3

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இதுவரை: பிருத்வியை பின்தொடரும் பொழுது சிக்கும் ஸ்ரேயா, அவளை காக்கும் குணால்..

______________________________________

இனி,

ஸ்ரேயா: வா என் கூட

குணால்: எங்கே ஸ்ரேயா?

குணாலின் கை யை பிடித்து தர தர வென இழுத்துச் சென்ற ஸ்ரேயா, கடைசியில் ஒரு தள்ளுவண்டி கடை முன் நின்றாள்..

குணால்: என்னாச்சு ஸ்ரேயா? நடக்க முடியலியா?

ஸ்ரேயா: லூசு , இந்த கடைக்கு தான் உன்னை கூட்டிட்டு வந்திருக்கேன்.

குணால்: எதுக்கு?

ஸ்ரேயா: எனக்கு உதவி செய்யறவங்களுக்கு 2 செட் பானி பூரி வாங்கி தர்றது என்னோட பழக்கம்..அதான் உன்னை இங்க கூட்டிட்டு வந்திருக்கேன்..

குணால்: வித்தியாசமா இருக்கே இந்த பழக்கம்..ஒருவேளை அவங்களுக்கு பானி பூரி புடிக்கலனா?

ஸ்ரேயா: குல்ஃபி ஐஸ் வாங்கி தருவேன்.

குணால்: ஒருவேளை அவங்களுக்கு டான்சில்ஸ் இருந்தா?

ஸ்ரேயா: விஷம் வாங்கி தருவேன்..இப்ப எதுக்கு இப்படி துருவி துருவி கேள்வி கேக்கற குடுமி? குப்பு அண்ணா மூனு செட் பானி பூரி.

குணால்: எப்பா உன்கிட்ட உஷாரா தான் இருக்கனும் போல...சரி மூனு எதுக்கு நம்ம 2 பேர் தான இருக்கோம்?

அவன் மண்டையில் ஓங்கி கொட்டினாள் ஸ்ரேயா..

குப்பு: ஸ்ரேயா கண்ணு பாவம் வலிக்கப் போகுது.

குணால்: ம்ம்ம் வலிக்குது..எதுக்கு இப்ப கொட்டின ஸ்ரேயா?

ஸ்ரேயா: உன் கிட்ட இப்ப தான சொன்னேன்..உதவி செய்றவங்களுக்கு 2 செட் னு..உனக்கு மட்டும் வாங்கி குடுத்திட்டு நீ சாப்பிடறத நான் வேடிக்கை பார்க்கனுமா? மக்கு...

குணால்: ஓஓஓ சரி ஸ்ரேயா..அப்ப மூனு தான்.. :)

தட்டில் வைத்த பானி பூரியை, குணால் வாயருகே கொண்டு செல்வதற்குள் , புதினா தண்ணீரின் கனத்தால் பூரி உடைந்தது..

இது மூன்றாவது பானி பூரிக்கும் தொடர ஸ்ரேயா சிரித்தாள்..

ஸ்ரேயா: பானி பூரி யை இப்படி சாப்பிட கூடாது..இப்ப  என்னை பாரு..

குணால்:(மனதிற்குள்) இவ என்ன பண்ணப்போறா?!!

கடைக்காரர் தட்டில் பூரியை வைத்தவுடன் மசாலாவை மேலே வைத்து பானி பூரியை அந்தரத்தில் வீசிய ஸ்ரேயா , அலேக்காக அதை வாயில் கவ்வினாள்..

ஸ்ரேயா: பானி பூரி யை இப்படி சாப்பிடறது தான் என்னோட ஸ்டைல்..!

குணால்: பா... என்ன கேட்ச்..சூப்பர் ஸ்ரேயா... அண்ணா எனக்கு பூரி ல தண்ணி ஊத்தாம வெறும் மசாலா மட்டும் வைச்சு குடுங்க..

பானி பூரி சாப்பிட்ட பின் இருவரும் ஸ்ரேயா வண்டியை பார்க் செய்த இடம் நோக்கி நடக்க ஆரம்பித்தனர்..

ஸ்ரேயா: ஓய் பரட்டை..ஏதாச்சு பேசு..ஏன் எதுவுமே பேசாம வர?

குணால்: வீட்ல அம்மா அப்பா நல்லா இருக்காங்கலா?

ஸ்ரேயா: இல்லை அம்மாக்கு வைரல் இன்ஃபெக்ஷன்..நீ வந்து ஊசி போடறியா? பேச சொன்னா தில்லானா மோகனாம்பாள் மாதிரி நலம் விசாரிக்கற.. பேக்கு..

குணால்: இல்லை ஸ்ரேயா..வேற என்ன பேசறது னு தெரியல...!! நீ யே பேசேன்..!!!

ஸ்ரேயா: ஆமா நீ ரவீந்தரோட மகன் வர வரைக்கும் எங்க தங்க போற? உனக்கு இங்க வேற யாரையாச்சு தெரியுமா?

குணால்: இல்லை ஸ்ரேயா..எனக்கு இங்க அவரை விட்டா வேற யாரையும் தெரியாது..ஏதாச்சு லாட்ஜ் ல தான் தங்கப்போறேன்...

ஸ்ரேயா: அட லூசு..சென்னை ல இப்படி யாருமே தெரியாது னு சொல்லிட்டு லாட்ஜ்ல தங்க போறேன்னு சொல்ற...ஆளை பத்தாலே ஆட்டைய போடறதுக்கு ஏத்தவன் னு எழுதி வச்ச மாதிரி இருக்க.. என் பிரெண்ட் ரேஷ்மா வீட்ல மேல 1 Bhk வீடு இருக்கு..அதுல வாடகைக்கு இருந்தவங்க காலி பண்ணிட்டாங்க.. நீ இப்ப என்கூட வா..நான் அவ கிட்ட சொல்லி உன்னை அங்க தங்க வைக்கிறேன்..சரி யா?

குணால்: ரொம்ப நன்றி ஸ்ரேயா..நீ எனக்காக இவ்ளோ யோசிக்கிற... என்ன சொல்றதுனே தெரியல...

ஸ்ரேயா: எதுவும் சொல்ல வேணாம்..பிருத்வியை மாட்டிவிட உதவி பண்ணு... அதோ அங்க இருக்கு என் ஸ்கூட்டி..வா

குணால்: ஏய்ய் ஸ்ரேயா இரு.. அந்த பைக் போகட்டும்..

ஸ்ரேயா: அட குடுமி..இந்நேரம் ரோட cross பண்ணிருக்கலாம்..ஒரு டூவீலர் காக நிக்க வைச்சிட்ட...இப்ப வரிசையா வண்டி வருது பாரு..

குணால்: இல்லை ஸ்ரேயா..நீ ரொம்ப அசால்ட்டா இருக்க..எனக்கு பயமா இருந்துச்சி..அதான்..

ஸ்ரேயா: என்ன பயம்?

குணால்: அ...து...அது..சரி வா cross பண்ணிடலாம்...

இருவரும் சாலையை கடந்து ஸ்கூட்டி அருகே வந்தடைந்தனர்...

ஸ்ரேயா: ஏய் என்ன நீ முன்னாடி உட்கார்ற? உனக்கு வண்டி ஓட்ட தெரியுமா?

குணால்: என்ன கேள்வி கேட்டுட்ட ஸ்ரேயா என்னைப் பாத்து!!! எல்லா பைக்கும் ஓட்டுவேன்..

ஸ்ரேயா: சாரி உன்னை பாத்துட்டு சைக்கிள் கூட ஓட்டத் தெரியாது னு நினைச்சிட்டேன்!!

குணால் முறைத்தான்..

ஸ்ரேயா: சரி சரி முறைக்காம அங்க வண்டிய ஸ்டார்ட் பண்ணு..நிறைய வேலை இருக்கு..

குணால்: வழி சொல்லிட்டே வா ஸ்ரேயா..இல்லனா வேற எங்கேயாச்சு போயிடுவோம்..

ஸ்ரேயா: அட பிக்காளி..சரி சொல்றேன்...

ஸ்ரேயா வழி சொல்லிக்கொண்டே வந்து ஒரு ஹோட்டல் அருகே நிறுத்தச் சொன்னாள்..

குணால்: என்ன ஸ்ரேயா? ஹோட்டல் கிட்ட நிறுத்த சொல்லிட்ட?

ஸ்ரேயா: எனக்கு பசிக்குது.. அதான்..கேள்வி கேக்காம வா உள்ள
..

குணால்: (மனதிற்குள்) அடிப்பாவி...இப்ப தான பானி பூரி,குல்ஃபி சாப்பிட்டா..இவ சாப்பாட்டு சீதை யா இருப்பாளோ..

ஸ்ரேயா: ஏய்ய் குடுமி..சீக்கிரம் வா...

சர்வர் ஆர்டர் கேட்டு வர,

ஸ்ரேயா: ஒரு மசால் தோசை, இரண்டு சாம்பார் இட்லி, இரண்டு பரோட்டா, 4 மெதுவடை.

குணால்: (மனதிற்குள்) என்ன ஸ்ரேயா என்கிட்ட கேக்காமலே எனக்கும் ஆர்டர் பண்றா!!

ஸ்ரேயா: அவ்ளோதான்..அவர்கிட்டயும் ஆர்டர் வாங்கிக்கோங்க... குணால் உனக்கென்ன வேணும் னு சொல்லு..

குணால்: என்னது? இவ்ளோ நேரம் சொன்னதுலாம் உனக்கு மட்டுமா?

ஸ்ரேயா: ஆமா..கண்ணு வைக்காத...எனக்கு லைட்டா பசிக்குது..அதான் கொஞ்சமா சாப்பிடறேன்!! சீக்கிரம் உன் ஆர்டர சொல்லு பரட்டை..

குணால்:(மனதிற்குள்) ஸ்ரேயாவோட வருங்கால பருஷன் பாவம்! அண்ணா எனக்கு 2 ருமாலி ரொட்டி..

ஸ்ரேயா: அண்ணா பில் போட்டுடாதீங்க..நான் இத சாப்பிட்டுட்டு அப்புறம் என்ன வேணும்னு சொல்றேன்..

குணால் அதிர்ந்து பார்த்தான்...

ஸ்ரேயா அவனை பார்த்து கண்ணடித்தாள்..😉

குணால் ரொட்டியை சாப்பிட எதிரே ஸ்ரேயா தோசை,இட்லி , வடை என வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தாள்..

குணாலுக்கு புரை ஏற , இருமினான்..

ஸ்ரேயா உடனே டம்ளரில் தண்ணீர் ஊற்றி அவனிடம் கொடுக்க குடித்தான்..

பின் குணாலின் தலையில் ஸ்ரேயா தட்டினாள்..

அந்த செயலில் ஸ்ரேயாவுக்கு குணால் மேல் இதயத்தின் ஏதோ ஒரு ஓரத்தில் அன்பு இருப்பதை போல் உணர்ந்தாள் ஸ்ரேயா.

ஸ்ரேயா: பில் எவ்ளோ ஆச்சு?

சர்வர்:789 ரூபா..

ஸ்ரேயா: இந்தாங்க..

ஸ்ரேயாவின் கைகளை இறுக்கமாக பற்றிய குணால்,

குணால்: நான் தான் தருவேன் ஸ்ரேயா..

என பில்லை கட்டினான்..

பின் இருவரும் புறப்பட்டனர்..!

ரேஷ்மா தந்தை: ஏன் மா ஸ்ரேயா..யார் இந்த தம்பி?

ஸ்ரேயா: இவர் பேர் குணால்... ஒரு வேலை யா பஞ்சாப் ல இருந்து இங்க வந்திருக்கார்..சந்தர்ப்ப சூழ்நிலையால இவரால உடனே பஞ்சாப் திரும்ப முடியல.. இங்க யாரையும் தெரியாதாம் அங்கிள்..பாவம்..நீங்க தான் மேல இருக்கிற portion ல இவரை தங்க வைக்க அனுமதிக்கனும்..

ரேஷ்மா தந்தை: அதுக்கென்ன மா..தாராளமா தங்க வைச்சிடுவோம்.. பார்த்தா விவரம் தெரியாத பையன் மாதிரி தான் இருக்கு..

குணால்:(மனதிற்குள்) இவங்க என்ன பேசிக்கிறாங்க? ஏதோ என்னைப் பத்தி தான் பேசறாங்கனு புரியுது...ஹ்ம்ம்ம்...!!!

ஸ்ரேயா: சரி அங்கிள்..நான் இவரை மேல கூட்டிட்டு போறேன்.. இந்தாங்க அட்வான்ஸ்..வாடகை நாளைக்கு குடுத்துடுவாரு..

ரேஷ்மா தந்தை: ஓகே மா..நோ பிராப்ளம்..

ஸ்ரேயா குணாலை மேலே அழைத்துச் சென்றாள்..

ஸ்ரேயா: இந்த தம்மு, பீர் அடிக்கிற பழக்கம் இருக்கா?

குணால்: இல்லை ஸ்ரேயா!!! நான் அப்படிப்பட்ட பையன் இல்லை!!! ஏன் இப்படி கேக்கற..

ஸ்ரேயா: உன்னை பாத்தாலே தெரியுது..ஆனால் இருந்தாலும் ஒரு தடவை உறுதி படுத்திக்கலாம்னு தான்.... அங்கிள் க்கு அதெல்லாம் சுத்தமா பிடிக்காது..அதான் கேட்டேன்..

குணால்: வீடு சூப்பரா இருக்கு ஸ்ரேயா..ரொம்ப நன்றி..எனக்கு நீ நிறைய உதவி பண்ணிட்டே இருக்க...நான் பதிலுக்கு...

ஸ்ரேயா: ஆஆஆஆஆஆ

தீடிரென்று குணாலிடம் ஓடி வந்த ஸ்ரேயா, குணாலின் பின்னால் செனறு ஒளிந்து கொண்டாள்..

குணால்: என்னாச்சு? ஸ்ரேயா என்னாச்சு?

ஸ்ரேயா: அங்கே பாரு

சுவற்றில் இருநத சிறிய கரப்பானை காட்டினாள் ஸ்ரேயா..

குணால்: ஹாஹாஹாஹா.. ஏன் ஸ்ரேயா ஒரு கரப்பான் பூச்சிக்கா இப்படி கத்தின?

ஸ்ரேயா: பல் இளிக்காம அதை வெளியே துரத்து..

குணால் சிரித்துக்கொண்டே கரப்பானை வெளியேற்றினான்..😂

ஸ்ரேயா: குணால் இப்ப தூங்கு..நாளைக்கு காலைல குளிச்சிட்டு ரெடியா இரு..நமக்கு நாளைக்கு நிறைய வேல இருக்கு..நீ தான் உதவி பண்ணணும்..

குணால்: சரி ஸ்ரேயா.. குட் நைட்..

ஸ்ரேயா: குட் நைட்..

ஸ்ரேயா அவள் வீட்டில் படுக்கையில் உறக்கமில்லாமல் படுத்திருந்தாள்...

குணாலிற்கும் அதே நிலை தான் என நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை☺

குணால்:   உன்னுடைய சிறு சிறு செயல்களில் வெளிப்படுவது காதலா அன்பா ?

குழப்பத்தில் தவிக்கிறேன் நான்.

ஸ்ரேயா: உன்னை விதவிதமான பெயர் சொல்லி அழைப்பதில் எண்ணற்ற மகிழ்ச்சி அடைகிறேன்..

சில மணி நேரங்கள் முன்பே நீ எனக்கு அறிமுகமானாய்..

ஆனால் உன்னை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டுகிறது என் உள்ளம்.

இது காதலா? இது காதலா? இது காதலா?

அடுத்த பகுதியில் சந்திப்போம் வாசகர்களே😊☺ ஆதரவிற்கு நன்றி😊☺

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro