paguthi 21

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அவ்வரண்மனைக்குள் பிரியா கார்த்திக் மற்றும் அர்ஜுன் நுழைந்தனர்.அங்கே பணியாட்கள் மிகவும் மும்முரமாக அரண்மனையின் அனைத்து இடங்களிலும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர்.இவர்கள் இங்கே அதை அனைத்தையும் பார்த்துக் கொண்டே நின்று கொண்டிருப்பதை கவனித்த ஓர் பணியாள் "என்ன இங்கே அளவளாவிக்கொண்டிருக்கிறீர்.பணிகள் மலை போல் குவிந்திருக்கயில் செல்லுங்கள்" என்று கூற மூவரும் தங்கள் தலையை ஆட்டிவிட்டு உள்ளே சென்றனர்.

பின் பிரியா"நாம மூணு பெரும் ஒண்ணா இருந்தா யாருக்காவது சந்தேகம் வந்துரும் அதுனால நா ஒரு பக்கம் போறேன் நீங்க ரெண்டு பேரும் வேற பக்கம் போங்க அப்பறோம் ஈவினிங் நாம தோட்டம் இருக்குல்ல அங்க சந்திக்கலாம் ".என்று கூற அர்ஜுனிற்கோ அவளை தனியாக அனுப்புவதில் சிறிதும் விருப்பமில்லை

அர்ஜுன்"பிரியா என்ன பேசுறேன்னு யோசிச்சு தான் பேசுறியா ??இப்டி ஆபத்தான எடத்துல உன்ன தனியா விட சொல்றியா ?"என்று வினவ

கார்த்திக்"ஆமா பிரியா தேவை இல்லாத ரிஸ்க் நீ .."என்று பேச வர

பிரியா அவனை கை தூக்கி அமைதியாகும் படி கூறினால் பின் "நா நல்லா யோசிச்சு தான் சொல்றேன்.இங்க பாத்தீங்களா ஆண் வீரர்களும் பெண் பணியாட்களும் ஒரு எடத்துல கூட சேர்ந்து இருக்கல நாம மூணு பேரும் இப்போ சேர்ந்து சுத்துனா பாக்குறவுங்க எல்லாருக்கும் சந்தேகம் வரும் அதுனால தான் சொல்லுறேன்.முதல்ல உள்ள போய் இந்த அரண்மனையோட கட்டமைப்பை பாருங்க ஏதாவது suspiciousaah இருக்கான்னு செக் பண்ணுங்க இப்போ வரேன்" என்று விட்டு செல்ல எத்தனிக்க

அர்ஜுன் இன்னும் மனம் ஒப்பாதவனாக அவள் கையை பிடித்தான் பின் பிரியா திரும்ப அவனோ போக வேண்டுமா என்று கண்களாலேயே கேட்டான் அதற்கு அவள் அவனது கையை அழுத்தி எனக்கு எதுவும் ஆகாது நான் உன்னுடையவள் உன்னிடமே திரும்புவேன் என்னும் விதமாய் கண்களாலேயே அவனுக்கு பதில் அளித்து விட்டு சென்றால் .பின் அர்ஜுனும் கார்திக்க்கும் படை வீரர்கள் இருக்குமிடம் நோக்கி சென்றனர் .

அரண்மனையின் ஒவ்வொரு அங்குலத்திலும் வீரர்கள் காவலுக்கு அமர்த்தப் பட்டு இருந்தனர் .அரண்மனையின் பின் புறத்தில் விசாலமாக பல வகை பூச்செடிகளும் ,பழச்செடிகளும் நிறைந்த வகையில் தோட்டம் அமைக்கப் பெற்றிருந்தது.அதன் ஒரு பகுதியில் குதிரை லாயம் அமைக்கப் பட்டு இருந்தது .அங்கே 3 சாதிக் குதிரைகளும் இருந்தது சூத்திர சாதிக் குதிரையை தவிர்த்து .குதிரைகளுக்கு சாதிகள் உண்டு ஒவ்வொரு சாதிக் குதிரைக்கும் ஒவ்வொரு குணம்.(அது என்னனு கேக்காதீங்க எனக்கு தெரியாது ).

அதன் அருகாமையில் மைதானம் அமைக்கப் பட்டு இருந்தது அதில் படை வீரர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப் பட்டுக் கொண்டிருந்தது.ஆனால் அவர்கள் பயிற்சியை அந்த ஆயுதத்தை உபயோகிக்கும் விதி முறைப் படி கற்காமல் மூர்கத்தனமாய் கிடைக்கும் இடங்களிலெல்லாம் தாக்கும் படியாக வீரர்களை போல் அல்லாமல் வெறி பிடித்த மிருகத்தை போல் தாக்கிக் கொண்டிருந்தனர்.அதைக் கண்ட அர்ஜுனிற்கும் கார்த்திக்கிற்கு நரகமே இவ்விடத்தைக் காட்டிலும் மேல் என்று தோன்றியது .பின் அவர்கள் ஒவ்வொரு இடமாய் நோக்கி கொண்டே சென்றனர்.பின் ஓர் இடத்தில் கார்திக்க்கும் அர்ஜுனும் நின்று பேசிக்கொண்டனர் "என்னடா இது இந்த இடம் இவ்ளோ மோசமானதா இருக்கு "என்று அர்ஜுன் கேட்க

கார்திக்க்கோ இன்னும் முழுதாய் வளராத நிலாவை பார்த்து வேறொரு சிந்தனையில் இருந்தான் .அர்ஜுன் அவனது தோளை தொட்டு திருப்ப அவனது கண்களோ பனித்திருந்தது.

கார்த்திக்"என் மித்ரா என்ன விட்டு பொய் இன்னையோட ஒரு வாரம் ஆச்சுடா .இன்னும் அவ எங்க இருக்கானு ஒன்னும் தெரியல.கடைசி வரைக்கும் கூட இருப்பேன்னு அவளுக்கு சத்தியம் பண்ணி கொடுத்ததை மீறிட்டேன்டா .நா ஒரு நல்ல husband இல்ல."என்று கூற

அர்ஜுனோ "ஹே கார்த்திக் கவலையே படாத மித்ரா கண்டிப்பா இங்க தான் இருப்பா உன் மித்ரா உன்ன விட்டு எங்கயும் போகல அவ கெடச்சுடுவா என்று கூறி அவனது தோளில் ஆதரவாக கை போட்டான் "பின் அங்கே ஏதோ சலசலப்பு தெரிய அவர்கள் இருவரும் அனைத்து வீரர்களும் செல்லும் இடத்தை நோக்கி சென்றனர்.

(ப்ரியாவை பாப்போமா)

பிரியா அனைத்து பெண் பணியாளர்களோடும் சேர்ந்து கொண்டு அவ்வரண்மனையின் கட்டமைப்பையும் அதில் ஏதேனும் மாறுபாடு தெரிகின்றதா என்றும் கவனித்துக் கொண்டு இருந்தால் .அவ்வரண்மனை மிகவும் பிரம்மாண்டமாக கட்டப் பட்டு இருந்தது .அவ்வரண்மனையை ரசித்துக் கொண்டே வந்தவள் தான் யாரும் இல்லாத இடத்திற்கு வந்ததையும் அறியாது முன்னேறி சென்று கொண்டிருந்தாள்.

நிசப்தத்தின் காரணமாக அவள் அவ்விடத்தை நோக்க அவள் இருக்கும் இடம் அவளுக்கே தெரியவில்லை.பின் சுற்றி முற்றி பார்த்தவள் அங்கே ஏதோ ஓர் அறை கதவு தென்பட அதை சென்று தள்ளினாள் .அது முதலில் திறக்கவில்லை பின் மீண்டும் பலம் கொண்டு தள்ள அக்கதவு திறந்து கொண்டது .உள்ளே செல்ல அந்த அறை மிகவும் இருட்டாய் இருந்தது பின் காலில் ஏதோ தட்டு பட அதன் மீதே விழுந்தாள்.

பின் தன் உடையில் மறைத்து வைத்திருந்த டார்ச்சை அடிக்க அவள் கண்டதோ ஒரு பிரம்மாண்டமான சிவலிங்கத்தை தான் .அதை கண்டவள் கண்கள் ஏனோ பனித்தது .பின் அந்த சிவலிங்கத்தை வணங்கியவள் அங்கே அவ்வறையில் டார்ச்சை அடிக்க அங்கே மூலையில் சிலந்தி வலைகளுக்கு பின்னால் ஏதோ கதவு இருப்பதை போல் இருந்தது அவள் அச்சிலந்தி வலைகளை விலக்கிக் கொண்டு அக்கதவை திறக்க போக அவளுக்கு வெளியில் இருந்து ஏதோ சத்தம் கேட்டது பின் தான் இருக்கும் இடத்தை உணர்ந்தவள் அக்கதவை திறவாமலே வெளியில் சென்று மற்ற பணிப் பெண்களுடன் சேர்ந்து கொள்ள எத்தனிக்க அவள் தலை முதல் அனைத்தையும் மூடியபடி ஒருவர் அங்கும் இங்கும் பார்த்து கொண்டே சென்றார்.சந்தேகம் எழ அவ்வுருவத்தை பிரியா பின்அ தொடர்ந்தால்.பின் அவ்வுருவம் ஓர் இடத்தில் நின்று சுற்றி ஆட்கள் இல்லாததை உறுதி செய்து கொண்டபின் சுவற்றில் உள்ள ஓர் சித்திரத்தை அவ்விடத்தை விட்டு நகர்த்தியபின் உள்ளே வழி உருவாவதையும் அதன் உள்ளே செல்வதையும் கவனித்தால்.பின் ஏதோ தோன்ற அவ்வுருவத்தை பின் தொடர்நது அவ்வழியில் உள்ளே சென்றால் பிரியா .

அர்ஜுனும் கார்திக்க்கும் வீரர்களுடன் செல்ல அங்கே ஓர் இடத்தில் அனைவரும் குழுமினர் .பின் அங்கே ஓர் ஆஜானுபாகுவான உருவத்தை உடையவர் மேடை போன்ற அமைப்பிலிருந்து பேசிக் கொண்டிருந்தார்.அவரின் தோற்றத்தை வைத்து அவர் அந்நாட்டின் வீரர்களின் தலைவராக தான் இருப்பார் என்று யூகித்தவர்கள் அவர் பேசுவதை கூர்ந்து கவனித்தனர் ."எம் படை வீரர்களே இன்று நாம் குழுமியிருக்கும் காரணத்தை அறிவீர்.இன்னும் 3 திவசத்தில் பௌர்ணமி வர உள்ளது ஆகையால் எப்பொழுதும் போல் இம்முறையும் ஓர் யுவதியை கவர்ந்து வர உள்ளோம் .அந்த பணியை செய்வதற்கு இம்முறை தேர்வாகி இருக்கும் வீரர்கள் பைரவனும்,ஷிவதாசனும் ஆவர்."என்று கூறினார்.இவர் கூறுவதை கேட்ட அர்ஜுனிற்கும் கார்திக்க்கும் பெண்களும்,பொருட்களும் மாயமாவதன் காரணம் இப்பொழுதே புரிந்தது.பின் அனைவரும் களைந்து சென்றனர்.

அங்கே பிரியா அவ்வுருவத்தை பின் தொடர அது உள்ளே சென்ற வழியோ மிகவும் இருட்டாய் இருந்தது .பின் கால் தடுமாறி விழ போக அது படி என்று உணர்ந்து கொண்டால்.பின் முன்னேறி சென்றவளுக்கோ அவ்வுருவம் கையில் பிடித்திருந்த தீ பந்தத்தின் ஒளி தெரிந்தது பின்.ஓர் இடத்தில் அவ்வுருவம் நின்றது .அவ்வுருவம் அங்கிருந்த ஓர் இடத்தில் நெருப்பை கொட்ட அங்கே வைக்க பட்டிருந்த பல பந்தங்களுக்கும் நெருப்பு பரவி அவ்வரையே ஒளி வீசியது .ப்ரியாவோ தன்னை அங்கிருந்த தூணிற்கு பின் மறைத்துக் கொண்டு அங்கே நடப்பவற்றை ஒரு வித பீதியுடன் நோக்கிக் கொண்டிருந்தாள்.

ஏனெனில் இப்பொழுது அவள் அங்கே இருப்பது அவ்வுருவத்திற்கு தெரிந்தால் அவள் மரணம் நிச்சயம்.பின் அங்கே ஓர் சிறை போன்ற அமைப்பிற்குள் சென்றது அங்கேயோ மிகவும் தளர்ந்த உடலுடன் ஓர் முதியவர்.இருந்தார்.அவரிடம் சென்று அவ்வுருவம்"என்ன சிறை வாசம் ஆனந்தமாக உள்ளதோ ??"என்று வினவ அம்முதியவரோ"வஞ்சகக்காரி இன்னும் என்ன சித்ரவதை செய்ய காத்திருக்கிறாய் "என்று மெலிந்த எனினும் கம்பீரமான குரலில் கேட்க அவள் சிரித்து விட்டு தன் முகத்தில் உள்ள துணியை விளக்கினால்.ஆம் அதே சம்யுக்தா தான் .

பலரின் வாழ்வை நாசமாக்கிய வஞ்சகி சம்யுக்தாவே தான்.பின் அவள் தொடர்ந்தால் "எமக்கு தேவையானதை தாம் அளித்து விட்டால் யான் என் தம்மை கொடுமை படுத்த போகிறேன்.பௌர்ணமி வரை அவாகாசம் தருகிறேன் சிந்தித்து செயலாற்றுங்கள் "என்று கூறி ஏளனச் சிரிப்புடன் வெளியேறினால் அவள் செல்லும் வரை உள்ளே மறைந்திருந்த பிரியா பின் அச்சிறையை நோக்கி ஓர் பார்வையை வீசிவிட்டு"யாரிவர்னு நான் நிச்சயம் கண்டு பிடிப்பேன் என்று மனதில் நினைத்தவள் .பின் அவளது பின்னேயே சென்று அவள் அக்கதவை மூடும்முன் அவள்வெ அறியாவண்ணம் வெளி வந்து தூணின் பின் மறைந்து கொண்டால்.

வெளி வந்த ப்ரியாவிற்கோ பல சந்தேகங்கள்

யார் இவர்??

இவரிடம் சம்யுக்தா எதிர் பார்ப்பதும் என்ன??

மித்ரா எங்கே ??

மர்மங்கள் அவிழ்க்கப்படுமா??

stay tuned to know

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro