31.மகாராஜ்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

31.மகாராஜ்

அழகிய  காலை நேரம்  மெல்ல விடிந்து கொண்டிருக்க இங்கே  ஓடிக் கொண்டிருந்தவனின்  மனதிலோ நேற்றைய பேச்சு திரும்ப திரும்ப ஒலித்து கொண்டிருந்தது.  தந்தையின் பேச்சை கேட்டவனின்  மனமோ  தன்னவளை எப்படி தன்னை ஏற்க வைப்பது, தன் காதலை எப்படி புரிய வைப்பது, திருமணத்திற்கு எப்படி சம்மதிக்க வைப்பது என்ற யோசனையில் மனம்  போக, ஓட்ட பயிற்சி செய்த கால்களோ எதிரே வந்த பெண்ணின் மேல மோதியது. 

அந்த சம்பவத்தில் நினைவு வந்தவன் அந்த பெண்ணிடம் மன்னிப்பு வேண்ட வாய் எடுத்தவனின்  கண்ணிலோ  நம் நாயகி பட்டுவிட்டாள். இனி என் செய்வான் பாவம். 

எதிரில் நின்ற அப்பெண்ணோ “சார் தெரியாம கால் தடுக்கி இடிச்சுட்டேன். சாரி சார்.” என்று மன்னிப்பு கேட்ட அந்த பெண்ணை சிறு புன்னகையுடன், "மன்னிப்பெல்லாம் எதுக்கு ஹனி..? ஒரு பூ பந்து என் மேல மோதின மாதிரி தான் இருந்துச்சு. சோ, சாரி எதுவும் கேட்க வேண்டாம்.” 

என்று  எதிரில்  சற்று தள்ளி நின்றிருந்தவளின்  செவிகளை அடைய வேண்டுமென்றே சற்று சத்தமாக உரைத்தான். 

ஆனால் அவளுக்கோ  காதில் புகை வராத குறை தான். கடும் கோபமாக முகத்தை வைத்து கொண்டு இவனை நெருங்கி வர, இங்கே இவனின்  இதயமோ மகிழ்ச்சியின் உச்சத்தில் குதித்து கொண்டிருந்தது.

"ஹாய்  எம்.வி சார்." என்று மோதிய அப்பெண்ணை முறைத்தவாறே இவனிடம் பல்லை கடித்து கொண்டாள் மிருணாளினி.

"அடடே மிரு  வா. வா…  எப்ப வந்தீங்க?  என்ன இந்த பக்கம்?"  எனக் கேட்டவனை முறைத்து விட்டு,  "ஏன் சார் நான் வந்ததால எதுவும் தொந்தரவா உங்க கேர்ள் பிரண்டுக்கிட்ட பேச முடியலயா?"  என்று கடுமையாக கேட்டவளின்  முக பாவனையில் வந்த சிரிப்பை அடக்கி கொண்டு பதில் சொல்லும் முன்பே,  மோதிய அப்பெண் பதறி தடுத்தாள்.

"அச்சச்சோ மேம்!!!  நான் அவரு கேர்ள் பிரண்டுலாம் இல்லை. இங்கிட்டு  ஒரு வேலையா வந்தேன்  இவரை கவனிக்காம மோதிட்டேன். அதோட  எனக்கு கல்யாணம் ஆகிட்டு சாரி மேம்." என்று கூறியவள் மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்தவாறே நடந்தாள்.

"என்ன மிரு!!! பொறாமையா?"  ஆசையாய் பெயரை அழைத்தவன்  பிறகு  அவளை கிண்டல் செய்தான்.
"அதென்ன பூ பந்து? எவ்வளவு தைரியம் இருந்தா அப்படி பேசிருப்பீங்க, அதுவும் கல்யாணம் ஆன  பொண்ணுக்கிட்ட? இதான் நீங்க போலீஸ் ட்ரெயின்ல கத்துக்கிட்டீகளா! போங்க நான் போறேன்." என்றவாறே நடந்தவளின்  முன்னே வந்து தடுத்தவனின் கண்களை கண்டவளின் முகம்  கடுமையிழந்து கன்னங்கள் செம்மை பூசிக்கொள்ள,  இதுதான் சரியான தருணமென்று, மீண்டும் தன் காதலை உரைத்தான்  மிருணாளினியின் மன்னவன் மகேந்திரவர்மன்.
 
தான் சரி பாதியாக ஏற்றுக்கொள்ள போகிறவளின் முன் மண்டியிட்டவன்  மனம் திறந்து தான் கொண்ட காதலை மனம் திறந்து உரைத்தான்.

 "i will be with you forever ♥ i love you until my last breath...

நான் எப்போதும் உன்னுடனே இருக்க விரும்புகிறேன். என் கடைசி உயிர் இருக்கும்  வரை உன்னை திகட்ட திகட்ட காதலித்துக் கொண்டே இருப்பேன். 

மைம் ஹமேசா தேரே ஸாத் ஹூம், தேரே லியே ஹூம். ஆக்கிரி ஸாஸோ தக் துஜே ப்யார் கரூங்கா. 

நன்னு  யாவாக்லு  நின் ஜோதே இருத்திவினி. நன்னு கடே உசிரு இருத்தகண்டா நின்ன பிரீத்தி மாடுத்தனே இருத்தினி."  என்று பல மொழிகளில் தனது உள்ளத்தை உரைத்து விட்டான்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro