பகுதி - 02

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

மனித மிருகங்களுக்கொரு கடவுள் நான்
வெளிச்சத்தில இருக்குறவன் தான்டா இருட்ட பார்த்து பயப்படுவான்

நான் இருட்லயே வாழ்றவன்
I'm Not Bad. Just Evil.

எவனா இருந்தால் என்ன

எமனா இருந்தால் என்ன
சிவனா இருந்தாலும்
உனக்கு சமமாய் அமைவேன் நான்
பணமாய் இருந்தால் என்ன

நீ பிணமாய் இருந்தால் என்ன
நான் உயிரோடிருந்திடவே
எவனையும் உணவாய் உண்பேன் நான்

என பலமுறை அழைத்து ஓய்ந்தும் அவன் அந்த அழைப்பை ஏற்காமல் கொலை நடந்த இடத்தில் தன் கண்களுக்கு ஏதாவது சிக்குகிறதா என நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான்.

மறுபடியும் அது தன் இருப்பைக் காட்ட கடுப்புடன் அதை ஏற்றவன் எடிட்டர் என்ற பெயரைக் கண்டதும் " ஹலோ சார் " என்று கூற

" என்னப்பா குரல் இவ்ளோ காரசாரமா வருது...இன்னும் எந்த க்ளூவும் கிடைக்கல போலயே" என்றவரிடம்

" அதே தான் சார்...எப்படி இந்த பைலை க்ளோஸ் பண்ணலாம்னு பேசிட்டு இருக்காங்க" என்றவனிடம் இன்னும் சிலவற்றைக் கூறிவிட்டு அவர் அழைப்பைத் துண்டித்து விட அவனோ இரண்டு காவலர்கள் தனியே செல்வதைப் பார்த்து அவனும் அவர்கள் பின்னால் சென்றான்.

"எப்படி விசாரிச்சாலும் எந்த க்ளூவும் கிடைக்க மாட்டிங்குது...குடிபோதைல வந்து விபத்துனு கேஸை முடிச்சுடுவோம் " என்ற காவலர் தேநீர் அருந்திக் கொண்டிருக்க

" சார் இதுல ஏதோ ஒரு மர்மம் இருக்கு..இரண்டு நாட்களாக ரிப்பேர் ஆகி நின்னுட்டு இருக்க சரக்குந்து எப்படி அவன் மேலே வந்து மோதும்...விபத்து ஏற்படும் ?" என்று கேள்வி கேட்ட கான்ஸ்டபிளை முறைத்த எஸ்.ஐ " போயா போ...போய் அந்த டீக்கு பில் கொடுக்கிற வேலையைப் பாரு " என்று திட்டி  "வந்துட்டானுங்க பெரிய இவனுங்களாட்டம்....எங்களுக்கு தெரியாத மர்மமா....செருப்பு எங்கே இருக்கணுமோ அங்க தான் இருக்கணும்" என்று முணுமுணுத்துக் கொண்டே அவர் சென்று விட

பலமுறை வாங்கிய பேச்சுக்கள் தானே என்று சக்தியும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை...

பல கனவுகளுடனும் இலட்சியத்துடன் காவல் பணிக்கு வந்தவன் சக்திவேல்....
ஆனால் இங்கோ டீ வாங்கவும் நாயை வாக்கிங் அழைத்து செல்லவும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்...

"ஹாய் ஹாய் " என்று தன் அக்மார்க் புன்னகையுடன் உள்ளே வந்தவனை  கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஜோ...

" வழியுது தொடச்சுக்கோ" என்று வாசு கலாய்த்தும் அதை தூசி போல தட்டியவள் கன்னத்தில் கைக் கொடுத்து  அவனைப் பார்க்க " ஹாய் ஜோ"  என்று அவளுக்கும் ஒரு புன்னகையை பரிசளித்து சென்றான் அவன்...

"வாங்க ஆதி...எந்த க்ளூவும் கிடைக்கலையா?" என்று கேட்ட எடிட்டரிடம்
" ஆமா சார்...அவங்க விபத்துனு பைலை க்ளோஸ் பண்ண போறாங்களாம்...நான் விசாரிச்ச வரை எனக்கு எதுவும் கிடைக்கல..ஆனால் ஒரு கான்ஸ்டபிள் மட்டும் இதை பற்றி இன்னும் விசாரிக்கணும்னு சொல்லிட்டு இருந்தார் " என்றவனிடம்

" அவருக்கு முன்னாடி நாம செய்திகளை சேகரித்து நம்ம பத்திரிக்கைல போடணும்...சீக்கிரம் உங்க வேலையை ஆரம்பிங்க " என்றவரிடம்

" சரிங்க சார்...சிறப்பா பண்ணிடலாம்" என்றவன் அதே அக்மார்க் புன்னகையுடன் தன் இருக்கையில் வந்து அமர்ந்தான்.

ஆதி ஆறடி ஆணழகன் என்று கூறலாம்...
அவன் புன்னகையில் விழாத பெண்களே இல்லை.
திமிர் பிடித்தவனும் இல்லை...
காதல் மன்னனும் இல்லை...
யார் என்ன கூறினாலும் ஒரு புன்னகையை மட்டுமே பரிசளிப்பான்.
மிகவும் திறமை வாய்ந்தவன்.
காவலதிகாரிகளுக்கு கிடைக்காத ஆதாரம் கூட இவன் கைகளில் சிக்கி விடும் இவர்களும் டிஆர்பி காக இவர்களின் பத்திரிக்கைகளில் போட்டுவிடுவர்.

தனிபிரிவு என்றில்லாமல் இந்த மாதிரி டிஆர்பி ஏற்றும் துறையில் இவனின் பங்கு அதிகம் எனலாம்..
இவர்களின் ஸ்கை நிறுவனம் தான் இன்று வரை முதலில் இடத்தில் இருக்கிறது.

"அய்யோ எவ்வளவு அழகு " என்று அவனை சைட் அடித்துக் கொண்டிருந்த ஜோவை அடித்த வாசு வாயைப் பொத்திக் கொண்டு உன் வேலையைப் பார் என்று கூற

போடி போடி என்ற ஜோ வோ

கடந்து போகும் நொடிதனில்.....
என் நினைவு உன்னை தீண்டினாலும்....
உச்சி குளிர்ந்து போவேன்....
உன்னை உரிமைக் கொண்ட நொடியாக....

என்று கண்களை மூடி அவனை நினைத்து கூறிக் கொண்டிருந்தாள்..

அருமை அருமை இதையே எழுதிடுவோம் என்ற வாசுவின் குரலில் கண்களைத் திறந்தவள் " என்ன எழுத போற " என்று கேட்க

" இப்போ கண்ணை மூடிட்டு கனவுலகத்தில் மிதந்துட்டு இருக்கப்போ சொன்னியே அது " என்றவள் முதுகில் அடித்தவள் அது என் ஆதிக்காக எழுதினது...ஒழுங்கா வேற யோசி என்றவளிடம் என்ன கூறுவாள் அவள் என்ன வைத்துக் கொண்டா வஞ்சகம் செய்கிறாள்.

"அடியே ஜோ உனக்கே தெரியும்...நான் புதிர், கணித விளையாட்டுனு சுத்திட்டு இருந்தேன்...நீ தானே உன் கவிதையை என் கவிதைனு சொல்லி என்னை உன் கூட சேர்த்துக்கிட்ட...இப்போ என்னை கவிதை எழுத சொன்னா எப்படி ?" என்று முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு கேட்க

"ச்ச்சி கேவலமா நடிக்காதே...ஒழுங்கா கவிதை சொல்லு " என்று முறைத்த ஜோ வை இவளும் முறைத்து பழிக்கு பழி வாங்கிய பிறகு தாடையில் கை வைத்து யோசிக்க ஆரம்பித்தாள்.

ஒருதலைக்காதல் என்ற தலைப்பில் எழுத வேண்டும் ஆனால் என்ன எழுத எனத் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தவள் இப்போது ஜோ வைப் பார்த்து பல்லைக் காட்ட

கண்டிப்பா கேவலமா ஏதோ சொல்லப் போற சொல்லு எனக் கூறி தலையில் அடித்தவளை முறைத்தவள்

அன்பே நீ ஒரு பொங்கல்
உன் அப்பா தான் என் அங்கிள்
அன்பே நீ ஒரு பரோட்டா
உன்னை மாப்பிள்ளை கேட்டு நான் வரட்டா
அன்பே நீ ஒரு தயிர்
நான் தான் உன் உயிர்

என்றவள் தலையில் நங் நங்கென்று கொட்டியவள் இது எந்த வீடியோல இருந்து சுட்டது என்று கோபமாக கேட்க

" இனியன் வீடியோ " என்றவள் தலையை கீழே கவிழ்த்துக் கொண்டாள்.

" வாசு மை டார்லிங்...உனக்கு பிடிச்சவங்களை நினைச்சுக்கோ கண்டிப்பா கவிதை வரும்" என்று கூறிய ஜோ வைப் பார்த்து புன்னகைத்தவள்  சிறிது நேரம் யோசித்து

காணும் யாவும் உந்தன் கார் முகமே
காலமெல்லாம் கண்டு துவள்கிறது பாவி மனமே
காதல் கொண்டு விரைவில் வாராயோ!!

என்றவளை அணைத்துக் கொண்ட ஜோ சீக்கிரம் எழுதி தா நான் எடிட்டரை பார்த்துட்டு வந்துடுறேன் என்று கூறிச் செல்ல

" உன் ஆளைப் பார்க்க போறேனு சொல்லு டி..." என்று கூறிக் கண்ணடிக்க சிரித்தவளோ ஆதியைத் தேடிச் சென்றாள்.

தன் சுழலும் நாற்காலியில் வந்து அமர்ந்தவன் இன்று வாங்கிய இரண்டு நபரின் பெயர்களை தன் பர்சனல் டைரியில் எழுதி வைத்து விட்டு சாய்ந்து அமர்ந்து கண்களை மூடினான்.

" ஹாய் ஆதி " என்று உள்ளே வந்தவளைப் பார்த்து புன்னகைத்தவன் " என்னாச்சு ?" என்று கேட்க

" சும்மா எடிட்டரைப் பார்க்க வந்தேன்"

" ஓஓ " என்றவன் தன் வேலையைப் பார்க்கத் தொடங்க

" காபி ?" என்றவளிடம்

" வேலை இருக்கே" என்று தோளைக் குலுக்கியவனை மனதில் திட்டிக் கொண்டே " ஓகே பாய் ஆதி" என்று கூறி நகர்ந்தாள்.

" ஆமா சார் நான் பார்த்தேன்...
நான் என் மனைவி குழந்தைகள் எல்லாம் இந்த வழியாகத்தான் சினிமாவுக்கு போயிட்டு திரும்ப வந்துட்டு இருந்தோம் அப்போ ஏதோ ஒரு பெரிய சத்தம் எல்லாரும் பயந்துட்டாங்க....வந்துட்டு இருந்த வண்டி அதுபாட்டுக்கு கீழே சரிஞ்சு விழுந்து அவர் துடிச்சுட்டு இருந்தார்..
நான் மனைவி, குழந்தைகளை ஓரமாக நிக்க வெச்சுட்டு வரப்போ அதோ அந்த பலகை இருக்கே அங்கே நின்னுட்டு இருந்த சரக்குந்து அவர் மேலே ஏறி நின்னுட்டு இருந்துச்சு...பயந்து ஓடிட்டேன் சார் " என்றவன் மேனி இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது.

" சரக்குந்து முழுவதும் கை ரேகை நிபுணர்கள் தேடி தேடி ஓய்ந்து தான் போயினர்...
எந்தவித கை ரேகையும் கிடைக்காமல் போக வேறு வழியில்லாமல் அவர்களும் சென்று விட " பாரு யா...நீ சொன்ன மாதிரி நடக்க வாய்ப்பே இல்லை..இது பழுதான வண்டி...அது எப்படி பத்து அடி தள்ளி வந்து அவன் மேலே ஏறும்....
அதுவும் இல்லாம எந்தவித கை ரேகையும் கிடைக்கல....
நேற்று இரவு பார்த்த திரைப்படத்தோட கதையா? நல்லாருக்குயா கிளம்பு கிளம்பு " என்ற எஸ்.ஐ உட்சபட்ட கோவத்தில் கத்திக் கொண்டிருக்க

" எனக்கு என்னவோ அவர் சொல்வது உண்மைனு தோணுது " என்று கூறி வந்த சக்தியை பார்வையாலே எரித்தவர்  "பார்த்துக்கோ " என்று கூறி  சென்று விட்டார்.

எல்லாம் தலை விதி என்று நொந்தவன் விவரத்தை கூறியவரின் விலாசத்தை மட்டும் வாங்கிக் கொண்டு மேலதிகாரி கூறியது போல விபத்து என்று கூறி பைலை முடித்து விட்டு கிளம்ப மனமில்லாமல் வேறு ஏதாவது ஆதாரம் கிடைக்கிறதா என்று யோசித்தவனுக்கு தலைவலி மட்டுமே பரிசாக கிடைத்தது.

பலருக்கு பல திருப்பங்களைத் தர சூரியனும் உதித்து விட அந்த இனிய காலைப் பொழுது அழகாக விடிந்தது..

தன் டைரியில் எழுதி வைத்த பெயரில் ஒருவன் கல்லூரி மாணவனாக இருக்க அவனைச் சந்திக்க வேண்டும் என நினைத்த ஆதி அவனது கல்லூரிக்குச் செல்ல அங்கோ அவன் இல்லை...
" எங்கே போனான்" என்று யோசித்தவன் எதிரில் வந்த நபர் மீது மோதினான்.

" ஹே ஹாய் ஆதி...வாட் ய ப்ளசண்ட் சர்ப்ரைஸ் இங்கே எதுக்கு வந்தீங்க " என்ற ஜோவைப் பார்த்து சிரித்தவன்

" சும்மா " என்று தோள்பட்டையை குலுக்க

அவன் செய்கையில் புன்னகைத்தவள் " இப்போவாச்சும் ஒரு கப் காஃபி " என்று கேட்க

" போலாமே " என்றவன் தன் வண்டியில் செல்ல அவனும் அவளைப் பின் தொடர்ந்தாள் அவளின் ஸ்கூட்டியுடன்.

"ஆதி தனுதீரன் யாருனு தெரியுமா? நம்ம பத்திரிக்கையில் வேலை செய்யும் ஒருவர் தானாம்...காலையில் தான்  கேள்விப் பட்டேன் " என்று கேட்ட
ஜோ விடம்

" எனக்கு உங்க முழுப்பெயரே தெரியாது...எல்லாரும் ஜோனு கூப்பிடுறனால நானும் அப்படி கூப்பிடுறேன்...இதுல எனக்கு எப்படி அவங்களைத் தெரியும் " என்றவன் கூறியது அவளுக்கு வருத்தமளிக்க

" ஐ யம் ஜோஸ்னா...இங்கே ஜோ " என்று கூறிப் புன்னகைத்தாள்.

" நைஸ் நேம் " என்றவன் காஃபியை அருந்தத் தொடங்க

அவனிடம் ஏதாவது பேசலாம் என்று
நினைத்தவள் எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியாமல் முழிக்க
" அப்புறம் ஜோ உங்களுக்கு எத்தனை குழந்தைகள் " என்று ஆரம்பித்தவனை முறைத்தவள் "என்னைப் பார்த்தா அப்படியா இருக்கு " என்று கேட்டவளிடம் இல்லையா என்று தோளைக் குலுக்கியவன் " எனக்கு முக்கியமான வேலை இருக்கு...காஃபிக்கு நன்றி " என்று கூறி சென்று விட அவன் செல்வதைப் பார்த்து பெருமூச்சு விட்டவள் தனுதீரனின் இன்றைய பதிவை படிக்க ஆரம்பித்தாள்.

அதிகாலை நேரம் 03:60 நெருங்கிக் கொண்டிருக்க  அந்த யாருமில்லா சாலையில்  தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தவனின்  மீது புயல் போல வந்த ஏதோ ஒன்று தாக்க கீழே விழுந்தவனின் தலையோ சக்கரத்தின் கம்பிகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டது.
100 வேகத்தில் வந்ததினால் அந்த வண்டி  சாலையில் சரிந்து கொண்டே செல்ல சக்கரத்தில் மாட்டிக் கொண்டிருந்த அவன் தலையும் தேய்த்துக் கொண்டே  சென்று எதிரில் இருந்த கம்பியின்  மீது மோத அங்கிருந்த ராடு போன்ற ஒன்று அவன் தலையில்  பட்டு தலை மட்டும் தெரித்து விழுந்து முண்டமாக காட்சியளித்தான் அவன்..

மூன்று சாலைகள் சந்திக்கும் அந்த முச்சந்தியின் நடுவில் அவன் தலை இருக்க அந்த சாலையே இரத்தவெள்ளத்தில் காட்சிளித்தது..

கொலைகள் தொடரும்...
தனுதீரன்.

அய்யோ இவரு ஏன் இப்படி கொலை பண்ணிட்டே இருக்காரு...இதுக்கு ஒரு என்ட் கார்டே இல்லையா என்று புலம்பிக் கொண்டே தன் வெள்ளை நிற வெஸ்பாவில் கிளம்பினாள் ஜோ.

" என்னது மறுபடியும் கொடூரமா கொலையா...அதுவும் அதே இடத்துலையா .....நமக்குனே வந்து சேரும் போல...வை வரேன் " என்று புலம்பிக் கொண்டே கிளம்பினார் எஸ்.ஐ செந்தில் குமார்.





வந்துட்டேன்🏃‍♀🏃‍♀🏃‍♀மறக்காம உங்கள் கருத்துகளை சொல்லுங்க மக்களே...
நல்லா இல்லைனா நான் மாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறேன்.

நன்றி
உங்கள் தனு❤

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro