சுயநலம் - Part 1

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஆணும் பெண்ணும் காதளிப்பனராம். "உனக்கு நல்ல வேலை இல்ல , உன் தங்கச்சிக்கு நீதான் கல்யாணம் பண்ணி வைக்கணும். நீ செட்டில் ஆகல. உன் கிட்ட எந்த ஒரு savings உம் இல்ல பார்க்க போனா கடன் வாங்க தான் வாய்ப்பு அதிகம்.  உனக்கு பதிலா எங்க அம்மா  அப்பா பார்த்த பையன கல்யாணம் பண்ணிக்கிறேன். அவன் வாழ்க்கைய ஸ்டார்ட் பண்ண தயாரா இருக்கான்," அப்டின்னு பொண்ணு சொல்லுமாம். உடனே மனசு உடைஞ்சு போய்டுவாராம் ஹீரோ. secure ஆன மாப்பிள்ளையை தேடி போன பொண்ணோட வாழ்க்கைல நிறைய தடங்கள் வருமாம்.

எத்தன நாள் தான் தனக்கான வாழ்க்கையை சுமூகமான பாதையை  தேர்ந்தெடுத்த பெண்ணை குற்றவாளியாக நிற்க வைப்பீங்க? உங்களோட தகுதிய வளர்த்துக்கோங்க அல்லது அந்த தகுதியை சீக்கிரமே அடைவேன் என்ற நம்பிக்கையை அவளுக்கும் அவளோட பெற்றோருக்கும் கொடுங்க. 

இதை மையமாய் வைத்து ஒரு சிறுகதை.

--- -----கதைக்கு போவோம். --------

தலைமாட்டில் இருந்த போன் நாடு சாமத்தின் நிசப்தத்தை உடைத்தது. கை நீட்டி போன் எடுத்தவள் அனிதாவின் பெயரையும் மணி 2 என்பதையும் கண்டவுடன் சற்று பதற்றத்துடன் போனை எடுத்தாள். போனை காதில் வைத்ததுமே அஞ்சலி? என கேள்வி எழ, ஆமா நான் தான் டி பேசுறேன். என்ன இந்த என கேட்டு முடிப்பதற்குள் ஓஓ  வென அழுதாள் அனிதா.

"அழாம சொல்லு என்ன ஆச்சு? பாப்பாவுக்கு ஏதாவது?"

மூக்கை உரிந்து கொண்டு அழுகையை நிறுத்திவிட்டு அனிதா பேசினாள்," இல்ல, என்னோட ஹஸ்பன்ட் ஐ காணோம். மண பண்ணிரண்டாகுது. வேலை முடிஞ்சு ஏழு மணிக்குலாம் வீட்டுக்கு வந்துடுவார்.  அவர் இன்னும் வீட்டுக்கு வரல டி."

"வீட்ல யார் இருக்கா? ஆபீஸ்ல போய் பார்த்தீங்களா? சொந்தக்காரங்க கிட்ட தேட சொன்னியா? "

"அவர் ஆபீஸ்ல பார்த்துட்டோம். அவரோட சித்தப்பா பையனும் மச்சானும் பத்து மணிலேர்ந்து தெருவெல்லாம் தேடிட்டு இருக்காங்க.  எனக்கு என்ன பண்றதுன்னு தெர்ல. வீட்ல உட்கார்ந்துருக்கேன். உன்னோட husband ஓட தம்பி போலீஸ் ல இருக்கார்ல அதான் ஏதாவது கேட்டு சொல்லேன். என்னால வீட்ல சும்மா உட்கார் முடியல." மீண்டும் அழுகை கொட்டியது.

"இரு நான் கேட்டு சொல்றேன். நீ அழாத, " என அஞ்சலி அவளிடம் சொல்லிவிட்டு உடனே பக்கத்தில் படுத்திருந்த கணவனை எழுப்பினாள். மனுஷன் நல்லா தூங்கிவிட்டார் போலும். ஓங்கி ஓர் அடி வைக்க அசோக் எழுந்தான். உடனே கணவரிடம் விவரத்தை சொல்ல அசோக் தன் தம்பிக்கு போன் போட்டு விசாரிக்க அதுவரை அஞ்சலி அனிதாவுக்கு ஆறுதல் சொன்னாள். துபாயிலிருந்து அவளால் இது தான் செய்ய முடிந்தது. இந்நேரம் ஊரில் தஞ்சாவூரில் இருந்திருந்தால் அனிதா வீட்டுக்கே ஓடி சென்று அவளைக் கட்டிப்பிடித்து முதுகில் தட்டிக்கொண்டுத்திருப்பாள். வெளிநாட்டு வாழ்க்கையின் சாபம் ஒரு போனை கையில் பிடித்துக் கொண்டு அவளின் கண்ணீரை இன்டர்நெட் மூலம் துடைத்துக் கொண்டிருந்தாள்.

அறையின் சன்னல் அருகே நின்று பேசிக்கொண்டிருந்த அசோக்  தன் மனைவியிடம் திரும்பி அவ்வப்போது அவளிடம் சில கேள்விகளைக் கேட்க அஞ்சலி அவற்றை அனிதாவிடம் கேட்டு இவனிடம் தகவலைப் பரிமாறினாள். பின் போனை வைத்த அசோக் மீண்டும் கட்டிலில் அமர்ந்தான். போனை ஸ்பீக்கரில் போட சொல்லிவிட்டு அசோக் அனிதாவிடம் பேசினான்.

"அனிதா இப்போ தான் தம்பிகிட்ட பேசுனேன். 24 மணி நேரம் முடிஞ்சு தான் போலீஸ் ல கம்ப்ளைன்ட் கொடுக்க முடியுமாம்."

"ஐயோ, இப்ப என்ன பண்றது?" என அனிதா பதறினாள்.

"நீ கவலப்படாத. இந்த நேரம் நைட் duty பார்க்குற போலீஸ் ஆபீசர்ஸ் கிட்ட கார்த்திக்கோட போட்டோ அனுப்பிருக்கோம். அவங்க ரவுண்ட்ஸ் போகும்போது உன்னோட husband பத்தி விசாரிப்பாங்க. முக்கியமா உங்க ஏரியா ஆபீசர்ஸ் கிட்ட  என் தம்பி நேரடியா பார்த்து பேசுறேன் நு சொன்னான். அவனையும் தேட சொல்லி இருக்கேன் "

"ரவுண்ட்ஸ் போற போலீஸ் அவர கண்டுபிடிச்சிருவான்களா?" அனிதா நம்பிக்கையாய் கேட்டாள்.

"ம்ம்ம். அவங்களுக்கு தான் உங்க ஏரியால எந்த எந்த இடங்கள்ள ஆளுங்க இருப்பாங்கன்னு தெரியும். அவங்க பார்ப்பாங்க. நீ தைரியமா இரு."

"எதாவது தகவல் கிடைச்சா சொல்லு டி. நாங்களும் இங்க அசோக் ஓட தம்பி கிட்ட விசாரிக்கிறோம்."

போன் கட் ஆனதும் அஞ்சலியும் அசோக்கும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அஞ்சலி தன் கணவனின் கையைப் இறுக பற்றினாள். அனிதாவின் வாழ்க்கையும் அவளின் வாழ்க்கையும் பிறந்ததிலிருந்து பிண்ணி பிணைந்தன. இருவரும் தங்களின் பெரும்பாலான வாழ்க்கையை ஒன்றாகவே கடக்க அனிதாவின் நிலைமை அஞ்சலி கத்தி முனையில் தப்பித்தாள் என்று கூறலாம்.

[ Part 2 எழுதிட்டு இருக்கேன். New short story:) ]

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro