22. Night

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

நால்வரும் yard ல் சந்தித்து கொண்டு பின் lady high royal ன் office ஐ நோக்கி விரைந்தனர்.

Office வாயிலில் princess Tanya password ஐ அடிக்க முற்பட, அந்த password என்னவாக இருக்கும் என்று உற்று பார்த்து கொண்டிருந்தனர் மற்ற மூவரும்.

"Hey! வெட்கமா இல்லை? மற்றவங்கட password ஐ பார்க்கிறீங்க. Close your eyes!" என்று மூவருக்கும் முதுகை காட்டியவாறு திரும்பி நின்று password ஐ அடித்தாள் princess Tanya.

"Wait! What? எங்களுக்கு வெட்கம் இல்லையா? Or உனக்கு வெட்கம் இல்லையா? அப்போ நீ செய்றது மட்டும் சரியா? நீ தானே lady high royal ஓட password ஐ தெரிந்து வைத்து இருக்க. So you are wrong!" என்று prince fred நீதி நேர்மைக்காக கொதித்து எழ,

"Hey bread! இது எல்லாம் நான் தெரிந்து வைத்து இருக்கிறது என் safety காக! நீ இப்போ ஒட்டகம் மாதிரி password உற்று பார்க்குறது எந்த தேவையும் இல்லாமல். So வாயை மூடிட்டு தள்ளி நில்லு!" என்று password ஐ அடித்து கதவை திறந்தவாறு கூறினாள் princess Tanya.

"Hey you shut up! நீ தெரிந்து வைத்திருப்பது safety கு போல நான் தெரிந்து கொள்ள போவது general knowledge காக!" என்று இருவரும் பாம்பும் கீரியும் போல சண்டை பிடித்து கொண்டிருக்க,திறந்த கதவால் உள்ளே நுழைந்தனர் princess Helena உம் prince Alex உம்.

Locker ன் password ஐ princess Helena அடிக்க, அது திறப்பட்டது. பின் prince Alex திறப்பை எடுக்க முற்பட, "Alex! நம்முடைய திறப்பு தான் இது என்று ஒருவேளை lady high royal கு தெரிந்து இருந்தால் இப்போ திறப்பு  மட்டும் காணாமல் போய் இருப்பதை கண்டு அவர் நம்ம மேல சந்தேகம் வந்தால் என்ன செய்றது?!" என்று செய்யும் திருட்டையும் ஒழுங்காக செய்ய வேண்டும் என princess Helena கருத்து தெரிவிக்க, அவனும் ஆமோதித்தான்.

"Alex! அதுக்குள்ள இருக்கிற வேறு ஏதாவது ஒரு பொருளையும் எடு. இரண்டு பொருள் காணாமல் போனால் கட்டாயம் திருடன் ஒருவன் தான் வந்திருக்க வேண்டும் என்று guess பண்ணுவாங்க.

பிறகு திறப்பின் மர்மத்தை கண்டு பிடித்த பிறகு இரண்டையும் சேர்த்தே மீண்டும் locker னுள் வைப்போம் or lady royal Alisa விடம் எல்லாவற்றையும் கூறி ஒப்படைப்போம்." என்று princess Helena கூற,

"That's right! இதுல பணம் தான் இருக்கு... & ஒரு பெட்டியும் இருக்கு. பணத்தை எடுப்பதை விட பெட்டியை எடுத்துட்டு போவோம்." என்று பெட்டியையும் திறப்பையும் எடுத்தான் prince Alex.

"உன் வாய் நீளம் அகலம் உயரம் மொத்தமா கனவளவே கூடி போச்சு! இன்னும் கொஞ்ச நேரம் உன் கூட நின்று கொண்டிருந்தால் என்னை அப்படியே விழுங்கிருவாய். So helen let's ok inside!" என்று prince fred உள்ளே நுழைய செல்ல, princess Helena உம் prince Alex உம் திறப்பையும் ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர்.

இருவரும் திகைத்து நிற்பதை கண்ட princess Helena "நீங்க இரண்டு பேரும் பட்டிமன்றம் நடந்தும் போது, நாங்க இரண்டு பேரும் வேலையை முடித்துட்டு வந்துட்டோம்." என்று கூற,

"Hey! Let's go! யாராவது நம்மல பார்க்க போகிறாங்க. Quick" என்று prince Alex விரைவுபடுத்தினான்.

நால்வரும் விரைந்து yard ற்கு செல்ல, அவர்களின் முன்னால் யாரோ வருவதை போல உணர்ந்தனர்.

"யாரோ வாராங்க போல. Guys move move...move... மரத்துக்கு பின்னாடி போவோம்!" என்று முன்னால் வலது பக்கமாக இருந்த ஆல மரத்தின் பின்னால் போய் மறைந்து முன்னால் யார் வருகிறார்கள் என்று நோட்டமிட்டனர்.

யாரோ ஒருவன் முழுவதும் கறுப்பு நிற ஆடையினால் தன்னை மூடிக் கொண்டு ஏதோ ஒரு மரத்தின் தண்டிலிருந்து இன்னுமொரு தண்டிற்கு கயிற்றை கட்டிக் கொண்டிருந்தான்.

Princess Helena அருகில் இருந்த நண்பர்களை தட்டி அவனுக்கு சரி மேலே இருந்த இரும்பு கம்பிகளால் வடிவமைக்கப்பட்ட ஒரு பெரிய பெட்டியை காட்டினாள்.

" இது ஏதோ ஒரு மிருகத்தை பிடிக்க trap ஒன்று செய்கிறான் போல!" என்று princess Helena கூற,

"அதுவும் கொடூரமான முறையில!" என்று prince Alex அந்த இரும்பு கம்பி பெட்டியில் சிக்கி அதனை அகற்ற முயன்றால் மின்சாரம் தாக்குமாறு அதை switch ஒன்றுடன் பொருத்தப்பட்டிருந்த இடத்தை காட்டி சொன்னான்.

"Guys, அவன் அணிந்திருக்கிற கறுப்பு ஆடையின் பின்னால் ஏதோ ஓநாய் போன்ற இலட்சினை ஒன்று இருக்கிறதை கண்டீங்களா?!" என்று prince fred கூற,

"That's the symbol of the dark wolf island! அங்கு ஆட்சி செய்கிற அரசன் கிட்ட மாட்டுறது எரிமலை குழப்புல காலை வைக்கிறது போல! இவன் அப்போ அந்த நாட்டுல இருந்து வந்தவனா? யாரு இவன் இருட்டுல முகம் விளங்குது இல்லையே!" என்று உற்று உற்று அவனை பார்த்தாள் princess Tanya.

அவனும் தான் செய்த வேலைகளை எல்லாம் முடித்து விட்டு தனது வேட்டைக்கு சில மணித்தியாலங்கள் உயிர்பிச்சை வழங்கி விட்டு அங்கிருந்து நகன்று சென்றான்.

"அவன் போய்ட்டான். இந்த trap ல மாட்ட போகிற மிருகத்தை நினைத்தால் பாவமாக இருக்குது!" என்று princess Helena கூற,

"Yeah! நாம இதை ஏதாவது செய்து விட்டு போவோம். Because நான் கூட குதிரை லாயத்தில் இருந்து canteen கு வரும் போது இந்த வழியை தான் குறுக்கு வழியாக பயன்படுத்துவேன். சும்மா சரி நான் இதுல மாட்டினால் அவ்வளவு தான்!" என்று prince fred கூறினான்.

பின் prince Alex உம் prince fred உம் போய் switch ஐ off செய்து விட்டு, மீண்டும் அதனை செயல்படுத்த முடியாதவாறு switch box ஐ கழற்றி அதில் இருந்த கறுப்பு நிற wire ஐயும் வெட்டி விட்டனர்.

Princess Helena உம் princess Tanya உம் மரத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றினை அவிழ்த்து விட, அந்த இரும்பு பெட்டி பாதுகாப்பாக தரையை வந்தடைந்தது.

நால்வரும் தங்களது அறைக்கு செல்ல இதனை சில கிலோமீற்றர் தூரத்தில் இருந்து கவனித்து கொண்டிருந்த அவனுக்கு அவனின் உடலில் செங்குருதி கொதித்து எழுவதை உணர்ந்தான்.
.
.
.
Video conference call எடுத்த prince Alex திறப்பின் பிளவில் அவனின் தாத்தாவுடைய diamond ஐ வைக்க, அது வரைபடமாக மாறியது. அதில் நூலகத்தில் இருந்து சென்ற காலடிகள் காட்டின் வாயிலிருந்து  N 45° E என்ற திசையில் காட்டு பகுதியை நோக்கி சென்றது.

பின் அந்த காலடிகள் இடைநடுவே நின்றிப்பதை அவதானித்த நால்வரும் அங்கே தான் புத்தகத்துடன் சம்பந்தப்பட்ட ஏதோ மர்மம் இருப்பதை உணர்ந்தனர். நாளை மாலை வேளையில் அவ்விடத்திற்கு சென்று மர்மத்திற்கு முற்று புள்ளி வைக்க திட்டமிட்டனர்.
.
.
.
உதயவன் தன்னிலுள்ள சில அணுக்களை தாக்கமடைய வைத்து தன்னையே அழித்த கொண்ட வண்ணம் பிறர் வாழ்வில் ஒளி கொடுக்க என்றும் போல அன்றும் பிரகாசித்தான்.

Princess Helena உம் princess Tanya உம் ஆயத்தமாகி கீழே வர, அங்கோ ஏதோ ஒரு கொலை நடந்திருப்பதை போல அனைவரும் இரும்பு கம்பி பெட்டியை சுற்றி வட்டமிட்டு கொண்டிருந்தனர்.

Lady high royal சில detectives உடன் ஏதோ தீவிரமாக பேசிக் கொண்டிருக்க, இளவரச இளவரசிகளின் முன்னால் வந்த lady royal Alisa "நீங்க ஒருவரும் பயப்பட வேண்டாம். Everything is fine! இங்குள்ள உயர் அதிகாரிகள் இதை அனைத்தையும் சரி செய்து விடுவாங்க. So you all can focus in your lessons!" என்று கூற,

அங்கே அந்த நாட்டு இராணுவ படைவீரர்கள் பல truck ல் வந்து இறங்கினர்.

"Princes and princesses நாளை நாம இந்த நாட்டு அரசனோட அம்மாவை பார்க்க போகிறோம். அதனால் இன்று princesses அவங்களுக்கு விருப்பமான BlackBerry pie, raspberry pie and velvet cup cakes ஐ தயாரிக்க தேவையான பழங்களை பறிக்க காட்டு பகுதிக்கு செல்ல வேண்டும்.

And also princes அவங்களுக்கு ரொம்ப பிடித்தமான daffodils and orchids ஐ கொண்ட பூங்கொத்து கொடுக்க பூக்களை பறிக்க காட்டு பகுதிக்கு செல்ல வேண்டும். So all need to come here at 10.30 am!" என்று அன்றைய வேலைகளை கூறி விட்டு சென்றார் lady royal Elena.

"Guys! இது தான் நம்முடைய அரிய வாய்ப்பு. இங்கு இப்போ பல படைவீரர்களும் இருக்கிறதால் நமக்கு தனியாகவோ இரவு நேரத்திலோ காட்டு பக்கம் போவது சாத்தியம் இல்லை. So இவங்க கூட போகிற பயணத்திலே வரைப்படம் காட்டுகின்ற மர்ம இடத்திற்கு போவோம்!" என்று திட்டத்தை நண்பர்களிடம் princess Helena பகிர,

அதனை மரத்தின் பின்னால் இருந்தவாறு கேட்டு கொண்டிருந்தான் அவன்...
.
.
.
10.30 மணியளவில் அனைவரும் yard ற்கு வந்து நிற்க, பயணத்தை வழி நடத்தினார் lady royal Elena.

"Lady royal Elena. Stop! Shall I join with you all?" என்று gentleman royal Stephen வினவ, அவரின் கேள்வியில்  பின்னால் இருந்த lady royal Alisa உம் முன்னால் திரும்பி பார்த்த lady royal Elena உம் அதிர்ந்து நின்றனர்.

"இவனுக்கு தான் Elena என்றால் பிடிக்காதே! சும்மாவே அவளுடைய நிழல் விளக்கினால் கூட பத்து மைல் தூரத்துக்கு ஓடி விடுவான். What happened to him? இதை கண்டுபிடிக்கனுமே! இவங்க கூட என்னால போக முடியாது ஏனென்றால் Lady high royal  தலைக்கு மேல் வேலை தந்து இருக்காங்க!" என்று சலித்து கொண்டே திரும்பி school னுள் நுழைந்து கொண்டார் lady royal Alisa.

"Yeah sure! Why not?" என்று விண்ணை தொடும் அளவுக்கு சந்தோசத்தில் lady royal Elena பறக்க, gentleman royal Stephen அனைவருடனும் இணைந்து காட்டு பகுதிக்கு செல்ல தயாராகினர்.

இதனை கண்டு princess Tanya திகைத்து நிற்க, "Hello! Can you hear me? கித்துள் பாணி! ஏன் இப்போ shock reaction கொடுக்குற?" என்று அவள் கண்ணுக்கு முன்னால் விரலை சுண்டி விட்டவாறு கேட்டான் prince fred.

"Gentleman royal Stephen,  lady royal Alisa வை விரும்புறாங்க. But lady royal Elena,  gentleman royal Stephen ஐ விரும்புறாங்க. ஆனால் அவங்களுக்கு lady royal Elena ஐ கண்டாலே ஆகாது. அதனால் தான் எப்போதும் lady high royal,  lady royal Alisa கு எதிராகவே நடவடிக்கை எடுக்குறாங்க. Lady royal Alisa யும் gentleman royal Stephen ஐயும் பிரிக்கிறதுக்கே அவங்க நிறைய திட்டங்கள் போட்டு இருக்காங்க!" என்று princess Tanya கூற,

"நான் அதை அவங்கட activities லயே கண்டு பிடித்தேன்!" என்று princess Helena கூற, அதனை prince alex உம் ஆமோதித்தான்.

"அப்போ இதுவும் தெரிந்து கொண்டது உனது safety காகவா?" என்று கோபத்துடன் prince fred வினவ, அவளோ பற்களை காட்டி இளித்து கொண்டிருந்தாள்.

சிறிது தூரம் அனைவரும் இணைந்து பயணித்த பின்,

சரியாக இரண்டு மணித்தியாலத்தில் அனைவரையும் தற்போது இருக்கும் இடத்திற்கே வரும்படி உத்தரவிட்டு விட்டு அங்கே இருந்த கற்பாறையின் மீது அமர்ந்து கொண்டார் lady royal Elena.

ஆகவே ஒவ்வொருவரும் பழங்களையும் பூக்களையும் தேடி பிரிந்து செல்ல ஆரம்பித்தனர். Gentleman royal Stephen சில இளவரசர்களுடன் இணைத்து காட்டுப் பகுதியினுள் நுழைந்து கொண்டார்.

நண்பர்கள் நால்வரும் ஒன்றாக மர்ம இடத்தை நோக்கிச் செல்ல, நால்வரினதும் ஒற்றுமையை கண்டு கொதித்து எழுந்த princess Roquelle "இவங்கள எப்படியாவது பிரித்தால் தான் எனக்கு தூக்கம் போகும்" என்று  கூற, அவள் அருகே வந்த prince Volker "Roquelle! ஏன் Ryan வரவில்லை?" என்று வினவினான்.

"Ryan ஆ? அவனுக்கு தலைவலி. Room ல தான் இருக்கான்!" என்று தனது புதிய குழு தலைவனின் absent ஐ குறிப்பிட்டாள் princess Roquelle.
.
.
.
காட்டின் நடுப்பகுதியில் அவன் நால்வரினதும் வருகைக்காக ஒரு குகையினுள் வந்து அமர்ந்து வழி மீது விழி வைத்து காத்து கொண்டிருந்தான்.....



இராணுவ படையினர் அவனை கண்டுபிடிப்பார்களா?

திறப்பு, புத்தக திருட்டிற்கு நண்பர்கள் நால்வரும் அகப்படுவார்களா?

Gentleman royal Stephen ன் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன?

நண்பர்கள் மர்மத்தை கண்டுபிடிப்பார்களா?

Thanks for the votes and comments.
Keep supporting.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro