கல்யாணம் பண்ணிக்கலாமா!

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

நெஞ்செமெல்லாம் காதல் --- 

கண்ணன் தாராக்காக..(மறக்க முடியாத இனிமையான இன் நாளில்(கண்ணனின் கற்பனை என் எழுத்துக்களாய்)---

உன் அழகில் எல்லோரும் மயங்கி இருக்க
நானோ உன்னை உதாசீனம் செய்து வசைச்சொற்கள் பாடி
என் கரத்தால் உன்னை தீண்டினேன்(அப்பு).

தாயின் பாசம் அறியாத நான் ,
தாயின் ஜாடையில் இருந்தவள் மீது மனம் நாட,
தாய் என்று நினைத்து பேயை காதல் கொண்டேன்.

எப்போது என் மீது நீ காதல் கொண்டாய் என்ற நினைவில்லை.
உன் உயிரிலும் மேலாக என் மீது காதல் கொண்டாய்.
காதல் மட்டுமா கொண்டாய்,என்னையே உன் உலகமாக நினைத்தாய்.
உன் காதல் புனிதமாக இருக்க என் காதல் ஒரு ஏமாற்றுக்காரியிடம் இருந்தது.

காதலுக்காக உயிரை மாய்த்தவர்களை காவியங்களில் படித்துள்ளேன்ஆனால், எனக்காக ஒருத்தி உயிரை மாய்க்க துணிவால் என்று கனவிலும் நினைக்கவில்லை.
ஒன்றை மட்டும் நீ மறந்தாய்...நீ இல்லாத என் வாழ்க்கை,
உயிர் அற்ற தாயிடல் குழந்தை பால் குடிப்பது போன்று.

உன்னிடம் எனக்கு தாயின் பாசம் வேண்டாம்,
மகளின் அன்பு வேண்டாம்,
தோழியின் அரவனைப்பு வேண்டாம்,
எனக்கு நீ நீயாக மட்டும் வேண்டும்
வேறு யாராகவும் அல்ல.

உன் உயரத்தை,
உன் கண்களை,
உன் கார்போன்ற குழல்களை நான் எப்போதும் வேடிக்கையாக பேசுவது உன்னை கேலி செய்ய அல்ல...
உன் உயரம் என்னை கொல்லுகின்றது,
உன் கண்கள் தினமும் என்னை எரிக்கின்றது,
உன் குழல் என்னை உன்மத்தம் கொள்ள செய்கின்றது...

என்னை இத்தனை பாடாய்படுத்தும் என் எதிரிகளை என்னால் வீழ்த்த முடியாவிட்டாலும்,அவர்களை கேலி செய்து என் மனதை சாந்திப்படுத்திக் கொள்கின்றேன்.

எதிரிகளிடம் வீழ்வது கூட சுகம் என உணரவைத்த தேவதைப்பெண் நீ.

கடவுளிடம் வேண்டுவது ஒன்றே ஒன்று,
உனக்கு முன் நான் சென்றுவிட வேண்டும்.
நீயில்லாத வாழ்க்கை என்ற ஒன்றே எனக்கு இல்லை.

----------------------------------------------------------------------------------

"கல்யாணாம் பண்ணிக்கலாமா" Part 2 வை எதிர்பார்த்தவனாக...................

(யாருக்கெல்லாம் பார்ட் 2 வேணுமோ எல்லோரும் பின்னூட்டத்தில் ரிக்குவஸ்ட் பண்ணுங்கப்பா).

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro