18

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

மறு நாள் காலை பாடசாலையில்....வித்யாவின் அருகில் வந்த சாரதா அவளை முறைத்தாள். சாரதாவின் முறைப்பிலேயே வித்யாவுக்கு புரிந்தது இரவு நாம் ஏதோ ஒன்று ஏடாகூடமாக செய்துவிட்டோம் என்று.

" என்ன அப்படி குறு குறுன்னு பார்க்காத. எனக்கு வெட்கமா இருக்கு" என்று வித்யா கூற சாரதா கடுப்பானவள் சத்தமிட்டு பேச முடியாததால் குரலை பணித்து வித்யாவுக்கு மட்டும் கேட்கும் விதமாக திட்டினாள்.

" உன்கிட்ட எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன், ஸ்கூல் இருக்குற நாளையில குடிக்காதன்னு. குடிச்சது மட்டுமில்லாம கண்டதையும் பேசுற" என்று கூற வித்யாவுக்கு சத்தியமாக இரவு பேசிய எதுவுமே ஞாபகம் இல்லை.

" அப்படி என்ன பேசியிருக்க போறேன். உனக்கு கால் பண்ணி புலம்பியிருப்பேன். வேற என்ன பண்ணியிருக்க போறேன்" என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கூற, சாரதா அவளின் போனை பறித்து கால் லிஸ்ட்டை பார்த்தவளின் முகம் வெளிறியது.

" வெளியில வா வித்யா உன்கூட கொஞ்சம் பேசனும்" என்றவள் வித்யாவை ஸ்டாப் ரூமில் இருந்து வெளியே ஒதுக்குப் புறமாக இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றாள்.

" எருமை மாடு, எருமை மாடு. நீ எனக்கு கால் பண்ணல, நான் தான் நைட் உனக்கு கால் பண்ணேன். ஆனா அதுக்கு அப்புறமா நீ வரிசையா ஜீவா, ரவீந்தர், சித்தார்த்துக்கு எல்லாம் கால் பண்ணியிருக்க. நிஜமாவே நீ என்ன பேசினேன்னு ஞாபகம் இல்லையா?" என்று கேட்டாள்.

" இல்லை சாரதா, உன்கூட பேசுனது ஞாபகம் இருக்கு. ஆனா என்ன பேசினேன் என்ற ஞாபகம் இல்லை. ஆனா இவனுங்களுக்கு கால் பண்ணது துளி கூட நினைவில்ல சாரதா"

" என்னத்த பேசி வெச்சியோ. என்கூட பேசினது கூட பரவாயில்ல. ஆனா ஜீவா, ரவீந்தர், சித்தார்த் கிட்ட என்ன உளறினேன்னு தெரியலயே" என்று அவள் கவலையாக கூற வித்யா அமைதியாக நின்றாள். இருவரும் பேசிக் கொன்டிருப்பதை கண்ட ஜீவா இவர்களின் அருகில் வந்தான். அவன் முகத்தில் ஒரு நக்கல் சிரிப்பு இருந்ததை வித்யா கவனிக்காமல் இல்லை.

' இவன் வந்து என்ன கேட்கபோறானோ தெரியலே' என்று மனதுக்குள் தன் நிலையை எண்ணி நொந்து கொண்டவள் ' எதுவா இருந்தாலும் சமாளி வித்யா. உன்னால முடியும்' என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டாள்.

" ஹாய் வித்யா மிஸ். இன்னும் சாகல்லயா நீங்க, நைட் செம்ம சரக்கு போல. நெக்ஸ்ட் டைம் சரக்கடிக்கும் போது என்னையும் இன்வைட் பண்ணுங்க. தனியா அடிக்க போரிங்க்கா இருக்கும்ல" என்று கூற சாரதா அவனை பார்த்து முறைத்தாள்.

" என்ன ஜீவா கலாய்க்கிறதா நினைப்பா. நைட் என்கிட்ட என்ன பேசினேன்னு சாரதா முன்னாடி சொல்லட்டா" என்று கூற உடனே அமைதியானவன்," எனக்கு க்ளாஸ் இருக்கு நான் போறேன்" என்று சத்தமில்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். ஜீவா வித்யாவை செம்மையாக ஓட்டுவான் என நினைத்த சாரதாவுக்கு ஜீவாவின் நழுவல் போக்கு கொஞ்சம் விசித்திரமாக இருந்த அதே வேலை அவளுக்கு நேற்று ஜீவாவை எப்படி சந்தித்தோம் என்ற எண்ணமும் வராமல் இல்லை.

" அப்படி என்ன ஜீவா உன்கிட்ட பேசினாரு. நீ பேசினதும் சைலன்டா போயிட்டாறு" என்று ஆச்சரியாமக வித்யாவை பார்த்து கேட்டாள்.

" அதெல்லாம் சும்மா அடிச்சி விட்டேன். அவன் என்கிட்ட பேசின எதுவுமே ஞாபகம் இல்லை. ஆனா பயபுள்ள ஏதோ ஏடாகூடமா பேசியிருக்கான்னு மட்டும் தெரியிது. ஒரு பொண்ணு இரவு நேரத்துல கால் பண்ணாலே செக்ஸ் டாபிக் பேசுற பசங்க, அதுவும் புருஷன் இல்லாம தனியா இருக்குற ஒருத்தி போதையில பேசினா சும்மாவா இருந்திருப்பான். இருந்தாலும் அவன் என்ன பேசினான்னு அவன் வாயாலேயே கக்க வைக்கிறேன்" என்றாள்.

" அப்படி சொல்லாத வித்யா. ஜீவா இஸ் அ ஜெம். அவரு முகத்த பார்த்தா தெரியல ரொம்ப நல்ல பையன்னு" என்று கூற வித்யா சாரதாவை சற்று வித்தியாசமாக பார்த்தாள்.

" ஏய் என்ன ஜீவாவுக்கு ரொம்பதான் கூஜா தூக்குற. அவனை பத்தி உனக்கு என்ன தெரியும். சரி அத விடு ஜனனி எப்படி இருக்கா? அவள ஏதும் நீ திட்டுனியா?" என்று ஜனனியை பற்றி வித்யா விசாரித்தாள்.

" அவள எங்க நான் திட்டுறது. அவ எங்கம்மாவ அப்படியே உரிச்சி வெச்சிருக்கா. எங்கம்மா மாதிரியே நினைச்சத நடத்தி முடிப்பேன்னு நிக்குறா. என் தம்பிய போல இவளுக்கும் சுர்ரு சுர்ருன்னு கோபம் வருது. இது எங்க போய் முடியும்னு தெரியல. இருந்தாலும் மனசுக்கு கொஞ்ச்ம சந்தோசமா இருக்கு வித்யா. என்ன மாதிரி இல்லாம அவ ரொம்ப தைரியசாலியா இருக்கா. நான் அவள எப்படி வளர்க்கனும்னு நினைச்சேனோ அப்படியே வந்திருக்கா. என்ன இந்த படிப்பு மட்டும்தான் வரமாட்டேங்குது" என்று கவலைப்பட்டாள்.

" படிப்பை விடு சாரதா. இப்போ இருக்குற பொண்ணுங்களுக்கு படிப்பை விட தைரியம்தான் ரொம்பவும் முக்கியம். அது அவகிட்ட இருக்குள்ள. இனி எந்த ப்ராப்ளம் வந்தாலும் அவ சமாளிச்சிடுவா. ஆமா நேத்து எத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்தா" என்று கேட்க சார்தா,

" அவ ஜீவா கூடத்தான் வந்தா. ஒரு ஏழு மணி இருக்கும்" என்று கூற வித்யாவுக்கு பொறி தட்டியது.

' ஜீவா இவ வீட்டுக்கு போயிருக்கான். என்னமோ தப்பா நடந்திருக்கு. அதான் பயபுள்ள நம்ம அப்படி சொன்னதும் சைலன்டா போயிட்டான் போல. ஹ்ம்ம் யாருகிட்ட. கொஞ்ச நாளைக்கு டீச்சர் வித்யா, டிடக்டிவ் வித்யாவா மாறிட வேண்டியதுதான்' என மனதுக்குள் நினைத்தாள்.

அன்றைய நாள் எல்லோருக்கும் மிகவும் பரபரப்பாக போய்க் கொண்டிருந்தது. நேற்று நடந்த தொலைபேசி அலப்பறைகளை நினைக்க நேரம் இல்லாத அளவுக்கு சாரதாவும், வித்யாவும் இருக்க ஜீவாவுக்கு அவ்வப் பொழுது சாரதாவின் நினைவு இதமான தென்றல் காற்றாக வந்து சென்றது.பாடசாலை முடிந்து வீடு செல்ல தயாராகிய வித்யா வெளியில் வர அங்கு ரவீந்தர் நின்று கொண்டிருந்தான்.

' இவனுக்கு வேற கால் பண்ணி பேசியிருக்கோம். ஆனா என்னத்த பேசினோம்னுதான் நினைவுல இல்ல. சரி எதையாச்சும் சொல்லி சமாளிப்போம்' என மனதுக்குள் நினைத்தவள் அவன் அருகில் சென்றாள்.

" எப்படி இருக்க வித்யா" என்று அவன் சாதாரணமாக கேட்க அவளுக்கு எரிச்சலாக இருந்தது.

" இதை கேட்கத்தான் வந்தீங்களா? எனக்கு இதுக்கு எல்லாம் பதில் சொல்ல நேரமில்ல. நான் வீட்டுக்கு போகனும்"

" வீட்டுக்கு போய், குடிச்சிட்டு எனக்கு கால் பண்றதுக்கா" என்று புன்னகை மாறாமல் கேட்க வித்யா கோபத்தின் உச்சிக்கு சென்றாள்.

" எப்படி ரவீந்தர் உங்களால மட்டும் இப்படி ரொம்ப கேசுவலா பேச முடியுது. என்ன தப்பு பண்ண தூண்டினது நீங்க. ஆனா கடைசியில நீங்க பெரிய தியாகி ஆகிட்டீங்கள்ள. வார்த்தைகளால என்ன நீங்க எவ்வளவு கொடுமை பண்ணியிருந்தீங்கன்னு நான் எவ்வளவு எடுத்து சொன்னாலும் யாருமே நம்பலையே. நான் சித்தார்த் கூட இருந்தது மட்டும்தான் எல்லோருக்கும் பெருசா தெரியுது. இதுல உங்கம்மா பேசினது எல்லாம் என்னால தாங்கிக்கவே முடியல" என்று கோபமாக பேசினாள்.

" இப்பவும் நீ அதே பழைய வித்யா மாதிரிதான் பேசுற. ஆனா ஒரு விசயம் யோசிச்சியா. உனக்கும் சித்தார்த்துக்கும் இடையில இருந்த ரிலேஷன்சிப்ப வெச்சி நான் பிரிஞ்சி போகல்ல. நீதான் அதை காரணமா காட்டி அவன் கூட சேர்ந்து வாழலாம்னு நம்ம ரெண்டு பேரும் பிரியனும்னு சொன்ன. இப்பவும் சொல்றேன், நான் பண்ணது ரொம்ப தப்புத்தான். புத்தி பேதலிச்சி போய் அப்படி பண்ணிட்டேன். அதுக்கு தண்டனையா நான் மட்டும் பார்க்க வேண்டிய கோலத்துல என் பொண்டாட்டிய இன்னொருத்தன பார்க்க வெச்சி கடவுள் எனக்கு தண்டனை கொடுத்திட்டாரு. சில விசயங்கள் உனக்கு சொன்னா புரியாது வித்யா. புரியவும் தேவை இல்ல. ஆனா நைட் நீ பேசிட்டு வெச்சதும் எனக்கு ஒரு மாதிரி பயம் வந்திடிச்சி. நீ இருந்த மன்நிலைக்கு எதுவும் தப்பா பண்ணிடுவியோன்னு. அதான் உன்ன பார்க்க வந்தேன்" என்றான்,

" அதான் பார்த்தாச்சில்ல. இன்னும் உயிரோடத்தான் இருக்கேன். சூசைட் பண்ணிக்கிட்டு சாகுற அளவுக்கு வித்யா ஒன்னும் கோழை கிடையாது"

" அது எனக்கு தெரியும். ஆனா நீ நைட் குடிச்சிருந்த. போதையில எதுவும் பண்ணிக்குவியோ என்ற பயம் எனக்கு" என்றான்.

" உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி மிஸ்டர் ரவீந்தர். சாரி, புத்தி பேதலிச்சி, ஐ மீன் போதையில உங்களுக்கு கால் பண்ணிட்டேன். இனிமே போதையில கூட கவனமா இருந்துக்குவேன். யூ மே கோ நெள" என்று கூற ரவீந்தருக்கு அவமானமாகிப் போனது.

" சரி வித்யா, நான் போறேன். ஆனா என் மனசுல இப்பவும் நீ இருக்க. எப்பவும் இருப்ப. நான் பண்ணது மிகப் பெரிய தவறுதான். ஆனா மன்னிக்க முடியாத குற்றமான்னு கேட்டா இல்லைன்னுதான் சொல்லுவேன். என் பொண்டாட்டி மேல இருந்த பொசசிவ்னஸ்னால அப்படி பண்ணிட்டேன்னு சொல்லி நான் பண்ண தப்ப சரின்னு நிரூபிக்க விரும்பல. ஐ அம் ரியலி சாரி" அவளின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் அங்கிருந்து சென்றான். அங்கிருந்து அவன் சென்றதும் வித்யா மனதில் ரவீந்தரை தான் கொஞ்சம் அதிகமாக காய்ப்படுத்தி விட்டோமோ என்று தோன்றியது.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro