Winners

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"My presentation is surfing track! " என robin கூற "surfing track?!" என சற்று புரியாமல் கேட்டாள் loral.

"Wait loral, நான் danish யும் conference call ல போடுறேன். இல்லை என்றால் அவன் கிட்ட இதை சொல்லவில்லை என்று என் breakfast அ திருடிருவான்..." என robin கூற "Already அதுக்கு நான் ஒரு plan போட்டுட்டேன்!" என danish ஏற்கனவே conference call ல் இருந்தவாறு பதிலளித்தான்.

Robin ஓ அசடு வழிய "robin ஏதோ transformers ல வார மாதிரி track, surfing என்று எல்லாம் சொன்னாய்! கொஞ்சம் விளக்கமாக சொல்லேன். " என danish French fries ஐ வாயில் போட்டு சப்பி சப்பி சொன்னான்.

"டேய் தனியா சாப்பிடாத டா! அதுவும் French fries போல இருக்கு! அதுவும் என் favourite டா! இது உனக்கே நியாயமா? " என robin கூற "டேய் சாப்பாட்டு இராமன்களா! சாப்பாட்டு கதையை விட்டுட்டு சொல்லுங்கடா!" என எதிர்முனையில் எரிச்சலுடன் கூறினாள் loral.

Phone ல் பேசுவது சரிபட்டு வராது என்று எண்ணி loral ன் play house ற்கு danish, robin வந்து சேர்ந்தனர்.

"Guys! நாம ஒரு முறை புதைகுழியில் மாட்டிக் கொண்டது நினைவு இருக்குதா? (The golden cat)" என robin கேட்க, "அது மறக்குமாடா! அதுக்கும் track கும் என்ன சம்மதம்?" என loral robin சொல்லவருவது புரியாமல் கேட்டாள்.

"அதுல நாம back swim பண்ணி தான் வெளியில வந்தோம். நம்மல மாதிரி காட்டுக்குள்ள track, Jeep;  ஏதாவது போய் புதைகுழியில் மாட்டிக் கொண்டது என்றால் தப்பிக்க ஒரு வழி தான் இது!" என robin கூற "அதுக்கு தானே டா அகலமான டயர்கள் போட்டிருக்காங்க! உராய்வு விசையை கூடுவதற்காக!" என loral கூறினாள்.

"அது சரி அப்படியும் பெரிய புதைகுழியாக இருந்திச்சு என்றால்?" என robin கூற "ஆமா! Tom & jerry road race ல நான் பார்த்திருக்கிறேன். அதுல aunt புதைகுழியில் அவளுடைய van விழுந்து அதை வெளியில் எடுக்க முடியாமல் van கு good bye சொல்லிவிட்டு அவள் தப்பிச்சு போய்ட்டாள்." என danish விளக்கமளித்தான்.

"அது மாதிரி situation ல track டயரில் துடுப்புகள் இணைத்து back swim பண்ணுமாறு setup பண்ணால் புதைகுழியில் சிக்கிக் கொண்டால் தப்பிக்க முடியும் தானே!" என robin கூற "ஆமா! That's great idea! But சும்மா road ல track போக துடுப்புகள் தடையாக இருக்குமே!" என loral கேட்க,

"அது தேவையான போது வெளியில் வர வைக்கவும், தேவையில்லாத போது டயரின் உள்ளேயே மறைத்து வைக்கவும் button ஒன்று set பண்ணினால் சரி!" என விளக்கமளித்தான் robin.

"Woow! Good job robin! Loral உன் presentation என்ன?" என danish வினவ "அது எவ்வளவு சாத்தியப்படும் என்று தெரியல்ல. ஒரு office or working place ல் சில பேர் WiFi ய  தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக use பண்ணுவாங்க. அதை கண்டுபிடிக்க managers உடைய computer ல wave spot எனும் setup ஐ போடுவதால் அவங்கள கண்டுபிடிக்க முடியும்!" என loral கூறினாள்.

"அதனால் எப்படி கண்டுபிடிக்கிறது?" என robin வினவ "அந்த setup ல் WiFi ன் waves (அலைகள்) எங்கே கூடுதலாக பயன்படுத்தப்படுகிறது என்பதை அளக்கும் setup தான் அது. கூடுதலாக பயன்படுத்தும் இடத்தை Red waves ல் காட்டும்!" என்றாள்.

"உன் presentation உம் superb! Danish நீ என்ன idea வெச்சிருக்க?" என robin கூற "பெரிசா idea இல்லடா! நான் sonic movie 3D ல் பார்க்கும் போது நினைச்சேன் கண்ணாடி, VR box ல் பார்க்குறதை விட; ஒரு அறையில அவங்களோட நாமலும் சேர்ந்து travel பண்ணுற மாதிரி  இருக்கிற மாதிரி ஒரு studio செய்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று! " என உணர்ச்சிவசமாக கூறினான் danish.

"கொஞ்சம் விளக்கமாக சொல்லேன் டா!" என loral கூற "VR box, 3D glasses மூலம் நம் கண் முன்னாடி தானே Cartoons movies ல வார characters அசைவாங்க! அப்படி ஒரு glasses உம் போடாமல் நாம நின்று இருக்கும் போதே நமக்கு அருகில் அந்த characters நடந்தார்கள் என்றால்! Avengers ல நடக்குற fights நம்ம அருகிலே நடந்துச்சு என்றால் செம்மாயாக இருக்கும் தானே! நம்மல சுற்றி 360 பாகையில் Cartoons ஓடிக் கொண்டு இருக்கும்!" என மீண்டும் உணர்ச்சி பூர்வமாக கூறி முடித்தான் danish.

"டேய் செம்ம idea டா! Cartoon மூளை இருந்தாலும் நல்லா ideas வெச்சிருக்க!" என robin உம் loral உம் danish ஐ புகழ்ந்து தள்ளினர்.

(இந்த 3 ideas உம் என் கற்பனைக்கு வந்தது. So இது ஏற்கனவே கண்டுபிடிக்கபட்டிருக்கலாம் but இதுவரை எனக்கு கேள்விபட்டதில்லை. சில சமயம் இவ்வாறு உருவாக்க முடியாமல் இருக்கலாம் ஆனால் கற்பனையில் எதுவும் நடைபெறலாம். ஆகவே ஏதாவது சிக்கல்கள் இருந்தால் மன்னிக்கவும்)

மூவரும் அன்றிரவு அவர்களின் ideas ஐ presentation ல் வடிவமைத்தனர். அவர்களின் பெற்றோரும் இதற்கு இயன்றளவு  உதவினர்.

பின் அடுத்த நாள் ஆரம்பிக்க சூரியன் தன் கதிர்களை வீச பூக்கள் அதனை பெற்று கொள்ள போட்டி போட்டு விரிய ஆரம்பித்தன.

பாடசாலையில் மாணவர்கள் ஆரவாரமாக தங்களது presentation ஐ பற்றி நண்பர்களிடம் கூறி கொண்டிருக்க; Emma ஒவ்வொருவராக சென்று அவர்களுடைய presentation ஐ பற்றி பேட்டி எடுத்து கொண்டிருந்தாள்.

Mrs Rosy வகுப்பறையினுள் வர அனைவரும் தங்களது presentation அடங்கிய pendrive ஐ கொடுத்தனர்.

அதனை post செய்து விட்டு தனது  பாடத்தை ஆரம்பித்தார். இரு நாட்களாக அனைவரினதும் பேச்சு பொருளாக Acedamy of genius competition ஆகிவிட்டது. அதனை பற்றி google ல் கூட search பண்ணி பார்க்காதவர்கள் இல்லை.

Acedamy of genius எனும் பாடசாலை 2018 ல் Science லும் பல வகை சாதனையாளர்கள் உருவாக்கும் நோக்கத்துடன் Switzerland ல் ஆரம்பிக்கப்பட்டது. 4 வருடங்களுக்கு ஒரு முறை 5 நாடுகளில் அதாவது mexico, England, Scotland, Australia & Greenland லுள்ள பல பாடசாலைகளில் competition வைக்கப்பட்டு ஒவ்வொரு பாடசாலையிலும் மூவர் வீதம் தெரிவு செய்யப்படுவர்.

ஆனால் அங்கு நடக்க இருக்கும் மர்மத்தை பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை.

ஒரு கிழமையில் results உம் வெளியானது. Emma உம் Gossip channel ல் news ஐ இட standby ல் இருந்தாள். Principal assembly ல் select ஆகியவர்களின் பெயரை வாசிக்க ஆரம்பித்தார்.

முதலில் danish ன் பெயர் சொல்ல அவனோ யாரோ ஒருவனின் பெயர் செல்வதாக நினைத்து தன் பாட்டுக்கு கை தட்டி கொண்டிருந்தான்.

அருகில் அமர்ந்திருந்த robin உம் loral உம் சந்தோசத்தில் அவனை அணைக்க அவனோ "டேய் என்னடா இது? Assembly time ல போய் இப்படி பண்ணுறீங்க!" என சாதாரணமாக கூற principal danish ஐ stage கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

அனைவரும் danish ஐ திரும்பி பார்க்க "என்னடா ஏதோ செய்ய கூடாததை செய்த மாதிரி எல்லோரும் பார்க்குறீங்க!" என வியப்பில் danish கேட்க "டேய் நீ competition ல win பண்ணிடடா!" என robin கூற அவன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

அவன் நம்புவதாக இல்லை.ஆகவே அன்று milk shake ஐ மேலில் கொட்டியதற்கும் சேர்த்து Henry அவனை கிள்ள; danish ஓ loudspeaker ஐ விழுங்கிவன் போல கத்தினான்.

பின் சமாதானமாக; danish நம்பாமலே stage ல் ஏறினான். Principal hand shake பண்ணி வாழ்த்திய பின்னே தான் select ஆகி இருப்பதை நம்பினான்.

அதனை தொடர்ந்து "congratulations danish! Next winner is.... loralll!!!" என announce பண்ணியது தான் கடன் auditorium ஏ அதிரும் வண்ணம் கைத்தட்டல்கள் மேலோங்கியது.

Robin loral ஐ wish பண்ண; அருகில் இருந்த அனைவரும் அவளை வாழ்த்தி stage ஐ நோக்கி நடக்க வழி விட்டனர்.

Robin கோ தனது இரு நண்பர்களும் select ஆகிய சந்தோசத்தில் மிதக்க; தான் select ஆகாவிட்டால் அடுத்து 5 மாதங்களுக்கு தன் நண்பர்களை விட்டு பிரிந்திருக்க வேண்டும் என நினைக்கையில் அவன் மிதக்க உதவிய Balloon ல் யாரோ ஊசி குத்தியதை போல; Newton ன் 3 ஆம் விதிபடி balloon எதிர் திசையில் பீறிட்டு பறந்தது.

அவனின் நினைத்தது என்னமோ சரி ஆகியவகையில் principal  கடைசி ஆளின் பெயரையும் வாசிக்க ஆரம்பித்தார். "Finally the last winner is Simon!!!!"

Thanks for the votes & comments.
Keep supporting.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro