பறந்து செல்கிறோம் சிறகடித்து
பறந்து செல்கிறோம்
பல தேசங்கள் நாடுகள் மொழிகள் காண்கிறோம்
மழை வெயில் பனி வானவில் கண்டு வியக்கிறோம்
தினம் தினம் விடியும் எங்கள் உல்லாச விடியல்
வாழ்வின் விடியல் அதில் புத்துயிர் அடைகிறோம்
கண்பார்க்கும் காட்சிகளோ அழகாய் தெரிகிறதே
செவிகேட்கும் ராகங்கள் இனிமையாய் கேட்கிறதே
வாய்பேசும் மொழிகள் பல அருவியாய் பொழிகிறதே
புத்தம்புது மண்ணின் வாசம் நாளம் பாய்கிறதே
குளிர்தென்றலின் மோகத்தீண்டல் எனை ஆட்கொள்கிறதே.....
மேகங்களை தொட்டுவிட யாம் அதை தொடர்கிறோமே
மேலும் அவை போக்குக்காட்ட விளையாட்டு தொடர்கிறதே
விளையாட்டு அசதியோ தென்றலில் கரைகிறதே
விழியோரத் துளிநீரோ எதிர்காற்றில் உறைகிறதே
எங்களது ஒவ்வொரு அணுவும் மகிழ்ச்சியில் திளைக்கிறதே......
பறந்து செல்கிறோம் சிறகடித்து பறந்து செல்கிறோம்..........
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro