10

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

காலம் மிகவும் வினோதமானது. அம்மா மகளாகவும், மகள் அம்மாகாவும் மாறும் அதிசயத்தை காலம் நிகழ்த்தும். மகள் அம்மாவாகி, அம்மாவை அரவணைக்கும் பாக்கியம் எத்தனை மகள்களுக்கு கிடைத்திருக்கும் என்பது தெரியாது. அந்த பாக்கியம் கிடைத்த மகள்கள் இறைவனை கொஞ்சம் எக்ஸ்ட்றாவாக வழிபட வேண்டும்.

ஜீவாவின் மனது மதில் மேல் பூனை போலானது. ' ஜனனிக்கு இப்போ பதினாழு வயசுன்னா சாரதாவுக்கு எப்படியும் குறைஞ்சது முப்பது வயசுக்கு மேல இருக்கனும். ஆனா அவங்கள பார்க்க இருபத்து ஐந்துக்கு மேல சொல்ல முடியல. அப்போ ஒரு வேல அவங்க ரொம்ப சின்ன வயசுல கல்யாணம் பண்ணியிருப்பாங்களா? சைல்ட் மேரேஜ்ஜா இருக்குமா? இல்லைன்னா வீட்டுல போர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணியிருப்பாங்களா?' என்று அவன் மனது சாரதாவை பற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. என்னதான் அவன் மனதில் சாரதாவை பற்றிய ஒரு சலனம் ஜனனியை காண முன் இருந்தாலும், இப்போது அந்த சலனம் சாரதாவின் கடந்த காலத்தை அறியும் ஆவலாக மாறி போனது. ஆனால் அவனால் யாரிடமு இது பற்றி நேரடியாக கேட்க முடியவில்லை.

இடைக்கிடையில் சங்கவியும் அவனுக்கு அடிக்கடி கால் செய்து சாரதாவை அவனுடன் சேர்த்து கிண்டல் செய்ய அவன் நிலமை மேலும் மோசமானது. ஒரு நாள் சங்கவியிடம் சாரதா திருமணம் ஆனவர் என்று கூறிவிட்டான்.

" அண்ணா என்ன சொல்ர, அவங்களுக்கு மேரேஜ் ஆச்சா"

" ஆமா சங்கவி, மேரேஜ் ஆகி பதினாழு வயசுல ஒரு பொண்ணு வேற இருக்கா. ஆமா ஆனந்தி எங்க?"

" அவளும் என்கூட பக்கத்துலதான் இருக்கா. போன் ஸ்பீக்கர்ல இருக்கு. அண்ணா, அன்னைக்கு நான் கேட்டப்போ உங்க ஸ்கூல்லயே சாரதாதான் ரொம்ப அழகுன்னு சொன்ன. பெயரை கேட்கும் போதே லைட்டா எனக்கு ஸ்ட்றைக் ஆச்சு. என்ன பேரு ரொம்ப பழசா இருக்கே. ஆளு எப்படி இருப்பாங்களோன்னு. ஆனா நீ வேற ஆகா ஓகோன்னு சொன்னியா"

" ஏய் நான் எப்போ ஆகா ஓகோன்னு சொன்னேன். ஸ்கூல்ல ரொம்ப அழகான பொண்ணு...." என்று அவனின் வாக்கியம் முடியும் முன்னே அவனை இடைமறித்தால் சங்கவி.

" என்ன பொண்ணா, அவங்க பொம்பள. சீ இஸ் நாட் அ கேர்ல். சீ இஸ் வுமன். அதுவும் மேச்சூர்ட் வுமன். பதினைஞ்சு வயசு பிள்ளை எனக்கு தெரிஞ்சது கூட உனக்கு தெரியலையேண்ணா. நீ ரொம்ப பாவம்" என்று அவனை கலாய்த்தால்.

" ஹேய் எங்கண்ணன கலாய்க்காதடி. அப்புறம் கடிச்சி வெச்சிடுவேன்" என்று ஆனந்தி சங்க்வியை திட்டினால்.

" ஆனந்தி, உங்க ரெண்டு பேரையும் நான் ரொம்ப மிஸ் பண்றேன். இந்த கொஞ்ச நாளா நம்ம போன்ல பேசி ரொம்ப நெருக்கமாகிட்டோம். இவ்வளவு நாளா இந்த உறவுல இருந்த ஸ்வீட்னஸ்ஸ நான் இழதுட்டேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு. உங்க ரெண்டு பேரையும் நேர்ல பார்க்கனும் போல இருக்கு. ஆனா சித்தி..."

" ஹேய் லூசு அண்ணா, சித்தியை விடு. அவங்க வயசானவங்க. நேர்ல பார்க்கும் போது எனக்கு பட்டு பாவாடை தாவனி வாங்கிட்டு வா. அதுவும் க்ரீன் கலர்ல. அக்காக்கு வாங்குறத விட எனக்கு காஸ்ட்லியா வாங்கனும். இல்லைன்னா நான் உன்ன என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது" என்று சங்கவி பொரிந்து தள்ளினால்.

" உனக்கு என்ன வேணும் ஆன்ந்தி" என்று ஆன்ந்தியிடம் ஜீவா கேட்டான்.

" அண்ணா எனக்கு உன் அன்பு மட்டும் எப்போமே இருந்தா போதும்னா. எனக்கு அதுதான் வேணும். வேற எதுவும் தேவையில்ல" என்று கூற சங்கவி அவளை முறைத்தால்.

" ஓஹ் நாங்க பொருளுக்கு அலையிறோம்னு சொல்லாம சொல்றியா. இரு உன்ன.." என்றவள் ஆன்ந்தியின் கையில் கடித்து வைக்க அவள் ஆ வென்று அலறினாள்.

" ஹேய் என்ன நடக்குது அங்க. ஆனந்தி என்னாச்சி"

" ஆஹ், உங்க எருமை தங்கச்சிய கடிச்சி வெச்சிட்டேன். வரும் போது அவளுக்கும் சேர்த்து வாங்கி வரனும். இல்லைன்னா உன்னையும் கடிச்சி வைப்பேன்" என்றவள் சற்று இடைவெளி விட்டு,

" அண்ணா நான் உன்ன அப்பப்போ ஒருமையில கூப்பிடுறது ஒன்னும் வருத்தம் இல்லையே. என்னைவிட ரொம்ப பெரியவங்க நீங்க. ஆனா எனக்கு உங்களை, அப்புறம் ஆனந்தி அக்காவ ஒருமையில கூப்பிடறப்போ ரொம்ப நெருங்கின மாதிரி ஒரு உணர்வு. அதான் அப்படி கூப்பிடுறேன். ஆனா அம்மாதான் அடிக்கடி என்ன திட்டுவாங்க. ஆனந்திக்கு உனக்கு அக்கா, அவளுக்கு மரியாதை கொடுத்து பேசனும்னு. எங்கம்மாக்கு எப்போமே ஆனந்தி மேல கொஞ்சம் கரிசனை ஜாஸ்த்திதான். ஏன்னு தெரியல. இவளுக்கு மட்டும் இப்படி ஒரு சித்தி. எனக்கு இப்படி ஒரு அம்மா. பெத்த பொண்ண விட மத்த பொண்ணு மேல பாசம் ஜாஸ்த்தியா. இது என்ன டிசைன்னு புரியவே மாட்டேங்கு" என்று சற்று கவலையாக கூறினாள்.

" ஹேய் என்ன இது சங்கவி. நீ என்ன எப்படி வேணா கூப்பிடு. அம்மா இருக்கும் போது வேணும்னா ஆனந்திய அக்கான்னு சொல்லு. அப்புறமா உன் இஷ்டத்துக்கு கூப்பிட்டுக்க. ப்ராப்ளம் சால்வ்ட். இதுக்கு போய் ஏன் இவ்வளவு பீல் ஆகுற. அப்புறம் சித்திக்கு நீ ஆனந்தி எல்லாமே ஒன்னுதான். நீ சின்னப் பொண்ணு என்றதால கொஞ்சம் அதிகமா திட்டுவாங்க போல. இது எல்லா வீட்லயும் நடக்குறதுதானே. இதுவே நீ சித்தி முன்னாடி என்ன மரியாதை இல்லாம கூப்பிட்டு பாரு, அவங்க எதுவுமே சொல்ல மாட்டாங்க. ஏன்னா அவங்களுக்கு என்ன பிடிக்காதே" என்று சகஜமாக கூறினான்.

" அண்ணா, அம்மா உன் மேல பாசம் இல்லாம இருக்காங்கன்னு உனக்கு வருத்தமா இருக்கா?" என்று கரிசனையாக சங்கவி கேட்டால்.

" முன்னாடிலாம் கொஞ்சம் கவலையா இருக்கும். ஆனா இந்த கொஞ்ச நாளா எனக்கு அந்த கவலை கூட இல்லை. ஏன்னா எனக்கு அம்மா பாசத்த காட்ட ஆனந்தி இருக்கா. தங்கச்சி பாசத்த காட்ட நீ இருக்க. இதுக்கு மேல வேற என்ன வேணும். சரி இன்னைக்கு ரொம்ப நேரம் பேசிட்டோம். நாளைக்கு பேசலாம்" என்று காலை கட் செய்தான்.

——————————————————————

நாட்கள் கொஞ்சம் வேகமாக நகர்ந்தது. இண்டர் ஸ்கூல் கிக் பாக்சிங்க் காம்படீசன் ஆரம்பமாக இன்னும் சில நாட்களே இருந்தது. இந்த வருடம் ஹாலி ஏஞ்சல்ஸ் பாடசாலைதான் வெற்றி பெறும் என்பது எல்லோரினதும் கணிப்பு. ஆனால் ஸ்கூலில் முன்னர் இருந்த கோச் ஓய்வு பெற்றதால் அந்த பொறுப்பு ஜீவாவின் கையில் வந்தது. ஜீவாவுக்கு கிக்பாக்சிங்க் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால் பாக்சிங்க் பற்றி தெரியும். தனக்கு தெரிந்த அறிவை வைத்து ஜனனியை அவன் போட்டிக்கு தயார் படுத்தினான். சனாவை பயிற்றுவிக்க அவளது பிரத்யோக கோச் இருந்ததால் அவளுக்கு பெரிதாக எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் ஜனனியும் ஜீவாவும் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ள நாட்கள் தேவைப்பட்டது.

" சார், இந்த வருசம் நான் எப்படி சரி வின் பண்ணியே ஆகனும். இல்லைன்னா அடுத்த வருசம் டெந்த் எக்சாம் வருது. அதுல நல்ல மார்க்ஸ் எடுக்கனும். எனக்கு எக்சாம்ல மார்க்ஸ்லாம் எடுக்க முடியாது சார். இந்த காம்படீசன்ல என்ன வின் பண்ண வெச்சிடுங்க" என்று ஜனனி கூறினாள்.

" ஜனனி, முதல்ல நமக்குள்ள ஒரு பாண்டிங்க் உருவாகனும். நான் என்ன நினைக்கிறேன்னு நீயும், நீ என்ன நினைக்கிறேன்னு நானும் சரியா புரிஞ்சிக்கிட்டோம்னா காம்படீசன்ல வின் பண்றது ஒன்னும் பெரிய விசயமில்ல. மில்லியன் டாலர் பேபி பார்த்திருக்கியா. அதுல அந்த ஹீரோயினும் அவ கோச்சும் எப்படி நெருக்கம் ஆவாங்கன்னு காட்டியிருப்பாங்க. அந்த உறவை ரொம்ப உன்னதமா காட்டியிருப்பாங்க. அந்த பொண்ணுக்கு என்ன தேவைன்னு அறிந்து அந்த கோச் அவளுக்கு சொல்லிக்கொடுப்பாரு. அவ எல்லா மேட்ச்லயும் ரொம்ப ஈசியா வின் பண்ணுவா. ஆனா கடைசியில அவள கருனை கொலை பண்ண சொல்லி அவ ரொம்ப கெஞ்சுவா. யாருமே அதுக்கு முன் வர மாட்டாங்க. ஆனா க்ளைமாக்ஸ்ல அந்த கோச்தான் அவள கொல்லுவாரு. அவளுக்கு தேவை சாவு. அந்த சாவ அந்த கோச் கொடுப்பாரு. இத இங்க ஏன் தெரியுமா நான் சொல்றேன். ஒரு கோச்சுக்கும் அவரோட ஸ்டூடண்ட்கும் இப்படியான ஒரு புரிதல் இருக்கனும். இருந்திச்சின்னா நம்ம இந்த உலகத்தையே வெல்லலாம்" என்றான்.

" சார், இன்னைக்கு முதல் வேலையா போய் மில்லியன் டாலர் பேபி மூவிதான் பார்க்க போறேன்" என்று ஜனனி கூற அவளின் தலையில் தன் கையை வைத்து அவள் கேசத்தை கோதிவிட்டான்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro