பகுதி 16

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

Part 16

"மல்லி ...மல்லி... எங்க போன??"லலிதா

"இதோ வந்துட்டேம்மா..." என்றபடி சமையல் அறையிலிருந்து வந்தாள் மல்லி

"இந்தா இந்த பூ ஜாடியில இருக்க பூவ மாத்திட்டு தோட்டத்துல இருந்து முனியன் கொண்டு வந்த பூவ வை.... இதையெல்லாம் சொல்லனுமா ...!!!! இன்னைக்கு வெள்ளிகிழமை அதுவுமில்லாம பொண்ணுபாக்க வர்ராங்க இதான் நீங்க வீட்ட அழகா வச்சிருக்க இலட்சணமா??? வாசல்ல கோலம் போட்டாச்சி அதுக்கு கலர் கொடுக்க சொன்னேனே கொடுத்தையா "லலிதா.

"கொடுத்துட்டேன்மா" என்ற மல்லி மறுபடியும் வாசற்பக்கம் இருந்த பெரிய பாத்திரத்தில் பூவை அலங்காரம் செய்ய சென்றாள்.

மாடியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்த அருணாச்சலத்தை கண்ட லலிதா "என்னங்க இன்னைக்கு எத்தனை மணிக்கு வறேன்னு சொல்லி இருக்காங்க".

"அவங்க வர்ரது இருக்கட்டும் நீ ஏன் இவ்வளவு பரபரப்பா இருக்க" என்றார் கண்டிப்புடன்.

"அட என்னங்க என் பொண்ண பாக்க வர்ரங்க எல்லாம் சரியா இருக்க வேண்டாமா?....
நீங்க என்ன மசமசன்னு நின்னுக்கிட்டு இருக்கிங்க போய் மாப்பிளைக்கு என்ன பிடிக்குமுன்னு கேளுங்க அண்ணாகிட்ட... நானே என் கையால செய்து கொடுக்குறேன்".

"அங்..அப்புறம் எத்தனை பேர் வர்ராங்க எத்தனை மணிக்கு எல்லாம் கேளுங்க.....இன்னும் என்னங்க இங்கயே நின்னு என் வாய பாத்துட்டு இருக்கிங்க "லலிதா

"என்னடி இது.......இப்பதானேடி எல்லாத்தையும் சொல்ற..... நீ சொன்னவுடனே பறக்க எனக்கென்ன ரெக்கையா இருக்கு கொஞ்சம் நிதானதுக்கு வாம்மா இவ்வளவு ஸ்பீடு உடம்புக்கு ஆகாது தாயே என்றார் நக்கல் தோணியில்.

"என்னை எப்பவேனாலும் நக்கலடிக்கலாம் இப்போ கொஞ்சம் நா சொன்னத செய்றிங்களா" என்றார் லலிதா எரிச்சலாக.

"சரி சரி நான் எல்லாத்தையும் கேட்டு சொல்றேன்" என்று போனை எடுத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்தவர்."சிவா எழுந்துட்டானாம்மா" என்றார் மனைவியிடம்.

"ஏன் உங்கள போலன்னு நினைச்சிங்களா 8 மணிக்கு எந்திரிக்க தங்கைய இன்னைக்கு பாக்க வர்ராஙகன்னு புள்ள காலையில் எழுந்ததும் வந்து என்ன உதவி வேணுமுன்னு கேட்டு செய்துட்டு பிரஷ்ஷப் ஆகிட்டு வறேன்னு போயிருங்கான்" லலிதா

"ஏன்டி ஒரே வார்த்தையில உள்ள இருக்கான்னு சொல்லி இருக்கலாம்லா இவ்வளவு பெரிய லெக்ட்சர் அதுல எனக்கும் சேர்த்து அர்ச்சனை உன்னை எந்த லிஸ்டில்ல சேக்கறது" என்றவர் விஜயபாஸ்கரின் எண்களை அழுத்தி போனை காதில் பொருத்தினார் அருணாச்சலம்.

அந்த பக்கம் எடுத்த விஜயபாஸ்கர் "நாங்க எல்லோரும் வரோம் டா மருமகள் மட்டும் வரல அவளுக்கு எட்டு மாசம் அதனால பூஜாவ பாத்துக்க பூஜாவோட அக்கா வந்து இருக்காங்க"

............

"ம்... சரி சரி டா எப்படியும் அங்க 11 குள்ள ரீச் ஆகிடுவோம் பிரஷ் ஆகிட்டு இவினிங் 4 மணிக்கு வீட்டுக்கு வர்ரோம்" .

..............

"இல்லடா எப்படி ஸ்ரெயிட்டா அங்க வர்ரது "???.

.............

"ஹே...ஹே... என்னப்பா நீ ?.... ஏர்போர்ட் ல இருந்து நீட்டா வீட்டுக்கு வந்துறோம் ஓகே வா...".

............

"ம் வைக்கிறேன் டா".

போனை அனைத்தவர் மனைவியிடம் சகலத்தையும் சொல்ல அதற்குள் லலிதா மல்லியிடம் கேட்டிருந்த பில்டர் காபியை சமயலறையில் இருந்து எடுத்து வர அதை வாங்கிய லலிதா கணவரிடம் நீட்டினார்.

"என்னதான் இருந்தாலும் எனக்கு என்ன தேவைன்னு என்னை விட உனக்கு நல்லா தெரியுது லலிதா". என்றார் மனைவியை பாராட்டி.

அதற்கு அம்சமாக சிரித்தவரம்... "ம்...போதும் போங்க மழுப்பலாக கூறி............ "காலையில!!! எழுப்பி விட்டேன் இன்னும் அக்கா தங்கை ரெண்டுபேரும் கீழே இறங்கல அப்படி என்னதான் செய்வாங்களோ போன் வாங்கி தராதிங்க தராதிங்கன்னா கேக்குரிங்களா காலைல கண்ணை திறக்கும் போதே போன்லதான் விழிக்கிறாங்க வாட்சப் பேஸ்புக் அது இதுன்னு நைட்டு தூக்கவே 1 ,2 ஆகிடும் போல அதுலயும் சின்னது இருக்கே சரியான அமுக்கூணி பெரியவ இருந்தாதான் இதோட ஆட்டம். இல்லன்னா குட்டி போட்ட பூனை போலவே என்னை சுத்தி சுத்தி வரும்". என்றார் தகப்பனிடம்

"இப்ப எதுக்கு இந்த புலம்பல்.... இதுக்கு நான் இப்போ திட்டனுமா என்ன எதிர்பாக்குற என் தங்கமே" என்றார் ராகமாக .

"அப்படியே நீங்க திட்டிட்டாலும் நான் போய் என்ன செய்யறாங்கன்னு பாத்துட்டு அவங்கள ரெடியாக சொல்லிட்டு வரேன்". என்றவர் மாடியை நோக்கி நடக்க எத்தனிக்க "லலிதா கொஞ்சம் நில்லுடி இரு நான் வர சொல்றேன்... மல்லி ....... வைஷூவையும் காயுவையும் கூப்பிட்டேன் சொல்லு என்றவர்
மனைவியை பார்த்து நீ எத்தனை முறை சொன்னாலும் கேக்கமாட்டியா ? உன்கிட்ட அன்பா சொல்றத விட கோவமா சொன்னாதான் கேப்ப போல மாடி ஏறாதன்னு வந்ததுல இருந்து சொல்லிட்டு தானே இருக்கேன்".

கணவரின் கோபத்திற்கு அடங்கியவர் "கோச்சிகாதிங்க இனி நான் மாடி ஏறல" ஏன்றார் கெஞ்சலாக.

"ம்..... வந்து உட்காரு மீதி வேலைய சர்வண்ட்ஸ் பாத்துப்பாங்க". என்றவர் போனில் மேனேஜரை தொடர்பு கொண்டு ஆபிஸ் சம்மந்தமான விஷயங்களை பேசியவர் இன்று தானும்தனது மகனும் வரமுடியாது என்று கூறி கொடுத்த அப்பாய்ண்ட்மெண்டுகளை போஸ்பண்ட் செய்ய சொன்னார்.

"அப்பா கூப்பிட்டிங்களா" என்று கேட்டுக்கொண்டே படி இறங்கிய காயத்திரியை பின் தொடர்ந்த வைஷ்ணவி அன்றைய நாளுக்கான சிரிப்பு சந்தோஷம் எதுவுமின்றி கண்களில் தேடலும் மனதில் கலவரத்தையும் சுமந்தபடி வழக்கதுக்கு மாறான வைஷ்ணவியாக வந்திறங்கினாள்.

"மகளின் முக மாற்றத்தை கவனித்த லலிதா என்ன டா? என்ன ஆச்சு? ஒரு மாறி இருக்க இன்னும் ரெடி ஆகலயா? ஏய் வாண்டு நீயாச்சு என்கிட்ட வந்து சொல்ல கூடாத !!!அக்கா ரெடியாகலன்னு".

"அம்மா என்னன்னு கேட்டே உடனே ரெடியாகலயான்னு கேக்குற அக்காவ கொஞ்சம் சொல்ல விடும்மா" என்றாள் காயத்திரி.

இவர்களின் உரையாடல் களை கவனித்த வண்ணம் அமர்ந்து இருந்தார் அருணாச்சலம்.

"உன்னை ....." என்று கூறி செல்லமாக கன்னம் கிள்ளியவர் 'நீ சொல்லு வைஷூ என்னடா என்ன சொல்லும்மா அம்மாகிட்ட" என்றார் அருகில் அமரவைத்து .

கண்களில் நீர் கோர்க்க மூக்கை உறிஞ்சி "அம்மா இந்த மும்பை சம்மந்தம் தான் வேனுமா" என்றாள் மகள்

மகள் கேட்டதில் திகில் அடைந்தவர் "என்னடா சொல்லற!!! ஏன் உனக்கு இந்த இடம் பிடிக்கலயா?" என்றார் உள்ளே சென்ற குரலில்.

"இல்லம்மா நான் நினைச்சவுடனே உங்கள வந்து பாக்க முடியுமா ரொம்ப தூரமா தனியா போறபோல கஷ்டமா இருக்குமா என் மனசுக்கு".

"இதுக்காடா செல்லம் இவ்வளவு சோகம்.........நான் பயந்தே போயிட்டேன் தமிழ்நாட்டுல ஒரு கிரமாத்துல பிறந்த என்னை கல்யாணம் செய்து இங்க வந்ததுல இருந்து என் வீட்டு நியாபகமே வராமா நல்லா பாத்துக்கிட்டாங்க உங்க அப்பா..... இதுபோல உன்னையும் நல்லா பாத்துக்குவாங்க எங்க நினைப்பு கூட உனக்கு வருமா என்பது சந்தேகம் தான் என்று நகைத்தவர் ....... எல்லோருக்கும் இவர்க்கு இவர்தான்னு இருக்கும் போது அதை நாம ஏத்துக்கனும்டா அது நல்ல இடம் டா உன்னை உள்ளங்கைல வச்சி தாங்கறாப்போல தாங்குவாங்கமா..... அதுவும் இல்லமா அப்பவோட பிரண்ட் என்பதால் தானேமா இதற்கு சம்மதிச்சோம்" என்றார் மகளின் தலையை ஆதுரமாக வருடி.

இன்னும் தெளிவில்லாமல் இருந்த மகளின் முகத்தை பார்த்து "உனக்கு எங்கள பார்கனுமுன்னு நினைச்ச ஒரு போன் பண்ணு நானும் அப்பாவும் அங்க வருவோம் டா" என்றார் லலிதா மகளின் கன்னத்தை தட்டி.

தாடையில் கை வைத்து யோசித்தபடி "அம்மா அக்கவோட எடையை பாரும்மா மாமாவால உள்ளங்கையில வச்சி அக்காவ தூக்கமுடியுமா???.... ".என்று தீவிர சிந்தனையில் ஈடுப்பட்டவள் போல் கூறினாள் காயத்திரி.

"அடி வாலு அவளே கண்ணுல தண்ணிய வச்சிகிட்டு கரையுறா உனக்கு ரொம்ப வாய்கொழுப்பு ஆகி போச்சி "என்றவர்.

வைஷூவின் கண்ணை துடைத்து விட்டு " இப்போ வர்றபடி வரட்டும் உன்னை அவங்களுக்கு பிடிக்கனும் அவங்களுக்கு உன்னை பிடிக்கனும் மத்தது எல்லாம் அப்புறம் பேசிக்கலாம் என்னடா" என்றவர் மகளை அனைத்து " மனசுல எந்த கலவரமும் இல்லமால் சந்தோஷமா ரெடியாகுடா" என்றவர் காயத்திரியை நோக்கி நீ அவள கிண்டல் பண்ணிகிட்டே இல்லமா அவளுக்கு ஹெல்பா இரு" என்று கூறி இருவரையும் அனுப்பினார்.

இதுவரையிலும் அனைவரின் உரையாடல்களையும் கவனித்திருந்த அருணாச்சலம் மனைவியிடம் மெச்சுதலான ஒரு பார்வையை செலுத்தினார். அதற்கு லலிதா அனைத்திற்கும் நான் இருக்கிறேன் என்பதை போல் கண்களை மூடி திறந்தார்.

காலை 12. 30 மணியைப் போல் அருணாச்சலத்தின் கார் போர்டிகோவில் வந்து நின்றது.
அதிலிருந்து இறங்கிய சிவா விஜயபாஸ்கரின் குடும்பத்தை வரவேற்றான். உள்ளே இருந்த அருணாச்சலம் வாசலுக்கே வந்து வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்.

ஹாலில் அமர்ந்திருந்தவர்களுக்கு வரவேற்று பழ சாற்றை கலந்து கொடுத்தார் லலிதா.

விஜயபாஸ்கரின் முன்று பிள்ளைகளும் அருணாச்சலம் தம்பதியரின் காலில் விழந்து வணங்கினர்

"விஜய் ஜர்னி எல்லாம் எப்படி இருந்தது......இத்தனை வருஷம் கழித்து உங்கள எல்லாறையும் பாக்குறதுல ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றார் அருணாச்சலம்.

"தங்கச்சிம்மா. இப்போ உடம்பு எப்படிம்மா இருக்கு?" என்றார் விஜயபாஸ்கர் லலிதாவை பார்த்து.

"இப்போ பரவாயில்லை அண்ணா என் பொண்ணோட கல்யாணத்தை பார்க்குற வரையிலும் எனக்கு எதுவும் வரக்கூடாதுன்னு கடவுள பிரத்திச்சிக்கிறேன்"என்றார் சோர்வாக.

"பாபி நீங்க என்ன இப்படி சொல்றிங்க இன்னும் இரண்டு பேர் இருக்காங்க அவங்களுக்கும் நல்லது செய்துட்டு உங்க பேர பசங்கள பாக்கம அவங்க கூட விளையாடமா உங்களுக்கு எதுவும் ஆகாது பாபி ". என்றார் மாதூரி

மாதூரியின் கைகளை ஆதரவாக பற்றி கொண்ட லலிதாவின் கைகளை அழுத்தி சமன் படுத்தினார் மாதூரி.

"பையா நீங்க எப்படி இருக்கிங்க பாபி ரொம்ப அழகா இருக்காங்க உங்க கல்யாணத்துக்கு கூட சொல்லவே இல்லை என்றார் மாதூரி.

ஹ..ஹ.. என்று சிரித்தவர் "நானே எதிர்பாக்காம நடந்ததுதான் என் கல்யாணம்" என்றார் மனைவியிடம் பார்வையை செலுத்தி

"அதெல்லாம் இந்நோருநாள் சாவகாசமா சொல்றேன்" என்றவர் கௌஷிக்கை திரும்பி பார்த்தவர் தன் மகளுக்கு ஏற்றவரைத்தான் பார்த்துள்ளோம் என்று திருப்தி பெற்றார்.

அது வரையிலும் தனது விழிகளை சுழல விட்டவனின் பார்வையில் வைஷ்ணவி ராஜஸ்தானிய உடையில் நாட்டியமாடுவதை போல் இருந்த புகைபடத்தை பார்த்த வண்ணம் இருந்தான்.

இதனை பார்த்த கரண் தோல்களில் லேசாக இடித்து 'டேய் போதுன்டா வழியுது இந்த கர்சிப் தொடச்சிக்கோ..... "

"ஆங்... என்ன அண்ணா என்ன கேட்ட"கௌஷிக்

"ம் ............. என்னடா விட்டா போட்டோவையே முழிங்கிடுவ போல இருக்கு".

"அண்ணணாச்சேன்னு பாக்குறேன்...... இது எல்லாம் எப்படி உன் கண்ணுல பட்டு தொலைக்குதோ".

"டேய் போலிஸ்காரன்டா எங்கிட்டயேவா ".

அதற்குள் அடுத்த பக்கம் இருந்த கிர்ஷ் "பையா உன்னை பாத்த முதல் முறை பொண்ண பாத்த மாறி தெரியல இதுக்கு முன்னமே எங்கயோ பாத்த மாறி தெரியுது. வைச்ச கண்ணு வாங்காம அங்கயே பாக்குற".

"டேய் வீட்டுக்கு ஒரு போலிஸ் போதுண்டா நீயும் ஆரம்பிக்கத இப்படிதான் என்னையே கவனிச்சிகிட்டு இருப்பிங்களா? ". என்றான் அடிக்குரலில் இருவருக்கு மட்டும் கேட்கும்படி.

சே இவங்க என்ன இன்னும் பேசிகிட்டு இருக்காங்க மனுசனோட அவஸ்தை புரியாம அய்யோ மாமா அத்தை சீக்கிரம் என் குலாப்ப காட்டுங்களேன் .

இளைய மகனின் மனதை படித்தவரை போல் "எப்போட என் மருமகள காட்டுவ " விஜயபாஸ்கர்.

புன்னகைத்த லலிதா "இதோ வரசொல்றேன் அண்ணா". என்றவர் சிவாவை பார்க்க அதுவரை கரணிடம் பேசிக் கொண்டிருந்தவன் "இதோ போறேன் மா" என்று கூறி சென்றான்.

மிருதுவன பாதத்தில் அடிமேல் அடி வைத்து பீச் நிறத்தில் ஜார்ஜட் புடவையும் அதில் கொடி கொடியாய் வென்முத்துக்கள் பதித்து அழகிய வேளைபாடுகள் நிறைந்திருந்த புடவையை அணிந்திருந்தவள் முகத்தில் மிதமான அலங்காரத்துடன் முன் உச்சியில் சிறிய கிளிப் இட்டு விரித்து விடபட்ட கூந்தல் புடவைக்கு மேச்சாய் கழுத்தில் அழகிய கொடிகொடியாய் வளைந்த முத்துக்கள் பதித்த செட்டை அணிந்து அதே டிசைனில் தோடையும் அணிந்திருந்தாள்.

தாய் கூறியதில் அனைத்தையும் மறந்து இன்று தனக்கான நாளாய் நினைத்து அண்ண நடையிட்டு அன்னையின் பக்கத்தில் வந்து நின்றாள். கௌஷிக்கை பார்த்த காயத்திரி வைஷூவின் காதில் "போட்டோல இருக்கறத விட நேர்ல செமையா இருக்காருக்கா உன் ஆளு சூப்பர்" என்றாள் காதில் ரகசியமாக

அனைவரின் முன்னிலையிலும் எதுவும் கூறமுடியாமல் அமைதியாக புன்னகை தவழும் முகமாக நின்றிருந்தாள் வைஷ்ணவி.

அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தவன்" உன்னை சாதரணமா பாக்கும் போதே பிளாட் இப்போ இவ்வளவு அழகா என் கண்ணுமுன்னாடி நின்னா நான் என்ன பண்ணுவேன் குலாப் என் கூட எப்போ நீ பேசுவ" என்று நினைத்தவனின் எண்ணத்தை கலைத்தது ஒரு குரல்.

"அம்மா வைஷூ இவன் தான் என் பையன் கௌஷிக்..... நல்லா பாத்துகோம்மா" என்று கூறியவர் மற்றவர்களையும் அறிமுகபடுத்தினார். பின்பு சற்று இடைவேளி விட்டு "என் பையன பிடிச்சி இருக்காம்மா" என்றார் விஜயபாஸ்கர் பட்டென்று.

அவர் கேட்டதில் ரோஜாவாய் சிவந்த கன்னங்களை பார்த்தவன் "உனக்கு குலாப்ன்னு கரைக்ட்டா தான்டா பேரு வச்சிருக்கேன் உன் மாமு" என்றது அவன் மனம் மானசீகமாக.

விஜயபாஸ்கர் கூறியதில் "அதைபத்தி அப்புறம் பேசுவோம் டா தங்கச்சி பாரு ரொம்ப டையர்டா தெரியறாங்க எல்லோருக்கும் வந்த டையர்டு இருக்கும் வாங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்குங்க" என்ற அருணாச்சலம் காயத்திரியையும் சிவவையும் அழைத்து கெஸ்ட் ருமில் இருக்க வைக்க கூறினார்.

காயுவை பார்த்த கிரிஷ் "ஹாய் ஐயம் க்ர்ஷ் என்ன யாரும் இன்ட்ரோ பண்ணி வைக்க மாட்டறாங்கப்பா எல்லாம் மாப்பிள்ளை பையனுக்கு தான் பர்ஸ்ட் பிரபிரன்ஸ்".என்று அண்ணணை கிண்டலடித்தபடி இருந்தான்.

"ஹாய் ஐயம் காயத்திரி காயூ
ஆமா ஆமா எங்க அக்காவ கல்யாணம் பண்ணிக்க போறவராச்சே ஸ்பெஷல் தானே ப்ரோ". என்றாள்.

அவள் ப்ரோ என்பதில் கடுப்பானவன் அடுத்த வார்த்தை உதிர்க்கவில்லை

அருணாச்சலமும் விஜயபாஸ்கருமும் தனியாக பேசியவர்கள் பிள்ளைகள் இருவர் மனதிலும் இருப்பதை அவர்களே பேசி கொள்ளட்டும் என்ற முடிவுக்கு வந்தனர். "வைஷூ நீ வரைந்த பெய்ன்டிங்க்ஸ் எல்லாம் காட்டு கௌஷிக்கிற்கு போய் பாரு கௌஷிக் கூட்டிக்கிட்டு போம்மா". என்றார் அருணாச்சலம்.

லலிதாவும் "ஆமா அண்ணி போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க அப்புறம் பேசலாம் ". என்றவர் மல்லியை அழைத்து அவர்களுக்கு தேவையானதை செய்து தர கூறினார்.

வைஷூவை பின் தொடர்ந்து பெயிண்டிங் அறைக்குள் நுழைந்தான் கௌஷிக்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro