தென்றல் 8

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இருவரும் போலீஸ் ஸ்டேசனை அடைய அங்கு மித்ரனுக்கு செமத்தியாக அடு விழுந்து முகமெல்லாம் வீங்கியிருந்தது. இதை கண்ட திவ்யாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க அதை கட்டுப்படுத்தியவள் உடனே இன்ஸ்பெக்டரை பார்த்து

"சார் ,எதுக்கு அண்ணாவ அடிச்சீங்க.அவரு என்ன பண்ணாரு?யாரோ பண்ண தப்புக்கு இப்படித்தான் அப்பாவி மனிசன இப்படித்தான் அடிப்பீங்களா?"என்று எகிறியவளை ஷாக்சி மனதுக்குள்

'அடிப்பாவி காலைல இருந்து சாப்பிடாம ஹாஸ்ப்பிடல்ல இருந்தவல போலயா இவ பேசுரா. ஹ்ம்ம் பிள்ளைக்கு இந்த ரவுடி மேல லவ்ஸ் வந்திடிச்சி போல'என மனதுக்குள் நினைத்தாள்.

திவ்யாவின் எகிறலுக்கு நக்கலாக ஒரு பார்வை பார்த்த இன்ஸ்பெக்டர்

"ஓஹ் நீங்கதான் அந்த காதல் கொண்டேன் ஹீரோயினா.ஆனா நீ இவன அண்ணானு சொல்ர"என்றதற்கு திவ்யா

"சார் உங்களுக்கு சம்பந்தமில்லாத விசயங்கள பத்தி பேசாம எதுக்கு இவர இப்படி அரஸ்ட் பண்ணி வெச்சிருக்கீங்கன்னு தெரிஞ்சிக்க முடியுமா?"என்றவளை இன்ஸ்பெக்டர் எரிச்சலுடன்

"ஹேய் ரொம்ப எகிறாத.இவன் காலேஜ்ல இன்னைக்கு அடிச்ச அடில ஒரு ஸ்டூடன்டும் ஒரு லெக்சரரும் பாதிக்கப்பட்டிருக்காங்க.அன்ட் மோர் ஓவர் அந்த பையனுக்கு மண்டை ஒடைஞ்சி இப்போ ஹாஸ்ப்பிடல்ல இருக்கான்"என்றவரை கொஞ்சமும் சட்டை செய்யாமல்

"சரி FIR போட்டீங்களா"என்று திவ்யா கேட்க அதற்கு இன்ஸ்பெக்டரோ

"இதோ இப்பவே போட்டுர்ரேன் .அட்டம்ப்ட் டு மர்டர் ஓக்கேயா?"என்று நக்கலாக கேட்க ஷாக்சிக்கு கொஞ்சம் உதறல் எடுத்தது.ஆனால் கொஞ்சமும் இன்ஸ்பெக்டர் பேசுவதை சட்டை செய்யாமல் திவ்யா

"அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்ல.நீங்க அட்டம்ப்ட் டு மர்டர் மட்டுமில்ல எதுல வேணும்னாலும் போடுங்க.அதுக்கு முன்னாடி அந்த ரெண்டு பேரு மேலயும் ஒரு கேஸ் நான் கொடுக்கனும்.அந்த லெக்சரர் கொடுத்த லவ் டார்ச்சர் தாங்க முடியாம நான் இன்னைக்கு சூசைட் பண்ணிக்க பார்த்தேன்.அதுக்கு அந்த லெக்சரரோட தம்பியும் உடந்தை.நான் இப்படி பண்ணத பொறுக்க முடியாமத்தான் என் அண்ணன் அவங்கள போட்டு அடிச்சிருக்காரு.சோ நீங்க நான் கொடுக்குற கம்ப்ளையின்டயும் சேர்த்து போட்டுக்கோங்க"என்று கூற முதலில் கொஞ்சம் அதிர்ந்த இன்ஸ்பெக்டர் பிறகு கொஞ்சம் சுதாகரித்து

"அட ஒரு பிரச்சினையும் இல்ல.நீங்க சொல்ரமாதிர்யே போட்றலாம்.அப்படியே நியூஸ் சேனல்ஸ்கும் சொல்லிட்டோம்னா இன்னும் நல்லா இருக்கும்.உன் பேருதான் நாறிப்போகும் "என்று கூற உடனே மித்ரன்

"இன்ஸ்பெக்டர் அவ சொல்ரதெல்லாம் நீங்க கேட்டுகிட்டு இருக்க வேணாம்.நான் அடிச்சதுக்கு உங்களுக்கு என்ன கேஸ் போடனுமோ போடுங்க.நான் கோட்ல பார்த்துக்கிறேன் "என்றவனை திவ்யா அவன் அருகில் சென்று மெதுவாக

"கொஞ்சம் வாய மூடிறீங்களா"என்றவள் இன்ஸ்பெக்டரை பார்த்து

"அதெல்லாம் ஒரு ப்ராப்ளமும் இல்ல சார்.நீங்க வேணும்னா டிவி சேனலையும் கோப்பிடுங்க "என்ற கூற இந்த தடவை அதிர்ச்சியாவது இன்ஸ்பெக்டரின் முறையானது.

திவ்யாவின் எடுத்தெரிந்த பேச்சால என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழித்த இன்ஸ்பெக்டர்

"சரி சரி.இனிமே இப்படி நடந்துக்க கூடாது.ஓக்கே.இப்போ நீங்க போங்க"என்று கூற திவ்யாவோ

"ஹல்லோ சார் நாங்க போறது இருக்கட்டும்.யார கேட்டு அண்ணா மேல கைய வெச்சீங்க? "என்றதற்கு அவர் சலிப்புடன்

"ஏய் என்ன விட்டா ரொம்ப ஓவரா பேசுர.ஓங்கி ஒன்னு விட்டேன் செவிலு பிஞ்சிடும்"என்றார்.அதற்கு திவ்யாவோ

"முடிஞ்சா கைய வெச்சிதான் பாருங்களேன்"என்று கூற அவ்விடத்தில் போலீஸ் ஸ்டேசனில் இருந்த எல்லோரும் ஒன்று சேர இனிமேலும் இங்கு இருப்பது சரியாலாது என்று நினைத்த ஷாக்சி

"ஏய் திவ்யா கொஞ்சம் வாய மூடு.அதான் மித்ரன கூட்டி போக சொல்லிட்டாருல்ல.இதுக்கு மேல ரொம்ப பேசாத"என்று கூறி இன்ஸ்பெக்டரை பார்த்து

"சார் அவ சார்பா நான் மன்னிப்ப்ய் கேட்டுக்கிறேன்"என்று கூற அதற்கு அவரோ

"பார்த்துமா பொண்ணு வேற பார்க்க அழகா இருக்கா.என்ன மாதிரியே எல்லோரும் இருக்க மாட்டானுங்க.வேற ஏதும் கேஸ்ல பிடிச்சி உள்ள போட்டுட போறானுங்க.ஏதோ நான் நல்லவன் என்டதால சும்மா விடுறேன்"என்றதற்கு திவ்யா ஏதோ கூற போக ஷாக்சி அவளை இழுத்துக்கொண்டு

"சரி சார் ,நங்க கிளம்பறோம்"என்று மூவரும் வெளியில் வந்தனர்.மித்ரனை ஒரு ஆட்டோ பிடித்து வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஷாக்சி அவளின் வீட்டுக்கு திவ்யாவை அழைத்துக்கொண்டு சென்றால்.

திவ்யாவும் ஷாக்சியும் ஒன்றாக வருவதை பார்த்த அவரின் தந்தை

"என்னம்மா ரெண்டு பேரும் ஒன்னா வந்திருக்கீங்க"என்று கேட்க ஷாக்சியை முந்திக்கொண்டு

"இல்லப்பா எனக்கு சில சப்ஜக்ட்ல டவுட்.அதான்பா வீட்டுக்கு வந்தேன்.இன்னைக்கு இங்கதான் தங்க போறேன்.ஏன்பா நான் தங்க கூடாதா?"என்று அப்பாவியாக கேட்டவளை ஷாக்சி ,திவ்யாவுக்கு மட்டும் கேட்கும்விதமாக

"அடிப்பாவி என்ன மாதிரி நடிக்கிறேடி.சிவாஜியையே மிஞ்சிட்ட போ"என்றால்.அதற்கு ஷாக்சியின் கையை திவ்யா கிள்ளிவைக்க அவளோ வாய் விட்டு

"ஆவ்வ்"என்று கத்த அவளின் அப்பாவோ

"என்னாச்சும்மா"என்றார்.அதற்கு என்ன பதில் சொல்வதென்று முழித்துக்கொண்டு இருந்த ஷாக்சியை இந்த தடவையும் திவ்யாவே

"இல்லப்பா ஏதாச்சும் மூட்ட பூச்சி கடிச்சிருக்கும் "என்றவளை அவர் சிரித்துக்கொண்டு

"இருக்கும் இருக்கும்"என்றார்,

தன் தந்தை அவ்விடத்தை விட்டு சென்றதும் ஷாக்சியோ

"என்னம்மா பொய் சொல்ரேடி.ஹ்ம்ம் .உன் கூட இருந்தா நானும் நல்லா பொய் சொல்ல பழகிடுவேன் போல"என்றவளை திவ்யா

"அதெல்லாம் ஒரு ப்ராப்ளமும் இல்ல ஷாக்சி.இரு ரெண்டு வாரம் க்ளாஸ் வா.உன்ன பொய் சொல்ரதுல எக்ஸ்பேர்ட் ஆக்கிடுறேன்"என்று கண் சிமிட்டி கூறினால்.

"அது சரி திவ்யா இன்னைக்கு நீ போலீஸ் ஸ்டேசன்ல வெச்சு நடந்துகிட்டத பார்த்தா அண்ணனுக்கு செஞ்சமாதிரி தோனலயே"என்று நக்கலாக கூறியவளை

"சட் அப் ஷாக்சி.இதுல மட்டும் பகடி பண்ணாத.எனக்கு மித்ரன் எப்பவுமே அண்ணன் தான்.எனக்கு இருக்கிற ஒரே ஒரு உறவா நான் நினைக்கிறதும் அவர மட்டும்தம்.சோ ப்ளீஸ் என்னோட உணர்வுகளை கொச்சைபடுத்தாத"என்றால்.

ஷாக்சியும் தான் கூறியது தவறு என்று உணர்ந்தவள்

"சாரிடி.சும்மா விளையாட்டுக்குதான் சொன்னேன்.நீ இப்படி சீரியஸ் ஆவேன்னு நினைக்கலடா.சோ சாரி"என்றவளை

"சரி சாரி எல்லாம் வேணாம்.இனிமே இப்படி பேசாத.என்னோட வாழ்க்கைல நான் யாரையும் என்னோட சொந்தமா நினைச்சதில்ல.ஆனா முதல் முதலா ஏனோ தெரியல மித்ரன் அண்ணாவ பார்த்தா எனக்கு நிஜமாவே ஒரு அண்ணா கிடைச்ச பீல் வருதுடி"என்றவளை

"ஹ்ம்ம் அதுசரி.அந்த கோபக்காரன்கிட்ட இவ்வளவு உரிமை எடுத்து பேசுர முதல் பொண்ணு நீதான்னு நினைக்கிறேன்.ஏன்னா அவன் எந்த பொண்ணு அவன்கிட்ட பேசினாளும் அவள கேவலமா பேசி ஹேர்ட் பண்ணிடுவான்"என்றதற்கு திவ்யா

"ஆமா அவரு ஏன் அப்படி பண்றாரு"என்று கேட்டால்.அதற்கு ஷாக்சியோ தெரியலடி.

"நமக்கு எதுக்கு ஊர் வம்பு"என்று கூறி அவளுக்கு மாற்றுடை கொடுத்து திவ்யாவை ரெஸ்ட் எடுக்குமாறி சென்றால்.

அதன் பின் வந்த நாட்காளில் திவ்யாவுடன் கூட இருந்த அவளது நண்பிகளாகட்டும் அல்லது அவள் பின்னால் அலைந்த ரோமியோக்கள் ஆகட்டும் யாரும் அவளுடன் சேரவில்லை.காரணம் தனது நண்பனையும் அவனது அண்ணனான காலேஜ் லெக்சரரையுமே அடி பின்னிவிட்டான்.நம் எல்லாம் எம்மாத்திரம் என்று ரோமியோக்களுக்கு பயம்.ஆனால் பெண்களின் நிலமை இதற்கு மாறாக இருந்தது.திவ்யாவுடன் அரட்டைனடித்துக்கொண்டு ஐந்து நண்பிகள் இருந்தால் நால்வர் மித்ரனிடம் மோசமான வார்த்தைகளால் திட்டு வாங்கியிருப்பார்கள்.அதிலும் இப்போதெல்லாம் திவ்யா அடிக்கடி மித்ரனை பற்றி பேசுவதால் அவளின் நண்பிகளுக்கு திவ்யாவின் மேல் கோவம் வருவதை விட மித்ரனை பற்றி அதிகமாக அவள் பேசுவதால் அவள் மீது எரிச்சல் கொண்டு பேசுவதில்லை.
ஆனால் இரண்டு பேரை தவிர.ஒன்று ஷாக்சி மற்றையது திவ்யாவின் வகுப்புத்தோழி ஜானவி.ஏனென்றால் இவர்கள் இருவருமே மித்ரனின் பெண் வெர்சன்கள்.

ஒரு நாள் திவ்யாவும் ஜானவியும் பேசிக்கொண்டிருக்க அவ்விடத்துக்கு வந்த ஷாக்சி,

" ஹேய் லூசு , நீ எதுக்குடி எல்லோர்கிட்டயும் அவன் மித்ரனை பத்தி பேசி இப்படி எவளுமே உங்கிட்ட பேசாத மாதிரி பண்ணிட்ட" என்றவளை திவ்யா திரும்பி ஜானவியை பார்க்க அவளோ ஷாக்சியை முறைத்துக்கொண்டிருந்தால்.

" ஏன் என்ன பார்த்தா எல்லாம் ப்ரெண்டா தெரியல்லயா சீனியர்" என்று கேட்க ஷாகிசிக்கு சிரிப்பு வந்துவிட்டது.உடனே அவள்

" அமுல் பேபி மாதிரி இருந்துகிட்டு பாருடா முறைப்ப " என்று ஜானவியின் தலையில் கொட்டி வைத்தால்.அதற்கு திவ்யா

" இல்ல ஷாக்சி, இந்த வாணரக்கூட்டம் என்கூட இருந்தா அண்ணா என்கிட்ட ப்ரீயா பேச மாட்டேங்கிறாரு.இவளுங்க என்ன பண்ணா என்ன விட்டு போவாளுங்கன்னு யோசிச்சேன்.அதான் ப்ளான் பண்ணி அவளுங்கள துரத்திவிட்டன்"என்றவளை இப்போதும் இருவரும் ஆச்சரியமாக பார்த்தனர்.அப்போது ஷாக்சி

" அப்போ அவன் நாங்க இருக்கும்போதும் வரலன்னா என்னடி பண்ணுவ" என்று கேட்க திவ்யாவோ

" சேம் டெக்னிக்"என்று கூறி பழிப்புக்காட்டி விட்டு ஓட அவள் போய் மோதுன்டு நின்றது ஒரு வாலிபன் மீது.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro