தென்றல் 29

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

மித்ரனால் இப்போது முன் போன்று நடக்க முடியவில்லை என்றாலும் ஊன்றுகோலின்  உதவியுடன் அவனால் ஓரளவு நடக்க முடிந்தது. நடக்கவே முடியாது என்று

இருந்தவன் குறைந்த பட்சம் ஊன்றுகோலை வைத்தாவது நடப்பது எல்லோருக்கும் ஒரு நிம்மதியை கொடுத்தது.

நாடு வந்ததும் அவர்களுக்கு கிடைத்த செய்தி எல்லோரையும் திக்கு

முக்காடச்செய்தது. கம்பனியில் பல வருடங்களாக வேலை செய்த பலர் வேலை பணிநீக்கம் செய்யப்படது முதல் இடி என்றாலும் நிறுவனத்தால் அன்மையில் கிடைக்கப்பெற்ற சில முக்கியமான வியாபார ஒப்பந்தங்கள் எல்லாம் முறையற்ற நிர்வாகத்தினால் வேறு கம்பனிகளுக்கு கைமாறி இருந்தது பெரும் அதிர்ச்சியால

இருந்தது. இவர்கள் வந்து சரியாக இரண்டு வாரத்தில் கம்பனி செயர் ஹோல்டர்ஸ் எல்லோரும் நிருவாகம் சம்பந்தமாக தீர்மானம் எடுப்பதற்காக ஒரு மீட்டிங்கிற்கு அரேஞ்ச் செய்திருந்தனர்.

மீட்டிங்கிற்கு எல்லோரும் வர மித்ரன் கையில் ஊன்றுகோலுடன் வந்தவனை ஜானவி நக்கலாக நோக்க அவன் கையில் இருந்த ஊன்றுகோலை தன் கையில் வாங்கிய ஷாக்சி மித்ரனின் வலக்கரத்தை எடுத்து அவளின் தோள் மீது போட்டு அவனுக்கு ஒரு சப்போர்ட்டாக வந்தவள் ஜானவியை சட்டை செய்யாமல் அவர்களுக்கு ஒதுக்கி வைத்திருந்த இருக்கையில் அமர்ந்தனர்.

விஷ்வனாத்தினால் புதிதாக கையெழுத்திட்டு அவரால் ரோஹித்திடம் விட்டு சென்ற

இரண்டு பெரிய கான்ட்ராக்ட்கள் முழுவதும் நஷ்டம் அடைந்ததில் பல நாட்களாக அவர்களின் கம்பனியுடன் தொடர்பு வைத்திருந்த இரண்டு கம்பனிகளும் தங்களது தொடர்புகளை நிறுத்தியிருந்தது. இந்த விடயமே அன்றைய மீட்டிங் காரசாரமகா

செல்ல, என்ன செய்வது என்று புரியாமல் நின்ற விஷ்வனாத்திடம் பங்குதாரர்கள் எல்லோரும் அவரை நிருவாகப் பொறுப்பில் இருந்து ஒதுங்கி அனைத்து நிருவாக

பொறுப்புகளையும் ரோஹித்திடம் கொடுக்கும்படி வற்புறுத்த அவரால் எதுவும் செய்ய முடியாமல் தான் இனிமேல் நிருவாகத்தில் எந்த ஒரு அங்கமும் வகிக்கமாட்டேன் என்று கூறி நிருவாகத்தை விட்டு நீங்கினார்.

விஷ்வனாத், ஷாக்சி மற்றும் மித்ரன் மூவரும் மீட்டிங்க் அறையை விட்டு வெளியில் வர அவர்களை அழைத்த ஜானவி

"ரொம்ப கவலையா இருக்கு சார். இவ்வளவு காலமும் கட்டிக்காத்த உங்க கம்பனி 6 மாசத்துல இப்படி தலை கீழா ஆகிடிச்சே. என்ன செய்ய எல்லாம் உங்க தத்து மகளோட ராசி. ஆமா மகராசி எங்க ஆளயே கானோம் ?" என்றவளை மித்ரன்

"உனக்கு ஏன் ஜானவி இவ்வளவு கோவம் அவ மேல. என்னான்னு காரணத்த சொன்னாலாச்சும் என்ன ஏதுன்னு பேசி தீர்க்கலாமே" என்றவனை புன்னகையுடன்

"ஹ்ம்ம்.. அதெல்லாம் தெரியாமலே இருக்கட்டும் மித்ரன். அப்புறம் உங்கப்பா சைன் பண்ண ப்ராஜக்ட் எல்லாமே நீங்க இல்லாதப்போ நாங்கதான் பார்த்துக்கிட்டோம். ஆனா அப்படி இருந்தும் எப்படி செயார் ஹோல்டர்லாம் எங்க கிட்ட பொறுப்பை ஒப்படைக்க சொன்னாங்கன்னு யோசிக்கிறீங்களா. உங்க அப்பா சைன்

பண்ண எல்லா கான்ட்ராக்ட்லயும் கம்பனிக்கு நஷ்டம் வர்ர மாதிரி பண்ணிட்டு உங்க கம்பனி ஹிஸ்டரிலயே கிடைக்காத மாதிரி ஒரு ப்ராஜக்ட்ட எங்க அப்பாவோட

கம்பனியோட போட்டுட்டோம். சோ இவ்வளவு நாள் பிஸ்னஸ் பண்ண உங்க அப்பா டம்மி பீஸ் ஆகிட்டாரு. எங்கப்பா கம்பனிகூட கான்ட்ராக்ட் போட்ட நாங்க பெஸ்ட் டிசிசன் மேக்கர்ஸ் ஆகிட்டோம்" என்றவளளை மித்ரன் ஆற்றாமையுடன்

"ஜானவி இப்படி பண்றது எல்லாம் கெத்து நினைச்சிக்காத. லைப்ல எப்போமே எல்லோருக்கும் வெற்றியே கிடைக்காது. வெற்றிக்களிப்பில மிதக்கும் போது திடீரென தோல்வி வரும், அப்போ நம்மலாள அத தாங்கிக்க முடியாம போகும். எனக்கு

உடம்பு அடிபட முன்னாடி நீ இப்படி பண்ணியிருந்தா அது எங்களுக்கு பெரிய இடியா இருந்திருக்கும். ஏன்னா எனக்கு எங்கப்பாவோட கம்பனில ஜீ எம்மா உட்காரனும்னு சின்ன வயசுல இருந்தே ஆசை. ஆனா எனக்கு அடிபட்டதுல இருந்து. கம்பனியவிட எங்க எல்லோருக்கும் நான் குணம் ஆகனும் எங்கிறதுதான் இவங்க

எல்லோரோட ஆசையும், ஏன் என் ஆசையும் அதுதான். சரி ஜானவி எங்க மேல உள்ள கோவத்துலதான் நிருவாகத்தை நீங்க இரண்டு பேரும் ப்ளான் பண்ணி பறிச்சிட்டீங்க. இனிமே மீதி இருக்குறா செயார் ஹோல்டர்ஸ்காகவாச்சும் ஒழுங்கா பார்த்துக்கோங்க என்று கூற ஜானவி

"சரி மித்ரன், நாங்க பார்த்துக்கிறோம் இப்போ நீங்க எல்லோரும் ........"

என்று அவர்களை வெளியில் போகும்படி சைகை செய்ய மனதில் வலியுடன் மூவரும் வெளியில் வந்தனர்.

வீட்டிற்கு வந்தவர்களிடம் திவ்யா என்ன நடந்தது என்று கேட்க அவர்கள்

எதுவும் பதில் கூறாமல் இருப்பதை கண்டவளுக்கு கம்பனியில் ஏதோ

நடக்கக்கூடாது மட்டும் நடந்துள்ளது என்று புரிந்தது. அங்கு நிலவிய

அசாதாரன நிலமையை மாற்றும் விதமாகா ஷாக்சி

"ஹேய் திவ்யா அது ஒன்னுமில்லப்பா, அப்பா ரொம்ப நாளா ரெஸ்ட் எடுக்காம

வேலைன்னே ஓடிக்கிட்டு இருந்தாங்களா சோ அதுக்கு எல்லாம் சேர்த்து அப்பாக்கும் பிள்ளைக்கும் ஒரு பெரிய லீவ் கிடைச்சிருக்கு" என்று கூற

திவ்யாவுக்கு அங்கு என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க முடிந்தது.

இரண்டு நாட்கல் கடந்திருக்க மித்ரனை பார்க்க வந்திருந்த சதீஷ் கம்பனியில் நடந்த எல்லாவற்றையும் கேள்வியுற்றவன் ஜானவி எதனால் இப்படி எல்லாம் செய்கின்றால் என்று புரியாமல் யோசித்துக் கொண்டிருந்தவன் ஜானவியை நேரில்

சந்திக்கலாம் என்று எண்ணி ஆபீஸ்சுக்கே சென்றான்.

ரிசப்சனிஸ்ட்டிடம் ஜானவியை பார்க்க வேண்டும் என்று கூற அவளோ ஜானவியிடம் கெஸ்ட் வந்திருப்பதாக கூறியதும் ரோஹித்துடன் பேசிக்கொண்டிருந்த ஆரவத்தில்

வந்திருப்பவரின் பெயரை சரியாக கேட்காமல் உள்ளே வரும்படி கூற கதவை திறந்து கொண்டு வந்த சதீஷை கண்டதும் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றாள்.

அவனைக்கண்டதும் ஜானவி பேச்சின்றி நிற்பதை கண்ட ரோஹித் ஏதோ ஒன்று சரியில்லை என நினைத்து சதீஷிடம் யார் என்று கேட்க அவனோ இவர்களுடன் கூட படித்த சதீஷ் என்று கூற ரோஹித்துக்கு எல்லாமே விளங்கியது.

அவர்கள் இருவரையும் தனியாக விட்டு வெளியில் செல்ல முற்பட்ட ரோஹித்

"சரி நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க நான் கொஞ்சம் வெளில

போயிட்டு வரேன் " என்று கூற நம் வாசகர்கள் போலவே சதீஷும் என்ன நடக்கின்றது.என்று புரியாமல் நின்றான். ரோஹித் வெளியில் செல்கிறேன் என்று கூறியதும்

கோவம் கொண்ட ஜானவி ரோஹித்தை பார்த்த

"நீங்க  இப்போ எதுக்கு வெளில போரீங்க. நீங்க இங்கேயா இருங்க " என்று கோவதுடன் கூறியவளை ரோஹித் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்க அவளோ சதீஷை

பார்த்து

"ஆமா  நீங்க எப்படி  இங்க?" என்று  அதிர்ச்சியில் தட்டு தடுமாறி கேட்க சதீஷோ

"இல்ல ஜானவி மித்ர யூ எஸ் வந்திருந்தான் டிரீட்ம்னடுக்கு" என்று பேச தொடங்கியவனை இடை மறித்து

" அவங்க எல்லோரும் உங்கள தூதுக்கு அனுப்பினாங்களா?" என்று கேட்க அவனோ ஜானவி வந்ததும் வராததுமாக இப்படி நேரடியாக எடுத்தெறிந்து பேசியதை ஏற்க

முடியாமல்

"என் ஜானவி இப்படி பேசுர. அப்படி அவங்க எல்லோரையும் கஷ்டபடுத்தி

பார்க்கனும்னு ஏன் இப்படி துடிக்கிற? உனக்கு அவங்களுக்கும் என்னதான்

அப்படி பகை?" என்று கேட்க சதீஷை கண்ட அதிர்ச்சியில் இருந்தவள் என்ன

பேசுகின்றோம் என்பதை அறியாமல்

"எல்லாமே உனக்காகத்தான் பண்ணேன். அவங்க படுற கஷ்டத்துக்கு எல்லாம் நீதான்

காரணம்" என்று கூற நிஜமாவே சதீஷிற்கு ஒன்றும் புரியாமல்

"என்ன உளற  ஜானவி. என்னால எதுக்கு நீ அவங்கள பழி வாங்கனும் "என்று கூற அவளோ சத்தமிட்டு

"ஏன்னா நான் உன்ன உயிருக்கு உயிரா காதலிச்சேன்" என்று கத்தியவளை ரோஹித் கல் விழுந்து கண்ணாடி போல் சில்லு சில்லாக சிதறிய இதயத்துடன் நோக்கினான். ஆனால் சதீஷோ

"என்ன சொல்ர, நீ என்ன காதலிச்சியா? எனக்கு தெரியாதே?" என்று கூறியவனை அவள்

"அன்னைக்கு உன்ன மித்ரன் அடிச்சான்ல, அது மட்டும் நடக்காம இருந்திருந்தா என் காதல அன்னைகே சொல்லிருப்பேன் உன்கிட்ட. நீ என்னடான்னா அவன்கிட்ட அடிய

வாங்கிட்டு ஊர விட்டே ஓடிட்ட. என் காதலும் அன்னையோட செத்துப்போச்சி" என்று

கூற சதீஷிற்கு இப்போது எல்லாமே தெளிவாக புரிந்தது.

ஜானவி தன்னை காதலித்திருகின்றால், அவள் தன் காதலை கூற வந்த அன்றுதான்

தனக்கும் மித்ரனுக்கும் சண்டையாகி மித்ரனை போலீஸ் அரஸ்ட் செய்ததும் அதன் பிறகு திடீரென்று அப்பாவுக்கு க்றீன் கார்ட் கிடைக்க யாரிடம்

கூறிக்கொள்ளாமல் அவசரமாக யூ எஸ் சென்றதை ஜானவி சரியாக தவறாக புரிந்து கொண்டாள் என்று புரிந்து கொண்டான்.

அவளுக்கு நடந்ததை விளக்க முற்பட்ட சதீஷ் "இல்ல ஜானவி எனக்கும் மித்ரனுக்கும் இது மாதிரி நிறைய சண்ட  வந்திருக்கு. நாங்க அந்த சண்டையினால காணாம போகல. அப்பாக்கு திடீரென்று

க்றீன் கார்ட் கிடைச்சதுனால போக வேண்டியதா போச்சி. அத நீ தப்பா

புரிஞ்சிக்கிட்ட. சரி எது எப்படியோ அதான் இப்போ நான் வந்திட்டேனே. வேணும்னா இப்போ நீ என்ன லவ் பண்ணிக்கலாம்பா எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல" என்று

அவளின் மனநிலையை அறியாமல் குறும்பாக பேசியவனை எரிச்சலுடன் பார்த்த ஜானவி சிறு புன்னகையுடன்

"இங்க பாருங்க சதீஷ் உங்கள லவ் பண்ணது உனமைதான். ஆனா எப்போ நீங்க என்ன விட்டு கோழை மாதிரி ஓடினீங்களோ அப்பவே என் மனச விட்டும் போயிட்டீங்க. நான் பண்ணது இனிமே பண்ண போறது எல்லாமே என் காதலுக்காக, அதுல கொஞ்சம் கூட நீங்க கிடையாது" என்றவளை சதீஷ் குழப்பமாக நோக்க

"என்ன குழப்பமா இருக்கா சொல்ரேன் நல்லா கேட்டுக்க்கோங்க, உங்கள நான் காதலிச்சது உண்மைதான். ஆனா அந்த காதல் கை கூடாம போனதுக்கு காரணம் திவ்யா. அப்புறம் உங்க மேல இருந்த அன்பு காதல் எல்லாமே காணாம போயி என்

காதல் என்னோட காதல சீரழிச்சவங்கள பழிவாங்கனும்கற எண்ணம் என் மனசுல

வந்திடிச்சி. அதுக்குதான் இது எல்லாமே" என்று கூற அடுத்து சதீஷ் பேசியதை கேட்ட ரோஹித் அப்படியே வாயடைத்தி நின்றான்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro