என்ன இப்பவே என் பெயருக்கு செயார்லாம் மாத்திட்டீங்க போல"என்று கேட்க அவரோ

"இல்லம்மா என்னைக்கு நீ மித்ரன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னியோ அன்னைக்கே உன் பெயருக்கு மாத்திட்டேன்மா.உன்கிட்ட கொடுக்க சரியா சந்தர்ப்பம் அமையல.அதான் இன்னைக்கு கொடுக்குறேன்"என்று கூற ஜானவியும் மறுத்து எதுவும் பேசாமல் வாங்கி கொண்டவள்

"ஆங்கிள் மீதி பணத்த வாங்காமலேயே கொடுக்குறீங்கலே"என்று கேட்க அவரோ

"நீ எங்க வீட்டு பொண்ணும்மா.நீ எங்கள எல்லாம் ஏமாத்திட்டு ஓடவா போற"என்று கேட்க அவளும் சிரித்துக்கொண்டு

"சரி அங்கிள் கல்யாண பேர்ச்சஸிங்க வேலையெல்லாம் இருக்கு.நான் அப்புறமா வர்ரேன்"என்று கூறி சென்றாள்.

சில நாட்களாக திவ்யாவின் நடவடிக்கைகள் விசித்திரமாக காணப்பட்டது.திடீர் திடீரென்று காணாமல் போய் விடுவாள்,இல்லை என்றால் எதையாவது யோசித்துக்கொண்டே இருந்தாள்.இதை எல்லாம் கவனித்த ஷாக்சி

"ஹேய் திவ்யா எங்கடி அடிக்கடி காணாமல் போயிர்ர.இல்லன்னா எதோ கோட்டைய பிடிக்க போற மாதிரி யோசிச்சிக்கிட்டு இருக்க.கல்யாணத்துக்கு இன்னும் ஒரு நாள் தான் இருக்கு நீ இப்படி இருந்தா கல்யாண வேலை எல்லாம் யாருடி பார்க்குறது.மாப்பிள்ளையோட தங்கச்சி இப்படித்தான் அடிக்கடி காணாம போவியா?"என்று கேட்க திவ்யாவோ பதில் எதுவும் கூறாமல் இருக்க ஷாக்சி

"ஏய் லூசு உங்கிட்டதான் பேசிக்கிட்டு இருக்கேன்.நீ என்ன யோசிச்சிக்கிட்டு இருக்க.ஆஹ் சொல்ல மறந்துட்டேன்.அர்ஜுன் வந்திருடந்தாரு.நான் அவருகிட்ட எல்லா உண்மையையும் சொல்லிட்டேன்.உனக்கும் அவினாஷுக்கும் ஏதுமில்ல.எல்லாமே அந்த கீர்த்திக்காகத்தான் அப்படி பண்ணீங்கன்னு.மனுசன் முகத்துல அவ்லோ சந்தோசம்.சரி அவரு உன்கிட்ட ஏதோ பேசனும்னு சொன்னாரு.அவரு கால் பண்ணாராம் நீ ஆன்சர் பண்ணலேன்னு சொன்னாரு.இன்னைக்கு உன்ன 4 மணிக்கு பார்க்ல பார்க்குறதா சொன்னாரு.நீ போயிட்டு வந்துடு.மோஸ்ட்லி உங்க லவ் மேட்டராத்தான் இருக்கும்.அவரு உன்ன ப்ரபோஸ் பண்ண போறாருன்னு நினைக்கிறேன்"என்று கூறியவள் அர்ஜுன் பெயரை கூறியதும் திவ்யாவின் முகத்தில் ஒரு செழிப்பை கண்டவள்  சில நொடிகளில் அந்த செழுமை முகத்தை விட்டு அகன்று கவலை படர்ந்து கொண்டதையும் கவனித்து கொண்டாள்.

"ஷாக்சி அவருகிட்ட சொல்லிடு வீனா பகல் கணவு காண வேண்டாம்னு.அவரு நினைக்கிறது ஒரு காலமும் நடக்காது"என்று கூற ஷாக்சியோ

"என்னடி இப்ப சொல்ர.உனக்கு அவர பிடிக்கலன்னு மட்டும் சொல்லாத .உனக்கு அவர பிடிக்கும்னு எனக்கு தெரியும்.ஆனா ஏதோ ஒரு காரணத்துக்காக நீ இப்படி இருக்குற"என்று கூற திவ்யாவோ அமைதியாக இருந்தாள்.

"ஹேய் லூசு நானே பேசிக்கிட்டு இருக்கேன்.ஏதாச்சும் பேசுடி வாயாடி"என்று ஷாக்சி திவ்யாவை பிடித்து உலுக்க அவளோ

"இல்ல ஷாக்சி இது சரி வராது.இதை அவருகிட்ட நீயே சொல்லிடு"என்று கூற ஷாக்சியோ

"எனக்கு இந்த தூது போற விளையாட்டெல்லாம் சரி வராது.உனக்கு பிடிச்சிருக்கோ இல்லையோ நீயே அவருகிட்ட சொல்லிடு.உங்க ரெண்டு பேரு நடுவுல என்ன இழுக்காதீங்க"என்று கூறிய ஷாக்சியை முறைத்த திவ்யா

"நானே இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்"என்றாள்.

மாலை அர்ஜுன் கூறியது போலவே பார்க்கை வந்திருக்க திவ்யாவும் இள நில நிற சல்வார் அணிந்து முகத்தில் பொழிவில்லாத தேவதை என வந்தாள் அவளின் முக வாட்டத்தை அவதானித்த அர்ஜுன் எதுவும் பேசாமல் தன் மொபைலை நோண்டிக்கொண்டிருந்தான்.திவ்யா அர்ஜுன் அருகில் வர அவனோ

"ஹாய் திவ்யா ,எப்படி இருக்க"என்று அவளோ அவன் முகத்தை பாரமால்

"நான் நல்லா இருக்கேன் அர்ஜுன்.நீங்க எப்படி இருக்கீங்க?" என்று கேட்க புன்னகையுடன்

"நான் நல்லா இருக்குறதா இல்லையான்னு நீதான் டிசைட் பண்ணனும்.திவ்யா நான் பேசி முடிக்கும் வரைக்கும் நீ எதுவும் பேசிடாத ப்ளீஸ்.திவ்யா நான் சொல்ரது சரியா தப்பான்னுலாம் தெரியல.என்னால அவினாஷ் மாதிரி கோர்வையா பேச எல்லாம் வராது.ஆனா நான் உன்ன காதலிக்கிறேன்" என்றவனை ஒரு அலட்சியப்பார்வை பார்த்த திவ்யா எதுவோ பேச வாயெடுக்க அவளைத்தடுத்த அர்ஜுன்

"கொஞ்சம் இரு நான் சொல்லி முடிச்சிர்ரேன்.உன்ன முதல் முதலா ஹாஸ்பிடல்ல பார்த்தப்போ லவ் வந்திச்சின்னுலாம் சொல்ல மாட்டேன்.நீ அழகுதான் ,அதுவும் ரொம்ப அழகுதான்.ஆனா உன் அழக பார்த்தெல்லாம் எனக்கு காதல் வரல்ல.உன்கிட்ட பேசும் போதும் பழகும் போதும் என் வாழ்க்கை பூரா நீ வந்தா நல்லா இருக்கும்னு தோனிச்சி.நீ விளையாட்டா பேசி எல்லோரையும் சந்தோச வெச்சிருக்க பாரு அது ரொம்ப பிடிக்கும்.மித்ரன் உன் சொந்த அண்ணன் இல்லன்னாலும் நீ அவன் மேல வெச்சிருக்கிற பாசம் ரொம்ப பிடிக்கும்.சில நாட்கள்ள நான் பொறாமையும் பட்டிருக்கேன்.ஆனா அப்புறமா யோசிச்சதுல மனசுக்கு பட்டது ஒன்னே ஒன்னுதான்.நான் மித்ரனா இருந்தா நீ என்ன அண்ணானு இல்ல கூப்பிட்டு இருப்ப.ச்ச்சே எனக்கு எப்படி ஒரு பொண்ணுகிட்ட ப்ரபோஸ் பண்றதுன்னு கூட தெரியல.மன்னிச்சிடு. பட் ஐம் ட்ரூலி,மேட்லி.டீப்லி லவ் யூ (உன்னை நான் உண்மையா,பைத்தியகாரத்தனமா,ரொம்ப ஆழமா காதலிக்கிறேன்)" என்று கூற இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த திவ்யா இப்போது

"எனக்கு கல்யாணம் ஆச்சு அர்ஜுன்"என்று கூற அங்கு வந்த ஷாக்சி பளாரென அவள் கண்ணத்தில் அறைந்தவள்

"எந்த விசயத்துல விளையாடுறதுனு ஒரு விவஸ்த்தை இல்ல.நல்ல வேலை அர்ஜுன் நீ ஏதோ எக்குத்தப்பா பேசுவேன்னு எனக்கு மெசேஜ் பண்ணி வர சொன்னாரு.இல்லைன்னா நீ இன்னும் என்ன பொய்லாம் சொல்லுவியோ?"என்று கூற இப்போது திவ்யா

"எங்க அண்ணன் மேல சத்தியாம எனக்கு கல்யாணம் ஆகிடிச்சி.இதோ இதுதான் என் தாலி"என்று தன் ஆடைக்குள் மறைத்திருந்த தாலியை வெளியில் இருந்து எடுத்து போட்டால்.

இதை கண்ட ஷாக்சியும் அர்ஜுனும் திகைத்திருக்க 

"அவரு பேரு முகிலன்.சிறீலங்கால இருந்து இங்க அகதியா வந்து தலைமறைவா இருந்தாரு.கடவுள் புன்னியத்துல ஒரு பெரிய கவ்ர்மன்ட் ஆபீசர் மூலமா உதவி கிடைக்க அவரு அவங்க நாட்டுல பாதில விட்ட லா () இங்க தொடர்ந்தாரு.எங்க ரெண்டு பேருக்கும் நான் லா படிக்க போனப்போதான் ஏற்பட்டிச்சி.முதல்ல ப்ரெண்ட்ஸா பேசிக்கிட்ட நாங்க காதலிக்க ஆரம்பிச்சோம்.நான் யார் கிட்டயும் சொல்லல .ஏன்னா அவரு பேருல ஒரு கேஸ் இருந்திச்சி.சோ அது க்ளியர் ஆகும் வரைக்கும் என் சேப்டிக்காக அவரு வெளில யாருகிட்டயும் சொல்ல வேணாம்னு சொன்னாரு.அதான் நான் யார்கிட்டயும் சொல்லல"என்றவளை ஷாக்சி

"அப்போ உங்க கல்யாணம் எப்போ நடந்திச்சி"என்று கேட்டாள்.

"உனக்கு தெரியும்ல,2 வருசம் முன்னாடி நான் ஆல் இன்டியன் லாயர்ஸ் கான்பிரன்ஸ்கு போயிருந்தேன்.அது முடிச்சி வரும் போது நீ கூட கேட்டியே ஏன் சேட் ஆஹ் இருக்கேன்னு அப்போதான் நடந்திச்சி"என்று கூற அர்ஜுனோ

"இப்போ அவரு எங்க"என்று கேட்டான்.

"அவரு இப்போ ஜெயில்ல இருக்காரு.அவரோட பழைய கேசுக்காக.அவர நம்ம கவர்ன்மன்ட குண்டர் சட்டத்துல உள்ள போட்டாங்க.இன்னும் 6 மாசத்துல அவரு ரிலீஸ் ஆகுறாரு"என்று கூறியவளை அர்ஜுன் மனதுக்குள்

'பேசாம அவன் அங்கேயே செத்து போகட்டுன்' என்று நினைத்தவன்

"சாரி திவ்யா.நீ ,சாரி சாரி நீங்க ஏற்கனவே திருமனம் ஆனவங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் இப்படி கேட்டிருக்க மாட்டேன்.உங்கள பார்க்கும் போது அப்படி தோனவே இல்ல,என்ன மன்னிச்சிடுங்க . சரி நீங்க ரெண்டு பேரும் பத்திரமா வீட்டுக்கு போங்க"என்று கூறியவன் அவர்களின் பதிலுக்கு கூட காத்திராமல் அவ்விடத்தை விட்டு சென்றான்.
---------------------------------------------------------

குட்டி தங்கச்சி @priyadharshini12 இன் "தாலாட்டும் சங்கீதம் "சூப்பராத்தான் இருக்கும்.சோ கண்டிப்பா எல்லோரும் போய் படிச்சிடுங்க.....

வழமையாக ஞாயிற்றுக்கிழமை வரும் அப்டேட் வரவில்லை என்பதை நினைவில் வைத்து என்னிடம் கேட்ட arunlovely கு நன்றிகள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro