பகுதி-40

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

என் வானத்தில்
சில மாற்றங்கள் வென்
மேகத்தில் உன் உருவங்கள்
என் காற்றிலே உன் சுவாசங்கள்
நான் பறந்து போகிறேன்
இது என்ன மாயம்
மாயம் மாயம் இது எதுவரை
போகும் போகும் போகும்
உன்னை பார்த்த நாள் முதல்
பறந்து போகிறேன் மேலே
மேலே மேலே

தியாவை வழியனுப்பி விட்டு அனைவரும் செல்ல சிறிது நேரம் தனியாக இருப்பதாக சொல்லி அபி காரை எடுத்துக் கொண்டு சென்றான்.

ஹைவேயில் வண்டியை ஓரமாக நிறுத்தியவன் சீட்டில் சாய்ந்து படுத்துக்கொண்டான்.
அவன் வாழ்வில் என்ன நடக்கிறது என்பது புதிராகவே உள்ளது அவனுக்கு...
அவனின் முதல் காதல்,முதன் முதலாக அவன் அதிகமாக பேசியதும் அவளிடம் தான்...ஆனால் அவள் இல்லை என்றவுடன் எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
அவளை மறந்தாலும் அவள் மேல் வைத்த அளவுக்கடந்த காதலை மறக்க இயலவில்லை.

ஆனந்தி அவன் அவ்வளவாக அவளிடம் பேசியது கூட இல்லை...ஏதாவது கேட்டால் பதில் சொல்வான்,மேஹா சொல்லி அவளின் குடும்பநிலை பற்றி அறிந்ததும் அவள் மேல் கொண்ட அன்பு அதிகமானது...அவளை அக்கறையாக பார்த்துக் கொண்டான்.
அதுதான் அவளுக்கு தன் மேல் காதலை ஏற்படுத்தியதா என நினைக்கும் போது வியப்பாய் இருந்தது.
ஒருத்தர் மேல் நாம் வைக்கும் அன்பு,அக்கறையை அவர்கள் காதல் என நினைத்துக் கொள்வதை நினைத்தால் என்ன செய்வது அவர்களை எனத் தான் எண்ண தோன்றியது.

இயற்கையாகவே ஒரு சிலர் மற்றவர்களின் மீது அன்பாக தான் இருப்பார்கள் ஒருசிலர் யாரென்று தெரியாத புதிய நபரின் மீது கூட அவருக்கு ஏதாவது ஒன்றென்றால் அக்கறை காட்டுவதுண்டு...
அபியும் அந்த விதம் தான்.

ஆனந்தியை நோகடிக்க விரும்பவில்லை அவள் காதலாவது வெற்றியடையட்டும் என தன் அம்மா கூறியதற்காக அவன் எடுத்த முடிவு இப்போது ஒரு பெண்ணின் வாழ்க்கையை கேள்வி குறியாகி விட்டதே...
மனம் மிகவும் பாரமானது.
குற்றவுணர்ச்சியில் தவித்தது.

அவள் ஏன் ஒத்துக்கொண்டாள் அவள் வாழ்க்கையை பற்றி யோசிக்க மாட்டாளா...அவள் மேல் கோவம் தான் வந்தது.

ஆனந்தியை மணம் செய்து கொள்ள அமர்ந்த பொழுது இருந்த இறுக்கம் தியா அமர்ந்ததும் காணாமல் போனதை மறந்து விட்டான் போல...

தியாவை பற்றி நினைத்துக் கொண்டிருந்தவன் அவள் இப்போ என்ன செய்து கொண்டிருப்பாள் என யோசித்துக் கொண்டிருக்க அவன் மொபைல் சிணுங்கியது.

அட்டெண்ட் செய்து காதில் வைத்தவன் எதிரில் என்ன சொன்னார்களோ இதோ வரேன் எனக் கூறியவன் காரில் ஏறி அமர்ந்து கிளம்பினான்.

"யு ஆர் லக்கி சார்ம் தியா நீ என் வாழ்க்கைல வந்ததும் எவ்ளோ பெரிய விஷயம் நடந்துருக்கு தெரியுமா? என் கேரியர்ல இதே ரொம்ப பெரிய வெற்றி"என்றவன்
தன் மொபைல் எடுத்து அர்ஜூ அனுப்பிய அவன் திருமண போட்டோவைப் பார்த்தான்.

அவள் கழுத்தில் தாலி கட்டும் போது அவள் குனிந்த தலை நிமிராமல் இருக்க அவன் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு அவள் கழுத்தில் தாலி கட்டுவது போல் இருந்தது அந்த போட்டோ.

அடுத்த போட்டோவில் அவள் கண்கள் கலங்கி கண்ணீரை துடைக்க அவன் தன் கரம் கொண்டு அவளுக்கு ஆறுதல் கூறும் வகையில் அவள் கைகளை பிடிப்பது போல் இருந்தது.

அந்த போட்டோவைப் பார்த்து புன்னகைத்தவன் அதை ஏன் தன் மொபைல் வால்பேப்பராக வைத்தான் என அவனுக்கே தெரியவில்லை.

கம்பெனியினுள் நுழைந்ததும் அவனது பிஏ "ஹாய் சார் ஹேப்பி மேரிட் லைப்" எனக் கூற

"தேங்க் யூ சரண் அர்ஜூக்கு கால் பண்ணீங்களா??" எனக் கேட்க

"யா சார் உங்களை டிஸ்டர்ப் பண்ண வேணானு அவருக்கு தான் டிரை பண்ணேன் நாட் ரீச்சபிள் சாரி சார் உங்களை டிஸ்டர்ப் பண்ணதுக்கு"

"இட்ஸ் ஓகே சரண் நோ பிராப்ளம் எப்போ உங்களுக்கு மெயில் வந்துச்சு??"

"வந்ததும் உங்களுக்கு கால் பண்ணிட்டேன் சார் நீங்க இரண்டு பேரும் எவ்ளோ ஈகரா இதுக்கு வெயிட் பண்ணீங்கனு தெரியும்..."என்றவன் புன்னகைக்க

"யா சரண் ஐம் ஹேப்பி வா போலாம்" என்றவன் உள்ளே தன் அறைக்கு சென்றான்.

மிடாஸ் அபி மற்றும் அர்ஜூவின் உழைப்பால் உருவான பென் டிரைவ் மற்றும் ஹார்டிஸ்க் நிறுவனம்.
வளர்ந்து வரும் நிறுவனம்.
இதுவரை இந்தியா அளவிலான இவர்களது டைஅப் இப்போது வெளிநாடு வரை சென்றுள்ளது.

ஒரு வருட கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைத்து விட்டது.
ஆம் அவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கும் லக்ஸம்பர்க்கில் இருக்கும் புகழ்பெற்ற சாப்ட்வேர் கம்பெனியுடன் டைஅப் செய்ய அனுமதி கிடைத்துவிட்டது.

"என்ன பார்மாலிட்டிஸ் எப்போ போகணும்??"

"கம்மிங் 7த் நீங்க அங்கே இருக்கணும் நம்ம பிராஜக்ட் பிரசன்டேஷன் இருக்கு அப்புறம் அவங்க பர்தர் இன்பர்மேஷன் கொடுப்பாங்க..." எனக் கூற

"அர்ஜூக்கு கால் பண்ணு??" என்றவன் அந்த மெயில் படிக்க ஆரம்பித்தான்.

டிசைன் அர்ஜூவின் டிபார்ட்மெண்ட் மேனுபேக்சரிங் அபியோடது.

எந்த கம்பெனிக்கு சென்றாலும் தங்கள் பிராடக்ட் பற்றி தெளிவாக கூறுவது அபி என்றாலும் கஸ்டமெருக்கு ஏற்றது போல் பேசி அவர்களை தன் வசம் இழுப்பது அர்ஜூவின் வேலை.

எந்தவொரு பொருள் என்றாலும் அதை கொடுத்தால் வாங்க மாட்டார்கள் அதை விற்கும் பிஸினஸ் யுக்தி தான் அதை வாங்க வைக்கும்.
அந்த யுக்தி இல்லாமல் தான் ரோட்டோர கடைகள் இன்னும் அப்படியே இருக்கிறது... குறைந்த விலையில் விற்கும் அவர்களிடம் வாங்காமல் ஏசியில் பெரிய மாலில் ஜி.எஸ்.டி,ஏசி என அனைத்திற்கும் பில் போட்டு கொடுக்கும் அவர்களிடம் வாங்க வைக்கிறது.

அர்ஜூ அந்த விதத்தில் மாயக்காரன் பேசி பேசி கஸ்டமர்களை தன்புறம் இழுப்பவன்.

"டென் மினிட்ஸ்ல இருக்கேனு சொன்னாரு சார்" என சரண் கூற

" ஓகே பைன்" என்றவன் அவனுக்காக காத்திருக்க

வேகமாக உள்ளே நுழைந்தவன்
"மச்சி" எனக் கத்த

"மச்சா"என்றவன் எழுந்து அவனிடம் ஓடிச் செல்ல

கட்டியணைத்து கீழே விழுந்து பிரண்டு கொண்டார்கள்.
சரண் இருவரையும் பார்த்து சிரிக்க
அவனையும் தங்களுடன் இணைத்துக் கொண்டார்கள்.
கொஞ்ச நஞ்ச உழைப்பா இன்னும் நம்ப முடியவில்லை இருவராலும்...

ஒருவழியாக  எழுந்து அமர்ந்து தண்ணீர் குடித்து தங்களை ஆசுவாசபடுத்திக் கொண்டு அர்ஜூ பேசத் தொடங்கினான்.
இல்லை இல்லை உளற தொடங்கினான்.

"மச்...மச்சி...அந்..அந்த கம்ப...கம்பெனி..."என இழுக்க

"நீங்க நிதானமா இல்லை உங்க கால் தரையில படல மொதல்ல நில்லுங்க அப்புறம் வந்து சொல்லுங்க" என சரண் கலாய்க்க

அவன் கழுத்தை தன் கைகளால் பிடித்து தன்புறம் இழுத்தவன் "வாய மூடு டா சந்தோஷத்துல எதுவும் வரமாட்டுது..." எனக் கூற

"ஈஈஈஈஈஈஈ" என்றவன்
"பின்ன எல்.கே.ஜி பாப்பா பர்ஸ்ட் டைம் ரைம்ஸ் சொல்லுற மாதிரி இப்படி பேசுறீங்க"எனக் கூற

அவன் காலை மிதித்தவன் அபியை நோக்கி அடுத்து செய்ய போவதை பற்றி பேசலானான்.(அபிக்கிட்ட யாரு திட்டு வாங்குறது)
அர்ஜூவிற்கும் சரணிற்கும் சுத்தமாக ஆகாது சரணின் பேவரெட் என்றும் அபி தான்...(நமக்கும் தானே)

"பிரசண்டேஷனுக்கு ஒருத்தர் சென்றால் போதும் யார் செல்வது" எனக் கேட்க

"மச்சி நீ போடா நீ தான் கரெக்ட்டா எக்ஸ்பிளைன் பண்ணுவ"என அர்ஜூ கூற

"அப்படியா? ஆனால் நீ தானே டா
நல்ல பேசுவ"எனக் கேட்க

"நான் இங்கே இருந்து ஸ்கைப்ல பேசிக்கிறேன் டா நீ போ" எனக் கூற

"சரி "என்றவன்

அடுத்து என்ன செய்ய வேண்டும் என பேசி எல்லாம் செய்து விட்டு இருவரும் கிளம்பினர்.

"டேய் என்கூடேயே வீட்டுக்கு வாடா தியா திங்க்ஸ்லாம் இருக்கு எடுத்துட்டு போயிடு"என அர்ஜூ கூற

"ம்ம்ம் ஓகே டா" என்றான்.

இருவரும் வீட்டிற்குள் சென்றதும் திவி ஓடி வந்து அபியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

அபி அவளை கேள்வியாக நோக்க

"அபி அண்ணா" என்றவள் நிறுத்த

"சொல்லு மா..." என்றவன் அவளைப் பார்த்து சிநேகமாக புன்னகைக்க

"என் தியாவை நல்லா பாத்துக்கோங்க அவ பாவம் அண்ணா அவளுக்கு யாரும் இல்லை...நீங்க மட்டும் தான் அவளுக்கு இருக்க சொந்தம்" என அழுது கொண்டே கூற

அவன் எதுவும் புரியாமல் அவளைப் பார்த்தான்.

"அவளுக்கும் அவங்க அப்பாக்கும் ஏதோ ப்ராப்ளம்டா...
வீட்டை விட்டு வெளியே வந்துட்டா நாங்க எல்லாரும் அவ கூட இருந்தாலும் அவள் எனக்கு யாருமில்லைனு தான் சொல்லுவா...ரொம்ப நல்ல பொண்ணு டா கலகலப்பா இருக்கும் அவ இருக்க இடம்...நல்லா பாத்துக்கோடா அவளை" எனக் கூறி அர்ஜூ அபியை பார்க்க

"நான் பாத்துக்கிறேன் டா..." என்றவன் திவியிடம் திரும்பி
"உன் பிரெண்ட் இப்போ என்னோட மனைவி ,அவளுக்கு எல்லாவுமா நான் இருப்பேன்...நான் நல்லா பாத்துப்பேன் ஓகே வா" எனக் கேட்க

வேகமாக தலையாட்டியவள் அவனைப் பார்த்து "தேங்க்யூ அண்ணா" எனக் கூற

அவள் தலையில் கொட்டியவன் "அடி வாங்குவ தேங்க்யூ சொன்னா..." என மிரட்ட

"ஈஈஈஈ வலிக்கலையே..." என்றவள் தியாவின் லக்கேஜை எடுக்க சென்றாள்.

எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு திவியிடம் சென்று தியாவின் நம்பரை வாங்கிக் கொண்டு அவளிடம் கேவலமாக திட்டும் வாங்கிக் கொண்டு சென்றான்.

வீட்டிற்குள் நுழைந்தவன் தன் தாய் அழுதிருப்பது தெரிய
அவர் மடியில் படுத்துக் கொண்டவன் என்னாச்சு மா எனக் கேட்க

" நான் பாவி டா ஒரு பொண்ணு நல்லாருக்கணும்னு வேற ஒரு பொண்ணு மனசை நோகடிச்சுட்டேன்" எனக் கூற எழுந்து அவர் கைகளைப் பிடித்துக் கொண்டவன்

"யாரு மா அந்த பொண்ணு "எனக் கேட்க

"தியா " என்றவர்
தியா அவரிடம் பேசியது, ஆனந்திக்கு கொடுத்த வாக்கு என அனைத்தையும கூற
அவரைப் பார்த்து
" ஏன் மா இப்படி பண்ணீங்க?? தியா பாவம் மா" என்றவன்
" அம்மா அப்போ...தியாவும் என்னை விரும்பினாளா???" எனக் கேட்டு அதிர்ச்சியாக

"ஆம்" என்று தலையசைத்தவர்

" நான் அவ கிட்ட பேசணும் டா என்கிட்ட அவ பேசுவாளா???"எனக் கேட்க

"பேசுவா மா" என்றவன் அவளுக்கு கால் செய்தான்.

தியா அப்போது தான் ரீச் ஆகியிருந்தாள்.
அங்கு சென்று  பயன்படுத்த ஏற்கனவே நம்பர் வாங்கி கொடுத்து விட்டனர் அவள் பணிபுரியும் நடனப் பள்ளியில்...

அட்டெண்ட் செய்தவள் "ஹலோ " என்று கூற

"நான் அபி"என்றவன் அமைதியாக
"ம்ம்ம்...." என்றவளும் அமைதியாகினாள்.

"ரீச் ஆயிட்டியா??"

"மம்ம்ம்..."

ம்ம்ம தவிர ஒன்னும் சொல்ல மாட்டா என புலம்ப அது அவளுக்கும் கேட்டு விட்டது.

மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்தவள் "சொல்லுங்க" எனக் கூறினாள்.

"அம்மா பேசணுமாம்..."என்றவன் அவரிடம் கொடுக்க

"தியா மா" என அழைக்க

"சொல்லுங்க அம்மா.."

"அத்தம்மானு சொல்ல மாட்டியா டா???" என்றவரின் குரலில் இருந்த ஏக்கம் அவளை ஏதோ செய்ய

"நான் தானே உங்க மருமகள்...அப்போ நான் தானே அப்படி  கூப்பிடணும் அத்தம்மா" என்றவள் சிரித்தாள்.

"இப்போ தான் மா நிம்மதியா இருக்கு.ன என்னை மன்னிச்சிரு டா..." எனக் கூற

அதற்குள் அபி மொபைலை வாங்கி தன் காதில் வைத்துக் கொண்டான்.

"எதுக்கு மா மன்னிப்பு லாம் ஆனந்தி பாவம் அம்மா...அபியை எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுனால தான் அவரை ஆனந்திக்கு விட்டுக்கொடுக்க தயாரானேன்...கடவுளை பாத்தீங்களா?? என் அபியை எனக்கே திருப்பி தந்துட்டாரு நான் தான் உங்க பையனை கொடுமை படுத்தணும்னு முடிவு பண்ணிட்டாரு உங்க பையனை இந்த ஆறு மாதம் நல்லா பாத்துக்கோங்க...நான் வந்ததும் பல பல சேதாரம் நடக்கலாம் நான் அங்கே வந்து மருமக கொடுமை என்னனு உங்களுக்கு காமிக்கிறேன் ஓகே வா அத்தம்மா" எனக் கூறிச் சிரிக்க

"ஓகே இல்லை" என்ற அபியின் குரலில் அதிர்ந்தவள்

"என்னங்க" என மெதுவாக கூற

"சேதராம்...ம்ம்ம்...அதெப்படி அங்கே பேசுறப்போ வாய்ஸ் பலமா இருக்கு இங்கே வந்ததும் காத்து தான் வருது..." எனக் கேட்க

"இல்...இல்லை...இல்லையே..." என இழுக்க

"அய்யோ அம்மா உங்க மருமகளுக்கு ஒழுங்கா பேச கூட வரல....இப்படி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி வெச்சுட்டீங்களே" என அபி சோகமாய் கூற

"அய்யோடா இல்லைனா இவரை ஆலியா பட் கல்யாணம் பண்ணிருப்பாங்க....ஹலோ பாஸ் உங்களுக்கு அவ்வளவு லாம் சீன் இல்லை தியாவே உங்களுக்கு அதிகம் தான்..." என்றவள் நாக்கை கடிக்க

"ஆன்...அப்புறம் மேடம்..."

"ஆன்...ஒன்னுல்லயே...நான் கட் பண்ணுறேன்" என்றவள் கட் செய்து லூசு மாதிரி சிரித்துக் கொண்டாள்.
இங்கு அபிக்கும் அதே நிலை தான்...

அவனின் முகத்தில்  உள்ள மகிழ்ச்சியைப் பார்த்தவர் நிம்மதியாக உள்ளே சென்றார்..

அவளுடைய பொருட்களை உள்ளே கொண்டு சென்றவன் மெத்தையில் படுக்க படுத்தவுடன் கண்களை உறக்கம் தழுவிக் கொண்டது.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro