The truth

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

நால்வரும் Mr Volter ன் வீட்டுக்கு மீண்டும் சென்றனர்.அங்கு Mr Volter இருப்பதாக எந்த தடயமும் இருக்கவில்லை. Garden னுள் சென்ற நண்பர்கள் முன்பு சென்ற அதே யன்னலினூடாக செல்ல யோசித்தனர்.

ஆனாலும் இவர்களின் துரதிஷ்டவசமாக அவ் யன்னல் மூடப்பட்டிருந்தது. Danish "நீங்க மூவரும் பேசிக் கொண்டிருக்கும் போது current அ side ஆகுறப்ப கம்பி ஒன்று கழட்டி வைச்சிருப்பத கண்டு சரி சென்ஞன். But அத மீண்டும் கழற்ற முடியும்." என்றான்.

"Good work danish...அப்போ இப்பதே போம்" என robin danish ன் பின்னாடி செல்ல சில கொடிகள் இலைசருகுகள் என்பன யன்னலை மூடி இருந்தது. நால்வரும் கையினால் அவற்றை அகற்ற danish அக்கம்பியை கண்டுப்பிடித்து கழற்றி எடுக்க முதலில் robin உள்ளே நுழைந்து மற்றவர்கள் உள்ளே வர உதவினான்.

உள்ளே வந்த நால்வரும் அவ்வறையை பார்க்க அது Mr Volter ன் library ஆக இருந்தது."correct ஆன place கு வந்து இருக்கிறோம்" என்றாள் loral."நாங்க ஒரு விஷயத்துல கை வெச்சா அப்படி தான்" என தன்னையே பாராட்டி கொண்டான் danish.

"Ok guys, நம்ம வந்த வேலைய பார்ப்பம் " என robin கூற நால்வரும் நான்கு திசைகளில் ஏதாவது Crystal ஐ பற்றிய clue கிடைக்கிறதா? என நோட்டமிட்டனர். Robin அருகில் உள்ள cupboard ஐ திறக்க அதில் பல documents இருந்தது. அதனை எடுத்து பார்க்க "Hey guys, இங்க கொஞ்சம் வாங்க" என கூற loral உம் Gwen உம் அருகில் வந்தனர்.

அந்த documents ல் Mr Volter ன் signature கு கீழே Areologist என குறிப்பிடப்படிருந்தது. "அப்போ Mr Volter ஒரு Areologist ஆ?" என gwen வினவ " Hey guys, இங்க பாருங்க...இது ரொம்ப அழகா இருக்குது இல்ல??" என serious ஆன கட்டத்தில் Mr Volter ன்  மேசைக்கு மேல் இருந்த தட்டினால் தலையை அசைக்கும் நாய் ஒன்றின் சிலையை காட்டி அதனை தட்டி தட்டி இருந்தான்.

அந்த சமயம் பார்த்து இவர்கள் இருக்கும் இடத்திற்கு Mr Volter வந்து danish ன் பின் நிற்க danish மீண்டும் " guys இது போல ஒரு சிலையை scooby doo லயும் காட்டினாங்க. மறக்காம போகும் போது இதையும் எடுத்துட்டு போக நினைவுபடுத்துங்க..." என கூற "உன்ன....நாங்க ஒன்னும் திருட வரல்ல" என கூறி கொண்டே மூவரும் danish பக்கம் திரும்ப அதிர்ந்து நின்றனர்.

இவர்கள் அதிர்ந்து நிற்பதை கண்ட danish "பேய் பார்க்குற மாதிரி என்னை பார்க்குறிங்க...அந்தளவு கேவலமாகவா இருக்கிறேன்???" என கூற loral கை அசைவினால் பின்னால் பார்க்க கூற அவன் ஒருவேளை பேயாக இருக்கும் என எண்ணி மெதுவாக திரும்பினான். அங்கு Mr Volter ஐ எதிர்பார்க்காத danish திடீரென அவரை கண்டவுடன் கத்த ஆரம்பித்தான்.

Danish ன் வாயை Mr Volter மூட தனது நண்பனுக்கு ஏதாவது செய்து விடுவார் என்று எண்ணி மூவரும் அருகில் உள்ள தடிகளை எடுத்து Mr Volter கு அடிக்க ஆரம்பித்தனர். "Just stop it" என Mr Volter கத்த பயத்தில் மூவரும் தடிகளை கீழே போட்டனர்.

"என்ன நால்வரும் spy என்று நினைப்பா???" என Mr Volter கோவத்துடன் வினவ " அதுவும் நல்ல பேர் தான் spy kids 4....நம்ம gang க்கு new name" என பெயரை மீண்டும் மீண்டும் கூற கோபத்தில் இருந்த Mr Volter " Danish " என அவனை உற்று பார்த்தார்.

" உங்களுக்கு என்ட பெயர் தெரியுமா?" ஆச்சரியமாக danish கேட்க "உங்க எல்லோர்டயும்...Robin danish loral & gwen" என நால்வரையும் தனிதனியாக point பண்ணி காட்டினார்.

" உங்கள மட்டும் அல்ல robin ஓட பாட்டி Lula வயும் தான்" என கூற நால்வருக்கும் அதிர்ச்சியின் மேல் அதிர்ச்சியாக இருந்தது. "What??? How do u know my grand ma??" என robin வினவ " நீங்க நால்வரும் பண்ண வேலைக்கு இப்படி பேசி கொண்டு இருக்க கூடாது. தூக்கி வெளிய போட்டிருக்கனும்..." என Mr Volter கோபத்தில் கூறினார்.

"எனக்கு ஒன்னுமே புரிது இல்ல...what r u talking about???how do u know our names & Robin's grand ma's name??? Who r u??? Where do u from???" என மனதில் உள்ள அனைத்து கேள்வியையும் loral Mr Volter இடம் கேட்டாள்.

"நீ பார்க்க Smart girl போல இருக்குற...ok children take a seat...பார்க்குற போல நான் கெட்டவன் ஒன்னும் இல்ல. நீங்க நால்வரும் பண்ணது பெரிய தப்பு.அது அறியாம தான் பண்ணுணிங்க என்டு தெரியும்" என கூறி கொண்டு biscuits ஐ எடுத்து அவர்கள் முன் நீட்ட "இன்னமும் எங்கள குழம்ப வைக்காம சொல்ல வாரத சொல்லுங்க " என கூறி கொண்டே biscuits ஐ வாயில் போட்டான் danish.

" Crystal ஓட கதைய இப்போ சொல்ல போறேன்...பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த Mini town வழிப்போக்கர்கள் just ஒரு தங்குமிடமாக மட்டும் இருந்தது. அப்போது Mini town என்று கூட பெயர் இருக்கல்ல. Dara town  கும் tikki town கும் இடைப்பட்டதாக இருந்தது.

அந்த இரு town களுக்கு இடையே பல மைல் தூரம் காணப்பட்டதால் எல்லோரும் இளைப்பாறும் இடமாக நம்ம town இருந்தது but பெரிய வசதிகள் காணப்படல்ல.மக்களும் நீர் வளம் ஒன்றும் காணப்படாததால் இங்க குடிபெயரவும் இல்லை.இப்படியே சில வருடங்கள் கழித்து திடீரென town கு நடுவில ஒரு ஊற்று உருவாக்கியது.

அது இறைவனோட வரமாக அங்கு வந்து போகும் மக்கள் எண்ணினாங்க. காலப்போக்கில் அங்கு மனிதர்கள் குடிபெயர்ந்து வாழ்ந்து வந்தனர். Dara town ல இருக்கிற பல பணக்காரர்கள் வியாபாரத்தின் இலகுக்காக இங்கு குடிபெயர்ந்தாங்க. பெரிய town களுக்கு இடையே காணப்பட்ட சிறிய town என்பதால mini town என்டு பெயர் வச்சாங்க.

இப்படியே காலம் போக சில சுயநலவாதிகள் இந்த ஊற்றை(spring) இன்னும் பெரிதாக்கி mini town கு வார மக்களுக்கிடையே குடிநீரை பணத்துக்கு வழங்க தீர்மானித்தனர். இதுல பல பணக்காரர்களும் பங்கெடுக்க வேறு வழியில்லாமல் மக்களும் இறைவனின் இலவச கொடையை பணத்துக்கு வாங்கினர். இந்த வியாபாரம் மற்ற எல்லா வியாபாரத்தை விடவும் முன்னேற்றம் கண்டதால சுயநலவாதிகள் மென்மேலும் ஊற்றை பெரிதாக்க முயன்றனர்.

அவ்வழியே வந்த மந்திரக்காரி ஒருத்தி " நீங்க பண்ணுற வேலை தப்பு! இறைவன் கொடுத்த அருட்கொடையை அநாவசியமாக சுயநலத்துக்காக பயன்படுத்துறீங்க இதனால ஊற்று ஆறாக பெருக்கெடுக்கும் காலம் வரும்....அப்போது இந்த நகரம் அழியும்...இது உண்மை!!!" என எச்சரிக்க அங்குள்ளவர்கள் அவளுக்கு பைத்தியம் என பெயர் சூட்டினாங்க. அதற்கு அவள் " என்னை தேடி வரும் காலம் வெகு தூரத்தில் இல்லை " என கூறி புறப்பட்டாள்.

சில நாட்கள் கழித்து ஊற்றை தோண்ட மந்திரக்காரி கூறியது போல் அது ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதில் சுயநலவாதிகள் பலரும் அடித்து சென்றனர். ஆனாலும் நீர் ஊற்றிலிருந்து விடாது பெரிய அலைகளாக வர மக்கள் பல வழிகளில் அதனை நிறுத்த முயற்சித்தனர்.

யாவும் தோல்வியில் முடிய அனைவரும் அந்த மந்திரக்காரியை பார்க்க புறப்பட்டனர். அதில், தான் வாழும் town மக்களுக்காக எதையும் செய்யும் பொதுநலமான ஒரு பணக்காரனும் இருந்தான் அவனுக்கு பிள்ளைகள் இல்லை என்பதால் தனது சொத்துகளின் மேல் பேராசை இல்லாதவன்.

மந்திரக்காரியை சந்தித்து தாங்கள் அவளை நம்பாததற்கு மன்னிக்குமாறு வேண்டினர். அவளோ இவற்றை எதிர்பார்த்தது போல இருந்தாள்.தாம் வாழும் இடம் அழிவடைவதை எப்படி சரி காப்பாற்றுமாறு கூறி அம்மக்கள் கெஞ்ச "இறைவன் தந்த கொடையை நீங்கள் அநாவசியமாக பயன்படுத்தினீர்கள்...அதற்கான தண்டனையே இது! இதனை நிறுத்த வேண்டும் என்றால் உங்களிடம் உள்ள கொடைகளை கொண்டு அவ் ஊற்றை நிரப்புங்கள் " என்றாள்.

"கொடை என்றால் எதனை கூறுகிறீர்கள்? " என ஒருவன் கேட்க " உங்கள் பணம், தங்கம், வெள்ளி, நகைகள் அனைத்தும் " என்றாள். "நாம வெறும் வியாபாரிகள் எங்களிடம் அவ்வளவு ஊற்றை நிரப்பும் அளவு இல்லையே" என்று கூற "உங்கள் வாழிடத்து மேல் அக்கறை இருந்தால் அனைவரும் இணைந்து இதனை செய்யுங்கள் இல்லை எனில் ஓடி விடுங்கள்" என கூற சில பணக்காரர்கள் உட்பட பலர் அவ் ஊரை விட்டு சென்றனர்.

அவ்வூரில் உள்ள பொதுநலமான பணக்காரர் மட்டும் இதில் ஈடுபட முன்வந்து கிட்ட தட்ட அனைத்து சொத்துகளையும் ஊற்றை நிரப்ப பயன்படுத்தினார். இன்னும் சில மக்களும் தன்னிடமுள்ள பணம், தங்கத்தையும் அதில் இட்டனர். ஒருவாறு அவ்வூற்று நீர் வருவது குறைந்து தங்கத்தால் நிரம்பியது. ஆகவே தங்கத்தை யாராவது திருடலாம் என எண்ணி இருக்கும் இடம் தெரியாமல் சுரங்கம் அமைத்து அதனுள் கெட்டவர்கள் சென்றால் அவர்களை அழிக்க பல traps இம் செய்யப்பட்டது.

மேலும் அப்பணக்காரன் இச்சுரங்சத்தை திறக்க ஓரே வழியாக 4 crystals ஐ மந்திரக்காரியின் உதவியுடன் அமைத்து அதனை உலகத்தில் 4 இடங்களில் ஒழித்து வைத்தார்.காலப்போக்கில் அவ்வூர் மக்களுக்கு இருந்ததை விட வருமானம் அதிகரித்தது.mini town ஐ நோக்கி பலரும் பின் காலத்தில் குடிபெயர்ந்தாங்க.

பணக்காரன் இறக்கும் போது இவை அனைத்தையும் ஒரு Book ல் எழுதி புதைத்து விட்டார். அவர்தான் F. Robert S Wright. உங்கள்ட இருக்கிற அந்த புத்தகம் A book about the crystals!!!!" என கதையை முடித்தார்.

"அப்போ எப்படி Crystals மறுபடியும் mini town கு வந்தது??? அந்த treasure இருப்பதாக சொல்ரது உண்மையா???" என robin வினவ " ஆமா இவங்க Treasure என்டு சொல்ரது Mr Robert ஊற்றை மூடின பணத்தை தான்...அவ் ஊற்று இருப்பது இப்ப நாம Mini town ல இருக்கிற museum கு கீழே தான்" என்றார் Mr Volter.

"இதை எல்லாம் தெரிஞ்சி வெச்சிருக்கிற நீங்க உண்மையில யாரு?" என loral கேட்க அவர் அருகில் உள்ள photo frame ஐ காட்டினார். இதனை கண்டு நால்வரும் திகைத்து நின்றனர். "அப்போ Mr Gold Smith உங்க நண்பனா???" என gwen அதிர்ச்சியில் வினவினாள்.

Thanks for the votes & comments.
Keep supporting.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro