தென்றல் 9

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இன்று--

"அன்னைக்கு நீ அந்த பொண்ணு முன்னாடி என் பையன பொறுக்கின்னு சொன்னதும் என்னால கோவத்த கட்டுப்பாடுத்த முடியலமா.என் பையன் இப்பாடி பொண்ணுங்க மேல வெறுப்பா இருக்க நானும் ஒரு காரணம் .ஏன்னா சின்ன வயசுல அவங்க அம்மா பண்ணத என்னால அவன்கிட்ட சரியா சொல்ல முடியல. சரியா சொல்ல முடியல என்று சொல்ரத விட எனக்கு சரியா சொல்ல தெரியலமா.அதனாலதான் அவன் இப்படி ஆகிட்டான்.மத்தபடி அவன்‌ ரொம்ப‌‌ நல்லவன்மா.உனக்கு‌ தெரியுமா அன்னைக்கு அவன்‌ திவ்யா பொண்ணு கூட அப்படி பேசின பிறகு அவ மேல அவன் ரொம்ப அக்கறையா நடந்துகிட்டான்.ஸ்காலர்சிப்ல‌ MBA கிடைச்ச‌ பொண்ண அவ விருப்பபடுறாலேன்னு‌ லா (‌law) படிக்க வெச்சான்‌.நானும்‌ ஆரம்பத்துல‌ ரெண்டு பேரும் லவ் பண்றாங்கன்னுதான்‌ நினைச்சேன்.ஆனா அவன்‌அந்த‌ பொண்ண‌ அவனோட‌ சொந்த தங்கச்சியாதான்‌ பார்க்குறான்.அவ கூட பழகினதுக்கு அப்புறமா அவன்‌ ரொம்ப மாறிட்டான்.இப்போலாம்‌ எந்த ‌பொண்ணையும் அவன்‌ வார்த்தையால‌ காயப்படுத்துறது இல்ல.இப்ப சொல்லுமா என்‌னோட‌ பையன்‌ பொறுக்கியா" என்று உணர்ச்சி மிகுதியில்‌ பேச ஷாக்சியோ என்ன‌ கூறுவது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு‌ இருந்தால்.மேலும் தொடர்ந்த அவர்

"இப்ப கூட அவதான் ' அப்பா‌ என்‌ ப்ரெண்டுக்கு ஒரு சின்ன ப்ராப்ளம் உங்க‌ கம்பனில‌ கொஞ்ச நாளைக்கு வேலை‌ போட்டு கொடுங்க' அப்படின்னு சொன்னா.ஆனா அவ மித்ரன் கிட்ட‌ இத சொல்ல வேணாம்னு‌ கேட்டுகிட்டா.அவன்கிட்ட அவ தனியா‌‌ சொல்லிக்கிறேன்னு சொன்னா.இவ்வளவு நாளைல அவ‌ என்கிட்ட‌ இப்போதான‌ ஒரு உதவி பண்ண சொல்லி கேட்டிருக்கா.அவ சொன்னத செய்ய கூடிய பாக்கியம் எனக்கு‌ கிடைக்கிறதும் கிடைக்காததும்‌ உன்கைலமா.இப்போ சொல்லும்மா உனக்கு‌ இங்க வேலை செய்ய விருப்பமா?" என்று கேட்க ஷாக்சி‌ அமைதியாக நின்றவள் ஏதோ தோன்ற

"சரி‌ சார், கண்டிப்பா வேலை‌ செய்றேன் " என்றவளை

" சரிமா.இப்போதைக்கு இருக்குற ஒரே வேல என்னோட செக்கரட்டரி போஸ்ட்.உனக்கு ஓக்கேன்னா அதுலயே பிக்ஸ் பண்ணிக்கிறேன் .இல்லன்னா உன்னோட ஏரியா ஐ டி டிபார்ட்மன்ட்ல போடட்டா" என்றவனை ஷாக்சி

" இல்ல சார், கொஞ்ச நாளைக்கு எனக்கு ஐடி ல வேல செய்ய விருப்பமில்ல.நான் செக்கரட்டரி வேலைலயே சேர்ந்துக்கிறேன்" என்றவளை அவர்

" சரி.நாளைக்கே ஜாய்ன் பண்ணிக்கோ.ஒரு  மணி நேரம் வெய்ட் பண்ணி அப்பாய்ன்மன்ட் ஆடர் வாங்கிட்டு போமா" என்றார்.

ரிசப்சனில் தனது புது வாழ்க்கையை ஆரம்பிக்க காத்துக்கொண்டிருந்த ஷாக்சிக்கு வாழ்க்கையில் எல்லாமே இப்போது புதிதாக தோன்றியது.

ஆபீசிற்குள் நுழைந்த மித்ரன் ஷாக்சியை கண்டது மனதுக்குள்

'இவ எதுக்கு இங்க வந்திருக்கா.இந்த குட்டிச்சாத்தான் வேற 2 நாளா போன் ஆன்ஸர் பண்ண மாட்டேங்குறா.நமக்கு தெரியாம ஏதும் ப்ளான் போடுதா பக்கி' என நினைத்தவன் திவ்யாவுக்கு கால் செய்ய அவள் காலை அட்டன்ட் செய்யவில்லை.உடனே கோவம் தலைக்கேறிய மித்ரன் ரிசப்சனுக்கு கால் செய்து

" கீர்த்தி ,அங்க ஷாக்சினு ஒருத்தங்க ரிசப்சன்ல உட்கார்ந்து இருக்காங்களே.அவங்க எதுக்கு இங்க வந்தாங்க " என்று கேட்க ரிசப்சனிஸ்ட் பெண் கீர்த்தியோ

" அவங்க நம்ம MD யோட புது செக்கரட்டரி சார்" என்றவளை

" என்ன அப்பாவோட செக்கரட்டரியா?" என ஆச்சரியத்தில் சத்தமாக கேட்க அவளோ என்னமோ ஏதோ என்று பயந்து

" ஏன் சார் அவங்கள உள்ள வர சொல்லட்டுமா" எனக்கேட்டவளை

" இல்ல அதெல்லாம் வேணாம் .நான் சும்மாதான் கேட்டேன்" மழுப்பி போனை வைக்க கீர்த்தியோ

' சார் எந்த பொண்ணையும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டாரு.இந்த பொண்ண பத்தி விசாரிக்கருன்னா சம்திங்க் ராங்க்.கீர்த்தி கவனமா இருந்துக்கோடி.காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்துவந்தவன் தூக்கிட்டு போன கதையா ஆகிட போகுது' என்று மனதுக்குள் நினைத்தாள்.

கீர்த்தி சில நாட்களாக மித்ரனை காதலிக்க ஆரம்பித்திருந்தால்.ரிசப்சனிஸ்ட்டான தன்னிடம் எல்லோரும் ஒரு மாதிரியாக பேசும் போது இவன் மட்டும் அவளிடம் தேவை இல்லாமல் எதுவுமே பேசுவதில்லை.இதை அவள் மித்ரன் பெண்களை மதிக்கும் ஒரு கண்ணியமான ஆண்மகன் என நினைத்தவளுக்கு  அவனின் உண்மை ரூபம் தெரியாமல் போனது.

கையில் போனை எடுத்த மித்ரன் கோவத்துடன் திவ்யாவுக்கு கால் செய்ய இந்த முறையும் அவளது போன் பதில் இல்லாமல் இருக்க வாட்சப்பில்

"ஏன்டி எரும மாடே.பண்றதயும் பண்ணிட்டு போன எடுக்காம விட்டா உன்ன சும்மா விடுட்டிடுவேணா.மரியாதையா இப்போ நீ போன் ஆன்சர் பண்ணல அடுத்த ப்ளைட் ஏறி உன் ஆபீஸ் வந்து எல்லார் முன்னாடியும் திட்டுவேன்.நான் சொன்னா செய்வேன்.அதுவும் நான் எப்படி திட்டுவேன்னு தெரியும்ல" என்று சென்ட் பண்ணி 2 வது நிமிடம் அவளிடம் இருந்து கால் வந்தது.

" டேய் அண்ணா எதுக்கு இப்போ இப்படி சீன போடுற.ஆம இப்போ என்ன நடந்திச்சி" என்று கேட்க அவனோ

" ஓஹ் மேடம்கு என்ன நடந்ததுன்னு தெரியாதோ.அடிங்க, ஆமா நீ ஏன் போன எடுக்கல" என்று கேட்க அவள் சரலமாக

" நான் ஒரு இம்பார்டன்ட் மீட்டிங்க்ல இருந்தேன்" என்று கூறியவளை

" ஏன்டி வாய தொறந்தா பொய்தானா.எப்ப பாரு பொய்யே பேசிக்கிட்டு" என்றவனை

" உன் மேல சத்தியமாடா, நான் மீட்டிங்க்லதான் இருந்தேன்" என்றவளை மித்ரன்

" ஏன்டி என் மேல பொய் சத்தியம் செய்து என்ன கொல்ல பார்ர்க்குறியா.போ ,போய் உன்னோட பேஸ்புக்ல உன் ஆபீஸ் கொலீக் உன்ன டக் பண்ணி ஒரு போட்டோ போட்டிருக்கா போய் பாரு.நீ என்ன மீட்டிங்க்ல இருந்தேன்னு உலகத்துக்கே தெரியும் "என்று கூற பேஸ்புக்கை ஆன் செய்ரது பார்த்தவளுக்கு தன் கொலீக் செய்த வேலையால் ஆத்திரம் வந்தது.

திவ்யாவும் அவளது கொலீக்கும் காபி கப்பை வைத்துக்கொண்டிருக்க அவளோ
' no work.enjoying coffe with my mate" என்று போஸ்ட் செய்திருந்தால்.திவ்யா மனதுக்குள்

' இந்த லூசுக்கு நான்தான் கிடைச்சேனா.இவ நம்மல இப்படி மாட்டிவிட்டாலே.இன்னைக்கு இவன் நம்மல வெச்சு செய்ய போறான்.இதுல இவன் மேல வேற சத்தியம் பண்ணிருக்கோம்.இன்னைக்கு நம்ம மர்கயாதான் ' என்று எண்ணினால்.

"அண்ணா அது அப்போதான் மீட்டிங்க முடிஞ்சி வந்தேன்" என்றவளை மித்ரனோ

" போதும்டி போதும், எனக்கு ஏதும் ஆச்சு அப்புறம் எங்கப்பாக்கு  நீதான் பதில் சொல்லனும்" என்றவனை

" அடப்போண்ணா நான் எங்க ஹோம் வார்டன் மேலயோ எவ்வளவோ பொய் சத்தியம் பண்ணிருக்கேன்.அவ இன்னும் குத்துக்கல்லாட்டம் இருக்கா. சரி இப்போ எதுக்கு நீ இவ்வளவு எகிர்ர" என்றவனை

" ஏன் உனக்கு தெரியாதா. ஆமா இந்த குட்டச்சி எதுக்கு இங்க வந்தா.இருக்குற பிரச்சினை போதாதுன்னு இவ வேற" என்று சலித்துக்கொள்ள

" இல்லண்ணா.அவ இருக்குற‌‌ நிலமை இப்போ உனக்கு தெரியாது.நீயும்‌ எதுவும்‌ பேசி அவள காயப்படுத்திடாத.உன்‌ வாய திறந்தாதான் அமுத மொழிகளா வருமே.எனக்கு தலை எழுத்து நாட் கேட்குறேன்.அவள ஏதும் சொல்லிடாத" என்றவளை மித்ரன்

" ஏன் என்னாச்சு‌ நல்லாதானே இருந்தா" என்று கேட்க திவ்யாவோ மித்ரனை நம்பி ஷாக்சியின் வாழ்வில் நடந்த எல்லாவற்றையும் ஒப்பித்தால்.

இதை‌‌ கேட்ட‌ மித்ரனுக்கோ மிகவுன் கவலையாக‌ இருந்த்து.அவனுக்கு ஷாக்சியை பிடிக்காது என்றாலும் அவ்வப்போது திவ்யாவிடம் அவளை பற்றி கேட்டு அறிந்து கொள்வான்.திவ்யாவை அவன் அந்த‌ கம்பனியில் வேலை‌ செய்ய அனுமதித்த காரணமே ஷாக்சி‌ அங்கு வேலை செய்கின்றால்‌ என்பதால்தான்.ஆனால் இன்று அவளுக்கே ஒரு‌ பிரச்சினை‌ எனும் பொழுது‌ மித்ரனுக்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை.

ஏதோ‌ யோசித்தவன் திவ்யாவிடம்

" திவ்யா‌ நெக்ஸ்ட் வீக்‌ நீ சென்னை‌ வர்ரே.வரும் போது உன் பெட்டி‌ படுக்கை எல்லாம் தூக்கிட்டு வந்துடு.ஏன்னா இனிமே நீ அந்த கம்பனில வேல செய்ய போறது கிடையாது" என்று கூற திவ்யாவோ

" என்னண்ணா இப்படி‌ சொல்ர.எனக்கு ஒரு மாசம்‌ நோட்டீஸ் பீரியட் இருக்கு.இப்படி‌ திடு‌திடுப்னு‌ வர முடியாது " என்றவளை

" இப்ப‌ என்ன‌ நோட்டீஸ் பீரியட்‌ கொடுக்காம‌ ரிசைன்‌ பண்ணா உனக்கு என்ட் ஆப் சேர்விஸ் கிடைக்காது‌ அதுதானே.உனக்கு அது தேவை‌ இல்ல.நீ ஒன்னும்‌ அங்க‌ இருந்து கிழிக்க வேணாம்.முன்னாடி‌ ஷாக்சி உன் கூட இருந்தா.ஆனா‌ இப்போ அவளும் இல்ல.சோ  உனக்கு ஒரு வாரம்தான்‌ டைம்.மரியாதையா மூட்டைய கட்டிக்கிட்டு‌ இங்க வர்ர" என்று கட்டளையிடும் தோரனையில் கூற திவ்யாவால் எதுவுன் மறுத்து பேச முடியவில்லை.அவன்‌ கூறியதை அப்படியே ஏற்றுக்கொண்டவள் அவளுடைய ரிசைன்‌ லெட்டரையும் கொடுத்து சென்னை‌க்கு செல்ல வேண்டிய வேலைகளை தொடங்கினால்.
-----------------------
மை டியர் ரீடர்ஸ்....
எல்லா பிரச்சினைக்கும் பேசி தீர்வு காணலாம் என்பது என்னுடைய கருத்து..
சில நாட்களாக வாட்பெட்டில் நடக்கும் விடயங்களை பார்க்கும் போது கொஞ்சம் கவலையாக உள்ளது..
பேஸ்புக் வேண்டாம் ,மனதை ரிலாக்ஸ் செய்ய வாட்பெட் போதும் என்று இங்கு வந்தேன்.கடைசில இதுவும் வேணாம்டு போய்விடலாம்னு தோனுது..
மத்திய கிழக்கில் ஒரு நாளைகு 12-14 மணி நேரம் வேலை செய்து கதை எழுதுவது என்பது என்னை பொருத்தவரை மிக கடினமான வேலை...
அப்படி இருந்தும் ஏன் செய்கின்றேன் என்றால் உங்களின் நெகட்டிவ் கொமன்ட்ஸ்..
அது மட்டும்தான் எனக்கு என்றுமே உறுதுனை...
ஒரு வேலை வாட்பெட்டில் என்னுடைய அப்டேட் இனிமேல் வராவிட்டாலும்.......அப்படி ஆகாதுன்னு நினைக்கிறேன்...

நான் அன்னைக்கு சொன்னதுதான் இன்னைக்கும்...
புதுசா கதை எழுதுறவங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க.தவறுகளை சுட்டிக்காட்டுங்க.நாளைக்கு அவங்க மிகச்சிறந்த எழுத்தாளர் ஆக நாமும் ஒரு பங்க்காற்றுவோம்...

---------

புதுகதை அறிமுகம்...

Umaviswa எழுதும் என் வசந்தம் நீதானே..
கதை 20 பாகங்களை கொண்டது.முற்றும் பெற்றுவிட்டது..
ஆனால ரீடர்ஸ் வெறும் 500..
என்னுடைய ஸ்டோரி படிக்கிற எல்லோரிடமும் நான் கேட்கின்ற ஒரே ஒரு வேண்டுகோள்..
" தயவு செய்து புதிய எழுத்தாளர்களை ஊக்குவியுங்க.தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்"

இன்னும் ஏதும் புதிய எழுத்தாளர்கள் இருந்தால் எனக்கு இன்பாக்ஸ் செய்யுங்கள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro