30.மேகலா தேவராஜன்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

30.மேகலா தேவராஜன்

இரவு தாமதமாய் வந்த கணவனிடம் பேச முடியாமல் போனது.

மறுநாள் காலை,
 தங்கள் அறைக்கு வந்த மகேந்திரனின் அன்னை தன் கணவரிடம் தங்கள் மகனின் காதல் கதையை விவரமாக கூறவும், ”பரவாயில்லயே நம்ம பையனுக்கும் காக்கி சட்டையை தாண்டி காதல் வந்திருச்சே வெரிகுட்..!” என்று சந்தோசமாக பாராட்டியவர், தனக்கு தெரிந்தாலும் வேண்டுமென்றே, "ஆமா, யார் அந்த பொண்ணு..?” என்றார் தெரியாதது போல்.

“மிருணாளினிங்க.” என்று அவளை பற்றி கூறவும், "ம்.. நல்ல தேர்வு தான். மகி முரட்டுத் தனத்துக்கு இந்த பொண்ணு எப்படி சரியா வருவா? இந்த பொண்ணு ரொம்ப அமைதியா இருக்காளே..?” என்றார் யோசனையாய்.

“நம்ம முரட்டு பையன் இந்த முயல் குட்டிக்கிட்ட தாங்க அடங்கி போவான். அதனால நாளைக்கு நாம அந்த பொண்ணுக்கிட்ட பேசி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குறோம்.” என்றார் மகியின் அன்னை.

“என்ன சம்மதம் வாங்கணுமா..? அவ ஏன் சம்மதிக்கணும்..? ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறாங்க தான? ரெண்டு பேரையும் வர வழைச்சு எப்ப கல்யாணம் வச்சிக்கலாம்னு கேட்கலாம்..?” என்றார் எதையுமே அறியாதவர் போல.

சிறிது தயக்கத்துடன் பார்த்தவர்,
”அது வந்துங்க நம்ம பையன் தான் அந்த பொண்ணை விரும்பறான். அந்த பொண்ணு..” என்றவர் தயங்கி நிறுத்த, அவரை ஆச்சரிய்மாக பார்த்த ராஜேந்திரன், “என்ன மிருணாளினி நம்ம பையனை மறுத்துட்டாளா..?” நம்பமுடியாமல் கேட்க, “ப்ச் அது இல்லங்க. அந்த பொண்ணுக்கும் விருப்பம் தான்... ஆனால், நம்ம குடும்ப கௌரவத்தை பார்த்து மகியை மறுக்கிறா.. அவ நம்ம குடும்பத்துக்கு மருமகளா வந்தால் குடும்ப கௌரவம் கெட்டு போய்டுமாம்..” என்றார் ஆதங்கஙத்துடன்.

“அதான் நம்ம ரெண்டு பேரும் போய் மிருணாளினிக்கிட்ட போகலாம்னு சொல்றேன். நாம பேசினா அவ மறுக்க மாட்டா..” என்று உறுதியாக கூறவும், “இல்லை..! அது சரிவராது..” என்ற தன் கணவரை அதிர்ச்சியாக பார்த்தார்.

“என்ன சொல்றிங்க? நீங்களும் குடும்ப கௌரவம் பார்க்கிறிங்களா..?” சிறிது கோபத்துடன் கேட்க,

“என்னை கொஞ்சம் பேச விடேன்..” என்று மனைவியை அதட்டிவிட்டு, “அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு மருமகளா வரும் போது எந்தவித தயக்கமோ உறுத்தலோ இல்லாம வரணும்.. அதுவும் நம்ம மகனுக்காக மட்டும் வரணும் அவன் மட்டுமே முக்கியம் நினைச்சு வரணும்..!  அப்படி வந்தால் மட்டும் தான் நீண்ட காலம் அவங்க சந்தோசமா வாழ்வாங்க..“ என்றார்.

“அது எப்படி அந்த பொண்ணு வருவா,,?" என கேட்க.

“அது நம்ம பையன் கையில தான் இருக்கு.. அதை அவன் தான் யோசிக்கனும்.. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பி என்கிட்ட வரட்டும்.. நான் சிறப்பா நம்ம பிள்ளைக கல்யாணம் செஞ்சு வைக்கிறேன்.” என்றவர் உறங்க சென்றார்.

ஒரு அவசர வேலையாக மகேந்திரனுக்கு அழைப்பு வர, பணிக்கு செல்ல தயாராகி கீழே வந்தவன் தன் பெற்றோர் பேசுவதை கேட்டு, 'ஓ! மிருணாளினி மேடத்தை அவளுக்கு நான் தான் முக்கியம்னு சொல்ல வைக்கணுமா..? சூப்பர் டேட் இந்த எண்ணம் எனக்கு தோணவே இல்லை பாருங்க.. கண்டிப்பா உங்க மருமக வாயால மணந்தால் மகேந்திரவர்மன். சொல்ல வைக்கிறேன்' என்று சபதமெடுத்தவன் கடமையாற்ற சென்றுவிட்டான்.
  
  நிலவுமகள் தன் வேலையை முடித்து, வானில் மறைந்து ஓய்வெடுக்க செல்ல, ஆதவன் தன் பணியை செய்ய ஆழியியிலிருந்து மெதுவாக உதித்து கொண்டிருந்த நேரம், மகேந்திரன் அந்த கடற்கரையில் ஜாகிங்க் செய்து கொண்டிருந்தான்.

கால்கள் அனிச்சையாக அதன் வேலைகளை செய்ய மனமோ நேற்று தந்தை சொன்னதை  யோசித்து கொண்டிருந்தது.

ஆம் தனது மனதிற்கினியாளான மிருவை தன்னிடம் எப்படி வரவைப்பது என்று யோசித்து கொண்டிருந்தான்.

தன் வேலையில் முரட்டுத்தனமான மனிதர்களை சந்தித்து வந்தவனுக்கு, மென்மையான குணம் கொண்ட தன்னவளை எப்பபடி கையாள்வது என்று தெரியாமல் குழம்பி நின்றான் அந்த ஆறடி ஆண்மகன்..

அந்த யோசனையோடே ஓடிக்கொண்டிருந்தவன் யார் மீதோ இடித்து கொள்ள, கோபத்தில் திட்டப் போனவன், சற்று தள்ளி தன்னை பார்த்து கொண்டிருந்தவளை பார்த்ததும். கோபத்தை கைவிட்டு, தன்னை இடித்தவளிடம் சற்று நெருங்கி வர, “சார் தெரியாம கால் தடுக்கி இடிச்சுட்டேன். சாரி சார்.” என்று மன்னிப்பு கேட்ட அந்த பெண்ணை சிறு புன்னகையுடன், "மன்னிப்பெல்லாம் எதுக்கு ஹனி..? ஒரு பூ பந்து என் மேல மோதின மாதிரி தான் இருந்துச்சு. சோ, சாரி எதுவும் கேட்க வேண்டாம்.”

அங்கு சற்று தள்ளி நின்றிருந்தவளிற்கு கேட்கும்படி சத்தமாக சொல்ல, அவன் சொல்வதை கேட்ட அந்த உருவம் கோபத்தில் இவனிடம் வேகமாக நெருங்கி வர, அதை பார்த்த மகேந்திரனுக்கு உற்சாக ஊற்று. 'அடேய் மகி! நீ ஃபர்ஸ்ட் அட்டெம்ட்லேயே பாஸாகிடுவ போலயே...' தனக்கு தானே பாராட்டி கொண்டவன் அந்த உருவம் தன்னை நெருங்குவதற்கு ஆவலாக காத்திருந்தான்.

********

பிரதிலிபி ஐ டி : மேகலா தேவராஜன்

********  

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro