பகுதி -25

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

என்னுள்ளே என்னை கண்டவள் யாரென்று எனை காணச்செய்தாள்
கேளாமல் நெஞ்சை கொய்தவள் சிற்பம் செய்து கையில் தந்தாள்
யுகம் யுகம் காண முகம் இது போதும்
புகலிடம் என்றே உந்தன் நெஞ்சம் மட்டும் போதும்
மறு உயிர் தந்தாள் நிமிர்ந்திடச் செய்தாள்
நகர்ந்திடும் பாதை எங்கும் வாசம் வீச வந்தாளே
பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
ஹே ஐ என்றால் அது அழகு என்றால் அந்த ஐகளின் ஐ அவள்தானா

"என்ன தியா மேடம் உங்க ஆளு அபியை பார்க்க போகவில்லை போலயே..."என மனோ கேட்க

இதுவரை மதியம் நடந்ததை நினைத்துக் கொண்டிருந்தவள்

"அய்யோ அண்ணா.....அவரை பாரத்தாலே லப்டப் லப்டப் னு துடிக்கிற என் இதயம் லபடபலபடலபட னு துடிக்குது..
இதயம் எகிறி குதிச்சு கீழே விழுந்திடும் போல...."அவள் தன் இரண்டு கைகளாள் இதயம் குதித்தும் விடும் போல என செய்து காட்ட....

சிரித்தவன்....வா அவன் கிட்ட போலாம்"நானும் இதயம் எகிறி குதிக்கிறதை பார்க்கணும்"

"பழமொழி சொன்னா அனுபவிக்கணும்......ஆராயக் கூடாது"

"அது பழமொழி ஆச்சே.....நீ சொன்னது பழமொழி இல்லையே மா..."

" போங்க....உங்க நிலாவை சைட் அடிக்கிற வேலையை பாருங்க...நம்மல கலாய்க்க மட்டும் எங்க இருந்து தான் வராங்களோ...."

அவளைப் பார்த்து புன்னகைத்தவன்
"என் மேஹா....நிலா இல்லை..."

"அப்பாடா...அப்போ நான் தான் நிலா"எனக் கூற

"அது அவளுக்கு நான் வைத்த பெயர்....சோ நீ தியா...அவ தான் என் மேஹா...என் நிலா....என் குண்டு தக்காளி எல்லாம் "

" ஹாஹா .....எங்க அம்மா என்னை அப்படி தான் கூப்பிடுவாங்க அண்ணா.....அவங்களுக்கு அந்த பெயர் ரொம்ப பிடிக்குமாம்...எனக்கு வைக்கலானு நினைத்த பொழுது அப்பா தியானு தான வைப்பேனு சொல்லிட்டாராம்...அதுனால என்ன அம்மா மட்டும் நிலானு கூப்பிடுவாங்க....எனக்கும் நிலா என்ற பெயர் ரொம்ப பிடிக்கும்...பிரெண்ட்ஸ் கிட்டேயும் நிலானு கூப்பிட சொல்லிட்டேன்"
எனக் கூற

"சரி....."என்றவன் அவளையும் அழைத்துக் கொண்டு மேஹா இருக்கும் இடத்திற்கு சென்றான்....

"சார்....உங்களுக்கு ஏதாவது வேலை இருக்கா???" எனக் கேட்டுக் கொண்டே அவன் முன் வந்து நின்றாள் மேஹா.......

வேர்வைத் துளிகள் முகமெங்கும் இருப்பதைப் பார்த்தவன் ரோஜா இதழ்களின் மேல் இருக்கும் பனித்துளி போல இருக்கே....அப்பப்பா....டேய் மனோ நீயும் கவிஞன் ஆகிட்டியே டா...
அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தவன்

"சார்.." என மேஹா கத்தலில் சுயநினைவிற்கு வந்தான்.

"ஆன்....சொல்லு மேஹா..."

"உங்களுக்கு ஏதாவது வேலை இருக்கா??சீக்கிரம் வீட்டுக்கு போகணும்....அதான்"என நிறுத்தியவள் உங்களுக்கு வேலை இருந்தால் நான் பஸ்ல போறேன்..."என்றவள் நகங்களைக் கடித்துக் கொண்டே அவனது பதிலை எதிர்ப்பார்க்க

அவளை ரசித்துக் கொண்டே "போலாமே...எனக்கு எந்த வேலையும் இல்ல செல்லம்....உன்னை கூட்டிட்டு போறது மட்டும் தான் மாமாவோட வேலையே...."என மனதில் நினைத்தவன் "இரு மேஹா இப்போ வரேன்" என முகிலிடம் சென்றான்.

"டேய் மச்சா....எல்லா வேலையும் பாத்துக்கோ....எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு..." என மனோ கூற

"டேய் அபி....மத்தவங்க வேலைலாம் என்னால பார்க்க முடியாது டா...அவனை இங்க இருந்து பார்க்க சொல்லு..." என முகி மனோவைப் பார்த்து முறைத்துக் கொண்டே கூறினான்....

மேஹாவைப் பற்றி கூறி அவளுக்காக சண்டை போட்டதோடு சரி அன்றிலிருந்து இன்று வரை மனோவுடன் பேசுவதில்லை...

முகியைப் பார்த்து சிரித்தவன் அவன் தோள்மீது கைப் போட்டுக் கொண்டு "நான் முக்கியமான வேலையா முக்கியமான ஒருத்தர் கூட போறேன்.....நீ காமெடி பண்ணாம வேலையை பாரு"என்றவன் செல்ல முற்பட

"அவன் இப்போ எந்த பெண்ணை கூட்டிட்டு போறானாம் அபி" முகி கேட்க

"உன் தங்கச்சி கூட" எனக் கூறி மனோ கண்ணடிக்க

"பாக்குறவ எல்லாம் எனக்கு தங்கச்சி ஆகிட முடியாது....என் மேஹா மட்டும் தான் என் தங்கச்சி" எனக் கூறி மனோவைப் பார்த்து முறைத்தான்.

"அந்த தொங்கச்சியைத் தான் நானும் சொல்லுரேன்....என் செல்லா குட்டி மேஹாவை கூட்டிட்டு போரேன்"என்றவன் அவனைப் பார்த்து கண்ணடித்து விட்டு அவன் கேசத்தை கோதி கொண்டு விசிலடித்துக் கொண்டே சென்றான்...

அவன் செல்வதையேப் பார்த்தவன் "இது என்னடா புது கதையா இருக்கு...."என வாயைப் பிளந்தவன் "ஆனாலும் நல்லா தான் இருக்கு..."எனக் கூறி சிரித்து விட்டே தன் பணியைத் தொடர்ந்தான்.

அபிக்கோ எல்லையில்லா ஆனந்தம்...அவன் மேஹாவை மனோ சாருக்கு பிடித்துவிட்டது.தான் காதல் தான் சேரவில்லை என்றாலும் அவள் காதல் சேர போகிறது....
அந்த மகிழ்ச்சியிலேயே மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தான்.

அவன் முகத்தில் இருந்த மகிழ்ச்சி ஏனோ தியாவையும் தொற்றிக் கொண்டது.சிரித்த முகமாகவே அன்று முழுவதும் வலம் வந்தாள்.....

காரில் ஏறியவன் மேஹாவை ஏறச் சொல்ல அவளும் முன் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டு வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்....

" இந்த குண்டு தக்காளி பேச மாட்டா போல...என்ன பண்ணலாம்"என யோசித்தவன்

"மேஹா...இன்னைக்கு ஈவ்னிங் ஏன் எனக்கு ப்ரொபோஸ் பண்ண"எனக் கேட்க

அவனைப் பார்த்து முறைத்தவள்
"அறிவுங்கிறதே கொஞ்சோ கூட இல்லை...வேற யாருக்கு பண்ணுறதாம்"மனதில் அவனைத் திட்டியவள் எதுவும் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

"கேட்க கூடாத கேள்வியை கேட்டுட்டோம் போல....என்னமா முறைக்கிறா"மனோ உன் நிலைமை மோசம் தான்.

"இல்லை மேஹா....அந்த செட்டப் அதாவது பூ கொட்டுனது அப்புறம் நீ ப்ரொபோஸ் பண்ணது எல்லாம்"என அவன் கூறி முடிப்பதற்குள்

"அய்யோ சார்...அதை விடுங்க. நான் வேற வழியில்லாமல் தான் அதை பண்ணேன்...நீங்கள் என்றால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள்...அதுனால தான் உங்க கிட்ட சொன்ன"எனக் கூறியவள்
என்னால வேற யார்கிட்டேயும் இப்படி சொல்லியிருக்க முடியாது
சார் என மனதில் நினைத்துக் கொண்டாள்.

"தெரியும் மேஹா....உன்னால என்னைத் தவிர வேற யார்கிட்டேயும் லவ் பண்ணுரேனு சொல்ல முடியாது"என மனதில் நினைத்தவன் அவளைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தான்.

"ப்ராக்டிஸ்லாம் எப்படி போகுது??"

அதுவரை மௌனமாக இருந்தவள் அவன் புறம் திரும்ப அமர்ந்து கொண்டு ஆர்வமாக பேச ஆரம்பித்தாள்.

"அய்யோ ராமா...இது என்ன எனக்கு வந்த சோதனை...என்னடி செல்லம் இவ்வளவு க்யூட்டா எக்ஸ்பிரஷன் கொடுத்து என்னை கொல்லுற" என மனதில் நினைத்தவன் அவளை விட்டு தன் கண்களை விலக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு காரை ஓட்டினான்.

இரவு நாளைக்கான ஆடைகளை எடுத்து வைத்தவள் கைகளில் மருதாணி வைக்க வேண்டும் என தோழி கூறியது நியாபகத்திற்கு வர தோழி கொடுத்த மருதாணியை ஹாலிற்கு எடுத்துக் கொண்டு வந்தாள்.

(இன்றைய காலகட்டத்தில் அனைவரும் மறந்து விடும் ஒன்று.மருதாணி அரைத்து கைகளில் இட கடினப்பட்டு விட்டு பேஷன் என்ற பெயரில் மெஹந்தியை கைகளில் இட்டுக் கொள்கின்றனர்.மருதானி தெய்வீக மூலிகை வரிசையில் துளசியைப்போன்று மகாலட்சுமி வாசம் செய்யும் மருத்துவ குணம் கொண்ட புதர்வகை செடியை சார்ந்ததாகும். மருதானிக்கு அசோகமரம் என்ற பெயரும் உண்டு.

சீதையை சிறை வைத்திருந்த இடத்தில் மருதானி மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததால் அதற்கு அசோக வனம் என்ற பெயர் ஏற்பட்டது.

இராமாயணத்தில் சீதை இலங்கையில் அசோக வணத்தில் இருக்கும்போது சீதைக்கு தனது கிளைகளின் அசைவால் ஆறுதல் கூறி வந்தது. சீதை இந்த மரத்திற்கு கொடுத்த வரம்; உன்னை பூஜிப்பவர்க்கு, தண்ணீர் ஊற்றுபவர்களுக்கு உன் இலைகளை சாப்பிடுபவர்களுக்கு,கையில் பூசி கொள்பவர்க்கு துன்பம் வராது என்று.)

அதைப் பார்த்த மனோ அவளுக்கு வைத்து விட வேண்டும் என ஆசை எழ அவளிடம் சென்றான்.

மருதாணியை கொண்டு வந்தவள் எப்படி இரண்டு கைகளிலும் வைத்துக் கொள்வது என யோசித்து விட்டு நாளை காலையில் தோழியிடமே சென்று வைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து தன் அறைக்குச் செல்ல எழுந்தாள்.

"மேஹா"என மனோ அழைக்க

"சொல்லுங்க சார்"

"ஏன் மருதாணி வைக்காம உள்ள போற"

"இரண்டு கைகளிலும் வைக்கணும் சார்.எனக்கு அப்படி வைக்க வராது...அதான் நாளைக்கு வைத்துக் கொள்ளலாம்னு"எனக் கூற

"நான்...நான் வேணா வைத்து விடவா??" எனக் கேட்டவன் மேஹாவைப் பார்க்க

அவள் சிரித்துக் கொண்டே "நீங்கலாம் எனக்கு வைத்து விடுவீர்களா?? உங்களுக்கு உங்க தோழிக்கு மட்டும் தான் வைத்து விட பிடிக்கும்..." என்றவள் உள்ளே செல்ல எத்தணிக்க

"உனக்கு வைத்து விடவும் பிடிக்கும் தான்"என மனோ கூற

திரும்பி அவனைப் பார்த்தவள்
"ஆனால் அன்றைக்கு நீங்க தான் எனக்கு வைத்து விட மாட்டேன்னு சொன்னீங்களே"

"யார் சொன்னா?? "என்றவன்

"அடுத்த நாள் உன் கைகளில் மருதாணி இருந்துச்சு தான" என அவன் கேட்க

"அவள் ஆமாம் என்று தலையசைத்தாள்.."

"ம்ம்" என்றவள் திரும்பி செல்ல

"சார்...அன்றைக்கு யாரு வைத்து விட்டா?? நான் அன்றைக்கு வேற ஒரு டென்சன்ல இருந்தனால அதை பத்தி யோசிக்க மறந்துட்டேன்"எனக் கூற

"ஓஓஓஓ "என்றவன் அதுல கூட GT னு எழுதி இருந்துச்சா??

"ஆமா சார்...ஆனால் எனக்கு அது எதுக்கு போட்டாங்க? யாரு போட்டாங்கனு தான் தெரியல" என்றவள் யோசித்துக் கொண்டே இருக்க

"மரமண்டை மரமண்டை...இவ்வளவு தெளிவா எல்லாம் கேட்கிறேன்.எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும் கேட்கிறாளா பாரு...டியூப்லைட் " என்றவன்
அவள் யோசிக்கும் அழகை ரசித்துக் கொண்டிருந்தான்.

"அங்க தான் ஒன்னும் இல்லையே...இன்னும் எதுக்கு யோசிச்சுட்டு..."என மனோ கூற

அவனை முறைத்தவள்
"நீங்க தான் எனக்கு போட்டுவிட்டீங்களா??" அவன் ஆம் என்று கூறினால் எவ்வளவு மகிழ்வாக இருக்கும் என அவன் கண்களையேப் பார்க்க
அவன் ஆம் என தலையசைத்தான்.

அன்று முகிலின் திருமணத்தில் மேஹாவிற்கு மருதாணி வைக்க பிடிக்காது எனக் கூறி நந்துவிற்கு மருதாணி வைத்து விட்டாலும் மனம் தாங்காமல் மேஹாவின் அறைக்குச் சென்றான்.

குழந்தைப் போல் தூங்கிக் கொண்டிருந்தவளைக் கண்டவன் சிரித்துக் கொண்டே அவளுக்கு மருதாணி வைத்து விட்டான்.

விழிகள் விரித்து அப்படியா என மேஹா கேட்க அவள் கேட்ட அழகில் சொக்கித் தான் போனான்.

அவளை அணைக்க துடித்த கைகளை கட்டுப் படுத்த சிரமப்பட்டவன் நான் போறேன் எனக் கூற

"மருதாணி போட்டு விடுங்களேன் ப்ளீஸ்" என அவள் கண்களாலே கெஞ்ச

"பாவி பாவி மனுசன பாடா படுத்துறாளே "என மனதில் புலம்பியவன் அவளுக்கு வைத்து விட ஆரம்பித்தான்..

அவனையே மேஹா பார்த்துக் கொண்டிருக்க

"போதுமா போதும் என்னை சைட் அடிச்சது "என மனோ தலையை நிமிர்த்தாமலே கூற

அதில் நாணம் கொண்டவள் தலை குனிந்து கொண்டாள்.

அவளை அறைக்கு அழைத்துச் சென்றவன் அவளைப் படுக்க வைத்து பெட் சீட் எடுத்து போர்த்தி விட்டான்.

அவள் அவனைப் பார்த்து புன்னகைக்க "குட் நைட் "எனக் கூறியவன் வெளியே செல்ல

"சார் GT அப்படினா என்ன??"

அவளைப் பார்த்து கண்ணடித்தவன் "குண்டு தக்காளி"எனக் கூறிவிட்டு சென்று விட்டான்.

அய்யோ எனக் கூறியவள் முகத்தில் புன்னகை அரும்பி இருந்தது.

காலையில் புடவையில் தயாராகி வந்தவளை கண் கொட்டாமல் பார்த்தான்.

வீசி வரும் தென்றலே !!
பூத்து வரும் புன்னகையே !!
பூமிக்கு அழகு சேர்த்த மங்கையே !!
புயலை போல் தாக்கும் கோபத்தின் குலவிளக்கே.. !!!
குயிலின் கூவுதலை குத்தகைக்கு எடுத்து பேசுபவளே !!!
காற்றோடு வார்த்தை கலந்து வீசுபவளே..!!
கண்களால் காவியம் இயற்றுபவளே !!!
சிரிப்பாள் மனதை கொள்ளையடிப்பவளே.... !!

முகிலின் திருமணத்தின் போது அவளைப் புடவையில் பார்த்திருக்கிறான்.

ஆனால் அன்று போல் இல்லாமல் ஏதோ ஒன்று அவனை இன்று இம்சை செய்தது(😜காதல் தான்)

சிவப்பு நிற புடவையில் அவள் கார்கூந்தல் காற்றில் நடனமாட,என்றும் முகத்தில் ததும்பி
இருக்கும் புன்னகையில் அவனை நோக்கி வந்தாள்.

ஐந்தடிக்கும் சற்று குறைவான உயரம்,அழகான கார்கூந்தல்,என்றும் புன்னகை மாறாத குழந்தை முகம்,பார்ப்போரைக் கவரும் நிறம்
இன்று தான் முதன் முதலாக மேஹாவைப் பார்க்கிறான் கண்களில் காதலுடன்.

மனோவின் அருகில் வந்து நின்றவள் அவன் கண்களைக் காணாமல் தன் புடவையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்க அவனிடம் இருந்து எந்த பதிலும் வராமல் இருக்க நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

அவன் பார்வை அவளை ஏதோ செய்ய அவளின் புடவை நிறத்திற்கே அவளின் முகமும் மாறியது.

அவள் வெட்கப்படுவதை உணர்ந்தவன் அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே இன்னும் அவளிடம் நெருங்கி நின்றான்.

மருதாணி வாசமும்,காற்றில் ஆடும் கார்க் கூந்தலில் இருந்து வரும் சீகைக்காய் வாசமும் அவனை ஏதோ செய்ய அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்.

கண்கள் விரித்து அவள் அவனைப் பார்க்க அவளைப் பார்த்து கண்ணடித்து விட்டு அவன் சென்று விட்டான்.

மந்திரித்து விட்டவள் போல அவனை பின் தொடர்ந்து சென்றாள்.

கல்லூரியின் முன் இறக்கி விட்டவன் ஒரு நிமிடம் எனக் கூறி "ஆல் தி பெஸ்ட்" எனக் கூற ம்ம் என தலையசைத்தவள் எதுவும் பேசாமல் சென்றாள்.

அவள் இதயத்தின் துடிப்பு அவளுக்கே கேட்கும் போல....முதல் முத்தம் அதுவும் தன்னவனிடமிருந்து...மகிழ்ச்சி அடைவதா??? வருத்தம் கொள்வதா?? எதுவும் தெரியவில்லை....

"ஆனால் ஏதோ ஒரு மூலையில் சந்தோஷமாக இருக்க...."தன் தலையில் கொட்டி விட்டு நண்பர்களைத் தேடிச் சென்றாள்.

அவளின் அனுமதி இல்லாமல் முத்தமிட்டதில் தன்னை தப்பாக நினைத்துவிடுவாளோ என மேஹாவையே பார்த்துக் கொண்டிருக்க இறுதியில் அவள் சிரித்துக் கொண்டு செல்வதைப் பார்த்ததும் சந்தோஷம் தாங்க முடியாமல் "ஆஊஊ "எனக் கத்தி குதிக்க ஆரம்பித்து விட்டான்.

"லவ் யூ டி....குண்டு தக்காளி" எனக் கூற

" யாரு டா அது" அவனை முறைத்துக் கொண்டே வந்து நின்றான் முகில்.

"ஈஈஈஈ " என இளித்தவன் "மேஹா"எனக் கூற

"டேய் டேய் ப்ளீஸ் டா...வெட்கம் மட்டும் படாத...சகிக்கல...எப்போ இருந்து டா இப்படி??" எனக் கேட்க
நடந்த அனைத்தையும் கூறியவன் கடைசியில் முகி கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தான்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro