4...😘😍

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

என்ன ஏஞ்சல் பேனு முழிக்கிற... தலையும் புரியாம காலும் புரியாம சொல்றேனு முறைக்கிறீயா... சரி சரி முறைக்காதே, நான் அவரை எங்கே பார்த்தேனு முழுசா சொல்றேன்....  இன்னைக்கு காலையிலே என் ஸ்கூல் ப்ரெண்ட் ப்ரீத்தி கல்யாணத்துக்குப் போயிட்டு பஸ் ஸ்டாப்புக்கு வந்து நிக்கும் போது தான் அவரைப்  பார்த்தேன்.... துணி எல்லாம் கிழிஞ்சுப் போய் பஸ் ஸ்டாப்புக்கு ஓரமா உட்கார்ந்துட்டு இருந்தாரு... எனக்கு முதலிலே அவரைப் பார்க்கும் போது எங்கேயோ பார்த்தா மாதிரி இருக்கேனு தோணுச்சு... அப்புறம் கிட்டே போய் பார்த்தா தான் தெரிஞ்சுது... அது அந்த கடைக் கார அங்கிள்னு... நான் பக்கத்திலே போய் நின்ன  என் ஷாலைப் பிடிச்சு இழுத்தாரு... நின்னுட்டு இருந்த நான் மிரண்டுப் போய் அவர் கிட்டே இருந்து என் ஷாலை இழுக்கப் பார்த்த அப்போ அந்த அங்கிள் "எனக்கு பசிக்கிது தாயி சாப்பாடு வாங்கித் தாயேனு" கேட்டாரு ஏஞ்சல்... எனக்கு அதைக் கேட்டதும் ஒரு மாதிரி ஆகிப் போச்சு... அதுக்குள்ள அவர் என் ஷாலை இழுக்குறதைப் பார்த்துட்டு பக்கத்துல இருந்த கடைக்காரர் எனக்குத் துணைக்கு வந்தாரு... அவர் கிட்டே இருந்து ஷாலைப் பிடிங்கி என் கிட்டே கொடுத்துட்டு " இவர் பைத்தியம் மா... அதான் அப்படி நடந்துக்கிட்டாரு... நீ பயப்படாதே... " அப்படினு சொன்னாரு.. நான் அந்த கடைக்காரர் கிட்டே இவருக்கு எப்படி இப்படி ஆச்சுனு கேட்டேனா ஏஞ்சல்.. அதுக்கு அந்த கடைக்கார அங்கிள் சொன்னதைக் கேட்ட உடனே ஒரு மாதிரி ஆகிப் போயிடுச்சு... அவர் கடையில வியாபாரம் ரொம்ப குறைஞ்சு போயிடுச்சாம்.. அதுல  மனசு உடைஞ்ச போய் இருந்த அந்த சமயத்தில அவர் பொண்டாட்டி வேற ஒருத்தன் கிட்டே கூட ஓடிப் போயிடுச்சாம்... அவர் பொண்ணுக்கு அம்மா பாசமும் கிடைக்காம அப்பா பாசமும் கிடைக்காம வேற ஒரு பையன் கிட்டே காதல்ன்ற பேருல பாசம் கிடைக்க அவன் கூட ஓடிப் போயிட்டாளாம்... ஆனால் கொஞ்ச நாளிலேயே அந்த பொண்ணைக் கொன்னுப் போட்டதா டி.வி யில  நியூஸ் பார்த்த உடனே இப்படி ஆகிட்டாராம்... இவர் அந்த பொண்ணு மேலேயே உயிரேயே வெச்சு இருந்தாராம் ஏஞ்சல்... இதைக் கேட்ட உடனே எனக்கு அந்த டைம்ல அந்த அங்கிள் மேலே கோபம் வந்ததை விட அவர் பொண்டாட்டி மேலே தான் அதிகமா கோபம் வந்துச்சு... பாவம் அந்த பொண்ணு என்ன பாவம் பண்ணுச்சு... சுயநலம் பிடிச்சவங்களுக்குப்  பொண்ணா பொறந்ததை தவிர....  அவங்க வாழ்க்கையை யோசிச்சாங்களே தவிர அந்த பொண்ணைப் பத்தி யோசிச்சாங்களா?.. எவ்வளவு கேவலமானவங்களா இருக்காங்க இல்லை... 

அந்த அங்கிளைப் பார்த்த உடனே முதலிலே எனக்கு பயங்கரக் கோபம் வந்தது அதும் என் ஷாலைப் பிடிச்ச உடனே செம ஆத்திரம் வந்தது ஆனால் அவர் என்னை தாயினு கூப்பிட்டாரு பாரேன் அங்கேயே எனக்கு ஒரு மாதிரி ஆகிருச்சு... என்னை குழந்தையா பார்க்க வேண்டிய வயசுல வேற மாதிரி பார்த்தாரு... ஆனால் இப்போ அவர் என்னைத் தாயா பார்க்குறாரு... மனுஷனா இருக்கும் போது தப்பா நடந்துக்கிட்டாரு... ஆனால் பைத்தியம் ஆகிட்ட உடனே சரியா நடந்துக்கிறாரு... அதுக்கு அவரு முன்னாடியே பைத்தியமா இருந்து இருக்கலாம்ல.. மனுஷனா இருக்கும் போது தானே தப்பு பண்ணனும்னு தோணுது.... அவர் மட்டும் முன்னாடி மாதிரி இருந்து இருந்தார்னா.. நான் பார்த்த உடனே நாலு சாத்து சாத்தி என் கிட்டே சாரி கேட்க சொல்லி இருப்பேன்.. ஆனால் இப்போ அவர் சாரி கேட்குற நிலையிலே கூட இல்லை... புத்தித் தவறிப் போன அவரை நான் தண்டிச்சு என்ன ஆகப் போகுது.. அதான் விதியே அவரைத் தண்டிருச்சே... இப்போ அவர் கிட்டே எந்த கெட்ட எண்ணமும் இல்லை.. இவர் தப்பா நடந்துக்கிட்ட அந்த கடைக்கார அங்கிள் இல்லை.. என்னை அம்மானு கூப்பிட்ட மூளை வளர்ச்சி இல்லாத ஒரு  குழந்தை.... இந்த நேரத்திலே மனசாட்சியே இல்லாம அவரைத் தண்டிக்கிறது தப்புல... அதனாலே நான் அவரைக் கூட்டிட்டு போய் மனநலக் காப்பகம்ல சேர்த்துட்டு வந்துட்டேன் ஏஞ்சல்... அவரைப் பார்த்ததும் உன் கிட்டே முதல் முதலா சொன்ன நியாபகம் வந்தது அதான் வந்து உன்னை படிக்க ஆரம்பிச்சேன்... ஆனால் உன்னைப் படிக்க படிக்கத் தான் தெரியுது... நான் என் சின்ன வயசு அதிதியை எவ்வளவு மிஸ் பண்றேனு... அந்த கள்ளங்கபடம் எங்கே போச்சுனே தெரியல... எனக்கு நான் கடந்து வந்த பாதையை பார்க்கணும்னு தோணுது... முதல் பக்கத்தை படிக்கலாம்னு தான் வந்தேன்... ஆனால் நான் எழுதுன எல்லா டயரியோட கடைசி பக்கம் வரைக்கும்  படிக்கணும்னு நினைக்கிறேன்... இந்த டயரி வார்த்தைகளிலே புதைஞ்சு போன இயல்பான அதிதியை மீட்டு என் வாழ்க்கையிலே கொண்டு வரணும்னு ஆசைப்டுறேன் என்று நினைத்தபடி நாட்குறிப்பின் அடுத்தப் பக்கத்தை திருப்ப ஆரம்பித்தாள்..

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro

#fiction