9. சில்வியா மனோகரன்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

9. சில்வியா மனோகரன்

அத்தியாயம் : 9

    ராஜேந்திரன் தம்பதியிடம் சாதாரணமாக மிருணாளினி பேசிக்கொண்டிருக்க,  மீண்டும் அவளது அலைபேசி சிணுங்கியது. அலைபேசியை எடுத்தவள் திரையில் காட்சியளித்த பெயரைக் கண்டு சற்றே பதற்றமடைந்தவள் அவர்களிடம் கூறிவிட்டு அங்கிருந்து அவசரமாக இல்லம் நோக்கி விரைந்தாள்.

    இதை அங்கிருந்து பார்த்துக் கொண்டிருந்த மகேந்திரனுக்கு அவளது பதற்ற முகம் எதோ ஒரு பிரச்சனையில் இருப்பதாக உணர்ந்தவன் , தனது அலைபேசியில் தன்னோடு IPS பயின்ற தோழன் ஒருவனை அழைத்தான்.

   " ஹலோ செழியா, நீ இப்ப ஃபிரீயா ... அப்படி இல்லனா நம்பிக்கையான ஒரு நபரை அனுப்பி விடுடா... " என்று மகேந்திரன் கேட்க,  " யாரு மச்சான் திடீர்னு கேக்குற " என்று கேட்க, மகேந்திரன் நடந்தவற்றைச் சுருக்கமாகக் கூறினான்  .

     " சரி மகேந்திரா... இப்ப நான் பக்கத்துல தான் இருக்குறேன்  . நானே போறேன். டீடெய்ல் சொல்லு " என்க  , " நான்  ஃபோட்டோ அனுப்புறேன். அந்த நபரை பின்தொடர்ந்து போய் அவங்களுக்கு என்ன பிரச்சனை னு நீ போய் பார்த்துட்டு சொல்லு... கொஞ்சம் உடனே பண்ணு " என்றான் மகேந்திரன் . " அதுக்கென்ன இப்பவே கிளம்புறேன்... " என்றிட,  இருவரும் அழைப்பைத் துண்டித்துக் கொண்டனர்.

    மகேந்திரன் சொன்னது போலவே செழியனின் புலனத்திற்கு மிருணாளினியின் புகைப்படம் வர,  ஒருமுறை கூர்ந்து பார்த்தவனுக்கு மின்னலென அவள் யாரென்று நினைவு வந்தது.

   ஒருமுறை மெரீனா கடற்கரையில் ஆதவன் ( சூரியன்) வீடு செல்வதைக் காண மிருணாளினி சலிப்புத் தட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தச் சமயம், செழியனும் அவன் மனைவியும் கடற்கரையில் அமர்ந்திருந்தனர். இருவருக்குள்ளும் எதோ ஒரு கருத்து வேறுபாடு போலும்... அதனால் இருவரும் மாற்றி மாற்றி எதோ சொல்லிக் கொண்டிருந்தனர். மெல்லமாகத் தொடங்கிய பிரச்சனை நொடிகளில் வலுக்கத் தொடங்கியது. அவர்களின் பேச்சில் அவர்களின் செல்ல மழலை சம்யுக்தா அழ ஆர்மபித்து விட்டாள்.

    " பாரு உன்னால சமு வேற அழுறா... " என்று செழியன் கத்த,  " என்ன என்னாலயா... நீ பண்ணுன வேலை... கொஞ்சம் நேரம் உலக அதிசயம் நடந்தது போல வெளிய வருவோம்... அதுலயும் நீ சண்டை தொடங்கி விட்டு இதோ உன்னால சமு அழுறா " என்று மனைவியானவள் கத்தினாள். ஆக மொத்தத்தில் மாற்றி மாற்றி குற்றம் சொல்லி குழந்தையின் அழுகையும் அவர்களின் கோபமும் வலுத்ததே அன்றி,  துளியும் குறையவில்லை .

    இதை எதிரே இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் மிருணாளினி ... பெண்ணவளின் சின்ன இதயம் மழலையின் அழுகையைப் பொறுக்காதவள் , தன் பர்சை திறந்து பணமெடுத்து இரண்டு பலூனை வாங்கினாள் . வாங்கிய பலூனுடன் அவர்கள் அருகே வந்தவள்,  மழலையிடம் பலூனை நீட்டினாள் . பலூனைக் கண்ட குழந்தை குஷியாகிச் சிரித்தது. வெறும் நான்கு பற்களே முளைத்த நிலையில் குழந்தையின் சிரிப்பு பார்ப்பவரை கவர்ந்திழுக்காமல் இராது...

    " பாத்தீங்களா சார்...  குழந்தையோட சிரிப்புல உங்க சண்டையே போயிடுச்சு... அட்வைஸ் பண்றேன் னு நினைக்காதீங்க... நீங்க யாருனு கூட எனக்குத் தெரியாது. உங்க கிட்ட நான் சொல்றது ஒரு விஷயம் தான்... குழந்தைங்க முன்னாடி கோபப்படாதீங்க...  குழந்தைங்க அறுநிலையில் இருக்குற நூலைப் போன்றவங்க... அப்படிப் பட்டவங்களுக்கு முதல் ஆசானே பெற்றவங்க தான். அவங்க உங்களைப் பார்த்து தான் வளர்வாங்க... கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கோங்க சார் " என்றவள் தன்பேச்சு முடிந்தாயிற்று என்ற விதமாய் கடந்து சென்றிருந்தாள்.  அனைவரையும் சந்தேக கண்ணோட்டத்தில் பார்க்கும் காவலனான செழியனுக்கு அவனது குற்றத்தை உணர்த்தி , உலகில் நல்லவர்களும் உள்ளனர் என்ற விதமாய் உணர்த்திச் சென்றாள் பெண்ணவள் .

    அதனை நினைத்திட,  செழியனின் இதழ்கள் புன்னகையை சிந்தியது. நேரமாவதை உணர்ந்தவன்,  அவளைப் பின்தொடர்ந்து சென்றான் . அவள் வளர்ந்த அந்த இல்லத்தின் முன்பு பெண்ணவள் சென்று நின்றாள் . அவளை எளிதாக கண்காணித்திட எண்ணியவன் , அருகிருந்த ஒரு ஆலமரத்தில் குரங்கு போல மரத்தோடு மரமாய் ஒன்றி அமர்ந்து கொண்டான். கூடவே தனது நண்பனுக்கு அலைபேசியில் அழைத்தவன் நடப்பவற்றை நேரடியாக ஒளிபரப்ப ஏதுவாக அமர்ந்து கொண்டான்...

தொடரும்...

Pratilipi id : சில்வியா மனோகரன் ✍️🏻

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro