பகுதி 32

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

என் சிரிப்பு உடைஞ்சு சிதறிக்கிடக்கு
எப்போ வருவ எடுத்துக்க
உன் நினைப்பில் மனசு கதறிக்கிடக்கு
என்னைக் கொஞ்சம் சேத்துக்க…
மனசு வாசனை வீசுந் திசையில
உன்னத் தேடி ஓடுனேன்
கலைஞ்ச காத்துல எந்த மூச்சு
உன்னக்காட்டும் தேடுனேன்

"அம்மா....ஏன் மா என்னை வெளியே கூட்டிட்டு வந்தீங்க?? ஏதாவது பேசணுமா?" என ஆனு கேட்க

அவரை பார்த்துக் கொண்டே இருந்தவர் "ஆமாம் மா அதுவந்து " என இழுக்க

"சொல்லுங்க அம்மா என்கிட்ட என்ன தயக்கம்" என்றவள் அவர் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

"உன்னை பார்த்ததும் எனக்கு ரொம்ப பிடிச்சது மா...உன்னை என் மருமகளா கொண்டு வந்தா ரொம்ப சந்தோஷமாவும் இருக்கும்.ஆனால் நான் லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கிட்டனால எனக்குனு எந்த சொந்தமும் இப்போ இல்லை"என்றவர் அவள் முகத்தைப் பார்க்க

அவள் எந்த வித பாவனையும் காட்டாமல் இருக்க

"உன்னை என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சா அவனுக்குனு எந்த சொந்தமும் இல்லாம போயிடும்" என்றவர் குரல் வருத்தமாய் இருப்பதை அறிந்தவள்

"அம்மா"எனக் கூற

"இரு மா நான் பேசிடுறேன்...உன்னை கஷ்டப்படுத்தனும்னு நான் நினைக்கல மா சொந்தம் என்னமா சொந்தம்....உனக்கு அவன் அவனுக்கு நீ அது போதும்.உங்களுக்காக நான் இருப்பேன்.ஆனால்..."என்று அவர் நிறுத்த

மகிழ்வதா வருந்துவதா என்ன செய்வது என தெரியாமல் அவரையேப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

"நான் தியாவிற்கு வாக்கு கொடுத்துவிட்டேன் மா...அவனுக்கு அபியை திருமணம் செய்து தருவதாக...என்னை மன்னிச்சிரு மா" என அவள் கைகளை பிடித்துக் கொண்டு கேட்க

"என்னமா இது நீங்க என்கிட்ட மன்னிப்பு கேட்கலாமா?? எனக்குனு யாரும் இல்லைமா...அபி தான் எல்லாம்னு நினைச்ச.எங்க
அவர்கிட்ட என் காதலை சொன்னா அவர் அதை மறுத்து இப்போ பேசுறதையும் நிறுத்திருவாரோனு பயத்தில சொல்லவே இல்லை.இப்படி தான் நான் கடைசி வரை தனிமரமா யாரும் இல்லாதவளா இருக்கணும்னு அந்த கடவுள் எழுதி வெச்சிருக்கார் போல" மனதில் ஏற்பட்ட வலியையும் மறைத்துக் கொண்டு அவள் சிரிக்க

"அய்யோ மா"என ஆனுவைக் கட்டிக் கொண்டவர் "நீ தான் என் மருமக...தியா சொந்தபந்தமோட இருக்க பொண்ணு அவளை அவங்க சரி பண்ணிருவாங்க.துணையா இருப்பாங்க...அபியை விட நல்ல பையன் கிடைப்பான்.அவ நல்ல கலகலப்பான பொண்ணு.இதை பெரிசா எடுத்துக்க மாட்டா"என்றவர் அவள் நெற்றியில் முத்தமிட்டு

"இனி நீ அனாதை இல்லை...என் வீட்டு மருமகள் ஓகே வா"எனக் கூற

கண்களில் கண்ணீர் வழிந்தோட சரி மா என வேகமாக தலையாட்டினாள்.

"சரி வா உள்ளே போலாம்" என்றவர் அவள் கைப்பிடித்து அழைத்துச் சென்றார்.

"பாத்தியா டி...ஏண்டி ஏன்...நீ நீ மட்டும் இப்படி இருக்க...ப்ளீஸ் டி பேசு அழாத" திவி தியாவின் முன் மண்டியிட்டு அவள் கைகளை பிடித்துக் கெஞ்சிக் கொண்டிருக்க

தியா திவியைப் பாராமல் அவள் கைகளைப் பார்த்துக் கொண்டே அழுது கொண்டிருந்தாள்.

"பேசு டி....ஓயாம பேசுவியே இப்போ பேசு...இந்த பேச்சு தானே டி உன் வாழ்க்கை லட்சியத்தை அழிச்சுது...இந்த பேச்சு தானே டி உன்னை மட்டும் உலகமா நினைச்ச உன் குடும்பத்தை வேணாம்னு சொல்லிட்டு வந்துச்சு...ஏன் இப்போ மட்டும் அமைதியா இருக்க" என திவி கத்த

அவளை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

அழுகை என்றால் என்னவென்று தெரியாதவள் இன்று கதறி அழுகிறாள்.
கண்களில் தூசி விழுந்து கலங்கினால் கூட குடும்பமே கலங்குமே...
அவர்களை இந்த பாழாப்போன காதலுக்காக தூக்கி எறிந்து விட்டாளே....
சிறு வயது முதல் நடனம் தான் தன் வாழ்க்கை என இருந்தவள் காதலுக்காக அதையும் தொலைத்துக் கொண்டு நிற்கிறாளே...
பாவிப் பெண் ஏண்டி எல்லாரையும் நம்புகிறாய் பாத்தியா என்ன நடந்தது என்று???

"என் அத்தை...இப்போ எனக்கு அம்மாவாகவும் இருக்கிறார் என்று இதுவரை யாரையும் அம்மா என்று அழைக்காத நீ அவரை அம்மாவாக ஏற்றாயே...அதற்காக தான் அவர் உன்னை இப்போ வேண்டாம் என்று விட்டாரா????
அப்பா அப்பா என்று அவர் காலையே சுற்றி வந்த நீ அபிக்காக அவரையே வேணாம் சாகும் வரை இந்த ஊருக்கு வரமாட்டேன் என்றல்லாவா கூறி விட்டு வந்தாய்!!!!
இதற்காகத் தானா???
சொல்லுடி சொல்லு.
நீ கலகலப்பான பெண்...எதையும் எளிதாய் எடுத்துக் கொள்வாயாம்...அப்படியா?? " தன் தோழியின் கண்ணீரைக் கண்டு பொறுக்க முடியாமல் திவி கத்திக் கொண்டிருந்தாள்.

ஆனு மற்றும் அபியின் அம்மா வெளியே செல்வதைப் பார்த்த தியா,திவி அவரிடம் பேசலாம் என வெளியே வர அப்போது தான் அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டுவிட்டனர்.

மண்டபத்தில் தங்கள் அறைகுள் நுழைந்து அப்போது அழ ஆரம்பித்தவள் இன்னும் எதுவும் பேசாமல் அழுது கொண்டிருக்க பொறுமையாக கூறிப் பார்த்தவள் முடியாமல் போக கத்த ஆரம்பித்துவிட்டாள்.

"நான்...நானும் சாதரண பொண்ணு தானே திவி...எனக்கும் தானே ஆசை,காதல் எல்லாம் இருக்கும்...அவரைப் பார்த்த அந்த
நொடி அவர் தான் எனக்கு எல்லாம் என்று நினைத்தேனே அது தப்பா திவி....அவரைப் பற்றி எதுவும் தெரிந்துகொள்ளாமல் அவர் எனக்கு தான் எனக்கு மட்டுமே சொந்தமானவர் என நினைத்தேனே அது தப்பா?? திருமணமானவரா?? காதலித்துக் கொண்டிருந்தாரா?? ஏழையா? பணக்காரரா?? எதையும் இந்த பாழப்போன மனது கேட்கலையே!!!அவர் மட்டும் தானே வேண்டும் என நினைத்தது அது தப்பா??? அப்பா....அவர் தானே திவி எனக்கு எல்லாம்.என்ன தான் நான் அவருக்கு பயந்தது போல் வெளியே காட்டிக் கொண்டாலும் அம்மா இல்லாத என்னை ஒரு தேவதைப் போல் பார்த்துக் கொண்டாரே...என் காதலுக்காக தானே அவர் வேண்டாம் அவர் சொத்து வேண்டாம் அவர் இருக்கும் அந்த ஊரே வேண்டாம் என வந்தேன் அது தப்பா திவி...உனக்கே தெரியுமே...டேன்ஸ் அது மட்டும் தான் என் உயிர்மூச்சு என்று.
நேஷனல் லெவல் போட்டியில் கலந்துக்க வாய்ப்பு கிடைத்தும் எங்கே அபியை மறுபடியும் தொலைத்துவிடுவேனோ என பயந்து தானே அதையும் வேணாம் என தூக்கி எறிந்தேன்.
நான் சொந்தபந்தங்கள் இருந்தும் இப்போ அனாதையாக தானே திவி இருக்கேன்.நான் பாவம் இல்லையா??? " திக்கி திக்கி தியா கூற

அவளை அணைத்துக் கொண்டவள் " உனக்கு நான் இருக்கேன் நிலா மா...நீ அழாதே..."திவிக்கும்
அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

"எப்படி திவி நான் நான் கலகலப்பான பெண் என்னால் எளிதில் அபியை மறந்துவிட முடியுமா...அது நடக்கும் என இருந்தால் நான் ஏன் என் உலகமான என் குடும்பத்தை விட்டுவிட்டு இங்கே வரப்போகிறேன்.பார்த்த ஒரு நாளிலே என் மூச்சுக்காற்றில் கூட நிறைந்தவராயிற்றே...என்னால் எப்படி டி மறக்க முடியும் அவரை...அவர் இல்லாமல் என்னால் வாழ முடியுமா?? அவரில்லாத வாழ்க்கையே எனக்கு இல்லையே.
அய்யோ நான் என்ன செய்வேன் அவரை மனதார காதலித்தேன்,அவர் தான் என் உலகம் என்று நினைத்தேன்,அவரை வேண்டாம் என்ற என் குடும்பத்தை நான் வேண்டாம் என்றேன்,அவருக்காக என் லட்சியத்தை வேண்டாம் என்றேன் நான் என்ன தப்பு செய்தேன் திவி....சொல்லு நான் என்ன செய்தேன்" அழுகையை கட்டுப் படுத்த முடியாமல் உதட்டை கடித்து கட்டுப்படுத்த அதுவும் எவ்வளவு நேரம் தான் பொறுத்துக் கொள்ளும் இரத்தம் வர ஆரம்பிக்க

அதை துடைத்து அவள் முகத்தையும் கழுவி விட்டு மெத்தையில் உட்கார வைத்தவள் தன் மடிமேல் சாய்த்துக் கொண்டாள்.

"இல்லை நிலா மா...நீ ஒன்னுமே பண்ணல அழாத...நீ தூங்கு...உன் காதல் உண்மை கண்டிப்பா அது உன்னை சேத்து வைக்கும்."

"நிஜமாவா...என்னை சேத்துவைக்குமா??" குழந்தைப் போல் கேட்பவளைப் பார்த்து இப்போது அவளுக்கு தாயாகிப் போன திவியும் கண்களும் கலங்கின.

"ஆமா" என்றவள் அவள் தலையை வருட

"ஆனா...ஆனந்தி பாவமே...அவங்க சின்ன வயசுல இருந்தே ரொம்ப கஷ்டப்பட்டாங்க.அவங்களுக்காக என்ன வேணாலும் பண்ணலாம்.ஆனால் என் உயிரையே கேட்டா எப்படி?? அபி நல்லா இருப்பாருனா நான் அதையும் தருவேன்...அவர் இல்லாத வாழ்க்கை எனக்கு தேவையில்லை..குடும்பம் இல்லாமல்,லட்சியத்தையும் தொலைத்து எல்லாவற்றிற்கும் மேலான என் அபியையும் விட்டுக் கொடுத்த பின் நான் நடை பிணமாக இருக்க பேசாமல் அபி இல்லாத இந்த வாழ்க்கை எனக்கு வேணாம் என என்னை நானே அழித்துக் கொள்ளலாம்.
ஆம் இதுதான் சரி.
"அம்மா... சாரி மா...நான் உங்களை போட்டோவில் கூட பார்த்தது இல்லை.அப்பா வேண்டாம் நான் அம்மாவிற்காக ஏங்குவேன் எனக் கூறிவிட்டார்.நீங்கள் இல்லாத  குறையை அப்பா தான்மா சரிசெய்தார். நான் எனக்கு அம்மா இருப்பதாக தானே அனைவரிடமும் கூறுவேன்.எனக்கு அம்மாவாக இருக்கும் நிமிடம் மட்டும்  அவர் என்னை நிலா என அழைப்பார்.கடைசியாக நான் கிளம்பும் போதும் நிலா எனக் கூறி ஒருப் பார்வை பார்த்தாரே...அய்யோ அம்மா அந்த நொடியே நான் இறந்திருக்கலாம் ம்மா...உங்க கிட்டையே வரேன் மா...என்னை மன்னிச்சிருங்க" மனதில் நினைத்தவள் கண்களிலும் மட்டும் கண்ணீர் நிற்காமல் சுரந்துக் கொண்டிருந்தது.

நேஷனல் லெவல் நடனப் போட்டியில் கலந்துக் கொள்ள தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப் பட்ட மாணவி தியா.
நடனத்திற்காகவே மூன்று வருடம் தன் அழகிய குருவிக் கூட்டைப் பிரிந்து சென்னையில் பயிற்சி எடுத்தாள்.
பயிற்சி முடிந்து கிளம்பும் வழியில் தான் அபியைச் சந்தித்தது.

போட்டியில் கலந்துக் கொள்ள ஒருவாரம் இருக்கும் என்ற சமயத்தில் சஞ்சனாவை பார்க்கலாம் என வந்தவளுக்கு தன் முழு மூச்சான அபியைக் காண்போம் என கனவிலும் நினைக்கவில்லை.

எங்கே இப்போ விட்டால் அவனைத் தொலைத்துவிடுவோமோ என்ற பயத்தில் அவள் போட்டியில் கலந்துக் கொள்ளவில்லை.

லட்சியமா,அபியா எனக் கேட்டால் சிறிது நேரம் கூட யோசிக்காமல் அபி என்றாள் அவளைப் பெற்ற அவளை தன் உயிருக்கும் மேலாக நினைக்கும் தந்தையிடம்.

அவர் காதலுக்கு எதிரி அல்ல...லட்சியமே வேணாம் என உதறி விட்டு அவன் தான் வேணும் என நிற்பவளைக் கண்டு கோபம் தான் வந்தது அவருக்கு.

கோபத்தில் அப்போ நான் முக்கியமா அவன் முக்கியமா எனக் கேட்க அவன் தான் முக்கியம் என அவளை 24 வருடங்களாக உள்ளங்கையில் தாங்கிய தந்தையிடம் கூற அனைத்தும் இழந்தவரைப் போல் அதே இடத்தில் சரிந்து விழுந்தார்.

"அப்பா..." என அவள் முன்னோக்கி செல்ல

"வேணாம்..." என கை நீட்டி தடுத்தவர் "நீ போலாம்" என வெளியே கைக் காட்ட

தன் தந்தையை சரிசெய்து விடலாம் என நினைத்தவளுக்கு பெரும் ஏமாற்றமாய் போனது.

"இனி உனக்கு எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...எனக்குனு இருந்த ஒரே உறவு இப்போ இல்லைனு நினைச்சுக்கிறேன்"எனக் கூற

அவரின் இரத்தமல்லாவா..அதுவும் இள இரத்தம்..

"சரி நான் சாகுற வரை இந்த பக்கம் வரமாட்டேன்..." என்றவள் வெளியே செல்ல

"நிலா மா..." அவர் அழைக்க

அவரைப் பார்த்தவள் அங்கே நிற்காமல் அழுதுகொண்டே ஓடி வந்து விட்டாள்.

அன்று தான் அபியை பாலோ செய்ய சொல்லி திவியை அனுப்பியது.

எப்படியும் தன் தந்தையை சமாதானம் செய்யலாம் என நினைத்தவளுக்கு அவர் எனக்கு மகள் இல்லை...அவள் இறந்துவிட்டாள் என ஊரெங்கும் சொல்லி விட்ட செய்தி கேட்டு நொறுங்கிவிட்டாள்.
கோபத்தில் யோசிக்காமல் பேசும் வார்த்தைகள் எந்தளவு கொண்டும் போகும் என யாரும் அறிவதில்லை.

சஞ்சனா அறையினுள் நுழைய "ஹாய் சஞ்சு கா...வாங்க" என திவி கூற

"தியாக்கு என்னாச்சு" என சஞ்சு கேட்க

"அவளுக்கு ஒன்னும் ஆகலையே....ஏன் கா??"

"இல்ல திவி...நாளைக்கு சித்தப்பா வரேனு சொன்னாரு...தியா இருந்தா  வரமாட்டேனு சொல்லிட்டாரு.அப்பா ரொம்ப பீல் பண்ணாங்க.என்ன பிரச்சினைனு தெரியல சொல்லவும் மாட்டிங்கிறா....அதான் உன்கிட்ட கேட்கலாம் நினைச்சேன்"

"தெரியல கா...என்கிட்டேயும் சொல்ல மாட்டிங்கிறா" என திவி கூற

"சரி" என்றவள் வெளியே சென்று விட

தியாவின் கைகளை உனக்கு எப்போதும் நான் இருப்பேன் என்பது போல இறுக்கிப் பிடித்தாள்
அவள் கண்ணீர் அதிகமாவதைக் கண்டு.

"நான் இருக்கவே கூடாது...நான் யாருக்கும் பாரமா இருக்க வேணாம்..." அவள் அதையே கூறிக் கொண்டிருக்க...அவளைத் தேற்ற வழியில்லாமல் திவி அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.








Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro