பகுதி 31

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

திசை அறியாத
பறவையை போல
பறக்கவும் ஆச
உன்னோடு தூர

வாழ்க்கை தீர தீர
வாயேன் நிழலா கூட
சாகும் தூரம் போக
துணையா நீயும் தேவ

மடியில் படுத்திருக்கும் தன் இரு தோழிகளுக்கும் தாயானாள் மேஹா.

இருவருக்கும் தலைகோதி கொண்டிருந்தவள் மடியில் ஈரம் படிவதை உணர்ந்து "கடவுளே...இரண்டு பேரும் எனக்கு முக்கியம் நான் யாருக்குனு உன்கிட்ட வேண்டுறது...இரண்டு பேரும் நல்லா இருக்கணும்"என வேண்டியவள் கண்களில் கண்ணீர் தேங்கி நிற்க...
அதை துடைத்துக் கொண்டவள் நிமிர்ந்து பார்க்க அங்கே மனோ அவளைத் தான் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

அவனைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டவள்"இவங்க பிரச்சினைல எனக்கும் பிரச்சினை இருக்குங்கிறதையே மறந்துட்டேன்...
ம்ம்ம்க்கும் மூஞ்சியைப் பாரு....ஈஈஈனு இளிச்சுட்டு...காலேஜ்ல உர்ர்னு சுத்திட்டு இருந்த மனுசன் ரெமோவா சுத்துறப்பவே டவுட் வந்துருந்தா இப்போ இப்படி ஆயிருக்குமா...மக்கு மேஹா நீ நல்லா ஏமாத்திட்டாங்க எல்லாரும் உன்னை"என மனதில் புலம்பிக் கொண்டிருந்தாள்.

"நீ மக்கு தான் எனக்குத் தெரியும் டி பொண்டாட்டி அதை தனியா வேற சொல்லணுமா??" என மனோ கேட்க
அவனைப் பார்த்து முறைத்தாள்.

"முறைக்காத நிலா"

"நிலானு மட்டும் கூப்பிடாதீங்க ரொம்ப டென்சன் ஆகிடுவேன்"அமைதியாக மற்றும் அழுத்தத்துடன் கூற...

அவளை நோக்கி ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்தவன் அவளால் தன்னை எந்த தருணத்திலும் வெறுக்க முடியாது என்பதை அறிந்தவன் அவளை நோக்கி கண்ணடிக்க

தலையில் அடித்துக் கொண்டவள்
தியா மற்றும் ஆனுவை எழுப்பினாள்.

தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கூட அறியாத நிலையில் இருந்தனர் இருவரும்.

யார் வேண்டுமானாலும் அவனைக் காதலிக்கலாம் ஆனால் ஒருவர் மட்டுமே கல்யாணம் செய்து கொள்ள முடியும்.

ஒருத்தருக்காக இன்னொருவர் விட்டுக்கொடுக்கலாம் ஆனால் அந்த மனநிலையில் இருவரும் இல்லை.
(எனக்கே தெரியல யார் அபி பேர் னு...)

"என்னாச்சு இரண்டு பேருக்கும் இப்படி இருக்காங்க??" என மனோ கேட்க

"ஒன்னுமில்லை சார்"சார் என்பதில் அழுத்தம் கூட்டியவள் அவன் முறைப்பதைக் கண்டு மனதினில் சிரித்துக் கொண்டே" இருங்க வரேன்" என்றவள் இருவரையும் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

இருவரையும் முகம் கழுவி ரெடியா இருங்க இரவு நிச்சயதார்த்தம் எனக்
கூறிவிட்டு மனோவிடம் சென்றாள்.

அவனிடம் நடந்தது அனைத்தையும் கூறியவள் அவன் முகம் நோக்க
"இங்க அவனவனுக்கே ஏகப்பட்ட பிரச்சினை...இந்த கடவுள் மட்டும் ஏன் தான் எனக்கு பிரச்சினை மட்டுமே தராரோ"எனக் கூற

"அப்போ நான் உங்களுக்கு பிரச்சினையா???" எனக் கூறி முறைக்க

"அய்யோ உன்னை பிரச்சினைனு சொல்லுவனா?? செல்லக்குட்டி...ஆனந்தியும் பாவம்,தியாவும் பாவம்...என்கிட்ட கேட்டா நான் யாருக்குனு சப்போர்ட் பண்ணுறது....அபி தான் முடிவு பண்ணணும்.."

"உங்க கிட்ட கேட்டேன்ல என்னை சொல்லணும்..."என்றவள் தலையில் அடித்துக் கொண்டு "ஆனந்தி ஏழு வருடமா காதலிக்கிறா, அவளுக்குனு யாரும் இல்லை,தியாவை விடவும் ரொம்ப பாவம்...யாருக்கு சப்போர்ட் பண்ணுறதுனு தெரியல " எனக் கூற

"பின்ன என்னடி பண்ண சொல்லுற...அப்புறம் என்ன சொன்ன??? மூன்று வருட காதல் பெருசா,ஏழு வருட காதல் பெருசா...இது இங்கே முக்கியம் இல்லை....அவன் மேல அவங்க வெச்சிருக்க காதல் தான் முக்கியம்.ஆனந்திக்கு யாரும் இல்லை அவளுக்கு எல்லாமே அபினு சொன்னா...தியாவுக்கு எல்லாரும் இருந்தும் அவளுக்கு அபி தான் முக்கியம்னு வந்துருக்கா.ஒன்னா இருந்து நான்கு வருடம் பழகி அவனைப் பத்தி தெரிஞ்சு அப்போ வந்த காதல் பெருசுனா...ஒரே முறைப் பார்த்து
அவனைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்காம அவன் மேல வந்த காதலும் பெரிசு தான"எனக் கூற

"அய்யோ மனோ சார்...எனக்கு இரண்டு பேரும் முக்கியம்.நான் ஆனந்தி பத்தி உங்களுக்கு தெரியாதுல அதுனால சொன்ன...இரண்டு பேர் காதலும் பெரிசு தான்.காலேஜ்ல உங்களைப் பாத்ததிலிருந்து உங்களை பிடிச்சு பைத்தியமா சுத்துன என் காதல் பெரிசுனா...சின்ன வயசுல இருந்தே நிலா நிலா னு பைத்தியமா இருந்த உங்க காதலும் பெரிசு தான்"என்றவள் கண்கள் கலங்க நின்றிருந்தாள்.

அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன்"அழாத மேஹா...எல்லாம் சரி ஆகிடும் அபி கிட்ட பேசலாம் சரியா"எனக் கூற

"ம்ம்ம்"என்றவள் அவனை தள்ளி விட்டு"நான்...நான்...உங்க மேல கோவமா இருக்கேன்"எனக் கூறிவிட்டு அறைக்கு ஓடிவிட்டாள்.

அவளைப் பார்த்து சிரித்தவன் "இம்சை லவ் யூ டி...சாரி மேஹா...உன்கிட்ட நான் சொல்லிருக்கணும் நீ தான் என் நிலானு.உன் பர்த் டே அப்போ சொல்லி உன்கிட்ட புரொப்போஸ் பண்ணலாம்னு நினைச்சா நீ நானும் அம்மாவும் பேசுறதை கேட்டுட்டு நான் தான் உங்க நிலாவா???என்கிட்ட சொல்லாம மறைச்சுட்டீங்களே பேசாதீங்க என்கிட்டனு சொல்லுற லூசு மேஹா"என்றவன் முகியைத் தேடிச் சென்றான்.

இரவு மண்டபமே கலை கட்ட அர்ஜூ மற்றும் சஞ்சுவின் (சாரி சாரி அஜூ மற்றும் சஜூ 😁😁இல்லைனா இந்த அர்ஜூ சண்டைக்கு வந்துருவான்) நிச்சயதார்த்தம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

சஜூவிற்கு மோதிரம் மாட்ட விடாமல் நண்பர்கள் அனைவரும் அவனை இழுத்துக் கொண்டே இருக்க பொறுமை இழந்தவன் "அடேய் தள்ளுங்கடா என் மீசை மாமா வந்து மேரேஜ் கேன்சல்னு சொல்லிட போறாரு...நீங்க பண்ணுற அலப்பறை தாங்கிக்க முடியாம"எனக் கெஞ்ச

நண்பர்களில் ஒருவன் "மாப்பிள்ளை சொம்பு இருந்தா தான் கல்யாணம் பண்ணிப்பாராம்" எனக் கத்தினான்.

"ஏண்டா கேக்கிறதும் கேக்கிற...பைக்,கார்னு கேட்காம சொம்பு கேட்கிறியே"எனக் கூற

"கேட்டிங்களா மாமா பாருங்க பைக்,கார் வேணுமாம்"என ஒருவன் அர்ஜுவின் பின்புறம் பார்த்துக் கொண்டே கூறினான்.

"யாரைப் பார்த்து டா மாமானு சொல்லுற எனக்குலாம் எங்க மாமாவே வந்து நின்னாலும் பயம் இல்லை சும்மா கெத்தா நிப்பேன் அவரைக் கண்டுக்காம" எனக் கூற...

"ஆஹான் அப்படியா...உங்க திருமுகத்தை ஒருபுறமா திருப்புங்கோ...அபௌட் டர்ன் ஆகுங்கோ...உங்க மீசை மாமா நிற்கிறாரு பாருங்கோ...."எனப் பாட

"என் மாமாவா..."என்றவன் சடாரென்று திரும்ப அங்கு யாரும் இல்லை.

"ஏண்டா"எனக் கேட்க

"சும்மா கெத்தா நிப்பேன்"என அவன் சொன்னதையே திருப்பி சொல்லி நண்பர்கள் சிரித்துக் கொண்டிருந்தனர்.

"டேய் அபி எங்கே??"என அர்ஜூ கேட்க

"அவனைக் காணோம் டா ரொம்ப நேரமா நாங்களும் தேடுறோம்"என நண்பர்கள் கூற

முகி அவனை அழைத்துக் கொண்டு வந்தான்.

" எங்கே டா போன நீ தான் துணை மாப்பிள்ளைனு சொன்ன...நீ இங்கே நிக்காம எங்கே போன"

"அது அம்மா வரேனு சொன்னாங்க டா...அதான் வெளியே இருந்தேன்"என அர்ஜூவிடம் கூற

"ஓஓஓ சரி "என்றவன் "ஏய் ஆனு....நீ வெளியே போய் நில்லு அபியோட அம்மா வந்தா கூட்டிட்டு வா"என்றான்.

"ம்ம்ம் சரி"என்றவள் வெளியே செல்ல அபி ஓடி வந்து அவள் அருகில் நின்றான்.

அவள் என்ன என்பது போல் அவனைப் பார்க்க

"என் அம்மாவைத் தெரியுமா?? பாத்திருக்கியா??" எனக் கேட்க

அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தவள் கண்களில் வலியுடன் "ம்ம்ம்"என்றாள்.

எப்படி என்று கேட்க மனம் எழுந்தாலும் அவனால் கேட்க முடியவில்லை.
அவளுக்கு அவன் தான் எல்லாம் என நினைத்துக் கொண்டிருக்க அவளிடம் இப்படி கேட்டால் அவள் என்ன தான் சொல்வாள்...அவனைப் பற்றி எல்லாமே அறிந்தவளாயிற்றே...அவனைப் பற்றி தெரிந்து கொள்வதென்றால் அவளுக்கு அவ்வளவு பிரியம்.

அவன் "சரி"என தலையாட்டி விட்டு நடந்தான்.மறுபடியும் அவள் புறம் திரும்பியவன் "சாப்பிட்டியா???" எனக் கேட்க

அவளால் தன் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

பாசமாக, அக்கறையாக இதுவரை யாரும் அவளிடம் பேசியதில்லை அபியைத் தவிர...
அவன் கேட்கும் "சாப்பிட்டியா...ஏதேனும் அடிப்பட்டு விட்டால் வலிக்குதா...இப்போ ஓகே தான" இது கூட அவளுக்கு மிகவும் பெரிது தான்.

மேஹா அப்படி கேட்க மாட்டாள்.அவளே ஆனுவை நன்றாக பார்த்துக் கொள்வாள்.சில சமயம் அவளே ஆனுவிற்கு தாயாக மாறியும் உள்ளாள்...ஏனோ மேஹாவை அவள் தனியாக பிரித்துப் பார்த்ததில்லை.

அவளைப் பொறுத்த வரை தான் யாரென்று அறியாமல் தன்மேல் அக்கறையாக உள்ளானே...அது தான் அது மட்டும் தான் அபி மேல் அவளுக்கு காதல் வரக் காரணம்.

அவள் அழுவதைக் கண்டவன் "ஏன் ஆனந்தி என்னாச்சு??" எனக் கேட்க

" சாரி ஒன்னுல...தூசி போல.." என்றவள் நிற்காமல் வெளியே சென்று விட்டாள்.

அவள் செல்வதையேப் பார்த்துக் கொண்டிருந்தவன் தன்னையே முதன் முதலாக வெறுக்க ஆரம்பித்தான்.

ஏன் என்னை அவளுக்கு அவ்வளவு பிடித்தது...நான் அவள் அன்புக்கு தகுதியானவனா?? அவள் மேல் எனக்கு காதல் வருமா?? எதற்கும் விடை கிடைக்கவில்லை...
இதற்கே இப்படி என்றால் தியாவும் அவனை விரும்புவது பற்றி அறிந்தால் என்ன ஆவானோ?!!!!!!

வெளியே குழந்தைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவள்
" எல்லாரும் குழந்தைகளாகவே இருந்து விட்டால்
எந்த பிரச்சினையும் இல்லை...சந்தோஷமாக இருக்கலாம்.ன அழகான வண்ணத்துப் பூச்சிகள் போல அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டு..." அங்கு ஒரு குழந்தை அதன் தாயுடன் விளையாடிக் கொண்டிருக்க

"ஏன் மா ஏன் என்னை விட்டுட்டு போனீங்க...என்னையும் உங்க கூடயே கூட்டிட்டு போயிருக்கலாம்...அம்மா இல்லாம எவ்வளவு கஷ்டம் தெரியுமா??ஒரு பெண்ணுக்கு அவள் அம்மா தான் எப்பவும் தேவை...நானும் உங்க கிட்டேயே வந்துடுறேன் அம்மா.
எனக்கு யாரும் வேணாம்...நான் யாருக்கும் தொந்தரவா,போட்டியா இருக்க வேணாம்" என்றவள் கண்கள் கலங்க நின்றிருந்தாள்.

அவள் தோள்பட்டையில் யாரோ கை வைப்பதை உணர்ந்தவள் திரும்பிப் பார்க்க அபியின் அம்மா நின்றிருந்தார்.

"அம்மா சாரிமா நான் உங்களை கவனிக்கல... வாங்க உள்ளே போலாம்"எனக் கூற

"நீ அபியோட பிரெண்ட்டா மா"எனக் கேட்க

"ஆமாம் மா..."என்றவள் அவரைப் பார்த்து புன்னகைக்க

"அழகா இருக்க மா....உன் பெயர்??" எனக் கேட்டவரின் உள்ளமோ இது தியாவாக இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணியது.

"நான் ஆனந்தி மா..."

ஏமாற்றத்துடன் "சரி வா மா போலாம்" என்றவர் அவளுடன் பேசிக் கொண்டே உள்ளே சென்றார்.

ஆனந்தியைப் பார்த்ததும் அவருக்கு பிடித்து விட்டது...அவளின் அமைதியான முகம்,அடக்கம்,பணிவு என அனைத்தும்.

அபி அம்மாவை நோக்கி வர "அம்மா அதோ அபி வரார்"என ஆனு கூற

"அபி கண்ணா....வா வா...எப்படி இருக்க?? "எனக் கேட்க

"நல்லா இருக்கேன் மா...நீங்க??"

"நான் நல்லா இருக்கேன்.
இந்த பொண்ணை பத்தி என்கிட்ட சொன்னதே இல்லையே...ரொம்ப அமைதியான பொண்ணுல எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு"எனக் கூற

"உங்க கிட்ட சொல்லிருக்கேன் மா...மேஹா நான் அர்ஜு அப்புறம் ஆனந்தி தான் ப்ரெண்ட்ஸ.
எப்பவும் ஒன்னா தான் இருப்போம்..."

"நீ என்கிட்ட அனுனு சொன்ன மாதிரி நியாபகம் "

"என்ன எல்லாரும் ஆனுனு கூப்பிடுவாங்க மா அதுமாதிரியே அபியும் சொல்லிருப்பாரு..."என ஆனந்தி கூற

"இல்ல மா அவன் அனுனு தான் சொன்னான்.."என்றவர்
"என்னமோ போங்க....எனக்கு கால் வலிக்குது நான் உட்காருரேன்"என்றவர் அமர்ந்துக் கொள்ள
ஆனு அபியைப் பார்த்தாள்.

"எனக்கு ஆனுனு கூப்பிட பிடிக்காது...அதுனால எப்பவும் உன்னை ஆனந்தினு தான் கூப்பிடுவேன்...உன்னை அனு னு கூப்பிட ஆசை...அம்மா கிட்ட அனுனு தான் சொல்லியிருக்கேன்" என்றவன் அம்மாவின் அருகில் அமர்ந்து கொண்டான்.

"அபி இவ்ளோ பேசுவாரா"என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் கூறியதை கவனிக்க மறந்தாள்.

"ஏனோ ஆனந்தியின் மேல் காதல் இல்லை என்றாலும் நான் அம்மா ஆனந்தி....அழகான குடும்பம் என நினைக்க தோன்றியது அவனுக்கு.

"இந்த பொண்ணு தான் அனுவா...நல்ல வேளை நம்ம பையன் இந்த பொண்ணை விரும்பல....நான் இப்போ சொந்தபந்தம் இல்லாம இருக்க மாதிரி கல்யாணம் பண்ணிட்டு அவனும் அப்படி இருந்திட கூடாது...அவனுக்கு நிறைய சொந்தங்கள் இருக்க மாதிரி பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணி வைக்கணும்...தியா தான் என் மருமக....ஆனந்தி இல்லை"என்றவர் அபியைப் பார்த்தார்.
அவன் அர்ஜூவைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

திரும்பி ஆனுவைப் பார்க்க
"அவள் அபியைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்"

அவள் பார்ப்பதை வைத்தே அவளின் மனநிலையை உணர்ந்தவர் இதற்கு இப்பொழுதே ஏதாவது முடிவு கட்ட வேண்டும் என நினைத்து ஆனந்தியைக் கூட்டிக் கொண்டு வெளியே சென்றார்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro