10. ஆர்த்தி தனசேகரன்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

10. ஆர்த்தி தனசேகரன்

தன் நண்பன் மகேந்திரன் கேட்டுக் கொண்டதால் மிருணாளினியை பின் தொடர்ந்து வந்த செழியன், அவள் இல்லத்தின் உள் நுழைந்ததும் யாருமறியாமல் அவளை கண்காணித்து தன் நண்பனுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டி அழைப்பு விடுத்து காத்திருந்தான்.

மிருணாளினி உள்ளுக்குள் எழுந்த பதட்டத்தை தன் முகத்தில் காட்டாமல் கமலேஷ்வரனிடம் சென்று சிறுவன் சின்னாவைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தாள்.

"அப்பா, என்ன ஆச்சு? சின்னா படிக்கிற பள்ளிக்கூடம் பக்கத்து தெருவில் தான இருக்கு. எப்போவும் சரியா போயிட்டு வர பிள்ளைக்கு இன்னைக்கு என்ன ஆச்சு? இன்னும் ஏன் வரல? சின்னா கூட போன பசங்க கிட்ட விசாரிச்சீங்களா அப்பா?", என்று கேள்விக் கணைகளை தொடுத்தாள்.

" எப்போவும் காலையில் போனா சாயந்திரம் சரியா வந்துடுவான் மா. அவனை பத்தி தான் உனக்கே தெரியுமே, சேட்டை பண்ற சுட்டிப்பையனா இருந்தாலும் நல்லா படிக்கிற பையன். நேரத்துக்கு வந்துடுவான். இன்னைக்கு இவ்வளவு நேரம் ஆகியும் வரல, அது தான் அவனுக்கு என்ன ஆச்சோன்னு பயமா இருக்குன்னு உன்னை வர சொன்னேன் மிரு மா", என்ற கமலேஷ்வரனின் பயமும் பதட்டமும் அவர் குரலில் நன்றாகவே வெளிப்பட்டது.

அந்த இல்லத்தில் உள்ள குழந்தைகளை தன் சொந்த பிள்ளையாக நினைத்து பாதுகாத்து வளர்த்து வந்தவர் ஆயிற்றே, அதனால் அவரின் பதற்றம் உணர்ந்தவளாய்," சரிங்க அப்பா பதட்ட படாதீங்க , நம்ம சின்னாவுக்கு ஒன்னும் ஆகி இருக்காது, கண்டுபிடிச்சிடலாம். அவன் கூட யாரெல்லாம் இன்னைக்கு போனாங்க?", என்று அவரிடம் கேட்டாள்.

"எப்போவும் நம்ம கிருஷ்ணாவும் , சாரு பாப்பாவும் தான் சின்னா கூட போவாங்க, இன்னைக்கு சாருக்கு உடம்பு சரியில்லை அதனால ஸ்கூல் போகல. கிருஷ்ணாவும் அவனும் மட்டும் தான் போனாங்க. அவன் கிட்ட தான் கேட்டேன். ரெண்டு பேரும் விளையாடிட்டே யார் முதல்ல போகலாம்னு போட்டி போட்டுட்டு வந்தாங்களாம். அதுல கிருஷ்ணா முன்னாடி வந்துட்டான். பின்னாடி வந்த சின்னாவை காணோம். எப்படியும் வந்துடுவான்னு கொஞ்ச நேரம் வரைக்கும் பார்த்துட்டு , அவன் வரலைன்னு கிருஷ்ணா தான் எங்கிட்ட வந்து சொன்னான் மா", என்றார் கமலேஷ்வரன்.

" சரிங்க அப்பா. இவ்ளோ நேரம் ஆகியும் வரல. இனி நம்ம தேடி அலைஞ்சு நேரத்தை வீணடிக்கிறத விட போலீஸ் கிட்ட சொல்லி உதவி கேக்கலாம். நம்ம ராஜேந்திரன் சார் பையன் இருக்காருள்ள அவர் போலீஸ் டிபார்ட்மென்ட் ல தான் இருக்காரு. இப்போ அவருக்கு அடிபட்டு அவங்க ஹாஸ்பிடலில் தான் இருக்காரு. இப்போ அவரை தொந்தரவு பண்ணக் கூடாது தான், இருந்தாலும் அவருக்கு தெரிஞ்ச அதிகாரிங்க கிட்ட சொல்லி தேட சொல்லுவாரு அப்பா", என்று மகேந்திரனுக்கு அடிபட்டது, ராஜேந்திரன் தம்பதியிடன் பேசியது வரை சுருக்கமாக சொல்லி முடித்தாள் மிருணாளினி.

அவள் சொல்லி முடிப்பதற்குள், தன் நண்பனிடம் நடந்தவற்றை சொன்ன செழியன், சிறுவன் சின்னா காணாமல் போனது தான் மிருணாளினியின் பதற்றத்திற்கு காரணம் என்றான்.

கொஞ்ச நாட்களாக தன்னால் தடுத்து நிறுத்தபட்ட குழந்தை கடத்தலாக இருக்குமோ என்று யோசித்தவன், இந்த கடத்தலுக்கும் தன்னை தாக்கியவர்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ எனும் கோணத்தில் அவனது போலீஸ் மூளை செயல்பட ஆயத்தமானது.

சிறுவன் சின்னாவை மீட்பானா மகேந்திரன் ? போலீஸ் அதிகாரியிடம் சொன்னாலும் தானும் சிறுவனைத் தேடி செல்வாளா மிருணாளினி ?

pratilipi id :ஆர்த்தி தனா "ஆராதனா"

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro