17. அழகு

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

வனிதா ஷங்கர் உடன் விளையாடுவது பிடிக்காத காரணத்தினால் அவள் வனிதாவின் கையை விட்டு அவளிற்கு காயம் ஏற்பட்டது. பின் குழந்தைகள் விளையாட நினைக்கையில் ஷங்கர் மீனா அருகில் இருப்பதால் அவளை சந்தேகத்துடன் பார்த்தான்... 

வனிதா அடிபட்டதை கண்டு மீனா வருத்தமுற்றாள் தான் தவறு செய்து விட்டோமே என்று பின் ஷங்கரை ஒரு ஏக்கத்துடன் பார்த்துவிட்டு, குற்ற உணர்ச்சியில் அவளது தோழிகளையும் ஷங்கரையும் விட்டு அங்கே வைக்கப்பட்டு மேடை அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டால்....

இதுவரை மீனா பார்க்காத விதத்தில் (அதாவது இது நாள் வரையில் வெற்று பார்வையை மட்டுமே பார்த்த ஷங்கர், அவளது வித்யாசமான பார்வை பார்க்கவே அதன் வித்தியாசம் உணர்ந்தான் -- அந்த வித்யாசம் தான் வேறு ஒன்றும் இல்லை) பார்த்தால் அவள் சென்ற இடத்திற்கு சென்றான் ஷங்கர்...

மீனா தனிமையில் இருப்பதை கண்டு அங்கே சென்றவன்....

ஷங்கர்: "மீனா"

மீனா: "................."

ஷங்கர்: "மீனா ஏன் இங்க வந்துட்ட"

மீனா: "..................." மீண்டும் அமைதியாக இருந்தால் என்ன பேசுவது என்று தெரியாமலே....

ஷங்கர்: அவள் அமைதியாக இருப்பதை பார்த்து அவனின் மாமா வாங்கி கொடுத்த குச்சுமிட்டாய் எடுத்து அவளிடம் நீட்டினான் "எடுத்துக்கோ மீனா" என்று சொல்ல

மீனா: "அவன் முதன் முதலாக தன்னிடம் பேசுகின்றான். இதில் குச்சுமிட்டாய் வேறு அவளுக்கு கொடுக்கிறான் என்றதும். புன்னகைத்து கொண்டே "Thanks" என்று மட்டும் கூறினாள்....

ஷங்கர்: மீண்டும் "ஏன் விளையாடும் பொது வந்துட்ட"

மீனா: "நான் வனிதா கையை விட்டுடேனா, என்னால தான அடிபட்டிச்சு அதான் வந்துட்டேன்" என்று குழந்தை மொழியில் கூறினால்....

ஷங்கர்: "தெரியாம தானே விட்ட, வா போய் விளையாடலாம்" என்று கூப்பிட்டு நகரும் வேளையில்....

மீனா: அவன் அவளை விளையாட கூப்பிட்டதில் சிரித்தவள் "டேய் ஷங்கர்" என்று அவனை முதன் முறையாக அழைத்தால்

ஷங்கர்: "சொல்லு மீனா"

மீனா: "இனி நான் உன் Friend" என்று உத்தரவிட்டால்....

ஷங்கர்: சிரித்து விட்டு "ம்ம்ம்ம், வா போலாம்" என்றான்...

கையில் அடிபட்டதால் வனிதா வீட்டிலேயே TV பார்த்து கொண்டு இருந்து விட்டால். நிகழ்ச்சிகளுக்கு கூட வரவில்லை.. அதன் பிறகு மீனா ஷங்கர் இருவரும் அனைத்து நிகழ்ச்சிகள் முடியும் வரை ஒன்றாகவே இருந்தார்கள்....

நடன நிகழ்ச்சி ஒன்றின் போது இருவரும் ஒன்றாக நடனம் ஆடினார்கள். அதை அதிசயமாக பார்த்த பெற்றோர்கள் பேசிக்கொண்டனர்

ஷங்கர் அம்மா: "ஏண்டி, என்ன இது எலியும் பூனையுமா இருந்த ரெண்டும் பேரும் இப்படி ஒண்ணா ஆடுதுக... இது கனவா... நாம பேச சொன்னா கூட பேசாம இருந்த புள்ளைங்க எப்படி இப்படி இருக்குங்க" என்று மீனாவின் அம்மாவிடம் கூறினார்

மீனா அம்மா: "அட ஆமா அக்கா, நானும் எவ்ளோ தடவ சொல்லி இருப்பேன் கேக்கவே இல்ல, என்ன நடந்துச்சு இதுங்க இப்படி இருக்குங்க"

ஷங்கர் அம்மா: "அது என்னமோ இருக்கட்டும், நாம எல்லாம் நண்பர்களா ஒண்ணா இருக்கோம் நம்ம புள்ளைங்க அப்படி இருக்கலையேன்னு நினைத்தேன். இப்போ அதுவும் நிறைவேறிடுச்சு. அது போதும், மீனா கிட்ட எதுவும் கேக்காத. அப்புறம் உன் மவ பேசாம போய்ட போற" என்று சொன்னதும்

மீனா அம்மா: "சரி அக்கா, அதுவும் சரி தான். வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சுனா மாத்த முடியாது...

அதன் பிறகு 3 வருடம் கழித்து அதே போல பொங்கல் விழா வந்தது. அந்த விழாவில் மீனா கடந்த 2 வருடமாக வனிதா வரவில்லை என்றதால் ஷங்கரிடம் தான் செய்த உண்மையை கூறினால் மனம் வருந்தி... அதற்க்கு அவன்

ஷங்கர்: "ஏன் அப்படி பண்ண அன்னைக்கு"

மீனா: "தெரியலடா, நான் உன் கிட்ட பேசாம தான இருந்தேன் அப்போ ஏன்னு தெரியல டா வனிதா உன் கூட விளையாடுனாலா அப்போ ஏதோ ஒரு கோவம் அப்படி பண்ணிட்டேன் டா. அவளுக்கு அடிபட்டதும் கஷ்டமா இருந்தது. அதுக்கு அப்புறம் தான் நான் அமைதியா போய் உட்கார்ந்து இருந்தேன். நீ வந்து கேட்டதும் சொல்லலாமா வேணாமா னு யோசிச்சுட்டு இருந்தேன். நீ வேற குச்சு மிட்டாய் தரவும் சொல்ல வேணாம்னு முடிவு பண்ணிட்டேன்... அப்புறம் தான உன் கிட்ட Friend ah இருப்பியான்னு கேட்டான்" என்று சொன்னால்

ஷங்கர்: "அதுக்குன்னு இப்படியா பண்ணுவ, வேற எதாவது ஆகி இருந்த என்ன ஆகியிருக்கும். உன் கிட்ட கொஞ்சம் ஜாக்கரதையா தான் இருக்கணும் போலயே.... Very Dangerous Fellow நீ" என்று கிண்டல் செய்தான்.... முகத்தை கோவ பாவனையில் வைத்து கொண்டு கண்களில் சிரிப்பையும் வைத்து சொன்னான்....

அவன் கண்களை பார்க்காமல் இருந்ததால் ஷங்கர் கிண்டல் ஆகா தான் சொல்கிறான் என்று தெரியாமல், "Very Dangerous Fellow நீ" என்று கூறியது மீனாவின் மனதை ரொம்ப பாதித்தது. அவள் அழுது கொண்டே மைதானத்தில் இருந்து வீட்டிற்கு சென்று விட்டால். ஷங்கர் அவளை தடுக்க நினைத்தும் அவனை மீறி சென்று விட்டால்.....

வீட்டிற்கு சென்ற மீனா மிகவும் அழுதால். மனதிற்குள்ளே தான் மிகவும் மோசமானவள் என்று நினைத்து நினைத்து வருந்தினாள்...

ஷங்கரின் அம்மா மீனா சென்றதும் அழைக்க அவன் மீனாவை பார்க்காமல் அம்மாவிடம் சென்றான்...

பிறகு ஒரு மணி நேரம் கழித்து மீனாவை பார்க்க சென்றான்...

மீனா அழுது அழுது மயங்கி போனால். அது தெரியாமல் அருகே சென்ற ஷங்கர்

ஷங்கர்: "மீனா" அவள் எழவில்லை அசைவில்லாமல் இருந்தால்..

ஷங்கர்: "மீனா, மீனா, எந்திரி மீனா" என்று அழைக்க அவள் எழவில்லை

ஷங்கர் ஓடிச்சென்று அவன் அம்மாவை அழைத்து வந்து பார்த்தான். அவள் மயங்கிய நிலையில் இருந்தால். பதறிய அவன் அம்மா தண்ணீர் எடுத்து வந்து தெளித்து எழுப்பினார்கள்...

பிறகு ஷங்கரிடம் என்னவென்று கேட்டார். அவன் 3 வருடம் முன் நடந்ததையும் இப்போது நடந்ததையும் கூறினான். அவன் அம்மா

ஷங்கர் அம்மா: "சரி, சரி இனி அவளை கிண்டல் பண்ண கூடாது சரியா. அவளுக்கு நீதான் ஆதரவா இருக்கணும். நீயே கிண்டல் பண்ண எப்படி. அவளுக்கு கிண்டல் பண்ண பிடிக்காது. அப்புறம் கஷ்டம் படுற மாதிரி எதுவும் இனி பேசாத, முக்கியமா அழ வைக்காத சரியா" என்று கூறினார்..

ஷங்கர்: "சரி அம்மா" என்று உடைந்த குரலில் கூறிவிட்டு அவள் அருகில் அமர்ந்து வருந்தினான்... மீனா தூங்கி கொண்டு இருந்தால்...

அதன் பிறகு ஷங்கர் மீனாவை கிண்டல் செய்வதை நிறுத்திக்கொண்டான். அதன் பின் மீனாவை அன்பாகவும் அக்கறையுடனும் தான் பார்த்து கொள்வான்....

Flashback முடிந்தது

....இப்போது....

மீனா ஷங்கரை அடிக்க மிகப்பெரிய குச்சியை எடுத்துக்கொண்டு துரத்தினால். (அந்த குச்சி அவளது கை நிலத்தின் அளவில் கூட இருக்காது) இருவரும் மைதானத்தை சுற்றி ஓடினார்கள். அவர்களின் பின்னே வந்து கொண்டு இருந்த சிந்து மற்றும் அர்ஜுன் அவர்களை கண்டு சிரித்து விட்டு அவர்கள் இருவரும் நடந்தனர். அப்போது

சிந்து தலை குனிந்தவாறே நடந்து சென்று இருக்க. அர்ஜுன் அவள் அருகினில் அவளை கவனித்தவாறே நடந்து கொண்டு வந்தான்..

சிந்து மைதானத்தின் சுவர் அருகே உள்ள நடைபாதையில் நடந்து கொண்டு அந்த மாலை வேளையில் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டு இருக்க, மலை அருகினில் உள்ள தோட்டத்தில் இருந்து பறவைகளின் குரல் இசை கேட்க அதன் ஓசையின் அழகை கேட்டுக்கொண்டு இயற்கையின் அழகில் மூழ்கினால் சிந்து....

அவளின் மனதில் அப்படி ஒரு அமைதி நிலவியது. அதை தன் முகத்தில் வெளிப்படுத்திக்கொண்டு பாதையில் உள்ள செடிகளை தனது கரத்தினால் வருடிக்கொடுத்து கொண்டும் அதன் ஈரப்பதத்தை கைகளால் உணர்ந்து கொண்டும் ஆமை வேகத்தில் நடந்தால்...

இவற்றை கவனித்து கொண்டே அவள் முகத்தினில் தெரியும் Expression களை ஆராய்ந்து, அதற்கான விடைகளையும் கண்டுபிடித்து தானும் அதை ரசித்து கொண்டே வந்தான். அர்ஜுன் இப்படியே போன பேச முடியாது என்று அர்ஜுன் பேச ஆரம்பித்தான்....

அர்ஜுன்: "சிந்து....."

அவன் அழைப்பில் உயிர் பெற்றவள் போல் ஒரு வேகம் இருந்தது. தலையை நிமிர்த்தினாள். பின்

சிந்து: "சொல்லுக அர்ஜுன்"

அர்ஜுன்: "உனக்கு இயற்க்கைனா ரொம்ப பிடிக்குமா சிந்து" அவளிடமிருந்து சில பதில்களை வரவைக்க அதை எதிர்பார்த்து கேட்டான்....

சிந்து: "ரொம்ப பிடிக்கும் அர்ஜுன். மனசு அமைதியா இருக்கும் போதுலாம் நாம Sit பன்னிருந்தோமே அந்த மரத்துக்கு வந்து அந்த மலையை பார்க்கும் பொது ரொம்ப Happy ஆ இருக்கும். எங்க அப்பா கிட்ட கேட்பேன் trekking  போலாம்னு ஆனா கூட்டிட்டு போக மாட்டேன்னு சொல்லிடுவாரு" என்று சிறிது வருந்தினாள். சில நொடி மௌனத்திற்கு பின்பு அவள் "உங்களுக்கு பிடிக்குமா அர்ஜுன்" என்ன கேட்பது என்று தெரியாமல் அதே கேள்வியை கேட்டால்...

(மனதிற்கு பிடித்தவர்கள், நாம் அன்பு கொண்டவர்கள் அருகினில் இருக்கும் போது வேறெதுவும் தேவை இல்லை தான் என்றாலும். அங்கு வார்த்தை மொழிகள் இல்லை என்றால் புரிதல்கள் இல்லாமல் போய்விடும்...

புரிதல்களுக்காகவே அங்கு வார்த்தைகள் தேவைப்படுகின்றது. அவைகள் அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அவரையும் மகிழ்ச்சி கொள்ள வைக்கவும் வார்த்தைகள் அவசியமே.

அவ்வார்த்தைகள் எதுவாக இருந்தால் என்ன. அதுவே அவர்களுக்கு போதும்.)

அர்ஜுன்: "ரொம்ப பிடிக்கும் சிந்து. இங்க என்ன தான் இயற்கையான சூழல் இருக்க மாதிரி இருந்தாலும் காடுகளுக்குள்ளேயும், மலைகளிலும் உள்ள அமைதி வேறெங்கும் இருக்காது கிடைக்காது. இரவினில் வரும் நிலவின் அழகு போல, காடுகளில் கிடைக்கும் அமைதி ஒரு அழகு தான் சிந்து. நானும் trekking போகலாம்னு இருக்கேன். அதுக்கு ஒரு நாள் plan பண்ணிட்டு போகலாம் டா சிந்து...."

சிந்து: "நிஜமாவா அர்ஜுன் அப்போ சரி" என்று துள்ளி குதித்தாள்.... அதன் பிறகு

அர்ஜுன்: "இன்னைக்கு உன்னோட மனசு அமைதியா இருக்க என்ன காரணம் சிந்து" வேண்டும் என்று அவளை சீண்டும் தோணியில் கேட்டான்

அவன் கேள்வியின் அர்த்தம் புரிந்தாலும் என்ன பதில் சொல்வது என்று யோசித்தால். ஏனென்றால் அவள் உண்மையை கூற நினைக்கவில்லை... பின்

சிந்து: "அதான் அம்மா கிட்ட மனசு விட்டு பேசினது என்ன புரிஞ்சுக்கிட்டாங்கனு சொன்னேன்ல அது தான் அர்ஜுன்" என்று வார்த்தையில் சிறிது தடுமாற்றத்துடன் கூறினால்... அவளது கண்கள் அதை கூறும் போது வேறெங்கோ பார்த்தால்...

நம் அர்ஜுன் தான் கண்களில் பேசுபவன் ஆகிற்றே. அவள் கண்களில் ஏற்பட்ட சிறு தடுமாற்றத்தையும். அவள் குரல் சிறிது தடுமாறியதையும் பார்த்தும் உணர்ந்து கொண்டான் அது காரணம் இல்லை என்று... பின் மனதினில் சிரித்து கொண்டு

அர்ஜுன்: "என்னை பாரு சிந்து" என்று கூறிவிட்டு அவள் பார்த்ததும் அவளின் கண்களை நேருக்கு நேர் பார்த்து. ஒற்றை புருவத்தை சிறிது உயர்த்தி "நிஜமாவா சிந்து" என்று ஒருவித புன்னகை கலந்த சிரிப்புடன் கேட்டான்....

அதன் பிறகு என்ன நடந்தது என்று அடுத்த பதிவினில் காண்போம்....

சிந்து எப்படி React பன்னிருப்பானு நீங்கள் நினைக்கறீங்க........

தங்களது கருத்துக்களை கண்டிப்பாக பதிவிடவும்...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro