பகுதி-41

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல்
என் பெண்மை திறண்டு நிற்கிறதே
திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொள்ளச் சொல்கிறதா
என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே
நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதறிந்தேன்என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா
கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா
கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா

"இப்போ நான் என்ன சொல்லிட்டேனு மூஞ்சியை தூக்கி வெச்சுருக்க" தன் அறையில் சன்னல் ஓரத்தில் நின்றிருந்தவளை தன்புறம் திருப்பி மனோ கேட்க

அவனைக் காணாது வேறுபுறம் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

"சாரி டி செல்லம் நான் உன்னை கஷ்டப்படுத்தனும்னு நினைக்கல,உன்னைத் தப்பா நினைச்சும் பேசல, ஏதோ தெரியாம உளறிட்டேன்"
என்றவன் அவள் கைகளைப் பிடிக்க
அவன் கைகளை உதறியவள் வெளியே சென்று ஊஞ்சலில் அமர்ந்துகொண்டாள்.

பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன் நீதானே அவளை திட்டுன...நீ தான் சமாளிக்கணும் என மனதில் கூறிக் கொண்டே அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.

நிலாவை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பவளை தன்புறம் திருப்பியவன் அவள் கண்களில் கண்ணீரைக் கண்டதும்
இறுக்கி அணைத்துக் கொண்டான்.

"நா...நான் அப்படி நினைப்பேனா சார் ஆனந்தி எனக்கு எவ்ளோ முக்கியம்னு உங்களுக்குத் தெரியாதா???நான் அவளை என்கூட வர சொல்லி வற்புறுத்தியும் அவளை என்கூட அந்த பையன் வீட்டுக்காரங்க விடல...நாங்க பாத்துக்கிறோம்னு அவளைக் கூட கூட்டிட்டு போயிட்டாங்க.
அவளும் எதுவும் சொல்லாம அவங்க கூட போயிட்டா...நீங்க அதைத் தெரிஞ்சுக்காம இதே உனக்கு அவ சொந்த தங்கச்சியா இருந்தா இப்படி பண்ணிருப்பியா??யாரோ ஒருத்தினு நினைச்சனால தான விட்டுட்டு வந்தேனு சொல்றீங்க...நான் அப்படியா நினைப்ப??? நான் அப்படி நினைக்கக் கூடிய பெண்ணா???" அவன் மார்பில் சாய்ந்து குலுங்கி குலுங்கி அழ

தான் கோவத்தில் கூறியது அவளை எந்த அளவு புண்படுத்தியுள்ளது என்பதை நினைத்தவன் தன்னைத் தானே திட்டிக் கொண்டு "மேஹா இங்கே பாரு என்னைப் பாருனு சொன்ன" என்றவனின் குரல் கொஞ்சம் அதிகாரமாக இருக்க
மெதுவாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

"ஆனந்திக்கு யாருமில்லை...நாம தான் அவளைப் பாத்துக்கணும்னு தானே என்கிட்ட சொன்ன"

அவள் அவனையேப் பார்த்துக் கொண்டிருக்க

"சொன்னியா இல்லையா தலையாவது ஆட்டேன் டி" அவன் கூற

அவளும் ஆமென்று தலையசைத்தாள்.

"அவ இந்த கல்யாணத்தை வேணாம்னு நிறுத்தியிருந்தா கண்டிப்பா ஏதாவது காரணம் இருக்கும்.
அதான் அவளே சொன்னாலே பரிதாபப்பட்டு என்னை கல்யாணம் பண்ணிக்க வேணாம்னு...அந்த முடிவை அவ எடுக்க எந்த அளவு வறுத்தப்பட்டிருப்பா.
அவ எந்த அளவு அபியை நேசிச்சானு தெரியும்...தெரிஞ்சும் அவனை கஷ்டப்படுத்திருக்கானா அந்த அளவு அவளும் கஷ்டப்பட்டிருப்பா...
அப்படி பட்ட பொண்ணுக்கு நம்ம இப்போ கண்டிப்பா ஆறுதலா இருக்கணும்டா.
அதான் அவளை நீ அவங்க கூட விட்டுட்டு வந்தனு சொன்னதும் கோவம் வந்து திட்டிட்டேன்...என்னை மன்னிச்சிரு டா நீ அப்படிலாம் நினைக்க மாட்ட டா...நான் தான கோவத்துல பேசிட்டேன், உன் புருசன் பாவம்ல மன்னிச்சிரு டி..."அதிகாரமாக ஆரம்பித்தவன் கெஞ்சலில் முடிக்க

மறுபடியும் அவன் மார்பில் முகம் புதைத்து "சாரிங்க நீங்க கோவத்துல பேசுனதை நானும் புரிஞ்சுக்காம வந்ததிலிருந்து உங்ககூட பேசல...அம்மா,அப்பா,அகி பேபிக்கிட்ட கூட ஒழுங்கா பேசல நான் போய் சாரி கேட்டுட்டு பேசிட்டு வரேன்"என்றவள் எழ

"அடியேய் மணியைப் பாரு 10.30 ஆச்சு...அவங்கெள்ளாம் தூங்கிருப்பாங்க.
என்னைத் தான் தொந்தரவு பண்ணுற அவங்களையும் பண்ணணுமா???"என இதழில் சிரிப்பை அடக்கிக் கொண்டு
கேட்க

அவனை முறைத்தவள் மறுபடியும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அவளைப் பார்த்து சிரித்தவன்
அவளருகில் நெருங்கி நின்று பின்னிலிருந்து ஒரு கையை கழுத்து வளைவிலும் ஒரு கையை இடுப்பைச் சுற்றியும் போட்டு தன்புறம் இழுக்க

அவன் செயலில் வெட்கம் வர அவன் கைகளை பிரித்து எடுக்க முயற்சி செய்ய அதை முடியாமல் போக

"என்னங்க" என இழுக்க
அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை.

அப்படியே அவன் அவள் கழுத்து வளைவில் முகம் பதிக்க
வெளியே பால்கனியில் நின்றிருந்தவர்களின் உடல் சில்லென்ற தென்றலால் சிலிர்த்திருக்க அவன் முகம் பதிந்த இடங்களோ வெப்பமாக இருக்க அது அவளுள்ளும் பரவியது.

இடுப்பில் சுற்றியிருந்த அவன் கைகளோ எல்லை மீற அவள் மொத்தமாக தன் வசம் இழந்து கொண்டிருந்தாள் அவனின் இந்த அருகாமையில்.

அவளை தன் கைகால் பூ போல் தாங்கியவன் உள்ளே கொண்டு வர
இன்னும் கண்களை இறுக்கி மூடிய நிலையிலே அவள் இறுக்க

"பேபி ஐ நீட் யூ" அவனின் வார்த்தைகள் அவளை என்னவோ செய்ய கண்களை இன்னும் இறுக்கி மூடிக் கொண்டாள்.

அதற்கு மாறாக அவள் கன்னங்களோ அவளின் சம்மதத்தை தன் சிவப்பு நிறத்தால் காட்டிக் கொடுக்க

அதில் மகிழ்ந்தவன் அவளும் தன் தேடலைத் தொடங்கினான்.

அவளும் தன் காதலை வார்த்தைகளால் சொல்லா விடினும் செயலில் காட்டினாள்.

இந்த இரவு உறக்கமில்லா இரவாக அமைய விடியற்காலையில் தான் கண் அசந்தார்கள்.

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

கதிரவனின் ஒளி கன்னத்தில் பட கண் விழித்தவன் தன் தாயை முறைக்க

"மணி பாரு டா 9 ஆச்சு இன்னும் தூங்குற....ஒரு நாள் கூட நீ இப்படி தூங்கி பாத்ததே இல்லே எழுப்பவும் மனசு இல்லை அதான் அந்த விண்டோவை ஓப்பன் பண்ணி வெச்சுட்டேன்..."
என்றவர் சிரிக்க

"எழுப்பி விட பேன் தான் ஆஃப் பண்ணுவாங்க இதென்னமா நியூ டெக்னிக்" என்றவன் எழுந்து அமர

"ஹாஹா நாங்களும் டெவலப் ஆக வேணாமா"என்றவர் சிரித்துக் கொண்டு ப்ரஸ் ஆகி வா காபி தரேன் எனக் கூறி விட்டு வெளியே சென்று விட்டார்.

மொபைல் எடுத்தவன் "இப்போ தியா என்ன பண்ணிட்டு இருப்பா "என யோசிக்க நேரத்தைப் பார்த்தான்.

"இங்கே 9.00 அப்போ அங்கே 5.30யா இருக்கும் எழுந்திருச்சுருப்பாளா??"
என யோசித்தவன் சும்மா ஒரு மெசேஜை தட்டிவிடுவோம் என நினைத்து "குட் மார்னிங் ஹேவ் ய வொண்டர்புல் டே "என அனுப்பி விட்டுப் பார்க்க அது டபுள் டிக் ஆனது.

கைகள் நடுங்க அதையே பார்த்துக் கொண்டிருக்க இப்போது அந்த மெசேஜ் ப்ளூ டிக் ஆக டைப்பிங் என்று காட்டியது.

"ஹேப்பி மார்னிங்..."உடன் சிரித்தபடி இருக்கும் ஒரு ஸ்மைலியை அவள் தட்டிவிட

அதைப் பார்த்தவனுக்கும் இதழ்களில் சிரிப்பு ஒட்டிக் கொண்டது.

(ம்ம்க்கும்....இதுங்க இப்போ தான் குட் மார்னிங் அனுப்பி சிரிச்சுகுதுங்க...இவங்களை எப்போ லவ் சொல்ல வெச்சு....இப்போவே கண்ணைக் கட்டுதே😑😑)

தியாவிற்கு புது இடம் என்பதால் உறக்கம் வரவில்லை மொபைல் எடுத்து வாட்சப்பில் ஸ்டேட்டஸ் பார்த்துக் கொண்டிருக்க
"நேஷ்😍" என்ற எண்ணில் இருந்து மெசேஜ் வந்ததும் தன் கண்களை நம்ப முடியாமல் அதையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மெசேஜைப் பார்த்தவள் அவனுக்கு ரிப்ளை செய்துவிட்டு அவன் டிபியில் தெரியும் அவனது போட்டோவை ரசித்துக் கொண்டிருந்தாள்.

அதை சேவ் செய்தவள் தன் மொபைல் வால்பேப்பராக வைத்து விட்டு மறுபடியும் படுத்துக் கொண்டாள்.
இப்போது உறக்கம் அவளைக் கேளாமலே வர சுகமாய் உறங்கினாள்.

அவள் ஏதாவது மெசேஜ் செய்வாளா என அவள் மெசேஜ்காக காத்துக் கொண்டிருந்தவன் காபியை கைகளில் வைத்துக் கொண்டு குடிக்காமல் மொபைல் பார்த்துக் கொண்டிருக்க "டேய் அது ஆறிப்போயிடும் டா சீக்கிரம் குடி"எனக் கூற

"ம்ம்ம் மா..."என்றவன் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு மொபைலைக் கீழே வைக்க டொய்ங் என்ற சத்தம் வர முகம் தௌளசண்ட் வாட்ஸ் பல்பு மாதிரி பிரகாசிக்க அதைப் பார்த்து ப்யூஸ் போன பல்பாய் மாறியது.

குளித்து ரெடியாகி வந்தவன் மொபைலைப் பார்க்க அப்போதும் மெசேஜ் வரவில்லை.
கோபம் கொண்டவன்
"ஹாய் கொஞ்சமாச்சும் அக்கறை இருக்கா?? இப்படியா அங்கே காம்படிசன்க்கு போயிட்டு ஆன்லைன் வராம இருப்ப😠😠😠?? " என அனுப்பி விட்டு ஆபிஸ் சென்றான்.

அங்கு காலை 11 மணியளவில் எழுந்தவள் ப்ரெஸ் ஆகி காபியுடன் வந்தவள் மொபைல் எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தாள்.

அபியின் மெசேஜ் வர அவன் ஏன் இதற்கு திட்டியிருக்கிறான் என சுத்தமாக புரியயவில்லை.
ஆன்லைன் வராம ப்ராக்டிஸ் பண்ணணும் இவரு ஏன் ஆன்லைன் வரலைனு திட்டுராரு என யோசித்தவள் எதுவும் புரியாமல் போக "நைட் தூங்கவே இல்லை...மார்னிங் தான் தூங்கினேன் இன்னும் டூ டேய்ஸ் கழிச்சு தான் ப்ராக்டிஸ் ஸ்டார்ட் பண்ணுறோம் " என அவனுக்கு ரிப்ளை செய்து விட்டு ரெடியாகி வெளியே சென்றாள்.

அவளுடன் வந்தவர்கள் ஏழு பேர்...ஆறு நபர்கள் போட்டிக்கும் ஒருத்தர் இவளைப் போலவே பயிற்சி தருவதற்கும்.

வெளியே செல்லலாம் என முடிவெடுக்க உடன் வந்த கேர்ள்ஸிற்காக வெளியே செல்ல ஒத்துக் கொண்டாள்.

கம்பெனிக்கு வந்தவன் மெசேஜ் வராமல் போக அவளின் மேல் கோபம் கொண்டான் ஏன் எதற்கு எனத் தெரியவில்லை ஆனால் அவள் மேல் கோபம்...

அர்ஜூ வந்து அழைத்தும் திரும்பாமல் மொபைல் பார்த்துக் கொண்டிருக்க
அவன் தலையில் நங்கென்று கொட்டினான்.

"அய்யோ அம்மா" என அலறியவன் அர்ஜூவைப் பார்த்து முறைக்க

அவனைப் பார்த்து சிரித்தவன் "என்னடா பண்ணுற நாளைக்கு உனக்கு மார்னிங் பிளைட் டா....நீ அங்கே போய் தியாவோட ஸ்டே பண்ணிக்கோ அங்கே இருந்து த்ரீ ஹார்ஸ் டிராவல் கம்பெனிக்கு...7த் மீட்டிங் முடிந்ததும் அவங்க ஏதாவது இன்ஸ்ட்ரெக்ஷன்ஷ் சொல்ற வர தியா கூட இரு சரியா??" எனக் கூற

தியாவுடன் இருக்கப் போகிறோம் என்ற ஆனந்தத்தில் மிதந்தவன் அதற்கு மேல் அவன் கூறியதைக் கேட்கவில்லை..

"என்னடா சரியா" அவன்
தோள்பட்டையை பிடித்து ஆட்ட

நினைவுக்கு வந்தவன் வேகமாக சரி என தலையசைக்க

அதைக் கண்டு சிரித்தவன் "இவ்ளோ வேகமா தலையாட்டுறியே நான் என்ன சொன்னேனு சொல்லு "எனக் கேட்க

திருவிழாவில் காணாமல் போன குழந்தையைப் போல் அவன் முழிப்பதைக் கண்டவனுக்கு சிரிப்பு தாங்காமல் விழுந்து விழுந்து சிரிப்பவனைப் பார்த்து கோபம் கொண்டவன் அவனைத் தள்ளி விட அவனும் இவனைத் தள்ளி விட கீழே புரண்டு சண்டையிட
அதை தடுக்க வந்த சரணையும் இணைத்துக் கொண்டு சண்டையிட ஆரம்பித்தனர்.

"அய்யோ அம்மா ஆளை விடுங்க...." எனக் கூறித் தப்பித்தவன் அவர்களைப் பார்த்துக் கொண்டே எதிரில் வந்த பெண் மீது மோத
அவள் சரணைப் பார்த்து முறைக்க
திருத்திருவென முழித்தவன் அபியைப் பாவமாக பார்த்தான்.
அவன் முழிப்பதைப் பார்த்து அர்ஜூ அபி சிரிக்க ஆரம்பிக்க
அந்த சிரிப்பு சத்தத்தைக் கேட்டு அவர்கள் புறம் திரும்பியவள் அவர்களை இருவரும் இருந்த நிலையைப் பார்த்து ச்சச்சீ ச்சசீ என கண்களை மூடிக் கொண்டாள்.

அர்ஜூவின் மேல் அபி படுத்திருக்க அவன் அபியைக் கட்டிக் கொண்டு இருந்தான்.

அவள் கண்களை மூடிக் கொண்டதும் ஈஈஈ என்றவர்கள் எழுந்து நின்று கொள்ள

"சாரி" இருவரும் சேர்ந்து கேட்க

"மன்னாங்கட்டி" என தலையில் அடித்துக் கொண்டவள்

"இந்தாங்க" என தான் கொண்டு வந்த பைலை நீட்ட

"சரண் நீ மட்டும் தான் எங்க இரண்டு பேருக்கும் பி.ஏ வா இருந்த...உனக்கு கஷ்டம்ல அதான் இனி ஒரு பி.ஏ...நீயே சொல்லு உனக்கு யாருக்கு பி.ஏ வா இருக்க விருப்பம்னு ,அவ மற்ற ஒருத்தருக்கு இருந்துப்பா" எனக் கூறியவன் சரணைப் பார்க்க

அவனுக்கு ஏதோ போல் இருந்தது.
அர்ஜூவுடன் சண்டையிட்டாலும் அவனைப் பிடிக்கும் மூன்று பேர் மட்டுமே இருந்த அழகிய குருவிக்கூட்டில் அவள் வந்தது அவனுக்குப் பிடிக்க வில்லை.

"உங்க இஷ்டம் பாஸ் " என்றவன் வெளியே செல்ல எத்தணிக்க

அவன் எப்பொழுதும் சார் என்று தான் அழைப்பான் அவன் பாஸ் என்று அழைத்தாலே அவனின் மனநிலை சரியில்லை என அறிந்து
கொள்ளலாம்.

"சரண் இங்கே வா" என அர்ஜூ அழைக்க

"நான் வரமாட்டேன் போங்க" என்றவன் முகத்தைத் திருப்பிக் கொள்ள

இருவரும் சென்று அவன் பக்கத்தில் நின்று கொண்டு "என்னாச்சு ?"எனக் கேட்க

எனக்கு அவங்களை பிடிக்கவே இல்லை அவங்க வந்ததும் உங்கள்ள ஒருத்தர் கிட்ட இருந்து என்னைப் பிரிக்கிறாங்க என்றவன் முகத்தை சோகமாக வைத்துக் கொள்ள
அய்யோ என்றவர்கள் அவனை அணைத்துக் கொண்டு நீ தான் எங்களுக்கு பி.ஏ உனக்கு அவ அசிஸ்டெண்ட் ஓகே வா எனக் கேட்க
ஓகே இல்லை என்றவன் அவளை முறைத்தான்.

"இந்த குழந்தையை வெச்சுக்கிட்டு. சாரி டா மா இவன் இப்படி தான்...எங்க மேல ஓவர் பொசசிவ் " என அபி கூற

"பரவால அண்ணா" என்றவள்

சரணின் அருகில் வந்து "சாரி" என தன் இரு காதுகளையும் பிடித்துக் கெஞ்சி
"உங்களுக்குள்ள நான் எப்பவும் வர மாட்டேன் அண்ணா தான் உங்களுக்கு ஹெல்ப்பா இருக்க வர சொன்னாரு உங்களுக்கு பிடிக்கலனா நான் வரல..." என்றவள் அவன் முகத்தைப் பார்க்க

அமைதியாக இருந்தவன் "நான் இவங்களை கொஞ்சம் மிஸ் பண்ணுற மாதிரி பீல் ஆனாலும் நீ போயிடணும் இவங்களுக்கு எல்லா வேலையும் நான் தான் செய்வேன் நீ செய்யக் கூடாது இதுக்கு ஓகே னா நீ இருந்துக்கோ..." என்றவன் அவளைப் பார்க்க

அவனைப் பார்த்து சிரித்தவள் ம்ம்ம என்று தலையசைத்தாள்.

அனைத்து வேலைகளும் முடிந்த பின் வீட்டுக்கு வந்தவன் மொபைலைப் பார்க்கஅவள் அனுப்பிய மெசேஜைப் படித்தவன் "நம்ம ஏன் சம்மந்தமே இல்லாம இவளைத் திட்டினோம்" என யோசிக்க

"நான் ஒரு லூசு" என்றவன் சிரித்துக் கொண்டே "குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ் " என அனுப்பி விட்டு தன் மொபைல் வால்பேப்பரில்
தெரிந்த அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

"டேய் நீங்க இன்னும் பத்து நாளைக்கு கூட வெளியே வர வேணாம் அட்லீஸ்ட் சாப்பாடாவது வாங்கிக்கோங்க" எனக் கூறி அகிலா சிரித்துக் கொண்டே கதவைத் தட்ட

"அய்யோ பாருங்க அகி பேபி கலாய்க்கிறாங்க" என்றவள் மனோவை முறைக்க

"ஈஈஈஈ " என்றவன் அவள் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு வெளியே சென்றான்.

அகிலா அவனைக் கலாய்க்க
சிரித்துக் கொண்டே உள்ளே வந்தவன் "ஏய் குண்டு தக்காளி தூங்காத டி சாப்பிடு" எனக் கூற

"போங்க லாலிபாப் தூக்கம் வருது" என்றவளிடம்

"அதென்னடி லாலிபாப்??" எனக் கேட்க

அவனைப் பார்த்து சிரித்தவள்
"எனக்கு லாலிபாப் ரொம்ப பிடிக்கும் அதே அளவு உங்களையும் பிடிக்கும்.
அப்படியே கடிச்சு திண்ணணும் போல இருக்கும் என்றவள் முகத்தை மூடி ஒரு புறம் மட்டும் கைகளை விலக்கி அவனைப் பார்க்க அவன் பார்வையைக் கண்டவள் "அய்யோ..." எனக் கூறி பெட்சீட் மூடிப் படுத்துக் கொண்டாள்.

அவளைப் பார்த்து சிரித்தவன் அவளை வலுக்கட்டாயமாக எழுப்பி ஊட்டிவிட்டு அவளைத் தன் மார்பிலே தூங்கவும் வைத்தான்.
💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

அவனின் வெறும் குட் நைட் மெசேஜைப் பார்த்தவள்
ஒருவேளை நம்ம மேல கோவம் இருக்குமோ என யோசித்தவள்

"ஏதாவது கோவமா??" என அனுப்ப

அவள் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் மெசேஜ் வர சிரித்துக் கொண்டே

"ஆமா" என அனுப்ப

"என்னாச்சு??? நான் என்ன பண்ணேன்??" என அவள் பதில் அனுப்ப

"ஒன்னும் பண்ணலையே சும்மா சொன்னேன் கோவம்னு " என அவன் நக்கலாக சிரிக்கும் ஸ்மைலியும் சேர்த்து அனுப்ப

"லூசு" என்றவள்
உடனே அதை டெலிட் பார் எவ்ரிஒன் கொடுத்து விட்டாள்.

"நான் மெசேஜ் பாத்துட்டேன்..." என அபி அனுப்ப

"அய்யோ" என கண்களை மூடியவள் சிரித்துக் கொண்டே

"சாரி" என அனுப்ப

"நான் நேர்ல வந்து பனிஸ்மெண்ட் கொடுக்கிறேன்" என்றவன்
ஆப்லைன் சென்று விட

"நேர்லயா??? எப்போ??? எங்கே??" அவள் மெசேஜ் செய்து கொண்டே இருக்க

அவன் ரிப்ளை செய்யாததால் கால் செய்து விட்டாள்.

"ஈஈஈஈஈ...." இதுக்கு தானே நான் ஆப்லைன் வந்தேன் என்றவன் சிறிது நேரம் கழித்து கால் அட்டெண்ட் செய்ய

"என்ன சொன்னீங்க??"

"நான எதுவும் சொல்லலையே இன்னும் ஒரு ஹலோ கூட சொல்லல" எனக் கூறி அவன் சிரிக்க

"மொக்க காமெடி ப்ளீஸ் நேஷ் சொல்லுங்க...."

"என்ன சொன்ன???"

தன் உளறியதை நினைத்தவள்

"ஒன்னுலயே பாய்" எனக் கூறி கட் செய்துவிட்டாள்.

நேஷ்....அழகா இருக்கே என்றவனுக்கு அப்போது தான் தெரிந்தது.
என்னோட முழுப்பெயரையே நான் மறந்துட்டனே.
அபிநேஷ்....
நேஷ்....
நல்லாருக்கு.

என்றவன் முழுவதுமாக தொலைந்தான் அவளிடத்தில்.


Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro