11

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

மில்லையன் டாலர் பேபி.. விளையாட்டை மையக் கருவாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு சில சிறந்த படங்களில் அதுவும் ஒன்று. அதன் சிறப்புக்கு காரணம் என்ன. பொதுவாக ஹீரோ அல்லது ஹீரோயின் கோச் ஆக இருந்தால் மற்ற கதாபாத்திரம் அவரிடம் பயில வரும் மாணவராக இருக்கும். ஏதோ ஒரு கட்டத்தில் இருவரும் காதல் மலரும். இங்கு அது இல்லை. அதுதான் இந்த கதையை மற்ற கதைகளில் இருந்து தனித்துவப்படுத்த காரணம்.

ஜீவாவுக்கு ஜனனிமேல் ஒரு இனம் புரியாத பாசம் உண்டானது. அதற்கு அவனது சுய நலமும் காரணமாக இருக்கலாம். அவன் மனதில் சாரதா பற்றிய எண்ணம் உள்ளது. அந்த எண்ணத்துக்கு பெயர் என்னவென்று அவனால் சரியாக கூற முடியவில்லை. அவள் அழகாக இருக்கின்றாள். கனிவாக பேசுகின்றாள். அதை தவிற அவனுக்கு அவளைப் பற்றி வேறு என்ன தெரியும். ஆம் முக்கியமான் ஒன்று தெரியும். அவளுக்கு திருமணமாகி பதினான்கு வயதில் ஒரு குழந்தை உண்டு. குழந்தை அல்ல. பெண் பிள்ளை. இதுதான் உலகுக்கே தெரிந்த விடயம் ஆயிற்றே.

" ஜீவா சார், இன்னைக்கு எங்க வீட்டுல ஒரு டின்னர் அரேஞ்ச் பண்ணியிருக்காங்க. கண்டிப்பா நீங்க வரனும்" என்று சனா கூறினாள். ஜீவாவும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. காரணம் தன்னையே அவள் அழைத்திருக்கும் போது கண்டிப்பாக சாரதாவையும் அவள் அழைத்திருப்பாள். ஸ்கூலில் மட்டுமே பார்த்து ரசித்த சாரதாவை இரவு நேரத்தில் ரசிக்க சந்தர்ப்பம் அமையும் போது அதை இழக்க அவன் என்ன முட்டாளா?

———————————-

" அப்பா இது ஜீவா சார். எங்க ஸ்கூல் PT மாஸ்டர். ஜனனிக்கு இவருதான் இப்போ கோச் ஆக இருக்காறு" என்று சனா தன் தந்தையிடம் ஜீவாவை அறிமுகப்படுத்தினாள்.

" எப்படி சார், ஸ்கூல் லைப் எப்படி போகுது. அதுவும் ஜனனிக்கு கோச் ஆக இருக்குறது ரொம்ப கஷ்டமாச்சே. ரொம்ப பிடிவாதக்காரி வேற. அவகிட்ட எவ்வளவோ சொன்னேன். கண்ட கண்ட கோச் கிட்ட கத்துக்காம ப்ரொபஷனலா ஒரு கோச் ஏற்பாடு பண்ணி தரேன். நீ கத்துக்கன்னு. அவ ரொம்ப வீம்பு புடிச்சவளா. வேணாம்னு சொல்லிட்டா. முன்னாடி எல்லாம் ஜனனி சனாவ ரொம்ப ஈசியா ஜெயிச்சிடுவா. இப்போ என்னான்னா கடைசியா நடந்த மேட்ச் டிறாவில முடிஞ்சிருக்கு. இதுக்கு என்ன அர்த்தம். ஜனனி அதே இடத்துலதான் இன்னும் இருக்கா. சனா நல்ல கோச் மூலமா முன்னேறிக்கிட்டு இருக்கா. நான் ஜனனிய குத்தம் சொல்லல. தகுதி இல்லத கோச் கிட்ட கத்துக்கிட்டா நம்ம முன்னுக்கு வர முடியாதே" என்றார்.

" நீங்க சொல்றதும் கரகட்தான் சார். ஆமா ஜனனி இன்னும் வரல்லயா?" என்று சாரதாவை காணும் ஆவளில் ஜீவா கேட்டான். அவனுக்கு கங்காதரன் அவனை மறைமுகமாக அவமானப்படுத்தியகூட தெரியவில்லை. அவனுக்கு இப்போது சாரதாவை காண வேண்டும். அதுதான் முக்கியமாக பட்டது.

கங்காதரன் சனாவின் தந்தை. மல்டி மில்லியனர். மனைவி இருக்கின்றார். பெயருக்கு. இருவரும் விவாகரத்து வாங்க போகின்றார்கள் என்பது எல்லோருக்கும் அரசல் புரசலாக தெரியும். கங்காதரனுக்கு சாரதா மீது அன்பும் பாசம் அதிகமாகவே உண்டு. அது சனாவுக்கும் தெரியும். ஆனால் திருமனமாகி இருக்கும் ஒருத்தியை எப்படி தன் மனைவி ஆக்குவது என்ற கவலை அவருக்கு. ஆனால் சாரதாவின் திருமனம்.......

ஹ்ம்ம் எது எப்படியோ அவரின் ஆசை கை கூடும் நாள் வெகுவிரைவில் என்று அவருக்கு தெரியும். தனது விவாகரத்தின் பின் சாரதாவிடம் சனாவை வைத்தே பேசலாம் என நினைத்தார். அதனால்தான் சனாவை இன்னமும் அதே பாடசாலையில் பயிலுவதற்கு அனுமதி அளித்திருந்தார். சனா பெயருக்குத்தான் அந்த பாடசாலைக்கு செல்வாள். அவளுக்கு அனைத்து பாடங்களுக்கும் சிறந்த பிரத்யோக ஆசிரியர்களை தனியாக ஏற்பாடு செய்திருந்தார். ஜனனியையும் அதில் கலந்து கொள்ள எவ்வளவோ வற்புறுத்தியும் அவள் அதில் ஈடுபாடு காட்டவில்லை. காரணம் அவளுக்கும் படிப்புக்கும்தான் எட்டாம் பொருத்தம் ஆயிற்றே.

ஜனனிக்கு கங்காதரனை ரொம்பவும் பிடிக்கும். சனாவை அவர் பார்த்துக் கொள்ளும் விதம் அவளை சில நேரங்களில் பொறாமை கூட கொள்ள செய்யும். தனக்கு இப்படி ஒரு தந்தை இல்லையே என்று. ஆனால் அவளுக்குதான் சூப்பர் மாம் சாரதா இருக்கின்றாளே. அதனாலேயே அவள் அடிக்கடி தன் தாயை வைத்து சனாவை கடுப்பேத்துவாள். கங்காதரன் கணக்கு சரியாக வருமா? அவரின் உலகில் காலநிலை மிக சிறப்பாக இருந்தது. ஜனனிக்கு அவரை பிடிக்கும். சனாவுக்கு சாரதாவை பிடிக்கும். ஜனனியும் சனாவும் உயிர்த்தோழிகள்.

சாரதா கறுப்பு நிற சேலையில் பிங்க் நிறத்தில் சிறிய பூ வேலைப்பாடு செய்த சேலை அணிந்து, தேவலோக கன்னிகையோ என எண்ணும் அளவுக்கு மிக அழகாக வந்தாள். கூடவே ஜனனியும் பேபி பிங்க் மற்றும் வெள்ளை நிறம் கலந்த சுடிதாரில் அசத்தலாக இருந்தாள். இருவரும் மேட் பார் ஈச் அதர் போல இருந்தனர். ஏன் கணவன் மனைவிக்கு மட்டும்தான் மேட் பார் ஈச் அதர் சொல்ல முடியுமா? அம்மா, மகளுக்கும் சொல்லலாம்.

சாரதாவை கண்டதும் ஜீவா ஒரு கணம் சுவாசிக்க மறந்தான். அவன் கண்கள் சாரதாவையே வட்டைமிட்டுக் கொண்டிருந்தது. கங்காதரனை கண்ட சாரதா அவரிடம் சென்று சிறிது பேசிக்கொண்டு இருக்க, சனாவும் ஜனனியும் அவர்கள் அருகிலேயே கெக்கே பிக்கே என்று சிரித்துக் கொண்டு ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். ஜீவாவுக்கு அந்த இடத்தில் தான் அன்னியமாக இருப்பது போல தோன்றியது. அழைத்த சனா அவள் தோழியுடன் இருக்க, மனதுக்கு பிடித்த சாரதா இன்னொரு ஆணுடன் பேசிக் கொண்டிருக்க அவனுக்கு ஏன் இந்த டின்னருக்கு வந்தோம் என்று தோன்றியது. தூரத்தில் ஒரு ஓரமாக கையில் பழச்சாருடன் நின்று கொண்டிருந்த வித்யாவை கண்டதும் அவன் மனது கொஞ்சம் இலகுவானது.

" ஹாய் மிஸ்" என்று அவன் கூற அவள் ஏதோ அவனை முறைப்பது போல பார்த்தாள். உடனே அவன் தன் இரு கைகளையும் தூக்கி சரண்டர் என்பது போல காட்டினான்.

" ஐ அம் சாரி, ஐ அம் ரியல்லி சாரி. நான் அன்னைக்கு இண்டர்வ்யூல ஜாலிக்காகத்தான் அப்படி பேசினேன். நீங்க அதை சீரியசா எடுத்துப்பீங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல்ல. நான் பண்ணது தப்புத்தான். அதுக்காக என்ன பார்க்குற போதெல்லாம் இப்படி முகத்தை திருப்பிக்கிறது நல்லாவா இருக்கு. உங்க அழகு முகத்துல கொஞ்சம் சிரிப்பை கொடுத்தா எவ்வளவு நல்லா இருக்கும்" என்றான்.

ஒரு ஆண். அதுவும் அழகான ஆண். தன்னை விட வயதில் பெரியவளிடம் வந்து சாரி கேட்டால் எந்த பெண்தான் அவன் மீது இருக்கும் கோபத்தை கைவிட மாட்டாள். வித்யாவும் அவன் மீது வைத்திருந்த வஞ்சகக் கோபத்தை கைவிட்டாள்.

" சேச்சே அப்படில்லாம் ஏதுமில்ல சார்" என்று கூற அவன் உடனே இடை மறித்தவன், " இப்ப நம்ம என்ன ஸ்கூல்லயா இருக்கோம். சார்னு சொல்றீங்க. எப்படியும் நான் உங்கள விட சின்னவந்தான். என்ன ஜீவான்னே கூப்பிடுங்க" என்றான்.

" ஹ்ம்ம் நல்லாத்தானே பேசுறீங்க ஜீவா. நீங்களும் என்ன வித்யான்னே கூப்பிடுங்க. இந்த மிஸ்னு கூப்பிடும் போது செம்மயா காண்டாகுது. ஏதோ பல்லு போன கிழவிய கூப்பிடுற மாதிரி" என்றாள். இருவரும் தங்களின் பழைய பகையை மறந்து சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் ஜீவாவின் கண்கள் மட்டும் சாரதாவை அவ்வப்போது தடவி வருவதை வித்யா கண்டு கொண்டாள். ஜீவாவும் கங்காதரனின் செயல்களை வைத்தே அவருக்கு சாரதா மேல் இருக்கும் மேலதிக அக்கறையை புரிந்து கொண்டான். பொறாமையும் கொண்டான். அவர்களுக்கு அருகில் சிரித்து பேசிக்கொண்டிருக்கும் ஜனனி மற்றும் சனா மீது எரிச்சலும் வந்தது. சாரதா மீது ஏன் என்று காரணம் தெரியாமல் கோபம் கொண்டான். சிறு குழந்தையிடம் இருக்கும் பொம்மையை பிடுங்கிக்கொண்டால் அந்த குழந்தைக்கு வரும் கோபம் போல இருந்தது அது. ஆனால் அந்த கோபமும் எரிச்சலும் கூட அவனுக்கும் சுகமாகவே இருந்தது.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro