07. Friends

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் கொண்ட அடுத்த நாளுக்காக சூரியன் தனது கதிர்களை பூமியில் பதித்தான்.

Kate ன் அக்கா kate ஐ எழுப்ப அவளும் அவசரமாக எழுந்து கொண்டாள். Kate ம் அவளது நண்பியும் அக்காவும் காலை கடன்களை முடித்துவிட்டு உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.

Kate ன் அக்கா "மிஸ்டர் வாட்சன் இருக்கிறாரா?" என வினவ, அங்கு இருந்த ஒரு அதிகாரி அவர் நேற்றிலிருந்து காணாமல் போய் இருப்பதாகவும் அவரை கண்டுபிடிக்க விசாரணைகள் தொடருவதாகவும் கூறினார்.

அதிர்ச்சியில் அவள் திகைத்து நிற்க,  இவள் முன்னைய நாள் பக்கத்து ஊருக்கு சென்ற சமயம் நடந்திருக்க வேண்டும் என்று ஊகித்து கொண்டாள்.

இவளும் ஒரு Journalist ஆக இருந்தாலும் இந்த மர்ம  செய்தி அவளின் காதுக்கு எட்டவில்லை ஆனால் அந்த கேக் ஷாப்பில் நடந்த மர்மத்தை பற்றி இவளே பத்திரிகையில் பிரசுரித்து இருந்தாள்.

" என்ன வாட்சன் uncle அ காணவில்லையா?" என்று மீளா அதிர்ச்சியில் கூறி அங்குள்ள கதிரையில் அப்படியே அமர்ந்து விட்டாள்.

" என்ன நடந்தது அக்கா?" என்று kate கேட்க, அவளோ கண்களில் நீருடன் "வாட்சன் அங்கிள் தான் எனக்கு இங்கு வந்த காலத்தில் இருந்து உதவி புரிந்து கொண்டிருந்தார். இந்த sparkling town எமது ஊரை விடவும் மிகவும் வித்தியாசமானது. ஆகவே இங்கு இருப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. எனது மேல்படிப்பு முடிய வேலை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்த சமயம் மிஸ்டர் வாட்சன் தான் டவுனில் உள்ள சிறந்த பத்திரிகை அலுவலகத்தில் வேலை வாய்ப்பு எடுத்து தந்தார். மேலும் எனது articles எழுத தகவல்களை பெற்றுக் கொள்ளவும் இவரே உதவி புரிந்தார். அவ்வளவு பாசமானவர். இப்போ இவரே மர்மமான முறையில் காணாமல் போய் இருக்கிறார் என கேட்க என்னால் நம்ப முடியவில்ல. இந்த sparkling town உள்ள மிகச்சிறந்த போலீச அதிகாரியில் ஒருவரை இவர்!" என்று கண்ணீர் மல்க சொன்னாள் kate ன் அக்கா.

உதவி கூறி வந்த இடத்திலும் இவ்வாறு சிக்கல்கள் காணப்பட மேலும் உடைந்தாள் kate.

Kate ன் அக்கா அப்போலிஸ் அதிகாரியிடம் மிஸ்டர் வாட்சனின் வீட்டு முகவரியை கேட்க, அதற்கு அவர் "அவர் வீட்டில் யாரும் இல்லை அவருக்கு உள்ள ஒரே மகனும் என் வீட்டில் தான் இருக்கிறான். அவரின் மனைவியோ வெளிநாட்டிலிருந்து  வர இன்னுமு ஒரு வாரம் எடுக்கும்" என கூறினார் samuel ன் அப்பா அந்த பொலிஸ் அதிகாரி.

Kate னு அக்காவோ Mr Watson மீது உள்ள நன்றிகடனினால் அவரின் மகனை பார்க்க செல்ல வேண்டும் என்று கேட்டாள்.

Samuel ன் அப்பா தன்னோடு அவர்கள் மூவரையும் கூட்டி சென்றார்.

Samuel ன் வீடு சென்றதும் samuel ன் அப்பா andrian ஐ kate ன் அக்காவிற்கு அறிமுகப்படுத்தி வைத்திருந்தார்.

Kate அக்காவோ "ஹாய்! எனக்கு உனது அப்பா நிறைய உதவிகளை செய்துள்ளார். எனக்கு உனது அப்பாவை நன்றாக தெரியும். நான் ஒரு Journalist. ஆகவே உனது அப்பாவை கண்டுபிடிக்க என்னால் ஆன உதவிகளை நான் செய்வேன்!" என நன்றி கானுடன் கூற,

Andrian ன் முகத்தில் சோகம் மீண்டும் படர்ந்தது. ஆகவே அதனை வேறு திசைக்கு மாற்ற kate ன் அக்கா "மறந்துட்டேன்! இதுதான் எனது தங்கை kate. இது அவளுடைய நண்பி Tania. இவர்கள் இருவரும் எனது ஊரில் இருந்து வந்து இருக்காங்க. சிறிது காலம் இவர்கள் இருவரும் என்னுடன் தான் இருப்பார்கள். நீங்கள் நால்வரும் பார்க்க ஒரே வயது என்று நினைக்கிறேன்.  ஆகவே உங்கள் நால்வருக்கும் ஒன்றாக நேரத்தை கழிக்க முடியும்! Have a good time!" என்று அறிமுகப்படுத்தி வைத்தார்.

Andrian இருவரை பார்த்து புன்னகைக்க, sameul ஏன் அக்கா நீங்க இரண்டு ஆம்பள பசங்கள கூட்டிவர கூடாதா என்ற எணணத்துடன் சலித்து கொண்டான்.

இவர்கள் நால்வரையும் மேல் மாடியில் உள்ள sameul ன் அறைக்கு செல்ல, கீழே kate ன் அக்கா தான் மிஸ்டர் வாட்சனை பார்க்க வந்த காரணத்தை விளக்கி கூறினாள்.

மேலே சென்ற நால்வரும் ஒருவரை ஒருவர் முகத்தை பார்க்க, andrian  sameulக்கு கண்களால் ஏதோ செய்து காட்டினான். ஆனால் அவனால் என்ன என்று புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆகவே அவனே தொடர்ந்து, இருவரையும் அமருமாறு கூறினான். பின் நீண்ட அமைதினின் பின் மூவரும் பேசாததை தொடர்ந்து andrianனே மீண்டும் பேச ஆரம்மபித்தான்.

இருவரின் ஆடைகளிலும் இருந்த வானவில் இலச்சினை கண்டு அவனை விசாரிக்க, அவர்களும் தங்கள் ஊரைப்பற்றி கூற ஆரம்பித்தனர்.

Samuel கோ இருவரினதும் பேச்சு நம்பக்கூடியதாக இருக்கவில்லை. மேலும் Tania ஓ அவனின் ஆசை தலையாட்டும் பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்து தூக்கி வாரிப் போட்டது.

"உங்களுக்கு vacation ஆ?" என andrian கேட்க, தனது நண்பியின் துக்க முகத்தை பார்த்த வண்ணம் நடந்த அனைத்தையும் கூறி முடித்தாள் Tania.

"I'm sorry!" என andrian கவலையுடன் கூறி தனது அப்பா மர்மான முறையில் காணாமல் போனதையும் கூறினான்.

இருவருக்கும் தனது பெற்றோர்கள் தொலைந்ததை கூறி கவலையை பகிர்ந்து கொள்ள, andrian ஓ அவர்கள் இருவருடனும் ஒட்டிப் போனான். Kate ஐ கண்டு samuel கவலை அடைந்தாலும் Tania ன் கை அவனின் toys ஐ விட்டு வைக்காததால் கோபம் கொண்டான்.

Samuel ன் அப்பா kate ன் அக்காவிடம் வாக்குமூலம் எடுத்து கொண்டு விசாரணைகளை தொடங்கினார்.

மாலை நேரமாக samuel andrian ஐ கூட்டி கொண்டு town னும் சென்றான். Hotdogs ஐ சாப்பிட ஒரு truck ன் அருகில் இருவரும் வர, sameul ஓ முன்னால் இருந்த banner ஐ பார்த்தான்.

"டேய் டேய்! எங்க ஊர்ல circus நடக்க போகுது டா!" என கத்தி கூச்சலிட, andrian உம் அந்த banner ஐ பார்த்தான். அவனுக்கு ஏனோ அந்த புகைப்படத்தில் நடுவே இருந்த மந்திரவாதியை பார்க்க சற்று பயமாகவும் வித்தியாசமான உணர்வும் ஏற்பட்டது.

கையில் hotdogs உடன் இருவரும் புற்தரையில் அமர, திடீரென்று sameul ன் முகத்தில் பந்து வந்து அடித்தது. கோபத்தின் உச்சிக்கு சென்ற sameul ஓ கத்திக் கொண்டு பந்தை மறுபுறத்தில் வீசினான்.

"இப்படி கோவப்பட்டா சீக்கிரம் தடி ஊன்ற வரும்!" என சத்தம் அருகில் வர, இருவரும் திரும்பி பார்த்தனர்.

அங்கே Tania உம் Kate உம் வந்து கொண்டிருந்தனர்.

நால்வரும் சிறிது நேரம் கதைத்து விட்டு ஊரை சுற்றி பார்க்க சென்றனர்.
.
.
.
Sparkling town ல் circus கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தது. பெரிய பெரிய கூடாரங்கள் கட்டப்பட்டு பயிற்சிகள் நடைபெற்று கொண்டிருந்தன.

Circus பயிற்சிகள் நடைபெறும் சத்தம் கீழே நிலத்துகடியில் குகையில் தூங்கிக் கொண்டிருந்த அந்த வெள்ளி கையை கொண்ட மர்ம நபரின் தூக்கத்தை கலைத்தது.

புரண்டு புரண்டு பார்த்தான். தூக்கம் போகவில்லை. கோபத்துடன் எழுந்து வெளியே சென்றான்.

"Hey! எங்க போற? திரும்ப வெளிய போய் யாருக்கும் எந்த ஆபத்தையும் செய்யாம இதுக்குல்லயே இரு. உனக்கு வேண்டியதை நான் தர்றேன்." என அவள் கூற,

"நான் என்ன ஆசைக்கா செய்றேன். என்னை கோவபடுத்தினா இப்படி தான் நடக்கும்!" என கோபத்தில் அருகில் இருந்த மேசையை உதைய, அது தேய்ந்து சென்று அவளின் காலின் அருகில் நின்றது.

"ஒரு நாள் இந்த கோபம் தான் உன்னை கொல்லாமல் கொல்லும். அந்த நாள் வெகு விரைவில் இல்லை." என ஆத்திரத்துடன் கால் அருகில் வந்த மேடையை சரி செய்து  கையில் இருந்த உணவு பொதியை எடுத்து வைத்து விட்டு ஒரு கண்டிக்கும் பார்வை ஒன்றை பார்த்து விட்டு அவ்விடத்தை விட்டு சென்றாள்.

வெளியே வந்தவள் சுற்றி வர பார்க்க, அங்கே circus பயிற்சிகளை மேற்கொள்ளும் நபர்கள் அங்கும் இங்கும் தனது வேலைகளை செய்து கொண்டு திரிந்து கொண்டிருந்தனர்.

"அவன் இங்கு இருக்கிறது சரிபட்டு வராது. அவனை வேறு இடத்துக்கு அழைத்து செல்லனும்." என்று voice message உடன் circus கூடார படம் ஒன்றையும் அனுப்பி வைத்தாள் அவள்.

அவசரமாக அந்த இடத்தை விட்டு வெளியே வந்து town ஐ அடைந்த அவள் coffee shop னுள் நுழைந்தாள்.

அங்கே நண்பர்கள் நால்வரும் உரையாடிக் கொண்டிருந்தனர்.

Coffee உடன் அமர்ந்த அவளுக்கு அருகில் இருவர் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. "நாளை மறுதினம் circus நடக்கப் போகிறதாம். இந்த ஊர்ல இப்போ கொஞ்ச காலமா நடக்கிற மர்மத்தாலயும் அதை மறைத்து மீண்டும் மக்கள் பயம் இல்லாம இந்த ஊருக்குள்ள வர வைக்கவும் இந்த circus அ நடந்துறாங்க. ஆகவே பலத்த பாதுகாப்புக்காக அந்த circus நடக்குற இடத்தை சுற்றி வர பொலிஸ் பாதுகாப்பு போட போறாங்க!"

"ஊருக்கு famous எல்லாம் தேவையில்லை. நிம்மதியா வாழ கிடைச்சா போதும்." என்றார் மற்றவர்.

Kate ன் காதிலும் இந்த circus ஐ பற்றி விழ, அவளோ அதனை பற்றி andrian னிடம் கேட்க வரும் போது coffee shop ல் பதட்ட நிலை ஏற்பட்டது.
.
.
.
ஐவரின் முகத்தில் சில பல வர்ணங்களை பூசி ஆள் அடையாளம் காணாத வகையில் வடிவமைத்தனர் அங்குள்ள இருவர். பின் Black magician இடம் கூட்டி வர, அவனோ நமட்டு புன்னகையுடன் அவர்கள் அணிந்திருந்த கல் பதிக்கப்பட்ட மாலையை பார்த்து கொண்டிருந்தான்.



Kate ன் ஊரில் நடைபெற்ற circus உம் sparkling town ல் நடைபெற இருக்கும் circus உம் ஒன்றா?

Coffee shop ல் ஏற்பட்ட பதட்ட நிலை என்ன?

Black magician ன் அடுத்த திட்டம் என்ன?

Keep supporting

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro