பகுதி 17

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

Part 17

தந்தையும் தன் வருங்கால மாமனாரும் கூறியதால்  கௌஷிக்கை மாடியில்   இருந்த  அறைக்கு அழைத்து சென்றாள். பெரிய விஸ்தாரமாக இருந்த அறையில் பின்புறம் பால்கனியில் காற்று வீசியது. காண்போரை தன் பால் ஈர்க்கும் விதத்தில் பல  வண்ணங்களில் தன் எண்ணங்களை தூரிகையால் கேன்வாசில் வரைந்து சுவற்றில் பொருத்தி தன் கைவண்ணத்தால் அலங்கரித்து இருந்தாள். இதை ஒரு வித பிரம்பிப்புடன் பார்த்திருந்தவனின் விழிகள் கலைகள் கொஞ்சி விளையாடும் அவள் பட்டு விரல்களில் விழுந்து அவள் கரத்தை பற்ற ஆர்வம் கொண்டது.

திரும்பி நின்றிருந்தவளின் இதயம் தனது துடிப்பை அதிகபடுத்தி இருந்தது. அவரை பார்க்க ஏன் இவ்வளவு நடுக்கமா இருக்கு . என்னால நிமிர்ந்து நேருக்கு நேர் அவரோட முகத்த பாக்க முடியலயே என்று மனதிற்குள் புலம்பி கொண்டிருந்தவள். தயக்கத்துடன் "உக்கருங்க" என்று இருக்கையை காட்டினாள்.

அவளின் எண்ண ஓட்டத்தை புரிந்தவன் முதலில் இயல்பாய் பேச்சை ஆரம்பிக்க நினைத்தான். "வாவ் ஆசம்  ரொம்ப அழகா ட்ரா பண்ணி இருக்கிங்க ".

கௌஷிக் கூறியதில் திரும்பி அவன் எதிரே நின்று மெல்லிய சிரிப்புடன் "தேங்க்ஸ்" என்றாள் .

"உட்காருங்க "வைஷ்ணவி

"ம்....நீ... நீங்களும் உட்காருங்க "கௌஷிக்.

இருவரும் அமர்ந்தனர்  படபடவென பேசுபவள் இன்று ஒரு வார்த்தை பேசுவதற்கே  தவித்தாள்.

எப்போட உன்கிட்ட தனியா பேச விடுவாங்கன்னு காத்திருந்து வந்தா இப்படி  தரையியே பாத்துகிட்டு இருக்கேயடி செல்லம் என்று மனதில் செல்லமாய் கடிந்தவன் இரு உன்னை பேச வைக்கிறேன் குலாப்

"ஏதாவது கீழே  போடாடுட்டிங்களா?".

"இல்லையே....... ஏன் ?".வைஷ்ணவி

"இல்ல வந்ததுல இருந்து உங்க காலுக்கு அடியில் இருந்து ரொம்ப நேரமா புதையல் தேடுறிங்க அதான் ஹெல்ப் பண்ணலாமுன்னு கேட்டேன்". என்றான் கண்களில் செல்ல குறும்புடன்.

புரியாமல் அவன் கண்களை நோக்கினாள் அதில் தெரிந்த குறும்பை கண்டு  சிரித்தவள் நடுக்கம் குறைந்து தானும்  பேச ஆரம்பித்தாள்.

"நான் ரொம்ப பேசுவேன்... தைரியமா இருப்பேன்... எதற்காகவும் கவலைபட மாட்டேன்..." என்று எல்லாவற்றிற்கும் சற்று இடைவேளி விடடு கூறியவள் "ஆனா" என்று கூறி நிறுத்தினாள்.

"ம்...... ஆனா"  என்று எடுத்து கொடுத்தான்.

"இப்போ என்ன பேசுறது எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியல" என்றாள் சிறிய குரலில் பாவமாக.

இன்னும் குழந்தையாவே இருக்கியே செல்லம் என்று நினைத்தான்.

"வைஷூ  உன்.... உங்களுக்கு என்னை பிடிச்சிருக்க?".என்றான் அவளின் பதிலை எதிர்பார்து ஆவளாக.

அவன் தடுமாறி அழைத்ததில் சிரித்தவள் "என்னை விட உங்களுக்கு  என்னை கூப்பிடுறுதல தடுமாற்றம் அதிகமா இருக்கு போல" என்றாள் சாதரணமாக இப்போ தைரியமாகவே பேசினாள்.

அப்பா!!!!!!  பார்முக்கு வந்துட்டா வர ரொம்பநேரம் ஆகுமோன்னு நினைச்சேன் என்று மனதிற்க்குள் பேசியவன்  "ஒகே இப்போ தடுமாறமா
கூப்புடுறேன் வைஷூ என்னை மேரேஜ் பண்ணிக்க உனக்கு சம்மதமா" என்றான் நிறுத்தி நிதனமாக.

அவன் கேட்டதில்  விழிகள் படபடவேன பட்டம்பூச்சியின் சிறகைபோல் அடித்து கொள்ள உடலில் ஜிவ்வென்று புது ரத்தம் பாயாவதை போல் இருந்தது  புது விதமான கலவையான உணர்வுகளை தூண்டியது அவனது கேள்வி

"சொல்லு வைஷூ  உனக்கு என்னை பிடிச்சு இருக்கா?". என்று மறுமுறை கேட்டான்.

அவன் கேட்டதில் நடப்பை உணர்ந்தவள் "முதல்ல எனக்கு இதுல விருப்பம்  இல்லாமதான் இருந்தது..... அம்மா அப்பா கேட்டதால ஆப் மைண்டா ஒத்துகிட்டேன்........ இப்போ" என்று இழுத்தவள் "என்னை கேக்குறது இருக்கட்டும் உங்களுக்கு எப்படி கௌஷிக்". என்று முடித்தாள்.

அதெல்லாம் என்மனசுக்குள்ள எப்பவோ வந்து சிம்மாசனம் போட்டு உக்கந்துகிட்டு என்னை ஆட்டி படைக்கிற செல்லம் உன்னை கல்யாணம் பண்ணிக்க கசக்குமா என்று மனதுக்குள்ளே அவளிடம் பேசியவன் க்கூம்...... என்று செறுமி அவள் கண்களோடு தன் கண்களை கலக்க விட்டவன் எனக்கும் உனக்கும் கல்யாணம் நடந்து முடிஞ்சிடுச்சி இப்போ நீ என்னில் பாதி என்றான்  மனதிற்குள்.

கண்கள் காதலை சொல்ல "எனக்கு சம்மதம். உனக்கு?" என்றான்

அவன் கண்கள் அவளிடம் ஏதோ கூறியது ஆனால் அவள் என்ன என்பதை தெரிந்துகொள்ளமால் "நாம இப்போதானே மீட் பண்றோம் என்னை பற்றி உங்களுக்கு தெரியாது உங்களை பற்றி எனக்கு தெரியாது  என்னை பற்றி நான் சொல்றேன் அப்புறம் என்னை பிடிக்குதான்னு சொல்லுங்க.
நான் பெரிய வாயாடி, தப்புன்னா சட்டுன்னு கோபம் வரும் சண்டை போடுவேன், எனக்கு கல்யாணம் ஆனபிறகு வேலைக்கு போகனுமுன்னு எயிம் இருக்கு அன் தென் எனக்கு எங்க அப்பா அம்மா தான் பஸ்ட்... பாக்கனுமுன்னா தோனுச்சின்னா  கூட்டிக்கிட்டு வரனும் அப்புறம் அஹ்... அவ்வளாவுதான்  இதற்கு சம்மதமுன்னா எனக்கு உங்கள கல்யாணம் பண்ணிக்க எந்த அப்ஜக்ஷனும் இல்ல". என்றாள் மூச்சு வாங்க.

அடிச்செல்லம் அப்போ நீ என்னை பாத்து எல்லாம் ஒகே சொல்லலியா அப்போ உன் கன்னம் செவந்தது   வெக்கப்பட்டது  இதையெல்லாம் சும்மாவா மாமுவ இப்படி ஏமாத்திடியேடி என்று மனதில் அர்ச்சித்தவன் இந்த மாமு மேல பாசத்த பொழிய வெக்கிறேன்டி குலாபி என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டான்.

பால்கனியில்  நின்றவளிடம்  பக்கத்தில் வந்து " எனக்கு ஓகே "என்று கூறி அவள் அறியுமுன் கன்னத்தில் முத்தம் பதித்து "இப்போவே என்கேஜ்மென்ட் வைச்சிகலாம் டாலி உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு  நீயும் தான் நோ அப்ஜக்க்ஷன் சொல்லிட்டியே" என்றவன் தன் ஜீன்ஸ் பேக்கட்டில் ஒரு கை விட்டபடி வலது கையால் தலைமுடியை அழுந்த தள்ளி ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி கண் அடித்து அந்த அறையை விட்டு வெளியே சென்றான்.

அவன் செய்த செயலில் உறைந்து நின்றவள் தங்கை வந்து அழைத்ததில் சுயத்தை அடைய கன்னத்தில் கை வைத்து காயத்திரியை பார்பதற்கு  வெக்கப்பட்டாள்" அக்கா என்ன அக்கா சொன்ன மாமாகிட்ட அவர் இன்னைக்கு  என்கேஜ்மட்டுன்னு சொல்லிட்டு இருக்காரு நம்ம அப்பகிட்டயும் அவங்க அப்பாகிட்டயும் . என்னக்கா... என்ன...  என்றாள் கண் அடித்து காயத்திரி கண் அடித்ததும் கௌஷிக்கின் நினைவு வர கன்னங்கள் சூடேறியது.

ஹைய்யோ இவ பாத்துட போறா வைஷூ நார்மல் மோடுக்கு வா இவ பாத்த என்னை ஓட்டி கலாச்சிடுவாலே என்று தனக்கு தானே உள்ளுக்குள் பேசியவள் காயூவிடம் "நான் எதுவும் சொல்லல காயூ வா அம்மாகிட்ட போகலாம்". என்று தங்கையை அழைத்து கொண்டு சென்றாள்.

அங்கு இருவருடைய பெற்றவர்களும் ஜோசியரை வரவழைத்து பாஞ்சங்கம் பார்த்து கொண்டிருந்தனர் ஹைய்யடா ரொம்ப பாஸ்ட்டாதான் போடுறாங்கப்பா பிளான் என்று நினைத்திருந்தாள்.
ஹாலில் அமர்ந்து சிவாவிடம்  பேசிக்கொண்டிருந்தவன் யாரும் அறியவண்ணம் கண்ணடித்து பறக்கும் முத்தம் தந்தான். வைஷூவின் நிலைதான் பரிதாபம் அனைவரையும் மிரட்டி உருட்டி கொண்டு லவ்ன்னு பக்கத்துல வந்தால் கன்னம் பழுக்கும் அளவுக்கு அள்ளிதரும் கைகள் இன்று இவன் செய்த செயலுக்கு தன் கன்னத்தை வருடி கொடுத்து  தெரியாமல் அவள் மனதை ஆக்கிரமித்தான் கௌஷிக்.

பெண்ணிற்கு நிச்சயபட்டு மாப்பிள்ளைக்கு நிச்சயதுணி என்று அனைத்தையும் ஒன்றுவிடாமல் வாங்கியவர்கள் அருகில் இருப்பவர்களுக்கும் உஷாவிற்கும் போனில் மூலம் தகவல்கள் பறந்தது. இவையனைத்தும் 2 மணி நேரத்தில் முடித்து மாலை 6 மணிக்கு நிச்சயம் செய்ய அனைத்தும்  ஏற்பாடு செய்தனர் மாப்பிள்ளை வீட்டரும் பெண் வீட்டரும் அமர்ந்திருக்க மாப்பிள்ளை கௌஷிக் தன் மனதில் நினைத்தவளையே நிச்சயம் செய்யும் சந்தோஷம் நிறைந்த முகத்துடன். கம்பிரத்துடன் அமர்ந்து இருந்தான்.  வைஷூவை அமரவைத்து நலங்கு வைத்தார் உஷா அடுத்து மாதூரி அவரை தொடர்ந்து முவர் நலுங்கு வைத்தனர் அனைவரையும் நமஸ்கரித்தாள் மறந்தும் கௌஷிகை திரும்பி பார்க்கவில்லை அதை அடுத்து அய்யர் நிச்சயபத்திரிகை வாசிக்க தாம்பூலம் கை மாற்றப்பட்டது.

இந்தா வாங்கிக்கமா வைஷூ...  போய் கட்டிகிட்டு வாடா என்றார் லலிதா

கைகளில் தாம்பூலத்தை வாங்கயவளை அழைத்து சென்று புடவை கட்டி கூப்பிட்டு வந்தார் உஷா

"என் கண்ணே பட்டுடும் செல்லம் எவ்வளவு வளந்துட்ட" என்று நெட்டி முறித்தார் உஷா.

வார்த்தைகள் இன்றி அத்தையை அனைத்தவளை  உச்சியில் முத்தம் வைத்து அழைந்துக்கொண்டு வந்தார் உஷா.

அரக்குபட்டில் கை அகலத்தில் ஜரிகை இருக்க அதே ஜரிகை ஆங்காங்கே கொடிகொடியாய் அதில் இலைபோல் இருந்தது அவளின் நிறத்திற்கும் உயரத்திற்கும் அம்சமாய் பொருந்தியது. அழகாக பின்னலிட்டு அதில் அடர்த்தியாய் தொடுத்த மல்லிகையை தொங்கவிட்டு பிறைநெற்றியில் பொட்டு வைத்து கழுத்தை ஒட்டி நகையும் அதற்கு தொதாய் காதில் தோடும் கைநிறைய வளையல்கள் என்று ரவிவர்மனின் ஓவியமாய் ஜொலித்தாள்

"கௌஷிக் வாப்பா இந்த ரிங்க வைஷூக்கு போடு".......என்றவர் வைஷ்ணவியிடம் திரும்பி "இதை வாங்கிக்கம்மா கௌஷிக்கு போடு" என்று இரு வைர மோதிரங்களை கொடுத்தார்  விஜயபாஸ்கர்.

அனைவரும் இருப்பதை மனதில் கொண்டு அவளுக்கு சங்கடம் வரமல் இருக்கதன்னுடைய சேட்டையை அந்த ஒரு இடத்தில் அடக்கி வாசித்தான்.
அழகாய் அவள் தளிர்கரம் பிடித்து மென்மையான விரலில் மோதிரத்தை போட்டு விட்டு அவள் கண்களை பார்த்தான் இப்போது புரிந்தது அவன் கண்களின் காதல் மொழி கன்னங்கள் அந்தி வானமாய் மாறியது. இன்னும் அழகாய் தெரிந்தாள் அவன் கண்களுக்கு.

அதே மனநிலையுடன் அவன் கைபிடித்து மோதிரம் அணிவித்தாள். "பக்கத்தில் போய் நில்லு தம்பி". உஷா

வைஷ்ணவியின் அருகில் நின்றவன்  "டாலி யூ லுக் சோ பியூட்டிபுல் நீ அடிக்கடி இப்படி வெக்கப்படாதே  குலாபி" அனைவரையும் பார்த்தவன் "உனக்காகதான் சொல்றேன்" என்றான் சத்தமில்லாமல் அதே வேளையில் கல்மிஷமாக.

"என்ன மாமா வாய் மட்டும் தான் அசையுது சத்தத்தையே காணும் "என்று கிண்டலடித்தாள் காயத்திரி

"காயூ" என்று  அதட்டலான  குரலில் அழைத்தார் லலிதா

வாயின்மேல் ஒற்றை விரலை வைத்தவள் அமைதியாக இருப்பதை போல் பாவனை செய்தாள்.

வேணுடி உனக்கு வேனும் வாய் ரொம்ப ஜாஸ்தி தான் இந்த ஷாதி மட்டும் முடியட்டும் டி அப்புறம் பேசிக்கிறேன் உன்னை. ஒருத்தன் பேச வந்தா உடனே ப்ரோன்னு சொல்லிடுவியா என்று மனதிற்குள் பொறுமினான்  க்ர்ஷ்.

இவன் ஏன் இஞ்சி திண்ண மங்கியாட்டும் என்னை பார்த்து முறைக்கிறான் காலையிலேர்ந்து எப்போபார் என்னையே முறச்சிட்டு இருக்கான்.

"அண்ணா எல்லாரும் ஒரே பக்கமா நில்லுங்க அண்ணி நீங்களும்தான் குழந்தைங்க எல்லார் கால்களிலும் தனித்தனியா விழமுடியாது குழந்தைங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க " என்றார் உஷா

அனைவரும் ஒரே பக்கம் நிற்க இருவரும் ஒன்றாக விழுந்து வணங்கி ஆசி பெற்றனர்.

அனைத்தும்  முடிந்து இரவு உணவினை முடித்து கொண்டு  அனைவரும் விமான நிலையம் புறப்பட்டு சென்றதும் அவ்வளவு நேரம் பிரகாசமாக இருந்தவளின் முகமும் மனமும் வாடியது அவனின் பிரிவில்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro