அனிச்சம் பூ 24

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஜெயம் இல்லத்தின் ஞாயிறின் மாலை நிசப்தமான வேளையாக இருந்தது , பாலா குடும்பம் கிளம்பியதும் வீடு ஏனோ வெறுமையானதைப் போலவும் , ஜீவிகாவை சமாதானப்படுத்தியவர்களின் மனம் சமாதானம் ஆகாமலும் இருந்தது , அவரவர் அவரவரது , அறையில் இருந்தனர் , அஸ்வதி அனன்யாவின் சின்ன சின்ன சண்டைகளின்
பேச்சுச் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது ,

மாலையும் யாமமும் கலக்கும் நிலவில் , கண்கள் கெஞ்சியும் உறக்கம் இல்லா இரவில் , செந்தூவுக்கு ஏனோ ஜீவிகாவின் கண்ணீர் தோய்ந்த முகம் அவன் கண் முன்னே வந்து வந்து அவனைக் கவலைக்குள்ளாக்கியது ,

செந்தூ பாலாவிற்கு வீடியோக்கால் செய்தான் ,

" மாமா வீட்டுக்கு வந்தாச்சா ? ஜீவி என்ன பண்றா ? ஜீயிடம்
கொடுங்க மாமா "

" ஜீவி தூங்குறாள் செந்து "

" ஓகே மாமா குட் நைட் " என்று ஏமாற்றத்துடனே ஃபோனை வைத்தான்,

அனைவரும் இரவு உணவு முடித்து உறக்கத்திற்காய் ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேளை , ஜெயராம் முற்றத்தில் ஏதோ சிந்தனையின் வசம் நின்றிருந்தார் , ஆகாஷ் அலைபேசி அழைப்புப் பேசிவிட்டு திரும்புகையில் ஜெயராமைப் பார்த்துவிட்டு அவர் அருகில் வந்தான் ,

" மாமா உங்களிடம் கொஞ்சம் பேசனும்
" என்றான் ,

அதே நேரம் கார்த்திக்கும் அண்ணன் ஜெயராமைத் தேடிக்கொண்டு முற்றத்திற்கு வர , மூவரும் அங்கே இருந்த சோபாவில் அமரந்து பேச ஆயத்தமாயினர் ,

கார்த்திக் , " அண்ணா , அம்மாவும் அப்பாவும் ஜீவிகாவ நம்ம செந்தூவுக்கு மேரேஜ் பண்ணலாம்னு சொன்னதுக்கு , நீங்க பிடிகொடுக்காம, பேசுனீங்கன்னு சொல்ராங்க .. என்றான்.

கார்த்தி , இது விசயமா நானே உன்னிடம் பேசனும்னு இருந்தேன் , நீயே கேட்டுட்ட ஒரு நிமிஷம் இரு , ஆகாஷ் ஏதொ சொல்ல வந்தார் , நீங்க சொல்லுங்க மாப்பிள்ளை ... என்றார் .

"மாமா செந்து ஒரு பொண்ண விரும்புறதா சொல்றான் " என்றான் , ஆகாஷ்

" ஹம் மேல சொல்லுங்க ... " என்றார்.. அவருக்கு ஏதும் தெரியாதது போல்

ஆகாஷ் ரஷ்மியைப் பற்றிக் கூறிக்கொண்டிருந்தான் , அவருக்கு தெரியும் என்று தெரிந்தும் .

"ஹம்... என்றவர் சரி இப்ப சொல்லு கார்த்தி என்றார் ,

" இப்ப நாம என்ன பண்றது ? " என்று கார்த்திக் கேள்வியாக பதில் தந்தான் ,

" சரி நீங்க சொல்லுங்க மாப்பிள்ளை நான் என்ன பண்ணட்டும்" என்றார் ஜெயராம் ,

" கொல்கட்டா போய் முறைப்படிப் பேசி மேரேஜ சீக்கிரம் முடிச்சிடலாம் மாமா என்றான் இருவரிடமும் "

கார்த்க்கிற்கு சிறிது அவகாசம் தேவைப்பட்டது , ஆகாஷ் சொன்ன விஷயத்தை ஏற்றுக்கொள்ள ... அதை கவனித்த ஆகாஷ் கார்த்திக்கிடம் சற்று ஆறுதலாக... ஆரம்பித்தான் ,

" மாமா இதுல யோசிக்கிறதுக்கு என்ன இருக்கு , செந்து சொல்றத வச்சுப் பார்த்தா நல்ல பொண்ணாதான் இருக்கு , இனியும் இத லேட் பண்றது நல்லதில்ல மாமா என்றான் அமைதியான தொனியில் "

" ஆமா நானும் அதான் நினைக்கிறேன் மாப்பிள்ளை என்றார் ஜெயராம் "

கார்த்திக் , " என்ன அண்ணா , ஏன் இரண்டுபேரும் இவ்ளோ அவசரப் படுறீங்க , கொஞ்சம் யோசிச்சு பொண்ணு வீட்டப்பத்தி நல்லா விசாரிச்சுட்டு , அப்புறம் மேரேஜ் பத்தி யோசிக்கலாம் ... என்றான் ,

ஜெயராம் " இலல கார்த்தி விசாரிச்சுட்டேன் , நல்ல குடும்பம்தான் , பொண்ணோட தாத்தா தமிழ்நாடுதான் அவங்க தாத்தா காலத்துல கொல்கட்டா போய் செட்டில் ஆகிருங்காங்க , பொண்ணோட அம்மா பெங்காளி அப்பா தமிழ் , பொண்ணு நம்ம செந்துவுக்கு பொருத்தமான பொண்ணுதான் "

"அதற்காகா ஏன் மேரேஜ்கு அவசரப்படுறீங்க ? "என்றான் கார்த்திக் ,

ஆகாஷ் ஆரம்பித்தான் ,
" இல்ல மாமா இதே இப்போ பாலா சித்தப்பாவ மீட் பண்றதுக்கு முன்னாடியா இருந்தா நாம் டைம் எடுத்து எல்லோருக்கும் சொல்லி பொறுமையா பண்ணலாம் , ஆனா இப்ப நிலைமை வேற , பாலா சித்தப்பாவுக்கும் , தேவி சித்திக்கும் எப்படியும் செந்துவுக்கு ஜீவிகாவை பேசலாம்ங்குற எண்ணம் இருக்கும், பட் இப்போதைக்கு நமக்கு அது சாத்தியமில்லை " என்று கூறியவன் , சற்று தயங்கி "ஜீவிகாவிற்கும் செந்து மேல இன்ட்ரஸ்ட் இருக்கும்னு நினைக்கிறேன் , அதான் மேலும் மேலும் ஜீவிய எதிர்பார்க்கவச்சு ஏமாத்திடாம ஆரம்பத்திலேயே இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வச்சிடலாம் , ஒரு வேளை பாலா சித்தாப்பாவும் , சித்தியும் ஜீவிய செந்துவுக்கு மேரேஜ் பண்ணலாம்னு நம்மகிட்ட கேட்டா அவங்கள நம்ம ஃபேஸ் பண்றதுக்கு தர்ம சங்கடமா இருக்கும் , அதனால தான் மாமா , செந்தூ மேரேஜ் விஷயத்த ஆரம்பிச்சுட்டா யாரும் எதிர்பார்ப்ப வளர்த்த வேண்டிய அவசியம் இருக்காதில்ல.." என்றான்

ஜெயாராமிற்கு " ஜீவிகாவிற்கும் செந்து மேல இன்ரஸ்ட் இருக்கு " என்று ஆகாஷ் கூறியது , அவர் மனதை சஞ்சலப் படுத்திக்கொண்டிருந்தது , எது நடக்ககூடாது , என்று நினைத்தேனோ அது நடந்து விட்டது , இனிமேலும் எதிர்பார்பை வளர விடக்கூடாது , மாப்பிள்ளை சொல்வது போல் கல்யாண வேலையை ஆரம்பித்து விட வேண்டும் என எண்ணியவர் ,

சரி கார்த்தி இந்த வாரமே கொல்கட்டா போய் பொண்ணு வீட்ல பேசிரலாம் , முதல்ல நீயும் மாப்பிள்ளையும் போய் பேசிட்டு வந்திருங்க..
அப்புறம் நம்ம சைடுல இருந்து பொண்ணு பார்க்க போய்டு வருவோம் , அவங்க நம்ம வீட்டுக்கு வந்திட்டு போகட்டும் அப்புறம் டேரக்டா நிச்சியம் மேரேஜ் எல்லாம் ஒரே நாள்ல வச்சுக்கலாம் , முதல் நாள் ரிஷப்ஷன் வச்சுக்கலாம் , எல்லாமே இந்த மந்த்லயே சிம்பிலா முடிச்சுரலாம் , என்றார்.

ஆகாஷ் , " மாமா நான் புதன்கிழமை ஊருக்கு கிளம்பனும் மாமா " என்றான் ,

" அப்போ நாளைக்கு நீங்க ஃப்ரீயா மாப்பிள்ளை " என்றார்

" இல்ல மாமா நாளைக்கு லேன்ட் விஷயமா ஃப்ரன்டப் பார்க்கப் போகனும் செவ்வாய்கிழமை வொர்க் எதுவும் இல்ல மாமா " என்றான் ,

" கார்த்தி உனக்கு எப்போ டைம்கிடைக்கும் என்றார்."

" ஒகே செவ்வாய் கிழமையே போலாம் ஆகாஷ் " , என்றவனின் குரல் சுரத்தே இல்லாமல் இருந்தது

ஜெயராம் , கார்த்தியைப் பார்த்தார் கார்த்தியோ எனக்கு இதில் சற்றும் உடன்பாடில்லை என்பதுபோல், ஏமாற்றத்தை முகத்தில் சுமந்திருந்தான் , தன் தம்பியை சமாதானப்படுத்த முயன்று கார்த்திக்கிடம் பேச ஆயத்தமானார்,

அண்ணன் தம்பியும் பேசுவதற்க்காய் வழிவிட்டு , ஆகாஷ் " சரி மாமா நீங்க பேசிட்டுஇருங்க ... "என்று விடைபெற்றான் .

ஜெயராமன் " கார்த்தி , செந்து விரும்பிவிட்டான் , இதுல நாம என்ன பண்ண முடியும் " என்றார் .

" அண்ணா செந்துவிடம் பேசிப்பார்க்கலாமே .."

"என்ன பேசச்சொல்ற , ரஷ்மி வேணாம் ஜீவிகாவ மேரேஜ் செய்துக்கன்னு சொல்றதுக்கு இது என்ன பிஸ்னஸ் விசயமா ? வாழ்கை விஷயம் , அவனும் சின்னப் பிள்ளை இல்லை , அதோட பாவம் அந்தப் பொண்ணும் செந்துவ மேரேஜ் பண்ணலாம்னு நம்பிக்கையோட காத்திருப்பா , இவனும் அப்படித்தான் மனசுல ஆசைய வச்சுட்டு இருப்பான் , இவங்க ரெண்டுபேரோட வாழ்கையோட விளையாட சொல்றியா கார்த்தி... " என்றார் ஜெயராம் .

அதே மாதிரிதான் " நம்ம செந்துவுக்கு ஜீவிய கல்யாணம் பண்ணிவச்சு இத்தனை நாள் பிரிவுக்கெல்லாம் ஒரு முற்றிப்புள்ளி வைக்கலாம்னு கனவு கண்டுட்டு இருக்க நம்ம தங்கச்சி தேவிக்கும் , மாப்பிள்ளை பாலாவுக்கும் , எனன பதில் சொல்லப்போறீங்க .." என்றான் , கார்த்திக் .

ஜெயராம் கேள்வியும் அதிர்ச்சியுமாய் கார்த்தியைப் பார்த்தார்

மிண்டும் கார்த்தியே ஆரம்பித்தான் , " ஆமாண்ணா தேவி எவ்வளவு ஆசையா எங்கிட்ட சொன்ன தெரியுமா ? இனிமே நம்ம குடும்பத்துல பிரிவே இருக்கக்கூடாதுன்னு " ஆனால் என்று நிறுத்தினான் ...

ஜெயராம் " நானும் அதேயேதான் சொல்றேன் கார்த்திக் , செந்து , ரஷ்மி கல்யாணத்தை நிறுத்தனும்னு நினைத்தால் செந்துவும் நம்ம விட்டு மனசளவுள பிரிஞ்சுடுவான் , பிரிவுங்கறது ,
தொலைவா தூரமா
இருக்கிறதோ ,பார்க்காமல் பேசாமல் இருக்கிறதோ இல்ல கார்த்தி ,
நாம் ஒருத்தங்க மனசுல இருக்கமா இல்லயாங்கறதுலதான் இருக்கு...
எனக்கு நம்பிக்கை இருக்கு , தங்கச்சியும் மாப்பிள்ளையும் என்னைப் புரிஞ்சுக்குவாங்கன்னு, என்றவர் மேலும் ஆரம்பித்தார் ,
பாலா நம்ம வீட்டுக்கு வந்த அன்னைக்கு எடுத்த ஃபோட்டோஸ் எல்லாம் நம்ம சக்திவேல் அண்ணா இருக்காங்கல்ல அவர்கு வாட்ஸ்அப் பண்ணிஇருந்தேன் , அதில் ஜீவிகாவைப் பார்த்திட்டு அவர் பையன் வினய்கு நம்ம ஜீவியை பொண்ணு கேட்டார் , நான் பாலட்ட பேசிட்டு அப்புறம் சொல்றேன்னு சொன்னேன் , என்றார் ஜெயராம் .

இதைக்கேட்டதும் கார்த்திக்கு இன்னும் சற்று ஏமாற்றம் அதிகரித்தது ... " அண்ணா ... சக்திவேல் அண்ணா நம்ம பேமிலி ஃப்ரன்டுதான் , வினய்யும் நல்ல பையன்தான் , ஆனா நம்ம வீட்டுக்கு வர வேணடிய நம்ம தங்கச்சி பொண்ண அடுத்தவங்களுக்கு தாரை வார்கிற அளவுக்கு உங்க பெருந்தன்மை எனக்கில்லண்ணா .... என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் ...

****************************

திங்கட் கிழமை எப்பொழுதும் போலக் காலையில் கல்லூரியின் வளாகத்தில் ஜீவிகா , ஸ்டோன் பென்ஞ்சில் அமர்ந்தவாறு தனது ப்ராஜக்ட் , ஆன் லைன் காலேஜ் இயர்புக் , ஜாவா ஸ்கிரிப்ட்டை சரி பார்த்துக்கொண்டிருந்தவள் , இர்ஃபாவின் அழைப்பில் நிமிர்ந்தாள் ,

குட்மானிங் ஜீவி , ஒன் வீக் திருப்பூர்லயே இருந்திட்ட போல ...

" ஆமா இர்ஃபா எனக்கு அங்க இருந்து வரவே மனசுவல்ல , "

" எப்புடி மனசு வரும் , செந்தூரன விட்டுட்டு வர... "

"ச்ச.. அப்டிலாம் இல்ல இர்ஃபா , உண்மைய சொல்லனும்னா செந்து மட்டும் இல்ல எல்லாரேயும் ரொம்ப மிஸ்பன்றேன் ... ஏன்றவளிடம்

இர்ஃபா " சரி செந்தூவிடம் சொல்லீட்டியா? " எனக் கேட்க ,

" என்ன சொல்லனும் " என ஜீவி பதில் கேள்வி தொடுக்க ,

" சரியா போச்சு போ , ப்ரப்போஸ் பண்ணீட்டியா ? .. என செந்து அழுத்தமாகக் கேட்க ,

" மஹும் ..இன்னும் இல்ல " அழகான சீறு அலட்சியப் புன்னகை சிந்த ..

" ஏன்பா நீ இப்படி இருக்க , இத சொல்றதுல உனக்கென்ன கஷ்டம் , நீயா மனசுக்குள்ள நினைச்சுட்டு இருந்தா எப்படித் தெரியும் ? சொன்னால்தான தெரியும் , இங்க பாரு ஜீவி தயவு செஞ்சு நீ சொல்லிடு .... , அப்புறம் , இன்னொரு விஷயம் செந்தூரனோட பதில் எதுவா இருந்தாலும் நீ ஈசியா எடுத்துக்க , என இர்ஃபா அக்கறையும் சிரத்தையும் கலந்து அவளிடம் கூற ..

" சரி இர்ஃபா என்றவள் , ' ம்ஹும் நானாவது சொல்றதாவது , ஆனா , நீ பயப்டற மாதிரி இருக்காது இர்ஃபா , செந்து மாமாவுக்கு , என்ன ரொம்ப பிடிக்கும் ' என மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.

இர்ஃபா ஏதோ சொல்ல வாயெடுக்க , அங்கே , ஸ்வேதா , மான்ஷா நித்தின் என அனைவரும் வர இர்ஃபா மேற்கொண்டு எதுவும் பேசாமல் பேச்சை மாற்றினான்.

" ஏய் ஜீவி அப்புறம் எப்ப வந்த உங்க மாமாவீட்ல இருந்து .. " என"ஸ்வேதா ஆரம்பிக்க ,

" ஹம் நேத்து நைட் " வந்தேன் ஸ்வே என்றவளிடம் மான்ஷா , " ஏன்டி அங்க இருந்தா ஒரு ஃபோன் கூட அட்டன் பண்ண மாட்டேன்ற ? வாட்ஸ் அப் குரூப்பையும் எட்டிப் பார்கிறது இல்ல " எனக் குறுஞ்சினம் காட்ட ,
" மேடம் அங்கபோனா செம்ம பிசி , சரி அத விடு , செந்தூரன் என்ன சொல்றார் , ஜீவி ஏன ஸ்வேதா ஆரம்பிக்க , ஜுவி " என்ன சொல்றாங்க , ஒன்னும் சொல்லல " என இயல்பாய் இருப்பதாய்க் காட்டிக்கொள்ள , ஸ்வேதாவோ " ஒன்னும் சொல்லலயா நீ சொல்றது நம்புறமாதிரி இல்லையே ! என ஜீவியின் கண்களை ஆராய , மான்ஷாவோ " எனக்கென்னவோ , பிரிஞ்ச குடும்பம் ரெண்டும் ஒன்னு சேர்ந்ததால சினிமால வர்ற மாதிரி உங்க இரண்டு பேருக்கும் மேரேஜ் பிக்ஸ் பண்ணிருவாங்கன்னு நினைக்கிறேன் , அனேகமா நெக்ஸ்ட் மந்த் உனக்கு மேரேஜ் கன்ஃபாம் எனக்கூறி ஒரு குருஞ்சிரிப்பை உதிர்க்க , ஜீவியோ " ஏய் ஏன்டி சும்மா மேரேஜ் அது இதுன்னு லூசு மாதிரி உளறாம வாங்க க்ளாஸ்குப் போகலாம் ", என்றாள் , ஆனால் அப்போது அவளுக்குத் தெரியவில்லை அவளுடைய உளறல் உண்மையாகப் போகிறது என்று , ஆனால் மாப்பிள்ளை ? ...












Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro