paguthi 22

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


பின் பிரியா அவ்விடத்தை விட்டு வெளியேறி அந்த அரண்மனையின் தோட்டத்திற்கு விரைந்தாள் .பின் அங்கே ஓர் அடர்த்தியான கிளைகளை உடைய மரத்தின் அடியில் கார்திக்க்கும் அர்ஜுனும் இருப்பது தெரியவே இவள் அங்கு சென்றால் .சென்றவள் கார்த்திக்கின் தோள் தொட அவனோ "அம்மா பேய் காட்டேரி "என்று கத்த துவங்க பிரியா அவனது வாயில் கை வைத்து மூடினாள் .பிரியா"எரும காட்டெரியும் இல்ல ஒட்டெரியும் இல்ல நா தான் ."என்று கூறி அவனது வாயில் இருந்து கை எடுக்க


அர்ஜுனோ அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.அர்ஜுன்"உனக்கு எதுவும் ஆயிடுமோன்னு எவ்ளோ பயந்தேன் தெரியுமா பிரியா .என் உயிரு என் கிட்டயே இல்ல"என்று அவளை மேலும் இறுக்கமாக அணைத்துக் கொள்ள அவள் அவனது தவிப்பையும் பயத்தையும் இந்த அணைப்பிலேயே உணர்ந்தாள் .


அவனது முதுகை ஆதரவாக வருடியவள் "அர்ஜுன் ஒன்னும் இல்ல எனக்கு ஒன்னும் ஆகலேல அப்பறோம் என் இந்த பயம்.15 என்கவுண்டர் பண்ண போலீஸ் officer  நீங்க இப்டி பலகீனமா இருக்கலாமா?"என்று வினவ 

அவனோ "இல்ல பிரியா உன் விஷயத்துல மட்டும் நா ரொம்ப பலகீனமா மாறிடுறேன். "என்று கூறி விட்டு பின் அவளை விட்டு விலகினான்.பின் மூவரும் தாங்கள் அரண்மனையில் பார்த்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள .

கார்த்திக்"என்னது யாருக்கும் தெரியாம ஒருத்தர அடைச்சு வச்சுருக்காங்களா?அப்போ அவரை விசாரிச்சா எல்லாம் தெரிஞ்சுரும்ல"என்க ப்ரியாவும் அர்ஜுனும் ஆம் என்பது போல் தலை அசைத்தனர்.


பிரியா"அவரை இங்க இருந்து வெளியேத்தி அவர் கிட்ட விசாரிச்சோம்னா எல்லா புதிருக்குமான விடை கிடைச்சுடும் "என்று கூற 


அர்ஜுன்"ஆனா அது அவ்ளோ ஈசி இல்ல .இங்க அரண்மனைல ஒவ்வொரு அங்குலத்துக்கும் ஒரு வீரன் காவலுக்கு இருக்கான் .அவுங்கள மீறி அவரை இங்க இருந்து வெளியேத்துறது அவ்ளோ சுலபம் இல்ல."என்று கூற 


கார்திக்க்கோ "சரி அவரை வெளியேத்த வேண்டாம் அங்கேயே அவரை பத்தி விசாரிப்போம் ஆனா அது யாருக்கும் தெரியக் கூடாது ."என்க 


ப்ரியாவோ "ஆனா அது அவ்ளோ ஈசி இல்ல சம்யுக்தா அந்த அறைக்கு அப்பப்போ வந்துட்டு போறா அவ வந்துட்டு போற நேரம் தவிர்த்து அந்த இடத்துலயும் காவலுக்கு ஆளுங்க இருக்காங்க ."என்று மீண்டும் ஒரு தடையை சொல்ல அப்பொழுதே அர்ஜுனிற்கு ஒரு யோசனை வந்தது .

அர்ஜுன் "ஹே கார்த்திக் அந்த சம்யுக்தா ஏதோ ஒரு பொண்ண பலி குடுக்க போறால்ல.அப்போ அவ அந்த பூஜை பண்ணேல இந்த அரண்மனைல இருக்குற எல்லா வீரர்களும்,பணியாட்களும் அந்த பலிப் பீடத்துக்கு கீழ இருக்கணும்னு உத்தரவு போட்டுருக்கா.அதுனால நாம அந்த timea use பண்ணி அவர் கிட்ட எல்லாத்தையும் விசாரிச்சுடலாம் எப்படியும் பூஜை ஒரு ராத்திரி முழுக்க நடக்கும்னு பேசிக்கிட்டாங்க."என்க

கார்த்திக் "அப்போ சூப்பர் நாம மூணு பேரும் நாளைக்கு ராத்திரியே இதோட எல்லா ரகசியத்தையும் தெரிஞ்சுக்குவோம் ."என்று கூற 


ப்ரியாவோ "நாம மூணு பேரும் இல்ல நா மட்டும் தான் .நீங்க ரெண்டு பேரும் பலி பீடத்துல இருந்து சம்யுக்தாவோட அடுத்த move என்னனு பாருங்க" என்க 

இந்த முறை கார்த்திக் "பிரியா நோ என்ன ஆனாலும் சரி இந்த தடவ நீ தனியா போக மாட்ட "என்க பிரியா "அதில்ல ...."என்று ஏதோ பேச வர கார்த்திக்"நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் .அர்ஜுன் நீ பிரியா கூட போ நா பலி பீடத்துக்கு போறேன்.எனக்கு என்னமோ நாளைக்கு நா அங்க போனா என் மித்து எங்க இருப்பான்னு தெரியுமான்னு தோணுது .நோ மோர் arguments வேற யாரும் பாக்குறதுக்குள்ள நாம இங்க இருந்து கிளம்புவோம்."என்றான் நாளை என்ன செய்ய விருக்கிறோம் என்பதை பற்றி தெளிவு படுத்திக் கொண்ட பின் மூவரும் களைந்து சென்றனர் .

அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது .அன்றைய நாள் என்றும் போல் கரைய மாலை வேளையும் நெருங்கியது படை வீரர்களும்,பணியாட்களும் பலி பீடத்திற்கு வரும் படி உத்தரவு பிறப்பிக்க பட்டது .


ப்ரியாவிடம் ஒரு பெண் "சாம்பவி நாழி ஆகி விட்டது வா "என்று கூற சாம்பவி வேடத்திலிருந்த ப்ரியாவும் அவளுக்கு சந்தேகம் வர கூடாது என்று அவளுடன் சற்று தூரம் சென்றால் .


அப்பொழுது ஒரு படை வீரன் "பெண்களே பூஜை பொருட்களில் ஒரு பொருள் இப்பொழுதே கிடைத்திருக்கிறது அதை எடுத்து வர ஓர் பெண் வேண்டும் தாங்கள் இருவரில் யாரேனும் ஒருவர் வாருங்கள்" என்க அந்த இன்னொரு 

பெண் "சாம்பவி எனக்கு பலி பீடத்தை சுத்தம் செய்யும் பணி கொடுக்கப்பட்டு உள்ளது.எனவே நீ இவரோடு சென்று எடுத்து கொடுத்து விடு ."என்று கூறி விட்டு நகர 

 ப்ரியாவோ "என்னடா இது ஒவ்வொரு தடையா வருது என்று எண்ணிக் கொண்டு" வாருங்கள்"என்று விட்டு முன்னேறி செல்ல அந்த வீரனோ அவளது கையை பற்றி தடுத்தான் .அந்த ஸ்பரிசம் பழக்கப் பட்டதை போல் இருக்க அவள் திடுக்கிட்டு திரும்பினாள் அங்கோ அர்ஜுன் நின்றுகொண்டிருந்தான்.

அர்ஜுன்"பிரியா அந்த பொண்ண அனுப்பிட்டேன் .இப்போ நாம அந்த இடத்துக்கு போலாம் வா" என்று கூறி அவள் கையை பற்ற 

அவளோ "அர்ஜுன் அது கார்த்திக்? "என்று வினவ 

அவனோ "கார்த்திக் பலி பீடத்துக்கு போய்ட்டான் நீ tension ஆகாத இப்போ நாம நீ சொன்ன இடத்துக்கு போவோம் ."என்று கூறினான்.பின் இருவரும் அந்த இடத்திற்கு செல்ல அங்கோ யாரும் இல்லை பின் மெதுவாக அந்த சித்திரத்தை சுவற்றில் இருந்து விலக்கியவள் அங்கே இருந்த சக்கரத்தை கடிகார சுழற்சி சுழற்ற அது திறந்து கொண்டது பின் இருவரும் தங்கள் கைகளை கோர்த்து கொண்டு டோர்ச்சின் உதவியோடு உள்ளே சென்றனர்.


 பின் அந்த இடத்திற்கு வந்ததும் அர்ஜுன் லைட்டரால் அந்த தீப்பந்தத்தை பற்ற வைக்க அந்த இடமே பிரகாசமானது பின் அந்த சிறை போன்ற அமைப்பிற்குள் சென்றவர்கள் கண்டதோ கை கால்கள் அனைத்திலும் எலும்பு மாத்திரமே எஞ்சி இருக்க ,முகத்தில் கை ரேகையை விட அதிகமாக முதிர்ச்சி ரேகைகள் இருக்க ,தலை முடி தரை தொட தாடி காடு போல் மண்டி இருக்க உடல் நைந்து முதிர் பிராயத்தில் இருக்கும் ஒரு முதியவரைத் தான்.


அவரது நிலை கண்டு ஏனோ ப்ரியாவும் அர்ஜுனும் மிகுந்த கவலைக்குள்ளாயினர்.அவர் அருகில் மெதுவாக சென்ற பிரியா அவரது நெற்றியில் கை வைக்க அவளது ஸ்பரிசத்தில் மெது மெதுவாய் கண் விழித்த முதியவர் அவளது வதனத்தை கண்ட மறுநொடி புத்துணர்வு பெற்றதைப் போல் எழுந்து அமர்ந்தார் .


பின் அங்கே இருந்த அர்ஜுனையும் ப்ரியாவையும் விழிகள் விரிய மறுபடி மறுபடி பார்த்தவர் "இ .. இ ..இளவரிசி இளவரசே தாம் இங்கே.....எப்படி ??"என்று மெலிந்த குரலில் வினவ அவர்களோ ஆச்சர்யத்தின் உச்சிக்கே சென்று விட்டனர் அர்ஜுன்"அய்யா நாங்கள் இளவரசியும் அல்ல இளவரசரும் அல்ல .நாங்கள் சாமான்யமானவர்கள் .தங்களை மீட்க வந்துள்ளோம் "என்று கூற அவரோ இன்னும் நம்பாதவராய் 

"இது எப்படி சாத்தியம் இல்லை தாம் இளவரசியே தான் "என்க ப்ரியாவோ "இல்லை அய்யா "என்று ஏதோ கூற வர 

அந்த முதியவரோ "உன் பிறந்த நாளையும் நட்சத்திரத்தையும் கூறு" என்க 

அவளோ சற்று யோசித்து விட்டு "ஜூன் 12 1992 ,திருவாதிரை நட்சத்திரம் "என்று கூற அவரது முகமோ மிகுந்த பிரகாசத்தை அடைந்தது .

பின் "சந்தேகமே இல்லை தாம் எங்கள் இளவரசியை தான் .தாங்கள் வீழ்த்தப் படவில்லை விதைக்கப் பட்டிருக்கிறீர்கள் என்று நிரூபித்து விட்டீர்கள் இளவரசி.யான் தொழும் ஆதி சிவ நாதரே காத்திருந்த கண்களுக்கு பலனைக் கொடுத்து விட்டாயப்பா."என்றார் பின் அவர் கூற்று ஏதும் புரியாத ப்ரியாவும் அர்ஜுனும் விழிக்க அவர் "உங்கள் நாமம் என்ன ?"என்று வினவினார் ப்ரியாவும் அர்ஜுனும் தங்கள் பெயரைக் கூற 

அவரோ "இல்லை பிரியா அர்ஜுன் அல்ல ருத்ர மதி இந்திரஜித் "என்று கண்களில் ஒளியுடன் கூறினார். அதை கேட்டு மேலும் திகைத்தனர் இருவரும் .

அம்முதியவர் "நான் தங்களுக்கு கூற போவது மிகவும் பழமையான சரித்திரம்.அகிலத்தின் அதிசயங்களின் அதி அற்புத அதிசயம்...."என்று கூற துவங்கினார்.

இங்கே பலி பீடத்தில் அனைவரும் குழுமி இருக்க கார்த்திக் படை வீரர்களோடு சேர்ந்து நின்று கொண்டிருந்தான் .அங்கே ராணி சம்யுக்தா தன் தலை முதல் கால் வரை மறைக்கும் உடை அணிந்து வந்து பூஜையை துவங்கினால்.பூஜை ஆரம்பிக்கும் முன் அனைவரையும் கண்களை மூடி பிரார்த்தனை செய்யுமாறு கட்டளையிடப் பட்டது .

கார்த்திக் "கடவுளே நா உன்ன ரொம்ப இல்ல இல்ல நம்புனதே இல்ல ஆனா இப்போ முழு நம்பிக்கையோட ஒரே ஒரு பிரார்த்தனையை தான் முன் வைக்கிறேன் .அது என் பொண்டாட்டி எனக்கு திருப்பி கெடைக்கணும்ங்கறது தான்.நரக வேதனை அனுபவிக்கிறேன்.அவ இருக்குற இடத்தை காட்டுப்பா"என்று வேண்டினான் அவன் பிரார்த்தனை ஏற்கப் பட்டது போல் அங்கே காற்றும் வீசியது பின் தன் கண்ணை திறந்தவன் முன்னே நோக்க அவன் கண்ட கட்சியில் அப்படியே உறைந்து நின்றான்.

கார்த்திக் கண்ட காட்சி என்ன?

அம்முதியவர் கூறப் போவது தான் என்ன??

மர்மங்கள் அவிழ்க்கப் படுமா??  

stay tuned to know

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro