பகுதி 27

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இரவில் மிதந்து வரும் மெல்லிசையும் நீதான்
இளமை நனையவரும் பூமழையும் நீதான்
வேர்க்க வைத்தாய் நீதான் நீதான்
விசிரி விட்டாய் நீதான் நீதான்
தேடி வந்தாய் நீதான் நீதான்
தேட வைத்தாய் நீதான் நீதான்

மதிய உணவிற்கு பின் அனைவரும் ஆவலுடன் இறுதி முடிவிற்காக காத்துக் கொண்டிருந்தனர்.

சிறப்பு விருந்தினரே முடிவுகளை அறிவிக்க முன் வர எப்பொழுதும் போல் கவுண்டன் உடன் ஆரம்பித்தது.

அனைத்து கல்லூரி மாணவ,மாணவிகளும் சிறப்பு விருந்தினரையே பார்த்துக் கொண்டிருக்க ஒரு சிலர் கண்கள் மூடி தன் இஷ்ட தெய்வங்களை நினைத்துக் கொண்டிருந்தனர்.

கோவில் பக்கமே செல்லாதவர் கூட இந்த மாதிரி தருணங்களில் கடவுளின் துணையை நாடுவதுண்டு.

முதல் இடம் xxx கல்லூரி எனக் கூற மேஹா மற்றும் மேஹாவின் நண்பர்கள் எழுந்து நின்று கத்தி தங்களின் வெற்றியை கொண்டாடினர்.

மேடைக்கு சென்றவர்கள் கோப்பை மற்றும் அவார்டினை பெற்றுக் கொண்டது மற்றுமில்லாமல் மனோ,முகில் தங்களுடன் இருந்ததால் தான் தங்களுக்கு இந்த வெற்றி எனக் கூறி அவர்களையும் இணைத்துக் கொண்டனர்.

பிரின்சிபால் மேடமிடம் சென்ற மேஹா அவார்டினை அவரிடம் கொடுத்து பிரியாணி ரெடி பண்ணீருங்க மேடம் எனக் கூறி கண்களை சிமிட்டி கீழே சென்றாள்.

"இந்த முறையும் நம்ம காலேஜ் தானா" என சோக கீதம் வாசித்தான் வினய்.

"ஏண்டா இப்படி அலுத்துக்கிற...நம்ம காலேஜ்னா சந்தோஷம் தானே" என அஜய் கேட்க

"பின்ன என்னடா??எப்போ பார்த்தாலும் இவங்களே வின்  பண்ணுவாங்க  வாங்குன கோப்பையை வேற முன்னாடி என்ட்ரன்ஸ்ல வெச்சுருவாங்க...போறவங்க வரவங்க எல்லாம் எந்த கடைல வாங்குன கோப்பை எல்லாம் ஒரே மாதிரி இருக்குங்கிறாங்க.
அய்யோ நாங்க வின் பண்ணி தான் வாங்குனோம்னு சொன்னா நம்ப மாட்டிங்கிறாங்க"என வினய் புலம்பினான்.

"யாருடா அந்த கிறுக்கன் ?இதை நம்ப மாட்டேனு சொன்னது"என அஜய் கேட்க

"ஈஈஈஈஈ மச்சி நீ தான்டா அந்த கிறுக்கன்...அன்னைக்கு கூட சொன்னியே "எனக் கூறிக் கண்ணடிக்க

அய்யய்யோ மாட்டி விட்டுட்டானே என மனதில் நினைத்தவன் "மச்சி பப்ளிக்ல இப்படியா மாட்டிவிடுவ நல்ல வேளை பிரின்சிபால் மேம் வெளியே போயிட்டாங்க கடவுள் என் பக்கம்" எனக் கூறி அஜய் சிரிக்க

"அய்யய்யோ மச்சான் உன் பக்கத்துல இருந்த கடவுளை காணோம்டா"

"ஏண்டா"

"மேம் அங்க தான் நின்னு உன்னை மொறச்சு பாத்துட்டு இருக்காங்க"

"அய்யோ போச்சு"என தலையில் கை வைத்தவன் அவரை பார்த்து ஈஈஈ எனப் பல்லைக் காட்டினான்.

முகில் வந்து அவர்களிடம் இருந்து மைக் வாங்கி அனைவருக்கும் நன்றி கூறி விழாவை இனிதே முடித்தான்.

மேஹாவும் தியாவைத் தேடிக் கொண்டு வெளியே சென்றாள்.

அங்கே மரத்தடியில் நின்று கொண்டிருந்த திவி,தியாவிடம் "ஏண்டி நிலா யாருக்காக டி இங்க நிக்குற??" பொறுமையிழந்து கத்த

"என்னை தியானே கூப்பிடு ஆடியன்ஸ் கன்ப்யூஸ் ஆகுறாங்களாம் ஆதர் ஜி கெஞ்சி கேட்டாங்க "எனக் கூறி சிரித்தாள்.

"ம்ம்க்ககும் அவங்களுக்கு வேற வேலையில்ல"என்றவள்
"யாருக்கு டி வெயிட்டிங்"எனக் கேட்க

"இதோ வராங்க பாரு அவங்களுக்கு"என மேஹாவை கை காட்டினாள்.

"அய்யோ அவங்க நல்லா ஆடுனாங்க அதுனால வின் பண்ணாங்க அவங்களை திட்டாத டி பாவம் அவங்க"  என திவி கூற

அவளைப் பார்த்து சிரித்தவள்
"அப்படியா அப்போ சண்டை போட்டே ஆகணும்"எனக் கூறி அருகில் வந்த மேஹாவை நோக்கி கை நீட்ட

தியா அடிக்க தான் கை நீட்டுகிறாள் என நினைத்த திவி கண்களை மூடிக் கொண்டாள்.

என்ன எந்த சத்தத்தையும் காணோம் என கண் திறந்து பார்க்க
எதிரில் மேஹாவின் தோள்மீது கைபோட்ட படி நின்று தியா திவியைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்து இதயத்தில் மீது கை வைத்தவள் அப்படியே அமர

அச்சச்சோ என்னாச்சு என அவளின் அருகில் அமர்ந்து இருவரும் கேட்க

"என்னடி இது...
அக்னி நட்சத்திரம் பிரபு கார்த்திக் மாதிரி இருந்த நீங்க இப்படி அந்தர் பல்டி அடிச்சா எப்படி டி என்னோட குட்டி இதயம் தாங்கும் அதான் ஹார்ட் அட்டாக்"எனக் கூற

அவளைப் பார்த்து இருவரும் சிரித்தனர்.

"அவங்க தான் உன்  பரம எதிரி ரேஞ்ச்க்கு பில்டப் கொடுத்தியே டி உன்னோட எல்லாத்தையும் அவங்க பறிச்சுட்டாங்கனு சொன்னியே"என திவி கூற

"ஆமா டி"என்றவள் மனோவின் புறம் கை நீட்டினாள்....

"மனோ சாரா???"எனக் கேட்க

இல்லையென்றவள் தன் கையினை சிறிது நகர்த்தி காட்ட அங்கு அபி நின்று கொண்டிருந்தான்.

"யாருடி அது"திவி கேட்க

"அபி"என மேஹா கூறினாள்.

"உங்களுக்கு எப்படி அவரை தெரியும் மேஹா"என திவி கேட்க

"அபி மேஹாவை லவ் பண்ணாங்க மேஹாவோட பெஸ்ட் பிரெண்ட்"என தியா கூற

"என்னங்கடி உன்னை கேட்டா அவங்க சொல்றாங்க அவங்களை கேட்டா நீ சொல்ற ஒன்னுமே புரியலை தலை வெடிச்சுடும் போல "என திவி கத்தினாள்.

அவளைப் பார்த்து சிரித்தவர்கள்
"விடு பேபி கூல்"என்ற மேஹா
தியாவின் புறம் திரும்பி
"உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்"எனக் கேட்க

"நான சஞ்சனா அக்காவோட சித்தப்பா பொண்ணு நான் அவங்க வீட்டுல இருந்தப்போ தான் அபி உங்களை காதலிக்கிறதா சொன்னாரு"என தியா கூற

அவள் முகத்தை கூர்ந்து கவனித்தவள்
"ஆனால் அப்போ நான் உன்னை பார்க்கலையே???"

"நான் ரூம் விட்டு வெளியே வரல யாரோ சத்தமா பேசுறதை கேட்டு வெளியே வந்தப்போ தான் அபி பேசுறதை கேட்டேன் மறுபடியும் ரூம்குள்ளேயே போயிட்டேன்"எனக் கூறினாள்.

அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள் "நீ அபியை லவ் பண்ணுறியா??தியா"எனக் கேட்க

"ஆமாம்"என தலையசைக்க

அவன் மேல பரிதாபப்பட்டு ஒன்னும் காதலிக்கலையே என மேஹா கேட்க

"என்ன"  என தியா முழிக்க

"அவன் காதலை நான் வேணாம் சொல்லி அவன் வருத்தப்படுறத பார்த்து உனக்கு அவன் மேல காதல் வரல தான" மேஹா தயங்கி தயங்கி கேட்க

"ச்ச்சச ச்ச்சச அதுக்கு முன்னாடியே லவ் இருந்துச்சு.
அந்த நிகழ்வுக்கப்புறம் அதிகம் ஆயிடுச்சு"என தியா கூறி அபியின் முதல் சந்திப்பை நினைத்து புன்னகைத்தாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த மேஹா கைகளை கட்டிக் கொண்டு "மேடம் இப்போ எதுக்கு வெட்க படுறீங்க எங்க கிட்ட சொன்னா தெரிஞ்சுப்போம்.
அபியை முன்னாடியே லவ் பண்ணுறேனு சொன்ன எப்போ??" என கேட்க

அவள் தங்கள் முதல் சந்திப்பைப் பற்றி கூறத் தொடங்கினாள்.

சுற்றிலும் இரைச்சல், உலகின் அனைத்து மக்களும் இங்கு தான் இருப்பார்கள் போல என்பதற்கேற்றாற் போல் நிரம்பி வழியும் மக்கள் தொகை,எனக்கு எந்த கவலையும் இல்லை என்பதைப் போல் தன் இசையில் பாடிச் செல்லும் தொடர்வண்டிகள் என அந்த இரயில்நிலையம் இருக்க
வெறுமை நிறைந்த கண்கள்,புன்னகையில்லாமல் வரண்டு கிடக்கும் இதழ்கள் என சோகத்தின் உருவாக அமர்ந்திருந்தான் அபி.

மேஹாவை காணவில்லை என்றதும் ஒவ்வொரு இடமாக சென்று தேடுதல் வேட்டை ஆரம்பித்திருந்தான்.
இப்பொழுதும் அப்படி தான்...
தனக்கு கிடைத்த ஒரு வார விடுமுறையில் முடிந்த வரை சென்னையை சுற்றி விட்டான் ஆனால் மேஹா தான் கிடைக்கவில்லை.

கோயம்புத்தூருக்கான தொடர்வண்டி வந்துவிட்டதை அறிந்தவன் அது கிளம்பும் தருவாயில் தான் உள்ளே ஏறினான்.

அங்கே படிக்கட்டுகளில் ஒரு பெண் முகத்தை துப்பட்டாவில் மறைத்துக் கொண்டு ஓடி வர "ஒருவேளை இந்த டிரைன்லதான் ஏறனும் போலேயே "என நினைத்தவன் "ச்ச இருக்காது " எனக் கூறி கதவினை மூட

"அய்யயோ போச்சு தியா போச்ச மீசை கொல்ல போகுது உன்னை..."என புலம்பிக் கொண்டே மறுபடியும் தன் முயற்சியை கை விடாது ஓடினாள்.

கதவை மூடியவன் ஏதோ போல் இருக்க உடனே கதவினை திறந்தான்.

அவன் திறந்ததைப் பார்த்தவள் கடவுளுக்கு ஆயிரம் நன்றிகள் கூறிவிட்டு அவனைப் பார்த்து சிரித்தாள்.

முகத்தை மூடி இருந்தாலும் அவள் கண்கள் காட்டி கொடுத்தது அவள் மகிழ்ச்சியை.

அபி கை நீட்ட வேகமாக வந்தவள் அவன் கைகளைப் பிடித்து ஏறிக் கொண்டாள்.

வேகத்தில் ஏறியவள் அவன் மீதே சாய்ந்தாள் ஓடி வந்ததில் அவள் மூச்சு வாங்க வண்டியை விட்டு விடுவோமா என்ற பதட்டத்தில் இருந்ததால் கைகள் இன்னும் நடுங்கியது.

அவள் முதுகை ஆதரவாக தடவியன் "அதான் ஏறியாச்சுல பயப்படாதிங்க ரிலாக்ஸ்" எனக் கூற

அவனை விட்டு விலக மனமில்லாமல் விலகியவள் ம்ம் என்றாள்.

அதற்குள் உள்ளே இருந்தவர்கள் வெளியே வந்து "உனக்கு அறிவே இல்லையாமா முன்னாடியே வந்து ஏற தெரியாதா இப்படி தான் ஓடுர டிரைன்ல வந்து ஏறனுமா???"என ஒவ்வொருவராக திட்ட ஆரம்பிக்க

அவர்களைப் பாவமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

"பேசாம டிரைன மிஸ் பண்ணி மீசை கிட்டேயே திட்டு வாங்கிருக்கலாம் போல..."என மனதில் நினைத்தவள் அமைதியாக இருக்க

"எவ்ளோ திட்டுறோம் குத்துக்கல்லாட்டம் நிக்குது பாரு இந்த பொண்ணு நல்லா ஊர் ஊரா சுத்தி நல்லா சாப்பிட்டுட்டு மெதுவா வர வேண்டியது "என ஒரு பெரியவர் கூற

தியா திருதிருவென முழித்தாள்.

அதைக் கண்ட அபி "விடுங்க அவங்களுக்கு என்ன பிரச்சனையோ நாம ஏதாவது பேச இன்னும் மனசு கஷ்டபட போறாங்க நீங்க போங்க" என்று கூற

அனைவரும் உள்ளே அவரவர் இருக்கைக்கு சென்றனர்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் முன் வந்து சொடக்கிட்டவன் "நீங்க போங்க அவங்க அப்படிதான் பெரிசா எடுத்துக்காதீங்க"எனக் கூற

அவனைப் பார்த்து புன்னகைத்தவள்
"அவர் சொன்னது தான் கரெக்ட் ஊர் சுத்தீட்டு டைம் பார்க்காம விட்டுட்ட " எனக் கூற

"அது நீங்க திருத்திருவென முழிக்கிறப்பவே கண்டுபிடிச்சுட்டேன்"என்றவன் புன்னகைக்க

"அய்யய்யோ மாட்டிக்கிட்டோமே"என நினைத்தவள்

அவன் சிரிப்பதைப் பார்த்து ஒற்றை புருவத்தை உயர்த்தினாள்.

"ஒன்னுலங்க"என்றவன் "இனிமேலாவது கரெக்கட்டா வாங்க" எனக் கூற

"அய்யோ எப்பவும் கரெக்ட்டா வந்துடுவேன் இந்த டைம் பிரெண்ட்ஸ் தான் கம்பெல் பண்ணி கூட்டிட்டு போயிட்டாங்க வண்டியை எப்போவும் பார்க் பண்ணுற இடத்துல விட்டுட்டு ஓடி வந்தேன் பட் கிளம்பிடுச்சு"என்றவள் உதட்டைச் சுழிக்க

"பரவால விடுங்க நீங்க போங்க" என்றவன் தன் இருக்கைக்கு சென்றான்.

காலையில் அவனைப் பார்த்துக் கொள்ளலாம் என்றவள் தன் இடத்திற்கு சென்று இதுவரை தான் அணிந்திருந்த துப்பட்டாவை கழட்டி வைத்து விட்டு கண்களை மூடினாள்.

எப்பொழுதும் கண்களை மூடியதும் கனவில் வரும் அதர்வாவிற்கு பதில் இன்று அபி வர  கண்களை திறந்தவள் அய்யோ என தலையில் கை வைத்தாள்.

அவனின் நினைவாகவே இருக்க
எழுந்து சென்றாள்.

அங்கு அவன் இன்னும் தூங்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இரவில் சிறிது வெளிச்சத்தில் இரயிலின் வேகத்திற்கு ஏற்றாற்போல் அசையும் அவனின் கேசம் அவனையே ரசித்து பார்த்து கொண்டிருந்தவள் "அதர்வா என்ன அதர்வா இதோ பாருப்பா என்ன அழகு என்ன அழகு கொல்ர டா "என்றவள் சிரித்துக் கொண்டே சென்றவள் அமர்ந்ததும் கண்களை மூடிக் கொண்டாள்.

இந்த முறையும் அபி முகம் வர சிரித்துக் கொண்டே கண்களை இறுக்க மூடினாள்.

நெஞ்சை பூபோல் கொய்தவளே
என்னை ஏதோ செய்தவளே

நெஞ்சை பூபோல் கொய்தவளே
என்னை ஏதோ செய்தவளே

ஓஹோ..

கைபேசி சிணுங்க

ெஞ்சை பூப்போல் கொய்தவனே என அபியை நினைத்துப் பாடிக் கொண்டே அட்டெண்ட் செய்து காதில் வைக்க அந்த புறம்
"எங்க தான் இருக்க எத்தனை முறை தான் கால் பணணுறது"என கத்த

"அய்யய்யோ மீசை டென்சன் ஆவுது"என மனதில் நினைத்தவள் வந்துட்டேன் பா இப்போ இறங்கிடுவேன் என்றவள் தன் லக்கேஜை எடுத்துக் கொண்டு அபியைக் காண செல்ல அவன் அங்கு இல்லை.

சுத்தம் என நினைத்தவள் மனமே இல்லாமல் இறங்கினாள்.

ஒவ்வொரு நாளும் அவனைப் பற்றிய நினைவுகளையே தர இரயில் க்ரஷ் என அதற்கு பெயர் வைத்து அதை மறந்திட நினைத்தாலும் முடியவில்லை அவளால்.

அவன் பெயர் அறியாமல்,யாரென்று அறியாமல் அவனையே நினைத்து நினைத்து அவன் மேல் காதலை வளர்த்துக் கொண்டிருந்தாள்.

அடுத்து அவனைப் பார்த்தது சஞ்சனாவின் வீட்டில் தான் அங்கு தான் அபி மேஹாவின் மீது இருந்த காதலைப் பற்றிக் கூறினான்.

முதலில் கோவம் கோவமாக வந்தது மேஹாவின் மேல்.
அதற்கு பிறகு மனோவைப் பற்றி தெரிந்ததும் மேஹாவும் பாவம் என நினைத்தாள் அப்போதும் அவளைப் பிடிக்கவில்லை.
அபியை அழவைத்துவிட்டாள் அல்லவா!

அபியைப் பற்றி தெரிந்து கொள்வதையே வேலையாகக் கொண்டவள் ஒருநாள் மட்டும் திவியை பாலோ செய்ய சொன்னாள்.
அன்று தான் அவள் அவனை மிஸ் செய்து அவளிடம் வாங்கிக் கட்டிக் கொண்டது.

இதுவரை வாயில் ஈ போவது கூட தெரியாமல் ஆஆஆ என அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் திவி.

"சூப்பர் டி அபி உனக்கு தான்"(வார்த்தையை விட்டுட்டியே மேஹா😓பின்னாடி பீல் பண்ணுவ)

மனோ அவர்கள் அருகில் வந்து "இன்னைக்கு எங்க வீட்டுல பார்ட்டி என் அழகு பொண்டாட்டி வின் பண்ணிருக்கா நீங்களும் வந்திடுங்க"எனக் கூற

"என்னது பொண்டாட்டியா???" மறுபடியும் நம் திவியே தான்.

(பாவம் புள்ள ஒரு நாளைக்கு எத்தனை ஷாக் தான் தாங்குவா😆)

"ஆமா "என்றவன் மேஹா தோள்மீது கை போட்டான்.

மேஹா அவனையேப் பார்த்துக் கொண்டிருக்க

தியா "ஜமாய் ப்ரோ"எனக் கூறிக் கண்களை சிமிட்டினாள்.





🙊🙊🙊🙊இது தான் தியா அபியை விரும்ப ஆரம்பித்த ப்ளாஸ்பேக்....ஏதேனும் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro