பகுதி -26

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

தினம் தினம் உனை நினைக்கிறேன் துரும்பென உடல் இளைக்கிறேன்
உயிர் கொண்டு வரும் பதுமையே உனைவிட இல்லை புதுமையே
உன் புகழ் வையமும் சொல்ல சிற்றன வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல உயிரே

என்னடா முகி சொல்லுற??அப்போ என் மேஹா என்னை ஏத்துக்க மாட்டாளா??

"அய்யோ மச்சான் நான் அப்படி சொல்லலை.மேஹா அப்படி நினைக்கவும் வாய்ப்பு இருக்கேனு சொல்லுறேன்"என முகி கூற

அவள் தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டாளோ என்ற பயம் வர அப்படியே நாற்காலியில் சரிந்தான்.

"டேய் மச்சான் நீ ஃபீல் பண்ணாத.மேஹாக்கு நீ மட்டும் தான் எல்லாம்...உன்னை எப்படி அவ வேணாம்னு சொல்லுவா?"

"ஆமால மேஹாக்கு என்னைத் தான் பிடிக்கும்.முகி உன் தங்கச்சி என்னை விட்டுட்டு போ மாட்டா தான.அவ இல்லாத வாழ்க்கையை என்னால நினைத்து கூட பார்க்க முடியலடா.
அவ இல்லாம நான் எப்படி இருப்பேன்??அவ தான என்னைப் பார்த்துக்கணும்,அவ வேணும் எனக்கு"எனக் கூறியவனின் கண்கள் கலங்க

"காலையில் நல்லா வந்தவனை இப்படி அழுக வைத்துவிட்டேனே"என முகி வருந்தினான்.

"உன் மேஹா டா உனக்கு மட்டும் தான் ஓகே வா?"

"ம்ம்ம் ஆனா???"

" என்ன ஆனா??"

"நீ சொன்ன மாதிரியே அவளும் சொன்னா???"

"எப்படி சார் நிலா நிலானு சொல்லிட்டு இப்போ என்மேல லவ் வந்துச்சுனு அவ கேட்டா என்ன பண்ணுவனு தானே டா கேட்டேன் நான் தான் இப்படி லூசு மாதிரி யோசிப்பேன்.
என் தங்கச்சி அப்படிலாம் யோசிக்க மாட்டா" எனக் கூறி அவனை சமாதானப்படுத்தினான்.
(ஒருவேளை மேஹாவும் இதையே கேட்டா)

"டேய் சிறப்பு விருந்தினர் வர நேரமாச்சு சீக்கிரம் வா"எனக் கூறி விட்டு முகி விழா நடக்கவிருக்கும் இடத்திற்கு சென்றான்.

அங்கு மேஹாவை அவள் தோழிகள் கலாய்த்துக் கொண்டிருந்தனர்.

"மேஹா என்னடி உன் முகம் இவ்வளவு அழகா பளிச்சுனு இருக்கு டல் மேஹா தூள் மேஹா ஆகிட்டாளே"எனத் தோழிகள் கலாய்க்க

என்ன சொல்லி சமாளிப்பது எனத் தெரியாமல் திருத்திருவென முழித்துக் கொண்டிருந்தாள்.

"ஓய் என்ன என் தங்ச்சியை கலாய்க்கிறீங்களா??போங்க போங்க போய் உருப்படுற வேலையை பாருங்க"என்றவன் "நீ வா மேஹா இங்கே" என்றவன் தன் பங்கிற்கு அவளை கலாய்க்க ஆரம்பித்தான்.

"என்னமா எக்ஸஸ் அழகு எங்கே இந்த பக்கம்"எனக் கேட்க

"அய்யோ அண்ணா நீங்களுமா??"

"சரி சரி அதென்ன உனக்கு மருதாணி வைக்கும் போது என் மச்சானுக்கும் வைத்து விட்டியா??"

"ஈஈஈஈஈ என இளித்தவள் கீழே குனிந்து கொண்டே அவரு தான் அண்ணா எனக்கு "என இழுக்க

"ஓஓஓஓ ஓஹோ..."எனச் சிரித்தவன் "அய்யோ மேஹா"என முகி கூற

"என்ன அண்ணா??" எனக் கேட்டாள்.

"உன் கையை விட உன் முகம் சிவந்து இருக்கு என் மச்சான் உன் முகத்துக்கும் மருதாணி போட்டுவிட்டான் போலயே"அவன் சிரிக்க

அவள் முகம் சிவக்க காரணமோ நேற்று மருதாணி வைக்கும் போது அவன் அருகாமையில் அமர்ந்ததை எண்ணி தான்.

"ஹலோ ஹலோ சோனி...ஆன் என்ன ஓவரா தான் கலாய்க்கிறீங்க??பிச்சு பிச்சு பாவம் புள்ளை கொஞ்ச நேரம் கலாய்ச்சுட்டு போகட்டும்னு விட்டா.
சில்வண்டுக்கு ஆட்டத்தைப் பாரேன் சோனிக்காக்கிட்ட சொல்லிருவேன்"அவள் அவனை மிரட்ட

"ஹா ஹா மேஹா இஸ் பேக் அதான பார்த்தேன். என்னடா என் தங்கச்சிக்கு வெட்கம் வந்துருச்சேனு அதெல்லாம் உலக அதிசயம்"எனக் கூறிச் சிரித்தவன் நல்லா பர்பார்ம் பண்ணுங்க ஆல் தி பெஸ்ட் குரங்கு பாப்பா "எனக் கூறி தலையில் கொட்டி விட்டுச் சென்றான்.

"தேங்க் யூ குரங்கு அண்ணா"என்றவள்

அப்பாடா எப்படியோ அனுப்பியாச்சு என்னமா கலாய்க்கிறாங்க என நினைத்தவள் நேற்று மருதாணி வைக்கும் போது நடந்ததை நினைத்துப் பார்த்தாள்.

அவன் அவள் கைகளை பிடித்து தன் மடிமேல் வைத்துக் கொண்டு அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.

நூலளவு கூட இருவருக்குமிடையில் இடைவெளி இல்லாமல் இருக்க அவனின் திரவிய வாசனையும் மின்விசிறியின் வேகத்தால் ஆடும் அவன் கூந்தல் அவள் முகத்தில் குறுகுருப்பை ஏற்படுத்த அவள் நெளிந்து கொண்டே இருந்தாள்.

நிமிர்ந்து அவளைப் பார்த்தவன் அவள் முகத்தருகே நெருங்கி சென்று காதருகே இருக்கும் முடியை விலக்கி விட்டு "இப்போ ஆடாம இருக்கியா இல்லை கையில் நான் கோலம் போடவா??"என புருவத்தை உயர்த்திக் கேட்க

விழிவிரித்து அவனையே பார்த்தவள் ம்ம் என தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.

அவன் இன்னும் அவளை நெருங்கி அமர்ந்து கைகளை இழுத்து வைத்துக் கொள்ள

"ம்ம்க்கும் விட்டா மடிமேல உட்கார வைத்துவிடுவார் போலயே"அவள் முணுமுணுத்தாள்.

"ஒழுங்கா உட்காரவில்லையென்றால் அதுவும் நடக்கும்"என்றவன் சிரிக்க

"அய்யோ"என்றவள் கண்களை மூடிக் கொண்டாள்.

நேற்று நடந்ததை நினைத்தவளுக்கு இப்பொழுதும் வெட்கம் வர"மேஹா உன் மூஞ்சி தாண்டி உனக்கு எதிரி பாரு பாரு எப்படி சிவக்குதுனு" என கண்ணாடி முன் நின்று புலம்பிக் கொண்டிருந்தாள்.

"ஹலோ மேடம் புலம்புனது போதும் வாங்க டைம் ஆச்சு போலாம்"எனத் தோழிகள் கலாய்க்க

ஈஈஈஈ என இளித்தவள் அவர்களுடன் சென்றாள்.

சிறப்பு விருந்தினராக அந்த கல்லூரியின் முன்னாள் மாணவனையே அழைத்திருந்தனர்.
அவன் ஒருகாலத்தில் செகரெட்டரியாக இருந்தவன்.

விழா இனிதே தொடங்க மாணவர்கள் ஆரம்பித்தனர்.

"ஹலோ ஹலோ ஹல்லல்லோ..."என ஒருவன் கூற

"என்ன மச்சி அது அப்படில்ல மைக் டெஸ்ட்டிங் 1 2 3 அப்படி"

"அய்யோ மாப்பிள்ள நான் சும்மா சொன்னேன் டா அதென்ன எல்லாருக்கும் கைத்தட்டல்,விசில் நமக்கு மட்டும் இல்லை அதான்"அவன் இளிக்க

"ஹாஹா நமக்கு எதுக்கு மச்சி ஆடம்பரம் வந்தோமா,ஒழுங்கா வேலையை பாத்தோமா,கொடுக்கிற ஒரு டீ சமோசாவை ஒரு ஓரமா வைத்து சாப்பிட்டோமானு இருக்கணும்"

மாணவர்கள் ஆஆஉஉஉ எனக் கத்த

"அய்யய்யோ ஏண்டா மாப்பிள்ளை நான் காம்பைரிங் பண்ணுறனால எனக்கு பிரியாணி தருவாங்கனு சொல்லி வெச்சேன் கவுத்துப்புட்டியேடா"

ஈஈஈஈ எதுக்கு அவன் கேட்க

ஒரு விளம்பரம் என்றவனை

ஆணியே பிடுங்க வேணாம் என்றான்.

சரி விடு மாப்பிள்ள ஆட்டைய கழச்சிடுவோம் நீ போட்ட கோட்டை எல்லாம் அழி நான் மொதல்ல இருந்து பேசுறேன்.

சப்பா அய்யோ இவனை போய் என்கூட கோத்து விட்டுடாங்களே அவன் தலையில் கை வைத்துக் கொள்ள

"இல்லனா இவர் கூட கூட்டணி தீபிகா படுகோன் வந்துருப்பாங்க உனக்குலாம் நானே பெரிசு டா வா வா கொடுககிற சமோசாக்கு ஒழுங்கா வேலை பார்ப்போம்"

"நான் ரொம்ப நேரமா இதைதான் சொல்லுறேன்"

"ஈஈஈஈஈ" என்றவன் "ஹாய் ஹாய் பிரண்ட்ஸ் ஹேப்பி மார்னிங் அண்ட் ஹேவ் வொண்டர்புல் டே" எனக் கூற

"நீ பேசுறதை கேட்ட எப்படி வொண்டர்புல் டே.ன"என்றவன்

"நான் அஜய் தி மாஸ்  மெக் டிபார்ட்மெண்ட்.
இவன் வினய் சொம்பு டிபார்ட்மெண்ட் "எனக் கூற

"டேய் மாப்பு அடிவாங்க போற நான் ஈசிஈ"எனக் கூற
ஈசிஈ மாணவர்கள் எழுந்து நின்று கத்தினர்.

"ஹலோ ஹலோ நான் மெக் பா"எனக் கூற இரைச்சல் இன்னும் அதிகமானது.

"ஹலோ ஹலோ நம்ம xxxx காலேஜ்ப்பா எனக் கத்த அரங்கமே அதிரும் அளவு மாணவர்கள் கத்தி கூச்சலிட்டனர்.

"அப்புறம் நம்ம சீப் கெஸ்ட் யாரு?? வினய்"

"அட என் பக்கத்து வீட்டுக்காரர் தான்" எனக் கூற

அஜய் அவனைப் பார்த்து முறைத்தான்.

"டேய் சத்தியமா டா மோகன் அண்ணா தான் நம்ம குரு டா"

"அட ஆமால ஆமா அவரு என்ன சாதிச்சுட்டாருனு அவரை கூப்பிடுருக்காங்க??" என அஜய் கேட்க

"ஈஈஈஈ அவரு ஓல்ட் ஸ்டூடண்ட் வா னு சொன்னா வந்திடுவாரு ஓசி சீப் கெஸ்ட் வேற.
அதுனால தான்"

"டேய் டேய் மானத்த வாங்கதீங்க டா..."மோகன் கீழே அமர்ந்து கொண்டு கத்தினான்.

"ஈஈஈஈஈஈ இப்போ வரை இல்ல இனிமேல் ஆரம்பம்"என வினய் கூற

"அப்புறமா ஆரம்பிக்கலாம் பிரின்சிபால் மேடம் வராங்க ஒழுங்கா பேசுங்க"என முகி அவர்கள் அருகில் வந்து திட்ட

"முகி சாரின் வாக்கே கட்டளை கட்டளையே சாசனம் என்றவர்கள் ஆரம்பித்தார்கள்.

முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து எனக் கூற மேஹாவே வந்து ஆரம்பித்து வைத்தாள்.

குத்து விளக்கு ஏற்றி நடனப்போட்டியை ஆரம்பித்து வைத்தனர்.

முதலில் பரதநாட்டியம் அரங்கேற

"வா சுத்தி சுத்தி தீபம் காட்டி காப்பாய் நீயே விக்னேஷா
ஊரு ஒன்றாகி உன்னைப் போற்ற காப்பாய் எங்கள் கணேஷா
ஓஓஓ நாயகா விநாயகா....."

என மேஹாவின் தலைமையில் பரதம் அரங்கேற அங்கே விநாயகர் வேடத்தில் ஒருவனை அலங்கரித்து நிற்க வைத்து தங்கள் நடனத்தில்  மாணவர்கள் அனைவரையும் உணர்ச்சிவச பட வைத்து விட்டனர்.

மேடையே தீப ஒளியில் ஒளிக்க அனைவருக்கும் விருந்தாக அமைந்தது அந்த நடனம்.

அவர்களை பாராட்டாத ஆள் இல்லை.

அடுத்ததாக தியாவின் நடனம் அரங்கேறியது.

"மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா "

என அபியின் முகத்தைப் பார்த்துக் கொண்டே தியா ஆட
அவள் ஆடும் நளினத்தில் அனைவரும் ஆஆஆ என வாயைப் பிளந்தனர்.

செம டஃப் காம்படிஷன் தான் போல மேஹா அடுத்து  நல்லா ஆடனும்டி என தோழிகள் கூற.

"பாத்துக்கலாம் டி" என்றவள் தியாவின் நடனத்தை ரசித்துப் பார்த்தாள்.(அபியும்)

"இதென்ன பா எல்லாரும் நல்லா ஆடுனா யாருக்கு அவார்டு கொடுக்கிறதாம். ஏற்கனவே காசு கொடுக்க கஷ்டப்பட்டுட்டு தான் இதோ இவரை சீப் கெஸ்ட்டா கூட்டிட்டு வந்திருக்காங்க"எனக் கூறிச் சிரிக்க

"ஏண்டா சுத்தி சுத்தி என்னையே கலாய்க்கிறீங்க அடுத்து ஆரம்பிங்க..."என மோகன் கூற

"சிறப்பாக செய்துவிடலாம்" என்றவர்கள் குழு நடனத்தை அழைக்க

அனைத்து கல்லூரிகளும் அதையும் சிறப்பாக செய்தனர்.

இவ்வாறே ஒவ்வொன்றாக வர அடுத்து தனி நடனத்தை அழைத்தனர்.

இதற்கு மேஹா தான் பெயர் கொடுத்திருந்தாள்.

ஒருபடிக்கு மேலே  சென்று பாட்டு பாடிக் கொண்டே நடனம் ஆடுவதாக திட்டம்.

மேடையில் ஏறி நின்றவள் தன்னவனைத் தேட அவன் எங்கும் இல்லை..

"மேஹாக்கா ரெடியா" எனக் கேட்க

"கொஞ்சோ நேரம் ப்ளீஸ் "எனக் கெஞ்சிக் கொண்டே மனோவைத் தேடினாள்.

அவன் தான் அவள் தனக்கு கிடைப்பாளா??மாட்டாளா??தன்னை வேண்டாம் எனக் கூறிவிடுவாளா?? என ஒவ்வொன்றையும் நினைத்து நினைத்து  வருந்திக் கொண்டிருந்தான்.

இங்கு  நேரம் சென்று கொண்டே இருக்க  அவள் அவளது கள்வனை மட்டுமே தேடிக் கொண்டிருந்தாள்.

முகி எவ்வளவு சொல்லியும் கேளாமல் அவனை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்க

"அய்யோ மேஹா உன்னால நமக்கு கிடைக்கிற 5 மதிப்பெண் போகுது..இதுனால நம்ம அவார்டு மிஸ் பண்ணவும் வாய்ப்பு இருக்கு.
ப்ளீஸ் போ"முகி கெஞ்ச

மறுப்பாய் தலையசைத்தவள் கண்கள் மூடி மனோவை நினைத்தாள்.

கண்கள் திறந்தவளின்  முன் மனோ நிற்க அவனைப் பார்த்து அழகாய்ச் சிரித்தவள் மேடைக்குச் சென்றாள்.

அவளை நினைத்துப் புலம்பிக் கொண்டிருந்தவன் நேரத்தைப் பார்க்க அய்யோ என தலையில் அடித்துக் கொண்டே ஓடி வந்தான்.
மேஹா ஏற்கனவே அவனிடம் கூறியிருந்தாள் "சார் நான் நாளைக்கு ஒன்னு பண்ண போறேன் நீங்க இல்லைனா பண்ணவே மாட்டேன் என்று"

பூவாசம் தென்றலோடு சேர வேண்டுமே
ஆண்வாசம் தொட்டிடாத தேகம் ஊனமே
தாய்ப்பாசம் பத்து மாதம் பாரம் தாங்குமே
வாழ்நாளின் மிச்சபாரம் காதல் எழுதுமே
நீண்டநாள் கண்ட கனவு தீரவே
தீண்டுவேன் உன்னை இளமை ஊறவே
நீயில்லாமல் நிழலும் எனக்குத் தொலைவே

கண்ணன் வரும் வேளை
அந்திமாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம்
செல்ல மயக்கம் அதை ஏற்க நின்றேன்
கட்டுக்கடங்கா எண்ண அலைகள்
றெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே
கண்ணன் வரும் வேளை
அந்திமாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம்
செல்ல மயக்கம் அதை ஏற்க நின்றேன்

அவள் பாடிக் கொண்டே ஆட மனோ இமைக்காமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

நடனம் முடித்து கீழே வந்தவள் எப்படி என மனோவிடம் கேட்க

"சூப்பர்" என சைகை செய்தான்.
சிரித்துக் கொண்டே தோழிகளிடம் சென்றவள் நன்றாக திட்டு வாங்கிக் கொண்டாள்.

அங்கேயும் ஈஈஈ என தான் இளித்துக் கொண்டிருந்தாள்.

மதியம் உணவிற்கு அனைவரும் சென்றிருக்க தியாவின் முன் சென்று  நின்றாள் மேஹா.

அவள் என்ன என்று புருவம் உயர்த்த

"ஏன் சோலோ டேன்ஸ்ல விட்டுக்கொடுத்த"என மேஹா கேட்டாள்.

" நானா நான் எதுக்கு அப்படி பண்ணனும்"

"ப்ளீஸ் சொல்லு"என மேஹா கேட்க

"என் எதிரிக்காக அப்புறம் என் அண்ணிக்காக"எனக் கூறிய தியா மேஹாவைப் பார்க்க

"நானா எதிரியா??" அவள் யோசனையில் முகம் சுருக்கினாள்.

"ம்ம்ம் உன்னோட எதிரி ஸ்கூல் டேய்ஸ்"

"தியா" என மேஹா அதிர்ச்சியில் கேட்க

"ம்ம்ம்" என்றவள் மேலும் கீழும் தலையசைத்தாள்.

அவளைக் கட்டிக் கொண்டவள் "நான் உன்னை எப்பவும் எதிரியா நினைச்சது இல்லை டி"

"ம்ம்ம் தெரியும் டி"

"அண்ணினு சொன்ன"

"என் ஸ்வீட் மனோ அண்ணோவோட அழகா தேவதை நீ.
சோ நீ என் அண்ணி தான"

அவளைப் பார்த்து அழகாய் சிரித்தவள் ஆமாம் என்று தலையசைத்தாள்.

"அதான்"என தியா கண்களை சிமிட்டினாள்.

"அண்ணா கூட நான் பேசுறப்போ உனக்கு கோவம் வரலையா??"

"ம்ம்மகூம் வராது"

"ஏன்"என தியா கேட்க

"அது அப்படி தான் அவரு எந்த பொண்ணு கூட பேசுனாலும் வராது முதல்ல வந்துச்சு.
அப்போ அவரு எனக்கு சொந்தமில்லாதவர்.
ஆனால் இப்போ என்னோட கணவர்,அவரு ராமர்,என் மனோ சார் மனசில் எப்போவும் ஒரு பொண்ணு தான்.அவரு கனவில் கூட யாரையும் நினைக்க மாட்டாரு"எனக் கூறி பொய்யாக சிரித்தாள்.(அவரு நிலாவை மட்டும் தான் நினைப்பாரு)

"சூப்பர் அண்ணி" என்றவள் அவளைக் கட்டிக் கொண்டாள்.

"நான் விட்டுக் கொடுத்தேனு உனக்கு எப்படி தெரியும்??"தியா கேட்க

"தி கிரேட் சோலோ பர்பார்மர் ஸ்டேட் லெவல்ல பர்ஸ்ட்"அப்புறம்

"அம்மா தாயே நான் விட்டுக்கொடுக்கணும்னு நினைக்கல மறந்துட்டேன்.
அப்படிதான் பில்டப் பண்ணிருக்கேன் காட்டி கொடுத்திடாத அடி பட்டைய கிளப்பிருவாளுக ப்ளீஸ்"என தியா கெஞ்ச

"பாக்கலாம் பாக்கலாம்"என அவளைப் பார்த்து சிரித்தவள் அவள் தோளில் கைப் போட்டுக் கொண்டு உணவு அருந்த சென்றாள்.




Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro