தென்றல் 28

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ரோஹித்தும் ஜானவியும் சேர்ந்து கம்பனியில் இருக்கின்ற வயதான ஸ்டாஃப் மற்றும் வேலை செய்வதில் சோம்பேறித்தனத்தனமாக இருந்தவர்கள் என பாதி பேரை வேலை விட்டு நீக்க ஜானவியோ மித்ரனின் தந்தைக்கு விசுவாசமாக இருந்தவர்களையும் சத்தமில்லாமல் நீக்கினால்.

காலையில் ஆபீஸ்சுக்கு வந்த ரோஹித் ஜானவி கொடுத்த டேர்மினேசன் லிஸ்டில் அவினாஷ் மற்றும் கீர்த்தி பெயர் இருப்பதை கண்டவன் மனதிற்க்குள்

'என்ன இவங்க பேரு லிஸ்ட்ல இருக்கு. நல்லா வேலை பார்க்குறவங்க ஆளுங்க பெயரெல்லாம் இவ எதுக்கு சேர்த்திருக்கா. ஆபீஸ்க்கு வந்த ஒரு வாரத்திலேயே நமக்கு யாரு நல்லா வேலை பார்க்குறாங்க ,யாரு வேலை செய்யாம உட்கார்ந்திருக்காங்கன்னு தெரியுது. இரண்டு மாசத்துக்கு மேல இங்க இருக்குறா இவளுக்கு தெரியாம போகாதே. ஏதோ தப்பா இருக்கே. சரி பட்சி இதெல்லாம் ஏதும் உள்நோக்கத்துல பண்ணான்னா நம்ம வேலை ஈசி ஆகிடும் பார்க்காலாம்' என்று என்னிக்கொண்டான். 

அவன் நினைத்தது போலவே ஆபீஸ் வந்த ஜானவி கையில் டெர்மினேசன் லிஸ்ட்டை வைத்து யோசித்து கொண்டிருந்தவனை ஒரு நொடி பார்த்தவள் ஏதோ தோன்றியவளாக

"ரோஹித் காலைல இருந்து சாப்பிடவே இல்ல. நம்ம வெளில போயி சாப்பிட்டு வரலாமா? " என்று கேட்டவளை ரோஹித்தும் மனதுக்குள் 

'ரோட்ல போற முயல் குட்டி தானே வந்து மாட்டுது' என்று எண்ணியவன் 

"சரி ஜானவி போகலாம்" என்று இருவரும் ஆபீஸ் விட்டு வெளியில் வந்தனர்.

ஜானவிக்கோ ரோஹித்தை பார்த்த சில நொடியே புரிந்துகொண்டாள்,  இவன் ஒரு பெண்கள் பின்னாள் அலையும் ரோமியோ என்று. அதற்காக அவன் நடவடிக்கைகள் ஒன்றும் மூன்றாம் தர பெண் பித்தர்கள் செய்வது போல இருக்காது. இருந்த போதிலும் இவனின் இந்த குனாதிசியம் என்றாவது ஒரு நாள்  தனக்கு உதவும் என்று நினைத்திருந்தாள். இருவரும் வெவ்வேறு என்னங்களுடம் ரெஸ்ட்டாரண்டுக்குள் நுழைய ஜானவியே  ஆடர் செய்ய ரோஹித்தும் அதையே ஆடர் செய்தவன் உணவு வந்ததும் உண்ண ஆரம்பிக்க ஜானவி

"ரோஹித் டெர்மினேசன் லிஸ்ட்ட பத்தி என்ன நினைக்குற " என்று கேட்க அவனோ நேரடியாகவே

"ஆம நீ ஏன் நீ நல்லா வேலை பார்க்குறவங்க பெயரெல்லாம் சேர்த்திருக்குற. அதுலையும் அந்த அவினாஷ் நிஜமான டெடிகேட்டா வேலை பண்றான் .அவனையும் நீ சேர்த்திருக்க. ஆமா மனசுல  எத நினைச்சு இதெல்லாம் பண்ற " என்று கேட்க அமைதியாக இருந்த ஜானவி தனக்கும் மித்ரனுக்கும் நடக்க இருந்த திருமணம் பற்றியும் அது மணமேடை வரை வந்து நின்று போனதையும் கூற இதை கேட்டு ஆத்திரமடைந்தவன்

"உன்ன போயும் ஒரு ப்ரபசனல்னு நான் நினைச்சேன் பாரு என்ன செருப்பால அடிக்கனும். உன்னோட பர்சனல் மேட்டர் எல்லாம் ஆபீஸ்கு வெளில வெச்சிக்கோ. எனக்கு கிடைச்சிருக்குற முதல் ஆப்பர்சுனிட்டி இது. அதை கெடுக்க பார்க்குறியே. ஆமா அப்படி உனக்கு மித்ரன், திவ்யா மேல என்ன கோபம்" என்று கேட்க  ரோஹித்தை நோக்கி புன்னகைத்தவள் 

"உனக்கு சொன்னா புரியாது ரோஹித். வாழ்க்கைல யாரையும் நீ உயிருக்கு உயிரா காதலிச்சிரிக்கியா? காதலோட வலி என்னன்னு தெரியுமா உனக்கு? " என்று கேட்க அவனோ சலிப்புடன்

"இங்க பாரு காதல் என்ன ஹோர்மோன்ஸ் செய்ற வேலைதானே. கடைசில இந்த காதலால என்ன ஆச்சி. நீயும் கஷ்டப்பட்டு இன்னொரு குடும்பத்தையும் கஷ்டப்படுத்துற. இதுல காதலோட வலிய நான் வேற அனுபவிக்கனுமா" என்று சிரித்தவனை முதன் முறையாக முறைத்த ஜானவியை

"சரி ரொம்ப முறைக்காத என்னன்னு சொல்லு, உன் காதல் காவியத்த கேட்கலாம்" என்றவன் அவள் அவனிடம் தன் வாழ்க்கையில் நடந்ததை கூறத்தொடங்கினாள்.

"உனக்கு நான் சொல்ரது ஒரு வேல சில்லியா தெரியலாம். ஆனா எனக்கு அது பெரிய விசயம் ரோஹித்" என்று தன் காதல் கதையை கூறும் முன் அவள் விளக்கம் சொல்வதை கேட்டவன் கொஞ்சம் சலிப்புடன் 

"முதல்ல விசயத்து சொல்லு" என்றான்.

"நான் ,திவ்யா ,ஷாக்சி ,மித்ரன் எல்லோருமே ஒரே காலேஜ்தான் படிச்சோம். மித்ரனும் ஷாக்சியும் ஒரே வருசம். நானும் திவ்யாவும் அவங்க ஜூனியர். ஆனா ஷாக்சி எங்க கிட்ட ரொம்ப நெருக்கமா பழகுவா" என்று கூற ஆரம்பித்தவள் தன் முழுக்கதையையும் கூறி முடிக்க கண்களில் வெளிவரக் காத்திருந்த கண்ணீரை மறைத்த ரோஹித் ஒரு பெண்ணாள் ஒரு பையனை இவ்வளவு காதலிக்க முடியுமான்னு எண்ணினான். உடனே மனதில் இருந்த ஒரு சந்தேகத்தை நேரடிகயாக கேட்ட நினைத்தவன்

"இப்பவும் அவன நீ லவ் பண்றியா?" என்று ஆவளுடன் கேட்க அவளோ

"இல்லை அவன் மேல இப்போ எனக்கு கொஞ்சம் கூட காதல் இல்லை. அந்த காதல் எப்பவோ செத்துப்போச்சு. ஆனா அதுக்கு காரணமான திவ்யாவ நான் பழிவாங்கதான் எல்லாமே பண்ணேன். ஆனா மித்ரன் அதுல தானா வந்து மாட்டிக்கிட்டான்" என்று கூற ரோஹித் எதுவும் கூறாமல் சாப்பிட்டதுக்கு பணத்தை கொடுத்துவிட்டு ரெஸ்ட்டாரண்டை விட்டு வெளியேறினர்.

தன் வாழ்க்கையில் காதல் கதைகளை கேட்டு வளர்ந்தவர்களுக்கு ஜானவியின் கதை ஒரு வழமையான காதல் கதை போல தோன்றலாம். ஆனால் ஃபாரீனில் படித்து வளர்ந்த ரோஹித் அங்கு இருக்கும் லிவ் இன் ரிலேசன்சிப்பை பார்த்து சலித்திருந்தவனுக்கு ஜானவின் காதல் கதை கூட அவன் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

ரோஹித்தின் மனதில் ஜானவி பற்றி இருந்த எண்ணம் முழுவதும் மாறி இருந்தது. ஆனால் அவன் ஒன்றை உணர தவறினான். அவன் மனதில் ஜானவியை பற்றிய எண்ணம் மாறவில்லை. காதல் பற்றி அவன் கொண்டிருந்த எண்ணம் மாறியதால் ஜானவியை அழகு பதுமை என பார்த்தவன் இப்போது தன் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்த வந்த தேவதை என நினைத்தான். எது எப்படியோ இந்த காதல் அவன் வாழ்க்கையில் என்னென்ன கஷ்டங்களை கொடுக்கும் என்று அவன் அப்போது அறியவில்லை 

அதுவரை எதுவும் பேசாமல் வந்த ரஹித் ஜானவி கடைசியாக காரை விட்டு இறங்கும் போது

"ஜானவி நீ எது பண்ணாலும் நான் உன்கூடவே கடைசி வரைக்கும் இருப்பேன்" என்று கூற அதன் அர்த்தத்தை புரிந்துகொண்ட ஜானவி

"என்ன ரோஹித் உன்ன ஒரு ரோமியோன்னு நினைச்சா நீ இப்படி எமோசனலா பேசுர. உன் ஹிஸ்டரி பார்த்தப்போ லவ் பத்தி நீ அவ்வளவு சீரியசா யோசிக்கிற ஆள் இல்லையே" என்று கேட்டவள் சந்தேகமாக

"என்ன என்னோட கதைய கேட்டு காதல் வந்திடிச்சா ஹாஹா. சரி சரி இந்தியா வந்ததும் நீ ஒரு சாதாரண இந்திய குடமகன் ஆகிட்ட" என்று நக்கலாக கேட்க ரோஹித்தோ சீரியசா

"ஆமா என் ஹிஸ்டரி உனக்கு எப்படி தெரியும்?" என்று கேள்வியாக பார்த்தவனை அவளோ

"உன்கூட டே அண்ட் நைட் வேல பார்க்க போறேன். நான் எப்போவும் கொஞ்சம் முன்ஜாக்கிரதையா இருப்பேன். யார்கிட்டயும் பழகுறதுக்கு முன்னாடி அவங்க எப்படி பட்டவங்கன்னு தெரிஞ்சிக்கிட்டுதான் பழகுவேன். நீ ஆரம்பத்துல என்ன பார்த்ததுக்கும் இப்போ என் கதைய கேட்டதுக்கு பிறகு பார்க்குறதுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு" என்று கூற ரோஹித்தோ காரை விட்டு கீழிறங்கி அவள் கைகளை பிடிக்க ஜானவி கொஞ்சம் அதிர்ச்சியாக அவனை பார்த்த போது

"ஜானவி ஐ லவ் யூ. நீ என்ன பத்தி தெரிஞ்சிக்கிட்டதுல நான் ஒரு ப்ளேபாய்னு கண்டிப்பா புரிஞ்சிருப்ப. ஆனா எனக்கு வாழ்க்கை பூரா உன் கைய புடிச்சிக்கிட்டு இருக்கனும், நீ நரகத்துக்கு கூட்டிட்டு போனாலும் உன் கூட வர நான் தயாரா இருக்கேன். உன் பழிவாங்குற எண்ணத்த மாத்திக்கன்னு சொல்லமாட்டேன். ஆனா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து அத பண்ணலாம்னு சொல்ரேன்" என்று கூற என்றும் தனது டிரேட்மார்க் மாறாமல் இருக்கும் புன்னகையுடன் 

"என்ன பத்தி முழுசா சொல்லிட்டேன் ரோஹித். என்னால இப்போ எதுவும் சொல்ல முடியாது. பார்க்கலாம் நம்ம லைப் எப்படி போகுதுன்னு. அப்புறம் நான் இப்போ சொன்னத வெச்சு நான் உங்கள காதலிக்கிறேன்னு நினைச்சிடாதீங்க.  நீங்க வேணும்னா என்ன காதலிங்க அது உங்க இஷ்டம் நான் என்ன பண்றதுன்னு அப்புறமா யோசிக்கிறேன்" என்று கூறியவள் அவனுக்கு கை நீட்டியவள்

"we are going to be crime partners (குற்றத்த்தில் பங்காளியாக இருக்க போகின்றோம்)" என்று கூற ரோஹித்தோ 

”we are going to be life parthers (வாழ்க்கையில் பங்காளியாக போகின்றோம்)" என நினைத்துக்கொண்டான்.

மித்ரனின் டிரீட்மெண்ட் முடிந்து அவனால் இப்பொழுது பழைய படி நடக்க முடியவில்லை என்றாலும் ஊன்று கோலின் உதவியுடன் நடக்க முடிந்தது. அவர்கள் தங்களது பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா செல்ல தயாரான வேலை சதீஷும் அவர்களுடன் வந்து தன் அண்ணன் குடும்பத்தை பார்க்க போவதாக கூறி அவர்களுடனேயே கிளம்பினான். இந்தியா வந்தவர்களுக்கு கிடைத்த முதல் செய்தி தங்களது கம்பனிக்கு மிகவும் விசுவாசமாக இருந்த எல்லா வேலையாட்களையும் கம்பனியை விட்டு நீக்கியிருந்தது பேரிடியாக இருந்தது. அதற்கு அடுத்ததாக வந்த செய்த அவர்கள் நால்வரையும் நிலைகுலையச் செய்தது என்றே கூறலாம்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro