27. Dark wolrd Submarine

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

நால்வரையும் அமர சொன்ன படை தளபதி, அவர்களின் முன்னால் உள்ள கதிரையில் காலின் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்து, தனது cooling glass ஐ கழற்றி முன்னால் இருந்த மேசையில் வைத்தார்.

"என்ன இவரு கதையின் hero மாதிரி buildup கொடுக்குறாரு?" என்று princess Tanya முறைத்து கொண்டே prince fred இடம் வினவ,

அவனோ "வார்த்தையை அளந்து பேசு. இல்லை என்றால் அவரின் கையில் இருக்கிற துப்பாக்கியிலுள்ள அனைத்து தோட்டாக்களும் உன் ஆறடி கூந்தலுக்குள்ள போயிரும்!" என்று எச்சரிக்கை செய்து கொண்டிருந்தான்.

"என்ன இருவரும் சதி திட்டம் போடுகிற மாதிரி பேசி கொள்றீங்க?" என்று படை தளபதி வினவ,

அவர்கள் பதில் கூற வர முன், "I need the explanation!" என்று புத்தகத்தையும் குச்சியையும் எடுத்து மேசை மீது வைத்தார் lady high royal.

புத்தகத்தை எடுத்த விதத்தை பற்றி princess Tanya முழுமையாக கூற, சுரங்கத்தில் நடந்தவற்றை princess Helena விளக்கமாக கூறினாள்.

அதனை தொடர்ந்து சுரங்க கதவு திறந்து திறப்பை எடுத்த கதையை prince fred முன்வைக்க,

prince Alex தன் தாத்தாவின் diamond திறப்பில் பதிந்ததிலிருந்து குச்சியை எடுத்தது வரை முழுமையாக கூறி முடித்தான்.

ஆனால் நால்வரும் செங்கோலை காணவில்லை என்று கூறினாலும் அந்த இராட்சத விலங்கைப் பற்றி கூற மறந்து விட்டனர்.

நால்வரும் கதையை கூறி முடிந்து தொண்டை வற்றி போக முன்னால் வைத்திருந்த தண்ணீர் போத்தல்களை எடுத்து மடமட என்று ஒரே மூச்சில் குடித்து முடித்தனர்.

Lady high royal இவர்களின் கதை மீண்டும் தொடரும் என்ற நினைவில் இவர்களின் முகத்தையே பார்த்து கொண்டிருக்க, அவர்களோ அவரின் எதிர்பார்ப்பை அறியாது அருகில் நின்று கொண்டிருந்த அதிகாரியின் ஆடையை பற்றி கலந்துரையாடிக் கொண்டிருந்தனர்.

"Stop that nonsense! அடுத்து என்ன நடந்தது?" என்று கோபத்தில் lady high royal கத்த, அவரின் அருகில் அமர்ந்திருந்த படைதளபதியின் காதில் குண்டு வெடித்ததை போல உணர்ந்தார்.

"அதுக்கு பிறகு புத்தகத்தை திறந்து பார்க்க நாங்க எண்ணினோம். But அதுக்கான நேரம் கிடைக்கவில்லை. புத்தகத்தை ஆராய நினைத்த போது தான் Queen Margaret ஐ பார்க்க போக வேண்டி ஏற்பட்டது.

அங்கு போன போது தான் அவங்க எங்க கிட்ட இருள் தேச அரசனின் கதைகளை சொன்னாங்க and அந்த அரசன் கிட்ட இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு தான் கிரீடத்தையும் செங்கோலையும் நம் தாத்தா, பாட்டி ஒளித்து வைத்ததாகவும் சொன்னாங்க." என்று princess Helena கூற,

அதனை தொடர்ந்து prince Alex "அப்போது தான் உணர்ந்தோம் நாங்க கண்டுபிடித்தது எல்லாம் அதனுடன் தொடர்புப்பட்டதாக! அதனால் அதை உங்க கிட்ட ஒப்படைக்க அங்கிருந்து கிளம்பி வந்த போது தான் தெரிந்தது அவற்றை யாரோ திருடியதாக!" என்று முடித்தான்.

"No!!!!!நீங்க எல்லோரும் பொய் சொல்றீங்க! Tell me the truth! எங்க செங்கோல்? எங்க கிரீடம்?" என்று அவ்விடம் அதிரும் வண்ணம் lady high royal கத்த,

இவரின் அடிக்கடி கத்தலில் மிரண்டு போன படை தளபதி "Ma'am நீங்க tension ஆக வேண்டாம்.என் அனுபவத்திற்கேற்ப எனக்கும் இவங்க சொல்றது உண்மை போல தான் இருக்கு! முதல்ல நீங்க போய் இளவரச இளவரசிகளை அவங்க அவங்க நாடுகளுக்கு திருப்பி அனுப்புங்கள். அதோடு நிலைமை வழமைக்கு திரும்பும் வரை Royal high school ஐ பூட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுங்க!" என்று படை தளபதி கூற, lady high royal கோ தலைகால் புரியவில்லை.

இதுவரையும் இடை நடுவே எந்த ஒரு காரணத்துக்காகவும் மூடப்பட்டாத ஓரே ஒரு பாடசாலை என royal studies எனப்படும் சாதனையை படைத்து வரும் Royal high school, மூடும் நிலைக்கு தள்ளப்பட்டதை எண்ணி அவர் கவலை பட, அதற்கு காரணமான நால்வரையும் கண்டு அவர்களை தீ பார்வையில் எரித்து கொண்டிருந்தார் lady high royal.

பின்னால் இருந்த gentleman royal Stephen, தான் இளவரச இளவரசிகளை மீண்டும் அழைத்து செல்லும் பொறுப்பை ஏற்று கொள்வதாக lady high royal இடம் கூறி விட்டு அவ்விடத்திலிருந்து நகர, lady royal Alisa வைத்தியசாலையை நோக்கி புறப்பட்டார்.

கதவின் வழியாக ஓடி ஓடி வந்த ஒரு இராணுவத்தினர் படைதளபதியின் அருகில் வந்து salute பண்ண, அவரும் அதற்கு கண்களால் பதிலளித்தார்.

"Sir, அந்த செங்கோலிலும் கிரீடத்திலும் உள்ள இரத்தினங்களின் கதிர்ப்புகளை வைத்து அது இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டோம். இப்போ அவை கடற்கரையை விட்டு 10km தூரத்தில் இருப்பதாக காட்டுகிறது." என்று அவன் கூற,

உடனடியாக செயல்பட்ட படைதளபதி, "கடற்படைக்கு உடனடியாக அந்த கப்பலை நிறுத்துமாறு உத்தரவு இடுங்க! & கரையிலிருந்து 20km தூரத்தில் நம்முடைய அதிரடி கடற்படையினரின் 10 கப்பல்களை நங்கூரமிட்டு வைக்க சொல்லுங்க.

அந்த இடத்தினூடாக போகும் அத்தனை கப்பல்களையும் சோதனை இட கூறுங்க. அவங்க நம்மல தாக்கவும் வாய்ப்பு இருக்கு so பீரங்கிகள் மற்றும் அம்புகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் சொல்லுங்க! I'll be there in 15 minutes...Lady high royal நான் அங்க போகிறேன். நீங்க அனைவரையும் திருப்பி அனுப்பும் ஆயத்தங்களை எடுங்க!" என்றவேறு தனது தொலைபேசியில் ஏதோ செய்த வண்ணம் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.

"உங்க பெற்றோரிடம் இதை பற்றி கூறி தக்க நடவடிக்கை எடுத்தால் தான் என் கொளுந்து விட்டு எரிகின்ற மனம் தணியும்!" என்றவாறு அவ்விடத்தை விட்டு நகர்ந்தார் lady high royal.

நால்வரும் அதனுள் இன்னும் அமர்ந்து கொண்டிருப்பது அர்த்தமில்லை என்று எண்ணி conference hall ஐ விட்டு வெளியே வர, நக்கல் சிரிப்பை விசிறிக் கொண்டிருந்தனர் prince Ryan உம் princess Roquelle உம்.

"Very good! நால்வரும் சேர்ந்து மூடாத school ஐயும் மூட வைத்து விட்டீங்க... well done! இது மட்டுமா? Or இன்னும் என்ன சரி செய்ய plan பண்ணி இருக்கீங்களா?" என்று prince Ryan கோபத்தில் வினவ,

"அடுத்தது யாரையாவது கொல்வதற்கு plan போட்டு இருக்கிறார்களோ தெரியவில்லை!" என்று பொய்யாக பயந்தவாறு நடித்து கூறினாள் princess Roquelle.

"அடுத்த வேட்டை உங்க இரண்டு பேரையும் தான்! அப்படியே பிடித்து Anaconda பாம்புக்கு சாப்பிட போட போகிறோம். So be careful!" என்று princess Tanya பதிலடிக் கொடுக்க,

"Let's go!" என்று அவளை அவ்விடத்திலிருந்து இழுத்து கொண்டு சென்றாள் princess Helena.
.
.
.
கடற்படையினர் தங்களுக்கு கிடைத்த சமிஞ்சை படி கறுப்பு நிற background ல் ஓநாய் ஊளையிடுவதை போல வடிவமைக்கப்பட்ட கொடியை கொண்ட கப்பலை பின் தொடர்ந்து சென்றனர்.

அக்கப்பலின் captain ஓ தன்னை பின்தொடர்ந்து வருவதை அறிந்து கொண்டு, தனக்கு தெரிந்த அனைத்து விளையாட்டுக்களையும் போட்டு தப்பித்து செல்ல முயற்சி செய்து கொண்டிருந்தான்.

நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை போல அக்கப்பலை எப்படியாவது பிடிப்பதற்கு கடற்படையினர் பாரிய முயற்சியில் ஈடுப்பட்டனர்.

ஒருவாறு வளைத்து அக்கப்பலை தங்களின் கீழ் கொண்டு வந்தனர் கடற்படையினர். படைதளபதியும் விசேட அதிவேக கப்பலில் அக் கொள்ளையர்களின் கப்பலுக்கு வந்தடைய, அங்கு ஏற்கனவே படை வீரர்கள் தங்களது வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.

அதில் ஒருவர் கப்பலை அவ்விடத்தில் நங்கூரமிட செய்ய, சிலர் அக்கப்பலில் பயணித்த அனைவரையும் ஓரிடத்திற்கு வரவழைத்து வரிசைப்படி நிற்க செய்தார்.

மற்றவர்கள் அனைவரும் கப்பலின் நாலாபக்கமும் செங்கோலையும் கிரீடத்தையும் தேடி சென்றனர். அங்கு அவர்களுக்கு அந்த இரத்தினங்களின் கதிர்கள் மிக அருகில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

ஆகவே அந்த சமிஞ்சை வரும் திசையில் படை தளபதியும் அவர்களுடன் இணைந்து கப்பலின் அடித்தளத்தை நோக்கி பயணித்தனர்.

அக்கப்பலின் captain தனது கையை உயர்த்தி ஒன்று, இரண்டு என்று எண்ண, படை வீரர்களும் தளபதியும் அவ்விடத்தை நெருங்கிக் கொண்டே இருந்தனர்.

அவன் மூன்று என்று எண்ணும் வேளையில், கடற்படையினர் அனைவரும் முன்னால் இருந்த அறைக்குள் நுழைந்தனர்.

அங்கோ இவர்கள் எதிர்பார்த்த அந்த செங்கோலுக்கும் கிரீடத்திற்கும் பதிலாக சில இரத்தினங்களில் அவ்வறையின் மேசையின் மீது இருந்தது.

Captain ஓ வெற்றி புன்னகையுடன் அப்படியே நின்ற நிலையில் பின்னால் கடலில் குதிக்க, அது போலவே அவனின் சகாக்களும் செய்தனர்.

இதனை சற்று எதிர்பார்க்காத கடற்படையினர் ஒரு வினாடி திகைத்து நின்றனர். அவர்கள் பாய்ந்த திசையை நோக்கி கப்பலின் விளிம்பில் சென்று பார்த்த வீரர்களுக்கோ அவர்களை பற்றி எந்தவொரு தடயமும் கிடைக்கவில்லை.

"Sir! இந்த இரத்தினங்களும் செங்கோலில் பதிக்கப்பட்ட இரத்தினங்களும் ஒரே விதமானது. அதனால் தான் இந்த கருவி இந்த இடத்தை காட்டியிருக்கு!" என்று ஏமாற்றத்துடன் ஒருவன் கூற,

"சும்மா time ஐ waste பண்ணிட்டோம்!...முதல்ல இந்த கப்பலின் captain ஐ இழுத்து என்கிட்ட கூட்டி வாங்க!" என்று படை தளபதி உத்தரவிட,

ஒருவன் அவர் அருகில் வந்து கப்பலிலிருந்து கொள்ளையர்கள் கடலில் பாய்ந்ததை கூறினான்.

இதனை கேட்ட படை தளபதி உடனடியாக கடற்படை divers மூலம் அவர்களை தேடுமாறு உத்தரவிட்டார். சாதாரண ஒருவனால் 5 நிமிடத்தில் நீந்தி செல்லக்கூடிய தூரத்தை கணக்கிட்டு அதுவரையில் சுற்றி வர தேடுதல் பணிகள் ஆரம்பிக்கும் படியும் உத்தரவிட்டார்.

ஆனாலும் கொள்ளையர்கள் மீது பொருத்தப்பட்டிருந்த water motors ஐ பற்றியும் செங்கோல் மற்றும் கிரீடத்திலிருக்கும் இரத்தினங்களின் கதிர்ப்புகள் விளங்காத வண்ணம் போர்வை போர்த்தப்பட்டு அங்கிருந்து கடல் கொள்ளையர்கள் கொண்டு சென்றதை பற்றியும் படை தளபதி அறிந்திருக்கவில்லை.

ஆகவே கடற்படையினரின் கண்களில் மணல் தூவி விட்டு கற்பாறை ஒன்றின் பின் ஒளித்து வைக்கப்பட்டிருந்த நீர்மூழ்கி கப்பலை வந்தடைந்தனர் இருள் தேச கொள்ளையர்கள்!

கடற்படையினரின் checking point லிருந்தும் மணிக்கு 23 மைல் வேகத்தில் மிக நுட்பமாக தப்பி சென்றது அந்த கிரீடத்தையும் செங்கோலையும் கொண்ட இருள் தேச நீர்மூழ்கிக் கப்பல்!
.
.
.
"Alisa நானும் gentleman royal Jackson உம் இளவரச இளவரசிகளை கூட்டி போய் விடுகிறோம். நீ நான் சொன்னது போல Elena கிட்ட பேசு! Stay safe darling!" என்றவாறு விடைபெற்று சென்றார் gentleman royal Stephen.

அவர் போகும் வழியில் அந்த குறித்த நபருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் மறக்கவில்லை.

அவர் சென்ற சிறிது நேரத்தில் அங்கே நண்பர்கள் நால்வரும் வந்தனர்.

"Lady royal! இது எங்களுடைய தப்பா? நாங்க இப்படி வேண்டும் என்று செய்யவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலை எங்களை அப்படி செய்ய வைத்தது! அதுவும் இவை எல்லாம் எங்க தாத்தா பாட்டியுடன் சம்பந்தப்பட்டதாக இருந்ததால் அவற்றை கண்டுபிடிக்க எங்களுக்கு ஆர்வமாக இருந்தது!" என்று கண்ணீர் மல்க princess Helena கூற,

"I know! I know! Don't cry my princess! எல்லாம் விதியின் விளையாட்டு. இது உங்களுடைய தப்பு என்றும் கூற முடியாது. இது பற்றி உங்க பெற்றோர் உங்க கிட்ட முதல்லயே சொல்லி இருந்தால் இப்படி நடந்து இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.

But இப்போ அதை பற்றி பேசி பிரயோஜனம் இல்லை. அது தான் படை தளபதி அவர்களை கண்டுபிடித்து விடுவாரே! இதை பற்றி இனிமேலும் கவலைப்படாமல் கவனமாக உங்க நாடுகளுக்கு செல்லுங்கள். போய் எனக்கு phone பண்ணுங்க & I gonna miss you all!" என்று நால்வரையும் கட்டியணைத்தார் lady royal Alisa.

"We also miss you badly lady royal Alisa!" என்று நால்வரும் கூறி விடைபெற்று அவ்விடத்தை விட்டு செல்ல,

அவர்கள் செல்லும் பாதையை பார்த்தவாரு, "இராணுவத்தினர் அவங்க இருள் தேசத்துக்கு போக முதல்ல பிடித்துடாங்க என்றால் சரி, அப்படி அவங்க இருள் தேசத்திற்கு செங்கோலையும் கிரீடத்தையும் கொண்டு போய்டாங்க என்றால் இருள் அரசனை யாராலும் தடுக்க முடியாமல் போகும்!" என்று தனக்குள்ளே சொல்லி கொண்டார் lady royal Alisa.

அவர் மனதில் நினைத்தது கடவுள் ஏற்று கொண்டு விட்டான் போலும், அதே நேரத்தில் கடல் கொள்ளையர்கள் இருள் தேசத்தின் மண்ணை மிதித்து கொண்டிருந்தனர்.....

மற்ற கதைகளில் happy ending இருப்பதை போல இக்கதையிலும் happy ending இருக்குமா?

Thanks for the votes and comments.
Keep supporting.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro