17

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஜீவா தூக்கம் வராமல் சாரதாவின் நினைவில் உழன்று கொண்டிருந்தான். அவனுக்கும் தூக்கத்துக்கும் எட்டாம் பொருத்தம் ஆகிப்போனது.

அதே நேரம் வித்யா வீட்டில்...

" என்ன சாரதா, எப்போமே நான் தான் பேய் உலா வரும் நேரத்துல கால் பண்ணுவேன். இன்னைக்கு நீ பண்ணியிருக்க. ஏய் பக்கி. என்ன ஏதும் திருட்டு தனம் பண்றியா?" என்று வித்யா தனது வழமையான பாணியில் கேட்டாள்.

" நீ வேற வித்யா, இன்னைக்கு என் மானமே போச்சி"

" என்னடி உளர்ற. அதான் ஜனனியோட அந்த ப்ராப்ளம் ஈசியா சால்வ் ஆகிடிச்சின்னு சொன்ன. அப்புறம் என்ன பராப்ளம்"

" ஹ்ம்ம் முருங்கைக்காய்க்கு உப்பில்லையாம்" என்று சாரதா சொல்ல வித்யா அவளை வம்புக்கு இழுத்தாள்.

" என்னடி பொதுவா சுரக்காய்க்குத்தான் உப்பில்லைன்னு சொல்வாங்க. நீ என்னடான்னா முருங்கைக் காய்க்கு உப்பில்லைன்னு சொல்ற. என்ன மேட்டர்" என்றாள்.

" ஆமா மேட்டர்தான். போ வித்யா நானே கடுப்புல இருக்கேன்" என்றவள் இன்று ஜீவா வந்தது முதல் அவள் அவனை வரவேற்ற கோலம் வரை கூறி முடிக்க வித்யா விழுந்து விழுந்து சிரித்தவள்,

" ஒன்னும் தெரியாத பாப்பா, ஒன்பது மணிக்கு போட்டாலாம் தாப்பா"

" வித்யா நிஜமா எனக்கு ஜனனி கூட ஜீவா வந்தது தெரியாது. தெரிஞ்சிருந்தா நான் அந்த கோலத்துல போயிருப்பேனா. ஜீவா என்ன நினைச்சாரோ தெரியல. பதினாழு வயசுப் பொண்ணுக்கு அம்மாவா இருந்திட்டு இப்படி போய் நின்னா யாருதான் நல்லா நினைப்பாங்க" என்று ஆதங்கமாக கூறினாள்.

" அடி செருப்பால. நீ பதினாழு வயசு பொண்ணுக்கு அம்மாதான். ஆனா நீ ஒன்னும் கிழவி இல்லை. உனக்கு ஜஸ்ட் இருபத்தி ஒன்பது வயசுதான். பொதுவா இப்போலாம் வேலைக்கு போற பொண்ணுங்க இருபத்தி ஏழு வயசுலதால் கல்யாணம் பண்ணிக்குறாங்க. நீ இப்போ ஓக்கேன்னு சொல்லு, உன்ன கல்யாணம் பண்ணிக்க பத்து பேரு லைன்ல நிப்பாங்க. பதினாழு வயசு பொண்ணுக்கு அம்மாவாம்ல அம்மா. ஏன்டி உன்னயும் ஜனனியையும் பார்த்தா அம்மா பொண்ணு மாதிரியா இருக்கு. அக்காவும் தங்கச்சியும் மதிரி இல்ல இருக்கு. என்ன பாரு, கல்யாணத்துக்கு அப்புறம் ஜாஸ்த்தியா சாப்பிட்டு லைட்டா குண்டாகிட்டேன். ஆனா நீ இன்னும் சிக்குன்னுதானே இருக்க.  வேணும்னா நீ ஜீவாகிட்ட போய் அவன லவ் பண்றேன்னு சொல்லி பாரேன். அவன் பத்துக் கால்ல ஓக்கே சொல்வான்" என்று கூற சாரதாவுக்கு தலை சுற்றியது.

" வித்யா விளையாடாத, என்ன பேச்சு பேசுற. நீ பேசுரத யாராச்சும் கேட்டா என்ன நினைப்பாங்க. கூட வேலை பார்க்குறவங்க கூட இப்படி சேர்த்து வைத்து பேசுறது நல்லாவா இருக்கு" என்று காட்டமாக கூறினாள்.

" நான் அப்படித்தான்டி சொல்வேன். நீ செம்ம பிகர். இப்ப நீ ஒக்கேன்னு சொல்லு. உன்ன கட்டிக்க நீ நான்னு லைன்ல நிப்பானுங்க. அதுல முதல் ஆளா நம்ம ஜீவா, சாரி உன் ஜீவா நிப்பான்" என்று கூறினாள். சாரதாவுக்கு அப்போதுதான் புரிந்தது வித்யா குடித்திருக்கின்றாள் என்று.

" எருமை மாடே குடிச்சிருக்கியா? உன்ன சொல்லியிருக்கேன்ல வீக்லி ஒரு வாட்டித்தான் குடிக்கனும்னு. குடிகாரி, குடிகாரி உன்கிட்ட வந்து பேசினேன் பாரு. என் புத்திய செருப்பால அடிக்கனும்" என்றவள் அவளின் காலை கட் செய்தாள்.சாரதா இப்படி காலை கட் செய்த்தது வித்யாவுக்கு கோபத்தை வரவழைத்தது. அவள் சாரதாவுக்கு மறுபடியும் கால் செய்ய அந்த அழைப்பு ஏற்கப்படாமல் போனது. உடனே அவள் ஜீவாவுக்கு கால் செய்தாள்.

" என்ன வித்யா இந்த நேரத்துல கால் பண்ணியிருக்க" என்று ஜீவா கேட்டான்.

" ஏன் நான் கால் பண்ணா பேச மாட்டீங்களோ. ஓஹ் நீங்க சாரதா காலுக்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க போல" என்று குதர்க்கமாக அவள் பேச ஜீவாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

" வித்யா லூசு மாதிரி உளறாத. நான் எதுக்கு சாரதா மிஸ் கால எதிர்பார்த்திருக்கனும்"

" ஆமா நீ ஏன் அவங்க கால எதிர்பார்த்திருக்கனும். நீ வீடியோ கால் இல்லை எதிர்பார்த்திருப்ப. தனியா வீட்டுல இருந்த பொண்ணுகிட்ட போய் ரவுசு பண்ணியிருக்க. உன்னை எல்லாம் நிக்க வெச்சி சுடனும்டா. நீ பண்ண காரியத்தால என் செல்லம் என் கூட கோவிச்சிக்கிட்டா. அவ என்கிட்ட எப்போமே கோச்சிக்கிட்டது இல்லை தெரியுமா. அவ என்னோட டார்லிங்க். நீ எனக்கும் என்னோட டார்லிங்க்கும் இடையில ப்ராப்ளத்த உருவாக்கிட்ட. உன்ன கொல்லாம விடமாட்டேன்" என்றவளின் பேச்சு குழறலை ஜீவா இப்போதுதான் கவனித்தான்.

" வித்யா குடிச்சிருக்கியா" என்று ஜீவா கேட்டான். ஏனென்றால் அவள் அவ்வப்போது குடிப்பது அவனுக்கு தெரியும். பெரிய இடங்களில் பெண்கள் குடிப்பது சகஜமான ஒரு விடயம் தானே.

" நான் போன வைக்கிறேன் .நாளைக்கு பேசலாம்" என்று கூற வித்யா மறுமுனையில் பத்ரகாளி ஆனாள்.

" மவனே இப்போ மட்டும் நீ காலை கட் பண்ணு. என் தற்கொலைக்கு நீதான் காரணம்னு சொல்லி தூக்கு தொங்குவேன்" என்று கூற ஜீவாவுக்கு தலை சுற்றியது. வித்யாவுடன் வாதம் புரிய ஜீவா விரும்பவில்லை.

" ஹலோ, ஹலோ.. வித்யா கேட்குதா? இங்க சிக்னல் கிடைக்கல்ல வித்யா" என்று அவனின் வார்த்தைகள் முடியும் முன் அவன் காலை கட் செய்துவிட்டு தனக்குள் சிரித்துக் கொண்டான்.

இங்கு வித்யா ஜீவா மீது கடும் கோபத்தில் இருந்தாள்.

' நாயே என் காலயாடா கட் பண்ற. இரு நான் தூக்குல தொங்குறதுக்கு முன்னாடி இன்னும் ரெண்டு பேரு இருக்கானுங்க, அவனுங்களையும் என் தற்கொலைக்கு காரணமா எழுதி வெச்சிட்டு தொங்குறேன்' என மனதுக்குள் நினைத்தவள் ரவீந்தருக்கு கால் செய்தாள்.

" டெய் கபோதி, நீ என்ன அவ்வளவு பெரிய மயிராடா? உனக்கு இந்த க்ரேட் வித்யா பொண்டாட்டியா வந்ததே பெரிய விஷயம். அவ எப்படி இருந்தா உனக்கு என்ன" என்று கூற மறுமுனையில் ரவீந்தர் குழம்பினான்.

" ஹேய் வித்யா என்ன உளர்ற. என்ன குடிச்சிருக்கியா"

" ஆமா குடிக்கிறேன், இல்ல எவன் கூடவோ படுக்கிறேன். உனக்கு என்ன வந்திச்சி. சித்தார்த்தும் நானும் மூணு வருஷம் காதலிச்சோம். எத்தனையோ தடவை தப்பு செய்ய சந்தர்ப்பம் அமைஞ்சது. அப்போ எல்லாம் நாங்க ரொம்ப கண்ணியமா அதை தவிர்ந்துக்கிட்டோம். ஆனா நான் எப்போடா தப்பு பண்ணேன். சொல்லுடா, நான் எப்போ தப்பு பண்ணேன்" என்று கேட்க அவன் மறுமுனையில் அமைதியாக இருந்தான்.

" எனக்கு தெரியும்டா உன்னால பதில் சொல்ல முடியாதுன்னு. ஏன்னா நீ பண்ண கேவலமான காரியத்தாலதான் நான் தப்பு பண்ணேன். என்ன தப்பு பண்ண தூண்டினது நீ. உனக்கு பாடம் புகட்டாம விடமாட்டேன். நாளைக்கு காலையில போலீஸ் உன் வீட்டுக்கு வரும் போது தெரியும் இந்த வித்யா யாருன்னு" என்றவள் காலை கட் செய்தாள்.

ரவீந்தரை அவ்வளவு திட்டியும் அவள் மனது ஆறவில்லை. உடனே சித்தார்த்துக்கு கால் செய்தாள்.

" ஹலோ சித்தார்த் சார் இருக்காங்களா?" என்ற அவளது பேச்சு குழறலாக இருந்தது. அவளது இந்த குழறல் குரலை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

" ஆமா சித்தார்த்தான் பேசுறேன். நீங்க யாரு"

" ஆமாமா, என்னை எல்லாம் உனக்கு ஞாபகம் இருக்குமா? எம் நம்பர கூட நீ டெலீட் பண்ணியிருப்ப" என்று கூற மறுமுனையில் சித்தார்த்துக்கு அப்போதுதான் புரிந்தது பேசுவது வித்யா என்று.

" இங்க பாரு வித்யா, என் மேல எந்த தப்புமே இல்ல. நான் உன்ன கல்யாணம் பண்ணுவேன்னு எப்பவுமே சொன்னதில்ல. ஆனா நீ அப்படி கற்பனை பண்ணிக்கிட்டா அதுக்கு பொறுப்பு கிடையாது" என்று கோபமாக கூறினான்.

" கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லாதவன் எதுக்குடா என் கூட படுத்த. நீயெல்லாம் ஒரு ஆம்பளையாடா. உன்னை போய் காதலிச்சேன்னு நினைக்கும் போது எனக்கு அருவருப்பா இருக்கு"

" மைன்ட் யுவர் டங்க். நான் ஏதோ உன்ன ஏமாத்தி மேட்டர் பண்ண மாதிரி சொல்ற. அன்னைக்கு செம்ம மழை. நீ வேற ரொம்ப கவலையா இருந்த. அது நமக்குள்ள இயல்பா நடந்திடிச்சி. அதுக்கு என்மேல மட்டும் ஏன் பழிய போடுற. நான் உன்ன என்னைக்குமே கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லல்லயே வித்யா. நம்ம லவ் பன்ணப்ப கூட நாந்தனே ப்ரேக் அப் பண்ணேன். எனக்கு உன் உடம்புதான் வேணும்னு நினைச்சிருந்தா நான் காதலிக்கும் போதே உன்ன அடைஞ்சிருப்பேனே. அதுக்கும் எவ்வலவோ சந்தர்ப்பம் அமைஞ்சும் நான் ஏன் எதுவுமே பண்ணல்ல. ப்ளீஸ் என் மேல மட்டும் பழிய போடுறத நிறுத்து" என்று கூற அவள் அடற்கு முதலே காலை கட் செய்து இருந்தாள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro