அனிச்சம் பூ 32

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

கண்களில் கனவைத் தேக்கி மணநாளை எதிர்பாரத்துக் கொண்டிருந்தாள் ரஷ்மி , நொடிகளை நிமிடமாக்கி , நிமிடங்களை மணிகளாக்கி , மணிகள் நாட்களாவதற்கு , பொறுமை போதாமால் தவித்தாள் ...

தனது அறையில் , தூக்கத்தைத் தூரம் வைத்துவிட்டு , அமைதியான இரவுக்கு இசை அமைக்கும் கடிகாரதகதின் டிக் டிக் ஒலியோடும் ,கனவுகள் நீந்தும் விழிகளோடும் , நினைவுகள் பேசும் கதையோடும் ,கையிலிருந்த அலைபேசியில் செந்தூவின் படங்களை ரசித்துக்கொண்டிருந்தாள், அவள் செந்தூரனைப் பார்த்த நாட்களின் நினைவுகளை மனதோடு காட்சிப்படுத்திக் கொண்டிருந்தாள் ,

அவள் வாழ்வில் செந்தூரன் வரும் வரை அவள் பார்த்த ஆண்களின் உலகம் வேறாக இருந்தது , அசடு வழியும் அழகர்களும் , சொன்னதை மட்டும் செய்யும் , கிளிப்பிள்ளைகளும் , முன் விட்டுப் பின் பேசும் அறிவுஜீவிகளும் , திறமைப் பெண்களுக்கு திமிரென்று பட்டம் சூட்டும் மாகாக்கவிகளும் ,
பெண்ணை நேர்நின்று எதிர்க்கமுடியாமல் உயிரென்ற ஒழுக்கத்தை புறம் பேசி அவர்களை வீழ்த்த நினைக்கும் மாவீரர்களுமாய் , ஏதாவது அதிசயமாக யாரவது நன்முறையில் நடந்துகொண்டால் அவர்களையும் நடிக்கிறார்களோ ? என்று சந்தேகிக்கவே தோன்றும் , என்றாலும் இத்தனை வகையானோருக்கும் தன்னால் நன்மை செய்யமுடியுமெனில் அதையும் செய்யத் தயங்காமல் , அவர்களது குறைகளை அறியாமை என தூரவீசிவிட்டு , அவர்களுக்கு தன்னாலான நன்மையைச் செய்யும் , தெளிந்த சிந்தனையும் கருணையும் கொண்ட இவளைப் போன்ற பெண்களைப் பார்த்த பிறகுதான் , அகழ்வாரைத்தாங்கும் நிலமாகி , ஓயாது சுற்றும் பூமியைப் பெண்ணென்று உருவகப்படுத்தினார்கள் போலும் ...

அவள் பார்த்த ஆண்களிலிருந்து மாறுபட்ட ,செந்தூரனின் இயல்பான பேச்சு , உண்மையான அக்கறை , தன்னைச்சுற்றி இருப்பவர்களிடம் காட்டும் அன்பு என , அவனுக்கு நிகர் அவன்தான் என ரஷ்மியை எண்ணவைத்தது ...

செட்டிங் செய்த மூளையில்லா , மிஷென்களோடு , ஒரு மூளையுள்ள மிஷெனாய் ஓடிக்கொண்டிருந்தவளுக்கு , காலை மாலை வேலை என்பதே அவளறிந்த முப்பொழுதுகள் ,

செந்தூரனைச் சந்தித்தபொழுதுதான் மனதில் ஒரு மகிழ்ச்சியை உணர்ந்தாள் , இரண்டு நல்ல உள்ளங்கள் பழக நேரும்போது ஒரு நேர்மறையான ஆற்றல் உருவாவது இயல்பானது , அதேபோல் இருவரும் சந்திக்கும் பொழுதெல்லாம் ரஷ்மி அதை உணர்ந்தாள் , நட்பென்று நம்பினாள் , அந்த நேர்மறை ஆற்றல் காலம் முழுதும் அவளோடு தொடரவேண்டும் என நினைத்தாள் , எண்ணங்கள் வண்ணங்களை பூசிக்கொண்டு அவளை உற்ச்சாகப்படுத்தியது , ஹாா்மோன்கள் காதல் காதல் என்றது , அவன் அன்பில் அன்னையைக் கண்டாள் , அவன் ஆண்மை யில் காதல் கொண்டாள் .

ரஷ்மியின் நினைவலைகள் கரைதொட , உறக்கம் விழி தொட ஆரம்பித்திருந்தது ,ரஷ்மி நித்திரைக்கு விழிகொடுத்தாள் ,

ஜெயம் இல்லத்தில் அதிகாலைப்பொழுது பரபரப்பை பரப்பிக்கொண்டிருந்தது , இன்று பெண்பார்க்கக் கொல்கட்டா விற்குச் செல்லும் பொருட்டு , பெரியவர்கள் அனைவரும் கிளம்ப , ஜீவி , அஸ்வதி , அனன்யா , செந்தூரன் என இவர்கள் நால்வரைத் தவிர்த்து அனைவரும் கொல்கட்டா கிளம்பினர் .

ரஷ்மியின் காலைப்பொழுது விடிந்தாலும் அவளின் கனவுப்பொழுது முடியவில்லை ,
நித்திரை முடித்தொரு ஒத்திகை நடத்தினாள் மனதில் ,

என் அதிகாலை விடியல்கள் ,
உன் அனைப்பின் பிடியில் .
என் அந்திசாயும் மயக்கங்கள்
உன் அலைமேக மடியில் .
இரு மனமும் நெருங்கிடுமே
நாம் விலகும் நொடியில் .
நல் அகமாட்சி தொடங்கிடுமே
நம் இல்லப் படியில் .

செந்தூரனின் , மந்திரப்பார்வையில் , மனம் தொலைத்து , சந்திரப்புன்னகையில் தனை இழந்து ,
சுந்தரக்கனவில் , மனதில் மேடையிட்டு , மலர் மாலை சூட்டி விட்டு , மணக்கோலம் கண்டு விட்டே , மதுவிழிகளை மெதுவாய் திறந்தாள் ,

அவளது கனவே அவளுக்கு களிப்பைத் தந்தது , பன்னீர் ரோஜா இதழ்களில் ஒரு மெளனப் புன்னகை கோடிட தான் சுகமாய் கண்ணம் சாய்த்துக் கட்டி அனைக்கும் தலையனை , தன் தலைவனாய் மாறிடாதா என்றிருந்தது அவளுக்கு ...
இன்று செந்தூ வீட்டில் இருந்து தன்னைப் பெண்ப் பார்க்க வருகிறார்கள் , மனதில் மகிழச்சி இருந்தாலும் , ஏனோ ஒரு அயர்ச்சியும் , இருந்தது , சோம்பல் முறித்தவள் , தன் வேலைகள் முடித்து , செந்துவிடம் அலைபேசிக்கொண்டிருந்தாள் ,

" செந்தூ நீயும் வர ட்ரை பண்ணிருக்கலாம்ல ... "

" அதான் சொன்னேன்லடா பிசி வொர்க் போயிட்டு இருக்குன்னு , இந்த ஆர்டர்ஸ் முடிஞ்சதுன்னா நம் மேரேஜ் டைம்ல நம்ம கொஞ்சம் ஃப்ரீயா இருக்கலாம் , கம்பனில ஒன்னு அப்பா இருக்கனும் , இல்ல நான் இருக்கனும் , இப்ப என்ன ? , ஜஸ்ட் ஒன் மந்த் தான அப்புறம் என்கூடவே தான இருக்கப் போற , நம்ம இரண்டு பேர் வீட்லையையும் மேரேஜ்கு ஒத்துக்கிட்டு இவ்வளவு சீக்கிரம் மேரேஜ் அரேன்ஜ் பன்றதே பெரிய விஷயம் , என்றவன் சற்றுத் தவிப்புடன் " அப்புறம் ,  ராகுல்   அண்ணாட்ட சொல்லிருடா , பாட்டி தாத்தா யாராவது முன்ன பின்ன பேசுனா அட்ஜஸ் பண்ணச்சொல்லு , நான் ராகுல் அண்ணனுக்கு கால்பன்னேன் பிசியா இருந்தது , அல்ரெடி சொல்லிருக்கேன் , ஆனாலும் நீயும் கொஞ்சம் அவங்கள்ட பேசும் போது பாரத்துப் பேசுடா , அம்மா , அப்பா , ன்னா எந்தப் பிரச்சனையும் இல்ல , ஆனா சித்தி , தாத்தா பாட்டின்னு எல்லாரும் ஒரேமாதிரி இருக்க மாட்டாங்க ... " என்று சற்றுத் தவிப்புடன் பேசிக்கொண்டிருந்தான் , ரஷ்மி அவன் பேசும்வரை பொறுமையாகக் காத்திருந்தாள் , பின்பு பேசஆராம்பித்தாள் ,

" செந்தூ நீ இப்படி என்னிடம் பேசுறது எனக்கு கஷ்டமா இருக்கு , இதை நீ என்னிடம் சொல்லனுமா ? உனனோட விஷயத்தில எனக்கு எந்த ஈகோவும் இல்ல , பாட்டி என்னை ஒரு கண்ணத்தில அறைஞ்சா மறு கண்ணத்தை காட்டுவேன் நீ கவலைப்பாடதே , செந்து " என்றாள் .

மறு முனையில் இரு நொடி அமைதிக்குப்பின் " ஐ லவ் யூ டா " என்றான் உணர்ச்சிப்பூர்வமாக அடிமனதில் இருந்து வந்த உன்மையான அன்பினால் ,
இப்பொழுது இவள் இதயம் இருநொடி இடைவெளி விட்டு துடிக்க ஆரம்பித்தது , அவள் காதுகளை அவளே நம்பமுடியவில்லை , இருவரும் ஒருமுறைகூட ஜ லவ் யூ என்ற வார்த்தையை பரிமாறிக்கொண்டதில்லை , நட்பென்றே இயல்பாய் ஆரம்பித்து , மெல்ல காதலாக மாறிக்கொண்டிருந்த உறவு முழுமையாகக் காதலடைந்ததாய் உணர்ந்தாள் .

ரஷ்மியின் சில நொடி அமைதியில் காத்திருந்தவன் , மீண்டும் பேச ஆரம்பித்தான் , இப்போ உன் பக்கதில் இருக்கனும் தோனுது , ரியலி ஐ மிஸ் யு டா , என்றான் , பதிலுக்கு ரஷ்மி " நான் உன்னை எப்பொழுதும் மிஸ் பண்ணிறக்கூடாதுன்னு நினைக்கிறேன் செந்து , என்றாள் உணர்ச்சிகளின் தாக்கத்தால் உடைந்த குரலில் ....

அவளின் குரல் கேட்ட அந்த நொடியில் துடித்த செந்து " டேய் என்ன அழறியா ? ப்ளீஸ் ரஷ்மீ அழாத , உன்னிடம் நான் இத எதிர்பார்க்கல நீ ஏன் இவ்வளவு இமோஷனாகுற ..நீ வீடியோகால் வா ..

மீன்டும் அமைதிக்குப் பிறகு ..
" இல்ல நான் அழல ,வாய்ஸ் காலே பேசு செந்து ...

என்ன ரஷ்மி , அடுத்த மாதம் இன்நேரம் , நீ என்னோட வைஃப் , என்றவன் சற்றே இலகுவாக , நீ தப்பிக்க சான்சே இல்லமா , வசமா மாட்டிக்கிட்ட , சிங்கத்தை கூண்டுக்குள்ள இல்ல , என்னோட குகைக்குள்ள அடைக்காம விடமாட்டோம் ... என்றான் .

அதையெல்லாம் அவள் காதில் போடவில்லை , எப்போ நம்ம மேரேஜ் நடந்து முடிஞ்சு அடுத்த நிமிடம் ஆகுதோ , அப்பொழுதுதான் நான் நிம்மதியாக இருக்க முடியும் செந்து , என்னோட லைஃப்ல எனக்கு ஈசியா எதுவும் கிடைச்சதில்ல , அதுதான் எனக்கு பயமா இருக்கு ...என்றாள் ,

" நீயா இப்படி பேசுற ரஷ்மி , பயத்தத் தூக்கித் தூரப் போடு , ஏன் இப்படி ஃபீல் பன்ற ? உன்னோட பக்கத்துல இருக்கும் போது , ஃபீல் பண்ணாக்கூட இதச் சருக்கா வச்சு ஆறுதல் சொல்றேன் பேர்வழின்னு , ஒரு ஹக் , ஒரு கிஸ் ன்னு ...ட்ரை பண்ணிஇருப்பேன் , நீ என்னடான்னா பக்கத்துல இருக்கும் போது இந்த சான்ஸ் தராம , இத்தன கிலோ மீட்டர் தள்ளி வச்சுட்டு தவிக்கவிடுறியே ... என்றான் அவளின் மனநிலையை இலகுவாக்க ..

" ஆமா சான்ஸ் கொடுத்தா மட்டும் , அப்டியே ரொமன்ஸ்ல கரைச்சுடுவான் , என்று மனதோடு முனங்கியவள் , என்னுடைய ஃபீலிங்ஸ்ல உனக்கு ரொமேன்ஸ் கேட்குதா ? என்றள் ,

பின்ன என்னவா ?
இரண்டு குடும்பமும் சம்மதிச்சு அரேன்ஜ் பன்ற மேரேஜ்ல என்ன தடங்கல் வரப்போகுது , நீயா மனசப் போட்டு குழப்பிக்காம , சந்தோஷமா இருக்க டரைப்பன்னுடா , நீ இப்படி ஃபீல் பணணீட்டு இருந்தீனா நான் எப்படி கம்பனில வேலை பார்பேன் , இப்பொழுது கூட நீ உன் கால் பக்கத்தில் எட்டிப்பாரு என்னுடைய குட்டி இதயம் உன் காலடில கிடந்து துடிச்சிட்டு இருக்கு ..
என் மனசு முழுதும் உன்கிட்டதான்டா இருக்கு ...
நீ நிம்மதியா ஹேப்பியா இருடா , நீ ஹேப்பியா இருந்தாத்தான் நான் நிம்மதியா இருக்க முடியும் " , என்றான் .
செந்தூரனின் ஆறுதல் மொழியில் சற்றே சமாதானம் ஆனாள் .

செந்தூரன் பயந்தது போல் அல்லாமல் , பெண்பார்க்கும் படலம் நன்றாகவே நடந்தது , வந்தவர்களை ராகுலும் , லஷ்மியும் வரவேற்று உபசரிக்க , அனைவரும் அன்பாகவும் அளவாகவும் பேசி சூழ்நிலையை இனிமையாக வைத்திருந்தன்ர் ,

எவர் முகத்திலும் தேவையற்ற இருக்கம் இல்லாமல் இனிமையாகவே இருந்தனர் , அனைவரும் வரும் போது ஏதோ அரை குறை மனதோடு வந்திருந்தாலும் , ராகுல் மற்றும்
லஷ்மியின் உபசரிப்பும் , அவர்கள் எதிர்பார்க்காத விதமாக ரஷ்மியிடம் தெரிந்த  தவிப்பும் அகந்தையில்லா குணமும் அவர்களுக்கு ரஷ்மி மீது உயர்வான அபிப்ராயத்தை உருவாக்கியது , எனவே அனைவருமே அவளின் தவிப்பை போக்கி அவளிடம் சிரிப்பை வரவைக்கவே முயன்றனர் , பாட்டி உட்பட ,

ரஷ்மியின் தந்தையின் உடல்நிலை பற்றியெல்லம் அறிந்திருந்ததால் அதைப்பற்றியெல்லாம் , கேட்கமால் , ஜெயராமும் பாலாவும் அவருடன் அமர்நது இனிமையாகப் பேசி , அவர் மறந்த சிரிப்பை மீட்டனர் , நீண்ட நாட்களக்குப் பிறகு தன் தந்தையின் ஆத்மசிரிப்பை கண்டவளுக்கு , எதையோ மீட்டெடுத்த சந்தோஷம் கிட்டியது ,

வெகு இயல்பாக சிரித்து அன்பாய் பேசிய ஜெயராமின் ஒவ்வொரு அசைப்பிலும் செந்தூரன் வந்துபோனான் , ரஷ்மிக்கு இப்பொழுது புரிந்தது ,செந்தூரனின் பழகும் இனிமையும் அவனது ஸ்டெயிலும் தந்தையிடமிருந்தது வரப்பெற்றது என்று ,

ஏற்கனவே செந்துவின் சித்தப்பா கார்த்தி ராகுலுடன் பரிட்சையமானதால் , நட்போடு உறவாடினார் .

பாட்டி ரஷ்மியை அருகில் அமரவைத்து அன்பாகவே பேசினார் , ரஷ்மியின் அக்கா லஷ்மியிடம் " கல்யணம் வரைக்கும் எங்க மருமகள ஆஃபீஸ் விடாம , வீட்லயே வச்சு பாத்துக்க வேண்டியது உன் பொறுப்புமா , வீட்ல இருந்து நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கனும் என்று ரஷ்மிக்கு அன்புக்கட்டளை வேறு ..

செந்துவின் குடும்பத்தில் பெரியவர்கள் பேசும் போது மற்றவர்கள் குறுக்கிடாமல் அமைதிகாப்பதும் , பெண்களின் ஆலோசனைக்கும் , கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அவர்களின் பண்பும் , ரஷ்மியை ஈர்த்தது ..

ஜெயந்தி ரஷ்மியின் அக்காவின் குட்டிச்செல்லங்களோடு , விளையாடிக்கொண்டும் , ரஷ்மியையும் விளயாட்டாகச் சீண்டிக்கொண்டும் இருக்க..
தேவியும் கார்த்திகின் மனைவி ரேவதியும் , லஷ்மியையும் ரஷ்மியையும் , அமரவைத்து உணவுபரிமாறுவதும் ....

மேலும் வந்ததிலிருந்து புன்னகை முகத்தோடு கேலிப்பேச்சுக்களால் அந்த இடத்தைக் கலகலப்பாக வைத்து , தன்னையும் சிரிக்கவைத்து பார்க்கும் , செந்துவின் மாமா பாலா , ஏதோ திருமணமே முடிந்தது போல , தன் தந்தையை அண்ணா என்று உரிமையோடும் உறவோடும் அழைப்பதும் , மேலும் நீங்க ரஷ்மி மேரேஜ் முடிஞ்சதும் ஊட்டிக்கு வந்து தங்கனும் .. அப்புறம் பாருங்க நீங்க கொல்கட்டாவையே மறந்துடுவீங்க ... என்று , தன் தந்தைக்கு இடமாற்றம் தேவை என்று நினைத்து , அவர் மீது அக்கறை வைத்து அழைப்பு விடுப்பதுமாக ,

இதுவரையில் தனது , ஃபேக்டரியையைப்போல் , அலுவலகம் போல் , ஷோரூமைப்போல் , வீடும் ஒரு கட்டிடமாகத்தான் ஊணர்ந்திருந்தாள் ஆனால் இன்று இவர்களின் வருகையால் உயிரோட்டமுள்ள ஒரு பூந்தோட்டமாகத் தெரிந்தது ...

அவர்கள் அனைவரும் விடைபெற , ரஷ்மியின் மனதில் சந்தோஷம் .. அருவியென்றாகி ஆறு கடல் ஓடியது ,
செந்தூவிற்கு அலைபேசி அழைப்பு விடுத்தாள் , பதில் இல்லை ... அவன் வேலையில் ஆழ்ந்திருந்தான் , தனது அக்காவின் அறைக்குச் சென்றாள் , லஷ்மியும் சந்தோஷத்தில் மிதந்து கொண்டுதானிருந்தாள் , தன் செல்ல தங்கைக்கு , அவளது காதல் கைகூடி கல்யாணம் வரை வந்துவிட்டது , அதுவும் அவள் வாழப்போவது நல்ல இதயங்களுக்கிடையில்.. சொல்லவா வேண்டும் ... ரஷ்மி சந்தோஷத்தில் தன் அக்காவின் மழலைகளுக்கு முத்தமிட்டு கொஞ்சி மகிழ்ந்து கொண்டிருந்தாள் ,
அங்கே வந்த ராகுல் ஹம் .. கொஞ்சம் என்னோட தம்பிக்கும் மிச்சம் வைமா ....
பாவம் செந்தூரன் , எனக்கேலிபேச .. அவனை போலியாய் கண்களை இடுக்கி முறைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறப்போக , அவளை தடுத்து , ரஷ்மி நான் வெளிலதான் கிளம்புகிறேன் , நீ அக்கவிடம் பேசிக்கொண்டிரு ... என்று கூறி , கிளம்பினான் .

ரஷ்மி எத்தனை பிரச்சனைகளையும் போட்டிகளையும் சந்தித்திருந்திருந்தாலும் , அவைகளையெல்லாம் , ஒரு பிரச்சனையாகப் பார்க்காமல் அதை தனது வேலைகளின் பட்டியலில் சேர்த்து எளிதாக முடிக்கும் மனவலிமை கொண்டவள் , இன்று அந்த வலிமை பலவீனமானதாய் உணர்ந்தாள் , தினமும் அலுவலகம் தொழிற்சாலை என ஆயிரம் பேருக்கு மத்தியில் இயல்பாக இருந்தாலும் ,
இங்கே சில உறவுகள் மத்தியில் மனதை சமநிலை படுத்த இயலாமல் ,
உணர்ச்சிவசப்படுவதும் , கண்கள் கலங்க எத்தனிப்பதும் , தவிப்பதும் மகிழ்வதும் என அவளே அவளைப் புதிதாய் உணர்ந்தாள் ... ஆனாலும் இந்த உணர்வுகள் அவளுக்குப்பிடித்திருந்தது ,
அன்பைப்போலொரு ஆயுதம் இல்லையல்லவா ?  அடுத்தவரை வீழ்த்துவதற்க்கு ....

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro