2

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இதுவரை: ஸ்ரேயா ரேஷ்மா-பிருத்வி திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த வேளையில், ரேஷ்மா பிருத்வி ஒரு பொருக்கி என ஸ்ரேயாவிடம் கூற, தன் நீண்ட நாள் தோழியை காக்க கல்யாணத்தை நிறுத்த முடிவெடுக்கிறாள்..😊தாத்தாவின் அஸ்தியை குணால் சிந்தாதிரிப்பேட்டை ஆற்றில் கரைக்கும் வேளையில், குணாலின் அனைத்து உடைமைகளையும் ஒரு சிறுவன் திருடிச் செல்கிறான்...அவனை அடித்து குணாலின் உடைமைகளை மீட்டுத் தருகிறாள் ஸ்ரேயா..

                          __________

இனி,

ஸ்ரேயா: என்ன பீலிங்கஸா?

குணால்: ம்ம்ம்..

ஸ்ரேயா: முதல்ல மேலாடையை போடு.. :( அப்புறம் பீல் பண்லாம்..

குணால் வெட்கத்துடன் சட்டை யை போட்டான்..

ஸ்ரேயா: சரி நீ எங்க போகனும்?

குணால்: தாத்தா வோட அஸ்தியை இந்த ஆற்றில் கரைக்க தான் வந்தேன்..

ஸ்ரேயா: அப்ப கிளம்பறியா!!!! :(

குணால்:(மனதிற்குள்) ஏன் சோகமா கேக்கறா? ஒருவேளை நான் கிளம்பறேன்னு நினைச்சு பீல் பண்றாளோ?

ஸ்ரேயா: ஏய் பரட்டை!! கேக்கறேன் ல?

குணால்: ஹான் இல்லை.. தாத்தா இங்க ஒரு ஐவாளக்கடை வைச்சிருந்தாரு... அவரு கடைசி காலத்துல பஞ்சாப் வர்றதுக்கு மென்னாடி அவரோட பிரெண்ட் ரவீந்தர் சிங் கிட்ட கடை பருப்பை குடுத்திட்டு போனார்..ரவீந்தர் சிங் கும் கொஞ்ச நாள்ல இறந்துட்டார்..இப்ப அந்த ஐவாளிக்கடை யை ரவீந்தரோட மகனுக்கு விக்க போறோம்..அதனால நான் அவரை பாக்க போகனும்...

ஸ்ரேயா: ஷப்பா எப்படியோ புரியற மாதிரி பேசிட்ட..! அது ஐவுளிக்கடை, பருப்பு னா சாம்பார்ல போடறது, " பொறுப்பு" னு சொல்லனும்! சரி நீ கடையை வித்துட்டு கிளம்ப போற.. உனக்கு நான் ஏன் டியூஷன் எடுக்கனும்!!!

குணால்: ஸ்ரேயா ஒரு வதவி..

ஸ்ரேயா: என்னது? புரியல!!

குணால்: எனக்கு ஒரு ஹெல்ப்..

ஸ்ரேயா: அப்படி இங்கீலீஷ் லயே சரியா சொல்லு...என்ன பண்ணணும் சொல்லு...நான் சீக்கிரம் போகனும்..

குணால்: சிக்கந்தர் ஸ்ட்ரீட் ல தான் ரவீந்தரோட வீடு..என்னை அங்க டிராப் பண்ண முடியுமா? ! உங்களால முடிஞ்சா...இல்லேனா நோ பிராப்ளம்..

ஸ்ரேயா: இந்த ஸ்ரேயா கிட்ட உதவி னு கேட்டவங்க யாரையும் கைவிட்டதில்லை...குடுமி உன்னை மட்டும்  கைவிட்ருவேனா.!!.வா நான் போற வழி தான் அது...

குணால்: நான் வேணா ஓட்டவா ?

ஸ்ரேயா: உனக்கு வழி தெரியுமா?! 😏

குணால் திரு திரு வென முழித்தான்..

ஸ்ரேயா: பேசாம ஏறி உட்காரு..கடுப்பேத்தக்கூடாது..

வண்டயை செலுத்தினாள் ஸ்ரேயா...

சிக்னலுக்கு முன் இருந்த வேகத்தடையை சரியாக கவனிக்கவில்லை ஸ்ரேயா...

வேகத்தடையின் மேல் வேகமாக ஏறியதால் வண்டி குலுங்க , குணால் ஸ்ரேயா வின்  தோளில் கை வைத்தான்..

ஸ்ரேயா கண்ணாடி யில் அவனை பார்க்க, அவனும்

குணால்: சாரி ங்க....ஸ்பீட் பிரேக்...

ஸ்ரேயா: நீங்க, வாங்க , போங்க லாம் வேணாம்..ஸ்ரேயா னு கூப்பிடு.. அப்புறம், தோள்ல தான கைவச்ச..தப்பில்லை..இடுப்பு ல கை வைச்சிருந்தா அறைந்திருப்பேன்..

குணால்: சரி ஸ்ரேயா...இங்க தான் இங்க தான்..

ஸ்ரேயா: இதுதான் உங்க ஜவுளிக்கடை யா?

குணால்: ஆமாம் ஸ்ரேயா..அதுக்கு பக்கத்தைலயே இருக்க வீடுதான் ரவீந்தரோட வீடு...சரி ஸ்ரேயா ரம்ப நன்றி..

ஸ்ரேயா: ஹ்ம்ம்ம்!!! கடையை வித்துட்டா கிளம்பிடுவியா?

குணால்: ஆமாம் ஸ்ரேயா...இன்னும் ரெண்டு நாள்ல கிளம்பிடுவேன்... :)

ஸ்ரேயா: சரி!!!! பாத்து பத்திரமா போய்ட்டு வா... நான் கிளம்பறேன்... bye

குணால்: bye ஸ்ரேயா  :)

ஸ்ரேயா வண்டியில் செல்லும் பொழுது, குணாலி
ன் நினைவுகள் மீண்டும் மீண்டும் அவள் மனதில் நிழலாக வந்து வந்து சென்றது..

ஸ்ரேயா:(மனதிற்குள்) அவன் தப்பு தப்பா தமிழ் பேசினாலும் அது அழகா இருந்துச்சி! ரொம்ப அமைதியான பையனா இருக்கானே....!!! ஹ்ம்ம்ம் கட்டிக்க போறவ குடுத்து வைச்சவ!!! சரி நம்ம எதுக்காக வந்தோம்?🤔 ஹ்ம்ம் அந்த பிருத்வியை ஃபாலோ பண்ணனும்!!!

அப்போது ஸ்ரேயாவுக்கு மொபைலில் அழைப்பு வந்தது.. வேறு யாருமல்ல அவள் அக்கா சிந்து தான்..

ஸ்ரேயா: சொல்லு அக்கா..என்னாச்சு?

சிந்து: ஏன்டி இண்டர்வியூக்கு னு ஒரு பொண்ணு வந்திருக்குடி..

ஸ்ரேயா: அந்த பொண்ணுக்கு கண
ணு தெரியாதா? நான் "men's only" னு தான போஸ்டர்ல போட சொல்லிருந்தேன்...

சிந்து: அப்படியா? சரி நான் சொல்லி அனுப்பிடறேன் டி...சீக்கிரம் வேலை யை முடிச்சிட்டு வீட்டுக்கு வா...

ஸ்ரேயா: ஹ்ம்ம் சரி அக்கா...பை

சிந்து ஃபோனை கட் பண்ணினாள்...

ஸ்ரேயா எதேச்சையாக சாலையில் பார்க்கும் பொழுது பிருத்வி நடந்து செல்வதை கண்டாள்...

ஸ்ரேயா:(மனதிற்குள்) ஆஹா ஆடு தானா வந்து சிக்கிடுச்சு... இன்னிக்கு இவன ஃபாலோ பண்ணி ஆதாரத்தை சேகரிக்கனும்... முகத்தை துணியால மூடிப்போம்...

பிருத்வியை மெதுவாக பின் தொடர்ந்தாள் ஸ்ரேயா...

2 கிமீ தூரம் பின்தொடர்ந்திருப்பாள்...

ஸ்ரேயா:(மனதிற்குள்) சனியன் பிடிச்சவன்...இவனுக்கு தான் பத்து கார் இருக்கே...2கிமீ தூரம் நடந்து வந்து என்னையும் நடக்க வைக்கிறானே தொடப்பக்கட்டை!!! போய் வண்டை வண்டை யா கேட்கனும் னு தோணுது....இவனால என் ஸ்கூட்டியை வேற நான் அங்கேயே பார்க் பண்ணிட்டு வந்துட்டேன்...அப்பாடா இதுதான் அவன் வரவேண்டிய இடம் போல...

ஸ்ரேயா: அடப்பாவி இந்த லாட்ஜ் க்கு அவனோட கார்ல வந்தா யாராச்சு கண்டு பிடிச்சுடுவாங்கனு தான் நடந்து வந்திருக்கான்.. இவன் பெரிய கேடி தான்... ஆனால் நான் விட்ருவேனா.... இதோ வரேன்டி மாப்பு..

பிருத்வி உள்ளே செல்ல, ஸ்ரேயா ரிசப்ஷனுக்கு சென்றாள்... அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள், பிருத்வி வரவேற்பு புத்தகத்தில் கையெழுத்திட்டான்...

பின்பு செல்லும் பொழுது ஸ்ரேயாவை ஒருமாதிரி பார்த்தான்... ஸ்ரேயாவுக்கு நெஞ்சம் படபடத்தது...

பிருத்வி:(மனதிற்குள்) யார் இவ... முகத்த மூடியிருக்கா... ஒரு வேளை செம்ம __கரா இருந்தா மிஸ் பண்ணிடுவோமே...!! கிட்ட போய் துணியை எடுத்து பார்த்துட வேண்டியது தான்..இங்க தான் யாருமே இல்லையே...😈

பிருத்வி ஸ்ரேயாவை நெருங்கினான்..

ஸ்ரேயா: (குரலை மாற்றி) ஹலோ மிஸ்டர் என்ன?

பிருத்வி: யார் நீ? ஏன் முகத்த மூடியிருக்க?

ஸ்ரேயா: அத நான் ஏன் உங்க கிட்ட சொல்லனும்..நீங்க என்ன வாட்ச்மேனா..உங்க வேலை யை பாத்துட்டு போங்க...
mind your own business and get out of my way

பிருத்வி மீண்டும் அருகே வர ஆரம்பிக்க ஸ்ரேயா என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தாள்...

மற்றொரு பெண்: பிருத்வி வந்துட்டியா? ரூம்க்கு வராம இங்க என்ன பண்ற வா...

என அவன் கையை பிடித்து இழுத்துச்செல்ல, பிருத்வி ஸ்ரேயாவை முறைத்துக்கொண்டு மீசைமுறுக்கிச் சென்றான்...

ஸ்ரேயா:(மனதிற்குள்) கடவுளே நல்ல வேளை அந்த பொறுக்கி கிட்ட இருந்து தப்பிச்சேன்..இந்த reception entry ல அவன
கையெழுத்து போட்டான்ல.. அத ஃபோட்டோ எடுத்துப்போம்.. என்ன இங்க அந்த பொண்ணு பேர் இருக்கு!! இப்ப என்ன பண்ணலாம்? ஜடியா ரேஷ்மாவோட அப்பாவ இந்த தெருவிற்கு வர வைச்சிட்டா இவன் சிக்கிடுவான்..

ரேஷ்மாவின் அப்பாவிற்கு அழைத்தாள்.

ரேஷ்மா தந்தை: ஸ்ரேயா சொல்லு மா..மேகப் லாம் சூப்ரா பண்ணிட்ட...நன்றி மா..

ஸ்ரேயா: இருக்கட்டும் அங்கிள் நீங்க இப்ப எங்க இருக்கீங்க?

ரேஷ்மா அப்பா: நானும் ஆண்ட்டியும் காஞ்சிபுரம் போயிட்டிருக்கோம்..ஏன் மா?

ஸ்ரேயா:(மனதிற்குள்) ஜய்ய்ய்யோ!!! தப்பிச்சிட்டானே!!!

ரேஷ்மா அப்பா: அம்மா ஸ்ரேயா லைன்ல தான இருக்க?

ஸ்ரேயா: ஒன்னுமில்லை அங்கிள்...சும்மா தான் கேட்டேன்...பை

ஃபோனை வைத்தாள் ஸ்ரேயா...

அப்பொழுது தான் அவளுக்கு ஒரு யோசனை தோண்றியது..

ஸ்ரேயா:(மனதிற்குள்) நம்ம அந்த reception entry ல பாக்க குள்ள, அந்த பொண்ணு பேர் இருந்துச்சி..ஒருவேளை இதுக்கு முன்னாடி இவன் வந்து இங்க ரூம் புக் பண்ணக்குள்ள ஏதாச்சு proof குடுத்திருக்கனும்... ஏன் னா இப்பலாம் நிறைய லாட்ஜ் ல id proof scan பண்ணாம ரூம் குடுக்கறதில்லை... இந்த கம்ப்யூட்டர் ல பாப்போம்.. password போடாம இருந்தா நல்லா இருக்கும்..

அவள் நல்ல நேரம் கடவுச்சொல் எதுவும் இல்லை அந்த கணிணியில்..

உள்ளே documents இல் பார்த்தாள்...அதில் மொத்தமே 40 ஜடி புரூப்களே இருந்தன..

ஸ்ரேயா:(கடவுளே) 38 பாத்துட்டேன்... இன்னும் 2 தான் இருக்கு.. அவன் இதுலயும் மாட்ட மாட்டானோ!!! இல்லை மாட்டிட்டான்... அவனோட voter id ...

அந்த photo வின் properties இல் அவள் சென்று பார்க்க தேதி ஒரு வாரத்திற்கு முன்..

ஸ்ரேயா:( மனதிற்குள்) date இருக்கு...இதையும் ஃபோட்டோ எடுத்தாச்சு..ஆனால் இது பத்தாதே... ஹ்ம்ம்🤔

சுற்றும் முற்றும் பார்த்தவள் சிசிடிவி யை கண்டு கொண்டாள்...

ஸ்ரேயா:(மனதிற்குள்) சூப்பர்... cctv இருக்கே..இத விட வேற என்ன வேணும்... ஒரு வாரத்துக்கு முன்னாடி தான வந்திருக்கான்..கண்டிப்பா footage ல இருக்கும்...ஒரு வாரத்திற்கு முன்னாடி இருக்க footage மட்டும் நம்
ம மொபைல்ல copy பண்ணிப்போம்...

Footage ஜ அவள் மொபைலில் copy செய்து கொண்டாள்..

ஸ்ரேயா பின்னர் தற்போதைய footage ஜ கணிணியில் இருந்து அழித்து விட்டாள்... அவள் சிக்காமல் இருப்பதற்காக..

ஸ்ரேயா:(மனதிற்குள்) அப்பாடா எப்படியோ ரெண்டு ஆதாரம் கிடைச்சிடுச்சு... இன்னும் வேற ஏதாச்சு வலுவான ஆதாரம் கிடைச்சிட்டா அந்த பொறுக்கியை ஜெயிலுக்கு அனுப்பிடலாம்...

வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்த ஸ்ரேயாவின் தோளில் யாரோ கை வைக்க, அவள் திரும்பி பார்த்தாள்..

அது பிருத்வி தான்..

ஸ்ரேயா: என்னை விடு...

ஸ்ரேயாவின் இரு தோள்களையும் பிடித்து அவளை சுவற்றுக்கு அருகில் வைத்து தன் இரு கைகளால
தடுத்தான்...

ஆனால் ஸ்ரேயா தன் வலிமையால் அவனை வேகமாக தள்ளி விட்டாள்...

அவன் தடுமாறி கீழே விழ ஸ்ரேயா ஓடினாள்..

பிருத்வியும் துரத்தினான்..

அது ஆள் அரவமற்ற தெருக்கள்... கேட்பார் யாருமில்லை..

பிருத்வி: ஏயய் இன்னிக்கு உன்னை சும்மா விடமாடடேன்டி..என் கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது...

அவன் கத்திக் கொண்டே துரத்த, ஸ்ரேயாவுக்கு பயத்தில் கண்ணீர் வர துவங்கியது..!!!

ஆனாலும் சளைக்காமல் வேகமாக ஓடினாள்...

எப்படியோ 1.5 கிமீ சிக்காமல் ஓடி, ஆள் அரவமுள்ள தெருவிற்கு வந்தாள்...

அவனும் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்..

ஸ்ரேயா:(மனதிற்குள்) கடவுளே விடாம துரத்தறானே!!!! என்னை காப்பாத்து...

திடீரென ஓடிக்கொண்டிருந்த ஸ்ரேயாவை இடப்புறத்தில் இருந்த சந்திற்கு இழுத்து ஒரு கை அவள் வாயை மூடியது...

ஸ்ரேயா:ம்ம்ம்ம் .... ம்ம்ம்..

அந்த கை யிற்குரிய முகத்தை பார்த்த பின்னர் தான் ஸ்ரேயாவிற்கு மூச்சே வந்தது..

குணால்: ஸ்ரேயா நான் தான்... பயப்படாத.. அவன் போகட்டும்.. wait

ஸ்ரேயா கண்ணீருடன் குணாலை கட்டிக்கொண்டாள்....

இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை குணால்..❤

குணால்: ஸ்ரேயா அழாத...இங்க பாரு..அவன் போய்டடான் ஒன்னமில்லை...

ஸ்ரேயா நிலைக்கு வந்தாள்.. சட்டென்று விலகினாள்...

ஸ்ரேயா: ரொம்ப நன்றி குணால்..அந்த பொறுக்கி கிட்ட இருந்து என்னை காப்பாதுனதுக்கு...

குணால்: பரவாயில்லை ஸ்ரேயா..யார் அவன்...எதுக்கு உன்னை துரத்துறான்..?

தான் ஒரு திருமண திட்டமிடும் மையம் ஒன்றை நடத்துவதையும், ரேஷ்மா-பிருத்வி பற்றியும் அனைத்தையும் கூறினாள் ஸ்ரேயா...

குணால்: நான் உனக்கு help பண்றேன்..

ஸ்ரேயா: அட போ டா..நீ தான் 2 நாள்ல கிளம்பிடுவியே..

குணால்: இல்லை ஸ்ரேயா.. ரவீந்தரோட மகன் துபாய் போயிருக்கார்..அவர் வர இன்னும் ஒரு மாசம் ஆகும்...அதுவரை நான் இங்க தான் இருக்க போறேன்..

ஸ்ரேயா: ஜஜஜ நிஜமா வா...சரி சரி

குணால்:(மனதிற்குள்) நான் இங்க இருக்க 1 மாசம் இருக்க போறேன் னு சொனனதுக்கு இவ்ளோ சந்தோஷப்படறா.... ஹ்ம்மம் மனசுல என்ன நினைக்கறாளோ!!!!!

ஸ்ரேயா: வா என் கூட....

குணால்: எங்க ஸ்ரேயா?

______________________________________

அடுத்த பகுதியில் சந்திப்போம்.. 😊

ஒவ்வொரு chapter ம் எப்படி இருக்கு உங்களுக்கு பிடிச்சிருக்கா னு கமெண்ட்ல சொல்லுங்க...பிடிக்கலனா storyline மாத்தலாம்😊☺தயவு செய்து கருத்துகளை பதிவிடுங்க...

நன்றி...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro