16. Flashback

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

சிந்து நேற்று மாலை மற்றும் காலை நடந்தவற்றை கூறிவிட்டு அதனால் தான் தனது முகத்தில் மலர்ச்சி உள்ளது என்று மீனாவிற்கு உண்மையை மறைத்து கூறினால் சிந்து....

மீனா சிந்துவின் அருகினில் வந்து அமர்ந்து கொண்டால் அவளது அருகில் நவீனும் அமர்ந்து கொண்டான்....

சிந்து நவீன் மீனா ஆகிய மூவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அவர்கள் பேச்சுக்கு இடையில் சிந்து அர்ஜுனை ஓர விழி பார்வையில் பார்த்து கொண்டு இருந்தால்...

அர்ஜுன் ஆரம்பத்தில் சிந்துவை வைதக்கண் எடுக்காமல் பார்த்து கொண்டு இருந்தான் இதை மீனா அறியாதவண்ணம் பார்த்து கொண்டான்....

அர்ஜுன் சிந்து இவர்கள் இருவரும் கண்களாலே தங்களது வார்த்தைகளை பரிமாறிக்கொண்டும், உணர்வுகளை கண்களால் வெளிப்படுத்திக்கொண்டும் இருந்தார்கள்...

அவர்கள் பேசிக்கொண்டு இருக்கையில் யாரோ தங்களை பார்ப்பது போல அர்ஜுன் உணர்ந்தான்... தன்னை சுற்றிலும் விழிகளை சுழல விட்டான்... ஆனால் எவரும் தென்படவில்லை...

மீண்டும் சிந்துவை பார்த்துக்கொண்டும் மீனாவை வார்த்தைகளால் கிண்டல் செய்து சீண்டிக்கொண்டும் இருந்தான்...

இவர்களை பார்த்த அந்த ஒரு ஜோடி கண்கள் ஆனது ஒரு சில யோசனையில் தனது வீட்டை நோக்கி சென்று விட்டது... வீட்டிற்கு சென்ற அந்த ஒருவர் ஒரு சில யோசனைக்கு பின்பு தனது வேலைகளை தொடர்ந்தது....

ஷங்கர் ரொம்ப தாமதமாக அங்கு வந்து சேர்ந்தான்... அவனிடமும் சிறிது நேரம் பேசிவிட்டு இனி பள்ளியில் போட்டிகள் முடியும் வரை மாலையில் பயிற்சி செய்யலாம் என்று அன்று மாலை முடிவெடுத்தனர்... பின் நவீன் தான் வீட்டிற்கு செல்வதாக சொல்லிவிட்டு சென்று விட்டான்...

ஷங்கர் மற்றும் மீனா இருவரும் பார்க்கில் உள்ளே சென்று பேசிக்கொண்டே நடந்தார்கள்... அவர்களை தொடர்ந்து அர்ஜுன் சிந்து ஆகியோரும் எழுந்து அவர்கள் பின்னே சிறிது இடைவெளி விட்டு நடக்க ஆரம்பித்தார்கள்.... 

அவர்கள் பேசிக்கொண்டது

ஷங்கர்: "அப்புறம் மீனா school la annual day work lam எப்படி போயிட்டு இருக்கு practice லாம் எப்போ முடியுது... நீ கலந்துக்க போற போட்டி எப்போ....

மீனா: "வர Saturday தான் டா நான் கலந்துக்க போற போட்டி இருக்கு... இன்னும் பாதி practice கூட எடுத்துக்களை..."

ஷங்கர்: "சரி சரி நாளைக்கு பாத்துக்கலாம், அதான் நாளைக்கு நாம practice பண்ண போறோமே அப்புறம் ஏன் பயப்படுற..."

மீனா: "அட ஆமாம் நாளைக்கு வரையும் நேரம் இருக்குல்ல... நல்லவேளையா அத சொன்ன இல்லனா நான் சரியா practice பண்ண முடியலையேன்னு tension ஆகி இருப்பேன்"

ஷங்கர்: சிரித்துக்கொண்டே "ஹாஹாஹா நீ ஒரு லூசு னு அடிக்கடி நிரூபிச்சுட்டே இருக்க மீனா"

மீனா: "ஏண்டா இப்படி சொல்ற"

ஷங்கர்: "கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி தான நான் சொன்னேன் நாளைக்கு practice பண்ணலாம்னு... அதுக்குள்ளே மறந்து போய்ட்டு இப்படி பயந்த வேற என்ன சொல்ல"

மீனா அப்போது கண்கள் வெளிவந்துவிடுவது போல முறைத்தாள்... அதை பார்த்த ஷங்கர் நாம உண்மையா தான சொன்னோம் அதுக்கு ஏன் இப்படி கண்ணு வெளில வர அளவுக்கு பாக்குற.... அப்புறம் யோசித்தவன்.... அய்யயோ இவளுக்கு நான் மட்டும் கிண்டல் பண்ண பிடிக்காதுல மறந்து போய் கிண்டல் பண்ணிட்டனே.... என 2 அடி பின்னே நரகர்ந்தான்... 2 அடி பின்னே நகர்ந்தவன் Sorry கேட்டுடுவோம் இல்ல பத்ரகாளி ஆகிடுவா....

ஷங்கர்: "சரி சரி சூரி மீனா...."

மீனா: "என்ன" என்று மீண்டும் முறைத்தாள்....

ஷங்கர் மனதில்: "அய்யயோ இவள் கிட்ட பேசும் பொது மட்டும் ஏன் இவ்ளோ கலாய்க்க வருது... " பின்பு

ஷங்கர்: "Sorry மீனா Sorry சொல்றதுக்கு பதிலா சூரி னு சொல்லிட்டேன் Sorry da" என்றதும்

மீனா கோவம் விலகி சிறிது இதழ் ஓரத்திலே புன்னகைத்தாள்...

ஷங்கர் மனதில்: "அப்பாடா சாமி மலை ஏறிடுச்சு" என்று நினைத்து விட்டு

ஷங்கர்: "விளையாட்டுக்கு தாண்டா அப்படி சொன்னேன், எப்போ பாரு tension ஆகிட்டே இரு" என்று கூற....

மீனா மனதில்: "யார் என்ன கிண்டல் பண்ணாலும் எனக்கு ஒன்னும் தோணுறது இல்ல ஷங்கர், நீ மட்டும் என்ன கிண்டல் பண்ண அவ்ளோ கோவம் வருது... இன்னொருதடவ கிண்டல் பண்ணு அப்புறம் இருக்கு உனக்கு" என்று நினைத்து கொண்டு

மீனா: "என்ன கிண்டல் பண்ணாதனு எவ்ளோ தடவை சொல்லி இருக்கேன் கேக்கவே மாட்டியா நீ..." என்று அருகில் இருந்த குச்சியை எடுத்து கொண்டு துரத்த ஆரம்பித்தாள்"

இப்போ இவர்களுடைய flashback பாக்கலாம்....

ஷங்கர் மற்றும் மீனா இருவரும் சிறு வயது முதலே ஒரே தெருவில் ஒன்றாக வசிப்பவர்கள். ஷங்கரின் அப்பாவும் மீனாவின் அப்பாவும் அரசாங்க வேளையில் இருப்பவர்கள் ஆனால் வேறு வேறு துறையில் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் அத்தெருவில் ஒரு நிகழ்ச்சியின் போது அறிமுகம் செய்து கொண்டு நண்பர்கள் ஆனார்கள்....

அவர்கள் நண்பர்கள் ஆனா சமயத்தில் ஷங்கர் மற்றும் மீனாவின் வயது 9 மற்றும் 8 ஆகும்.. அதன் பிறகு இருவர் வீட்டாரும் மற்றொருவர் வீட்டிற்கு செல்வது வழக்கம் ஆனது. இவர்கள் மட்டும் அல்லது இவர்களது வீட்டு பெண்களும் அவ்வாறு தான் இருந்தார்கள்....

ஆரம்ப காலத்தில் மீனா மற்றும் ஷங்கர் இருவரும் ஒருவரை கண்டு ஒருவர் பேசிக்கொள்ள மாட்டார்கள். அது அவர்களின் குணம் அல்ல. ஆனால் இருவரும் பேசிக்கொள்ள மாட்டார்கள்.. மற்ற நண்பர்களிடம் நன்றாக பேசிக்கொண்டும் விளையாடி கொண்டும் இருப்பார்கள்...

இவர்களுடைய பெற்றோரும் அவர்கள் வீட்டிற்கு செல்லும் போது பேச சொல்லியதும் உண்டு. ஆனால் ஏனோ அந்த பிஞ்சு வயதில் எதுவும் தெரியாமல் இருந்ததாலும் ஏதோ ஒரு உணர்வு அவர்களை தடுத்து கொண்டே இருந்தது....

இது நாட்களாக கடந்து, மாதங்கள் ஆகி பின் சில வருடங்களும் ஆகி விட்டது. ஆனால் இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வார்களே தவிர பேசிக்கொண்டது இல்லை. ஏன் சிரிப்பை கூட ஒருவரை ஒருவர் பார்த்து செய்துகொண்டது இல்லை....

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் பண்டிகை கொண்டாட அவர்களது தெரு மற்றும் அருகில் உள்ளவர்களும் ஒன்றாக ஒரே இடத்தில் (அதாவது இப்போ இருக்கும் மைதானத்தில்) பொங்கல் வைத்து கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தார்கள்.....

அங்கு குழந்தைகள் அனைவரும் (இவர்கள் வயதுடையோர் மற்றும் சிறியோர்களும் மீனா மற்றும் ஷங்கர் சொந்தங்களும்) ஆண் பெண் குழுக்களாக பிரிந்தார்கள்...

ஷங்கர் உறவினரின் பெண்ணான வனிதாவும் பெண்களின் குழுவில் இருந்தால்... (வனிதா பத்தி போக போக சொல்றேன்)...

பெண் குழந்தைகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ரேடியோவில் பாடும் பாட்டிற்கு நடனம் ஆடிக்கொண்டும் ஒருவர் கையை மற்றவர் கோர்த்து கொண்டு வட்டமாக சுற்றியும் ரயில் வண்டி போன்றும் பெண்கள் விளையாடி கொண்டு இருந்தார்கள்...

ஆண் குழந்தைகள் அனைவரும் அங்கு உள்ள இளவட்டங்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்தி கொண்டு விளையாடிக்கொண்டு இருந்தார்கள். பின் பொங்கல் வைத்த பின்பு அனைவரும் ஒரே இடத்தில் கூடி தங்களது தெய்வங்களையும் பஞ்சபூதங்களையும் வேண்டிக்கொண்டார்கள்.... (அப்போது எல்லாம் மனிதர்களிடம் அன்பும் அக்கறை மனிதாபிமானம் எல்லாம் இருந்து, ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்தார்கள்....)

அனைவருக்கும் பொங்கல் மற்றும் தின்பண்டங்கள் (ஒருஒருவர் வீட்டில் இருந்தும் எடுத்துவரப்பட்டு பலகாரங்கள்) பரிமாறப்பட்டு சாப்பிட ஆரம்பித்தார்கள்... மக்கள் அனைவரும் ஒரே இடத்தில ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்து கொண்டும் இருந்தார்கள் 

(தங்களது சந்தோசங்களை பரிமாறிக்கொள்ளவும் மகிழ்ச்சியுடன் இருக்கவே மனிதன் பண்டிகை என்ற ஒன்றை ஏற்படுத்தினானோ என்னவோ அப்படி ஒரு சந்தோசம் அங்கு நிரம்பி இருந்தது... ஆடம்பரம் இல்லாத பண்டிகையே என்றும் சந்தோசத்தை தரும்... அவ்வாறே சந்தோசமாக இருந்தார்கள்...

பின் 1 மணி நேரம் கழித்து தற்போது குடும்பம் குடும்பமாக அமர்ந்து கொண்டார்கள்... ஷங்கர் மற்றும் மீனா குடும்பத்தினர் அவர்களது உறவினர்களும் ஒரே பெரிய வட்டமாக அமர்ந்து கொண்டு மறுபடியும் சாப்பிட ஆரம்பித்தார்கள்... இந்த இடத்திலும் அவர்கள் இரு குழந்தைகளும் பார்த்து கொண்டார்களே தவிர பேசவே இல்லை....

(20 வருடங்களுக்கு முன்பு இருந்த சாப்பாட்டின் சுவை இப்போ இருக்கானு கேட்டா இல்லைனு தான் சொல்வோம் 90 களில் பிறந்தவர்கள்...)

பின் வனிதா (ஷங்கரின் உறவினர் பெண்) ஷங்கரின் அருகில் தனது பொங்கல் மற்றும் தின்பண்டங்களை எடுத்துக்கொண்டு சென்று அமர்ந்து கொண்டால்... அப்போது தற்செயலாக மீனா திரும்புகையில் ஷங்கர் மற்றும் வனிதா அமர்ந்து இருப்பதை கண்டு ஒரு நொடி கண்கள் விரிந்தது மாரு நொடி அமைதி அடைந்தது... ஏன் என்று தெரியாது....

சிறிது நேரம் அமைதியாக பொங்கல் சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள். பின் சாப்பிட்டு முடித்த பின்பு தின்பண்டங்கள் கொண்டு வரப்பட்டது ஒரு பெரிய பாத்திரத்தில்... நிறைய வகையான Snacks இருந்தது... அனைவருக்கும் கொடுக்க பட்டது....

பொங்கல் சாப்பிடும் வரை அமைதியாக சாப்பிட்ட வனிதா snacks சாப்பிடும் போது ஷங்கருக்கு ஊட்டி விட்டால்... அதை அவனும் அவனிற்கு பிடித்த snacks என்பதால் மறுக்காமல் சாப்பிட்டு அவளிற்கும் ஊட்டி விட்டான்...

மீனா snacks வாயில் வைக்க போகும் போது வனிதா ஊட்டி விடுவதை பார்த்து விட்டால். அப்படியே சில நொடிகள் கண்கள் விரிய அதே position இல் பார்த்து கொண்டு இருந்தால்.... 

மீனாவின் அம்மா, மீனா சாப்பிடாமல் இருப்பதை பார்த்து விட்டு சாப்பிடுவாள் என்று 10 நொடி கழித்து மீண்டும் பார்த்தார். அவள் அதே positon இல் இருக்க அவள் யாரை பார்க்கிறாள் என்று மீனாவின் அம்மா பார்த்தார்....

மீனா ஷங்கரை கண்கள் விரிய பார்ப்பதை கண்டு சிரித்துவிட்டு, hey மீனா, என்ன ஷங்கர் ah அப்படி பாக்கற, அந்த snacks வேணுமா இந்தா இதுல இருக்கு எடுத்துக்கோ என்று சொல்ல.... (நானா இருந்த என்ன சொல்லுவேனா - எரியற நெருப்புல என்னைய ஊத்தாம போய்ட்டு அங்குட்டு னு சொல்வேன் நீங்க என்ன சொல்வீங்க).... அவள் ஒரு பார்வை பார்த்தால்... அந்த பார்வை சிறு குழந்தைகள் மட்டுமே செய்ய கூடியது.....

அவள் snacks காக அப்படி பார்க்கவில்லை, வேறு ஒருவர் ஷங்கருக்கு ஊட்டி விடுவது பிடிக்கவில்லை. அதனால் தான் அவளுக்கு அப்படி ஒரு பார்வையை அவன் மேல் செலுத்தினால்...

(என்னதான் சில நேரங்களில் நாம ஒருத்தகங்க கிட்ட பலநேரம் பேசாமல் இருந்தாலும் ஒரு சில தயக்கமோ அல்லது சொல்ல தெரியாத உணர்வுகளே நம்மை பேச விடாமல் செய்கின்றது, செய்யும்... அதற்க்கு காரணம் கேட்டால் தெரியாது.. அது போலவே  ஒரு சிலரிடம் நாம்பேசாமலே அவர்கள் மீது நம்அன்பும் அக்கறையும் கோபமும் வெளிப்படும்...

இந்த விதமான உணர்வுகளை நாம் எந்த வித உறவுகளிலும் எடுத்துக் கொள்ள இயலாது. "ஏன் இந்த மௌனம்" இல் வரும் கிருஷ்ணன் யுவனி, கிருஷ்ணர் மற்றும் திரௌபதி மாதிரி வார்த்தையால் கூற இயலாத ஒரு நிலையில் நாம் இருப்போம். ஆனால் இங்கும் அதே போல இருக்கலாம் இல்லாமலும் போகலாம். ஒரு ஒருவரின் குணம் என்பது வேறு வேறாக தானே இருக்கும்... அது ஏன் என்று கேட்டால் பதில் கிடையாது. சரி கதைக்கு செல்வோம்)

பின் மீனா எழுந்து சென்று விட்டால் வீட்டிற்கு. அவளது அம்மா எதுவும் நினைக்கவில்லை. பின் மதியம் ஆகும் வேளையில் அனைவரும் சிறிது ஒய்வு எடுத்து விட்டு மாலை சிந்திப்போம் என விடை பெற்றனர்...

வீட்டிற்கு சென்ற மீனா தன்னைக்கு சென்று வரைபட புத்தகத்தை எடுத்துக்கொண்டு அதில் உள்ளது போன்று வரைய ஆரம்பித்தாள்... (ஏனென்றால் மீனாவிற்கு கோபமும், சந்தோஷமும் வரும் நேரத்தில் ஓவியம் வரைவது வழக்கம். அது அவளது தாய் தந்தைக்கு மட்டுமே தெரியும். அது அவளது மனதை வேறு ஒரு கோணத்திற்கு (Direction) இல் கொண்டு செல்லும் அவளும் Normal ஆகி விடுவாள்...)

இங்கு ஷங்கர் எப்போதும் போல சகஜமாக இருந்தான், வணித்தவுடனும் விளையாடிக்கொண்டும் TV பார்த்து கொண்டு சிறிது நேரம் உறங்கினார்கள் அனைவரும்....

பின் மாலை 4.30 மணிக்கு ஒரு ஒரு குடும்பமாக அங்கு வர ஆரம்பித்தார்கள். முதலில் மீனா அவள் குடும்பம் அங்கே வந்தது... அவர்கள் மற்றவருடன் பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தார்கள்...

சிறிது நேரத்திற்கு பின்பு ஷங்கர் குடும்பம் வந்தது. வரும்போது வனிதா ஷங்கருடன் கை கோர்த்து கொண்டு வந்தால். அதை மீனா தூரத்தில் இருந்து பார்த்து விட்டு திரும்பி நின்று கொண்டால்... அனைத்து குழந்தைகள் வந்ததும் ஒன்று சேர்ந்து ரேடியோவில் பாடும் பாட்டுக்கு கைகளை கோர்த்துக்கொண்டு வட்டமடிக்க தயாராகினர்...

ஷங்கர் மற்றும் வனிதா, மீனா என்ற வரிசையில் கைகள் கோர்த்து இருந்தனர். பாட்டுக்கு அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து எழுந்து வட்டமடித்தும் விளையாட ஆரம்பித்தனர். வனிதா ஷங்கர் உடன் சிரித்து கொண்டு வட்டமடித்தால்....

அதை பார்த்த மீனாவிற்கு கோபம் வந்தது கூடவே தனது criminal mind um வேலை செய்தது... வட்டமடித்து கொண்டு இருக்கும் போது வனிதாவை பிடித்து கொண்டு இருந்த கையை விட்டு விட்டால்.. மீனா வலது கையை விட்டதும் வலது புறமாக சுற்றிக்கொண்டு இருந்த வனிதா பின்னோக்கி சென்று கீழே விழுந்தால். அதில் அவளிற்கு காயம் ஏற்பட்டு விட்டது...

தெரியாமல் விட்டு விட்டது போல நினைத்து வனிதாவை கூட்டிச்சென்று விட்டு மற்றவர்களை விளையாட சொன்னார்கள். அப்போது ஷங்கரின் இடது பக்கம் மீனா இருந்தால்...... ஷங்கர் சந்தேகத்துடன் அவளை ஒரு பார்வை பார்த்தான். அவளது கையை பிடிக்கலாமா வேண்டாமா என்று...

மீனாவின் Reaction எப்படி இருக்கும் நீங்க சொல்லுக friends ஷங்கர் என்ன பன்னிருப்பான்....

(குறிப்பு: இங்க சின்ன குழந்தைகளுக்குள்ள இருக்க activities தான் சொல்றேன்... அதே நேரத்தில் பல குழந்தைகளுக்கு தன்னுடைய Friend வேற ஒருத்தங்க கூட பேசும் பொது ஏற்பட கூடிய possessiveness தான் வேறொன்றும் இல்லை)

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro