அனிச்சம் பூ 35

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ல்ல வேளையாக ரஷ்மியின் அப்பா அழைப்பை ஏற்றுப் பேசினார் ... அவர் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த ஆகாஷின் முகத்தில் அதிர்ச்சியும் கவலையும் ஒரு சேரப் பரவியது .


ஆகாஷின் முகம் பார்த்துக்கொண்டிருந்த , ஜெயராம் , ஆகாஷிடம் " என்ன மாப்ள எதும் ப்ராப்ளமா ? " , என்றார் ..

" மாமா .. அதுவந்து ...என்று நிறுத்த ..
சொல்லுங்க ஆகாஷ் , என்ன ப்ராப்ளம் என்றார்..


" மாமா , இன்றைக்கு காலைல ராகுலும் அவங்க வைஃப் ம் கோயிலூக்கு போய்டு வர்றப்ப அவங்க கார் ஆக்ஸிடன்ட் ஆகிடுச்சாம் , அவங்க இரண்டுபேருமே ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்காங்களாம் , ராகுலுக்கு ஆப்ரேஷன் பண்ணனுமாம் , அவங்க வைஃப் அதிர்ச்சில அன்கான்ஷியஸா இருக்காங்களாம் " , என்றான் ,

அதைக்கேட்ட ஜெயராம் அதிர்ந்தது சில நொடிகள் தான் என்றாலும் , துரிதமாகச் செயல்பட ஆரம்பித்தார் ,

ஜெயராம் ஆகாஷிடம் " நீ வினய தனியா கூப்பிட்டு விஷயத்தச் சொல்லி நீயும் , வினயும் நெக்ஸ்ட் ஃப்ளைட்டுக்கு கொல்கட்டா போங்க , அங்க அவங்களுக்கு என்ன உதவி தேவையோ அதைச்செய்ஙக , அங்க நிலவரம் பாரத்துட்டு எனக்குக் கால் பண்ணுங்க .. உங்க இரண்டுபேர்ல ஒருத்தர் மட்டும் அங்க இருந்துட்டு ஒருத்தர் நாளைக்கு முகூர்த்த நேரத்திற்க்குள் ரஷ்மிய இங்க அழைச்சுட்டு வாங்க ... நானும் ரஷ்மிக்கு கால்பன்றேன் முடிஞ்சா ரஷ்மிய நெக்ஸ்ட் ஃப்ளைட்டுக்கு கிளம்பி இங்க வரச்சொல்றேன் , முகூர்த்தம் முடிச்சதும் , நாம எல்லாரும் கொல்கட்டா கிளம்பிடுவோம் .. எப்படியும் ராகுலுக்கு ஆப்ரேஷன் பண்றாங்கன்ன அவங்க உயிர காப்பற்றுவதற்க்கான ஹோப் இருக்கும் , அதோட அவங்க வைஃப் அதிர்ச்சிலதான் கான்சியஸ் இல்லாம இருக்காங்க ... மத்தபடி ப்ராப்ளம் இருக்காதுன்னு நினைக்கிறேன் , எல்லாம் நல்லபடியா நடக்கும்னு நம்புவோம் , நீங்க உடனே கிளம்புங்க ...என்று
ஆகாஷிற்கு நம்பிக்கை தந்தவர் ... ஏதோ யோசித்தவாறு , இந்த விஷயம் செந்துவுக்கு தெரியுமா இல்லையான்னு தெரியல நான் வினய்ட சொல்லி அவனோட ஃபோன இரண்டு நாளைக்கு சுவிட்ச் ஆஃப் பண்ண சொல்லிருந்தேன் , சோ அவனுக்குத் தெரியலைன்னா , நீங்க எதுவும் சொல்லிவிட வேண்டாம் , செந்துவிடம் நான் பேசிக்கொள்கிறேன் , என்றவரின் குரலில் நிதானம் இருந்தாலும் கவலையும் மேலோங்கி இருந்தது .. ,


செந்தூரன் அறைக்குச் சென்ற ஜெயந்தி , .
" செந்தூ , வீடியோ ஷூட்க்கு வந்திருக்காங்க , அப்புறம் ஃபோட்டோ எடுக்கனும் வீடியோ எடுக்கனும்னு , லேட் ஆகிடும் , சாப்பிடவிடமாட்டாங்க ... மணி 8. 30 ஆகிடுச்சு , வாங்க வந்து முதல்ல சாப்பிடுங்க என்றுகூற ... வினயும் செந்தூவும் டைனிங்ஹாலுக்குச் வர ,

அங்கே வந்த பாலா , ஜெயந்தியிடம் " எனக்கு ஸ்ட்ராங்க ஒரு காப்பி வேணும் கா , என்று கூறிவிட்டு , செந்துவிடம் , " செந்து பொண்ணுவீட்ல எல்லாரும் கிளம்பீட்டாங்களா ? கால் பண்ணியா ? என்றான்


" ஹம் இன்னேரம் கிளம்பிஇருப்பாங்க மாமா " , எனக் கூறிவிட்டு , தன் ஃபோனைப் பாக்கெட்டில் தேட ,
" டேய் உன் மொபைல் ரூம்ல இருக்கு ", என்ற வினய் அவனது ஃபோனிலிருந்து ரஷ்மிக்கு அழைக்க , அழைப்பு ஏற்க்கப்படாமல் ரிங் மட்டும் செல்ல , ஜெயந்தி " சரி விடுங்க பிசியா இருப்பாங்க போல , ப்ளைட் மூவ் ஆகறதுக்கு முன் ரஷ்மியே கால் பண்ணுவா , நீங்க சாப்பிடுங்க .. " என்ச்சொல்லிவிட்டு பாலாவின் கையில் காபியைத் தந்தவர் ,
" பாலா இது யார் தெரியுதா ? " , என வினயைக் காட்டிக் கேட்க , பாலா யார் என கேள்வியாய் நோக்கினான்

ஜெயந்தி , " இது சக்திவேல் அண்ணா பையன் வினய் " எனக் கூற ,

பாலா தெளிந்தவனாய் " ஓ சரி சரி நான் , வினய் சின்னப்பையனா இருக்கும் போது பார்த்தது .." என்று கூறி , " அம்மா அப்பா எல்லாரும் நல்லா இருக்காங்களா? " எனக்கேட்டுக்கொண்டிருககும் போது ஜீவி ஜெயந்தியைத்தேடி அங்கே வர , வினயோ , பாலா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் பொருட்டு , " ஹம் அம்மா அப்பா எல்லாரும் நல்லா இருக்காங்ண்ணா என்று கொங்கு தமிழ் மொழிய ...

" செந்தூரன் , வினயிடம் ரகசியமாக " அதுசரி அண்ணாவா ? இது யார்தெரியுமா ? ஜீவியோட அப்பா , நீ அண்ணானு கூப்பிடறத ஜீவி பார்த்துட்டு உன்ன சித்தப்பான்னு கூப்பிட்ருவா பார்த்துக்க .. " எனக்கூற ...

" அடப்பாவி அதுக்காக முன்னப்பின்ன தெரியாத மனுசன பார்த்தவுடன எப்படி மாமான்னு கூப்பிடுவது ? பார்த்தா சின்னவயசா வேற இருக்காரு ... என்றவன் , "ஆனா ஜீவி நம்மள சித்தப்பான்னு கூப்பிடறதுக்கு , நம்மளே மாமான்னு கூப்பிடுவோம் என்று நினைத்து , பட்டென்று பாலாவிடம் " மாமா பிஸ்னஸ்லா எப்படி போயிட்ருக்கு எனக் கேட்க ,

வினயின் திடீரெனற அந்த மாமா என்ற அழைப்பின் அதிர்ச்சியில் காபி அருந்திக்கொண்டிருந்த பாலவுக்கு புரையேற ... ஜீவி ,
" அய்யோ டாடி என்னாச்சு " எனக்கூறி தன் தந்தையின் தலையில் தட்டிவிட்டு , வினயை வினோதமாய்ப்பார்த்தாள் ,
அதைப்பார்த்த செந்தூரன் , வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு , டேய் நீ யாரையும் ஒழுங்கா காப்பி குடிக்க விடமாட்டியா ? எனக்கேட்க , வினயோ , ஏன் உங்க யாருக்கும் காபி கூட ஒழுங்க குடிக்கத்தெரியாதா? என அவன் காதருகே மெதுவாய் பதில் கேள்வி கேட்டுவிட்டு சாப்பிட ஆயத்தமாக ..

அங்கை வந்த ஆகாஷ் வினயை ஒரு நிமிடம் என்று அழைக்க ...

செந்தூரன் ஆகாஷிடம் ,
" மாமா வினய் சாப்பிட்டு வரட்டும் வாங்க நீங்களும் சாப்பிடலாம் " எனக்கூற , ஜெயந்தியும் , ஆமா ஆகாஷ் , வினய் இப்பத்தான் சாப்பிட உர்க்கார்ந்தான் சாப்பிட்டு வரட்டுமே , நீங்களும் வந்து சாப்பிடுங்க எனக்கூற ,

" இல்ல அத்தை ஒரு அர்ஜன்ட் வொர்க் அதுதான் " எனக்கூற ,

வினயோ , " நீங்க வாங்க மாம்ஸ் நம்ம போலாம் " , என்று ஆகாஷைப் பின்தொடர்ந்தான் .

சாப்பிடாமல் எழுந்து சென்ற வினயைப் பார்த்தவன்னம் செந்தூ யோசனையில் இருந்தான் " பாவம் வினய் , சாப்பிட வந்தவன ஆகாஷ் மாமா ஏன் எழுப்பனும் , சாப்பிடாமக்கூட பார்க்கின்ற அளவுக்கு அப்படி என்ன அர்ஜன்ட் வொர்க் இருக்கப்போகுது , எனறவாறு செந்தூ யோசனையோடு தன் இலையில் மீது கிண்ணத்தில் இருந்த பால்பனியாரத்தை ஸ்பூனால் பாலில் அலைக்கழித்த வண்ணம் இருந்தவன் , " செந்தூ " என்ற பாலாவின் அழைப்பில் நிமிர்ந்தான் ,

பாலா செந்தூவிடம் , " என்ன செந்து சாப்பிடாமக்கூட அப்படி என்ன யோசனை " என்று கேட்டுக்கொண்டிருக்க ... பாலாவின் அலைபேசிக்கு ஜெயராம் அழைக்க , "சரி செந்து நீ சாப்பிடு , மாமா கால் பண்றாரு , நான் என்னனு பார்கிறேன் " என்று கிளம்பியவனின் பின்னால் சென்ற ஜீவியை ஜெயந்தி மறித்து , " ஜீவிமா நீ சாப்பிடாம எங்க போற ? வா வந்து சாப்பிடு " , என்று அமரவைத்து , சாப்பிடசொல்லி விட்டு வேறு வேலைப் பார்க்க அவர் சென்றுவிட .. அந்த டைனிங்ஹாலில் ஜீவியும் செந்துவும் மட்டுமே இருந்தனர் ,


செந்தூரன் ஜீயிடம் , " ஜீவிமா இப்போ ஆகாஷ் மாமாகூட போனான்ல , மார்னிங் கூட என் ரூம்ல இருந்தானே , அவன் தான் வினய் , நான் அன்றைக்கு உன்னிடம் வினயப் பத்தி கேட்டேனே ... நீ என்ன முடிவு எடுத்திருக்க ... ஜீவி " , என்றான் .

" தெரில மாமா , நீங்க டாடிட்ட கேளுங்க , மேரேஜ் விஷயமா டாடி என்ன சொல்றாங்களோ அதுதான் என்னோட முடிவும் " என்றாள் .

" ஹம் கரக்ட் , கண்டிப்பா மாமா இந்த மேரேஜ்கு சம்மதம் சொல்வாங்க ... ஏன்னா இந்த மேரேஜ் விஷயத்தை கைல எடுக்கப் போறது உங்க ஜெயராம் மாமா , அப்பா ஒரு விஷயம் எடுத்தா அத கண்டிப்பா முடிப்பாங்க , அப்புறம் அப்பா சொல்லி மாமா மறுக்கமாட்டாங்க ... சோ இது பெரியவங்களோட சந்தோஷமா மட்டும் இருந்திடக்கூடாது , இதுல உன்னோட மனப்பூர்வமான சம்மதம் வேணும் அதனால்தான் உன்னிடம் நான் மேரேஜ் விஷயத்த பத்தி பேசினேன் , நீ கவலை படாத ஜுவிமா , வினய் உன்ன நல்லா பார்த்துப்பான் " , என்றவன் ,
" ஏன்டா ஒரு மாதிரி டல்லாவே இருக்க " எனக் கேட்க ,


ஜீவி , " இல்ல மாமா நான் நல்லாத்தான் இருக்கேன் " என்று சொன்னாலும் , ' செந்துவைப்பற்றிய தன் விருப்பத்தை மாற்ற நினைக்கும் மனதின் பரிதவிப்பும் கவலையும் வினயைப் பற்றி பேசும்போது ஏனோ இன்னும் அதிகமாகிறது , எங்கே தன் முகமே இவனிடம் தன்னை குற்றவாளி ஆக்கிவிடுமோ ? .. நான் விரும்பியது தெரிந்தால் செந்து மாமா என்னை பற்றி என்ன நினைப்பாங்க ' என மனதோடு தவித்துக் கொண்டிருந்தாள்.

" சரி ஜீவிமா இந்தா " என்று செந்து தன் இலையில் இருந்த இனிப்பை ஜீவிக்கு ஊட்ட எத்தனிக்க ... ஜீவியோ , இல்லமாமா ஸ்வீட்லாம் வேணாம் , என்றாள் .

ப்ளீஸ் ஜீவிமா , வேணான்னு சொல்லாத ... என்றவனின் குரல் உணர்ச்சிகள் அழுத்தப்பட்டு அமைதியாய் ஒலித்தது ... ,
" இந்த வாய்ப்பு இனி எனக்குக் கிடைக்குமான்னு தெரியாது , இனி நான் உனக்கு எப்போ இப்படி ஊட்டிவிடுவேன்னும் தெரியாது , ரஷ்மியா இருந்தாலும் சரி , வினயா இருந்தாலும் சரி அவங்க நான் உன்மேல வச்சிருக்க அன்பை எப்படிப் பார்பாங்கன்னும் தெரியாது , என்னோட ஜீவிமாக்கு நான் உரிமையோட ஊட்டிவிட நினைக்கிறேன் ", என்றவனின் கண்களல் ததும்பி அன்பு தண்ணீராக மாறாமல் இருக்க பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தது ,

அதைப் பார்த்தவளின் மனம் பரிதவித்தது , கண்கள் குளமாக ஆயத்தமானது , எனினும் தன் கண்ணீரைக் கட்டுப்படுத்தியவள் ,

" என்ன மாமா நீங்க எனக்கு ஊட்டித்தான விடனும் ? இதுக்கு ஏன் ஃபீல் பண்றீங்க ... ஊட்டிவிடுங்க நான்
சாப்பிடுகிறேன் ", என்று அவன் ஊட்டிவிட்ட இனிப்பை உண்டவள் , அவள் இலையில் இருந்த இனிப்பை எடுத்து அவனுக்கு ஊட்டி விட்டு , "மாமா உங்க மேரேஜ் லைஃப் ஹேப்பியா இருக்கனும் , நீங்க எப்பவும் சந்தோஷமா இருக்கனும் , சந்தோஷமா மட்டும்தான் இருக்கனும் ..." என்றாள் .

அங்கே வந்த அஸ்வதி , " அண்ணா உங்களுக்காக காமிராமேன் வெய்டிங் .... நேத்து நைட்டும் ஃபோட்டா ஷூட் , வீடியோ ஷூட்லாம் , வேணாம்னு சொல்லீட்டீங்களாம் , சோ இப்போ உங்கள வச்சுசெய்யப் போறாங்களாம் , கார்டன்ல வெயிட் பண்ணீட்டு இருக்காங்க , நீங்க சோலோ பர்ஃபாமன்ஸ்தானா ? அண்ணி ஷூட்டிங்கு வரமாட்டாங்களான்னு , கேட்கிறாங்க , நேத்து அண்ணி வராததால மெஹந்தி ஃபங்சன் கூட மிஸ்ஸிங் , இப்போ பியூட்டீசியன் வந்திருக்காங்க , ஆனா அண்ணி எப்போ வருவாங்க ? " , என படபடவென மூச்சுவிடவும் மறந்துபேசிக் கொண்டிருந்தாள் ,

" ஹம் அண்ணி 2.45 க்கு இங்க இருப்பாங்க .. அதுவரைக்கும் அண்ணன் சோலோ தான் " , என்றான் .

" சரிண்ணா நீங்க கார்டன் போங்க உங்களோட காஸ்டியூம் எல்லாம் உங்க ஃப்ரன்ட் தினேஷ் அண்ணாவும் நிர்மல்அண்ணாவும் கார்டனுக்கு கொண்டு போயிருக்காங்க " என்றவளிடம் , " அவனுக இரண்டுபேரும் எப்போ வந்தானுங்க ? ... " எனக்கேட்க ,

" இப்பத்தான் வந்தாங்க .." என்றாள் .

ஜெயம் இல்லத்தில் வாசலில் நின்ற முகூர்த்தக்கால் , நுழைவாயில் தோரணங்கள் , பன்னீர் வரவேற்ப்புகள் , சந்தனம் , குங்குமம் , சடங்கு சம்பிரதாயம் , பொண்ணு மாப்பிள்ளை , புடவை , பூ , நகை என்று காற்றில் கூட திருமண வாசம் வீசியது ...

ஜெயராம் , ஈவன்ட் மானேஜ்மென்ட் நபரின் மூலம் ரிஷப்சனுக்கு அழைக்கப்பட்டவர்களின் லிஸ்டில் நெருங்கிய உறவுகள் தவிர்த்து மற்ற அனைவருக்கும் , ரிஷப்சன் கேன்சல் செய்யப்பட்டது குறித்து செய்தியையும், அதற்க்கான சாரி மெசேஜையும் , கம்பனி வாட்ஸ் அப் குரூப் மற்றும் நட்பு வட்டங்களின் வாட்ஸ்அப்பிற்கும் , அனுப்பச்செய்தார் , ஃபோனில் தெரிவிக்க வேண்டியவர்களுக்கும் தெரியப்படுத்திக்கொண்டிருந்தார் , ஈவ்னிங் ப்ரோக்ராம் அனைத்தும் கேன்சல் செய்ய சொல்லிஇருந்தார் ,

செந்தூவைக் கெஸ்ட்அவுசிற்க்கு , வரச்சொல்லி விட்டு அவர் அங்கே காத்திருந்தார் , மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் செந்து வந்த முப்பது நிமிடம் கழித்து வரச்செய்திருந்தார் ,

ஜெயராம் , செந்துவை அருகில் அமரச்செய்து , செந்தூவிடம் , " நீ ரஷ்மிக்கு கால் பண்ணியா ? என்றார் ,

" ஆமா டாடி மாணிங் பண்ணினேன் " என்றான் ,

" மாணிங் எத்தன மணிக்கு ? " என்றவரிடம்

" ஒரு 6.30 இருக்கும் .. ஏன் டாடி ? என பதில் கேள்வி கேட்க ,

" ஹம் ...என்றவர் , மகனின் கரத்தை பிடித்து தன் கரங்களுக்குள் வைத்து , செந்துவிடம் பேச ஆரம்பித்தார் , ரஷ்மி வீட்டில் ஒரு ப்ராப்ளம் பா , ரஷ்மீ அக்காவிற்க்கும் , மாமாவிற்கும் ஆக்சிடன்ட் ஆகிடுச்சு " என்றார்.

" டாடி என்ன சொல்றீங்க ... " என்று அதிர்ந்தவனிடம் விஷயம் முழுதையும் சொல்லி முடித்தார் ,

அவர் சொல்லி முடித்த அடுத்த நொடி , செந்து தன் ஃப்போனைத் தேட , அது இல்லை யெனவும் ,ஜெயராம் அவரது ஃபோனைத் தந்தார் , ரஷ்மிக்கு அழைத்தான் .

ரஷ்மி எதிர் முனையில் செந்துவின் குரலைக் கேட்பதற்க்கு முன்பே ,
" ப்ளீஸ் அங்கிள் இந்த நிலமையில இவங்கள விட்டுட்டு என்னால என்னோட மேரேஜ் நினைச்சுக்கூடப் பார்க்க முடியாது தயவு செஞ்சு கம்பல் பண்ணாதீங்க ... " என்றாள் ..

செந்து அவள் பேசிமுடிக்கும் வரைக் காத்திருந்தான் ... ஜெயராம் எழுந்து சற்று தூரம் நடந்து வெளியே நின்றிருந்தார் ,

" ரஷ்மீ .. என்ற செந்தூரனின் அழைப்பில் அமைதிகாத்தாள் , ரஷ்மி அங்கிள் இல்ல , செந்து தான் பேசுறேன் சொல்லுடா ... இப்போ ராகுல் அண்ணாக்கு எப்படி இருக்கு .. அண்ணி எப்படி இருக்காங்க ? " என்றவனிடம்

" ராகுல் மாமா இன்னும் கிரிட்டிக்கல் பொஷிசன்லதான் இருக்காங்க , மைல்ட் ஹார்ட் அட்டேக் வேற ... தலையிலும் அடிபட்ருக்கு , தலையில் ப்ளீட் ஆனதால ஆப்ரேஷன் பண்ணனும்னு நியுரோ சர்ஜன் சொல்லிருக்காங்க .. அக்காவுக்கும் தலையில் அடிபட்ருக்கு , ஆன ஆப்ரேஷன் தேவையில்லைனு சொல்லீட்டாங்க .. ஒரு தடவ கண்விழிச்சாங்க , மறுபடியும் மயங்கீட்டாங்க " என்றாள் .

" ஓகே டா , சரி நான் கிளம்பி வாரேன் " என்றவனிடம் , " இல்ல செந்து அவசியம் இல்ல , நானே மேனேஜ்
பண்ணிக்குவேன் " என்றாள் .

" ஏன் ரஷ்மி , நான் ஏன் வரக்கூடாது ? " எனக்கேட்க ,

" இல்ல செந்து ப்ளீஸ் வேணாம் நான் நல்லா தெளிவா யோசிச்சுத்தான் சொல்றேன் " என்றவள் ஃபோனைக் கட் செய்ததாள் ,

மீண்டும் அழைத்தான் ,

" ப்ளீஸ் செந்து ஏற்கனவே என்னால உங்களுக்கு ப்ராப்ளம் , அங்கிள் எப்படியாவது , இந்தக் கல்யாணத்தை நடத்தியே தீரனும்னு சொல்றார் , நான் வேணாம்னு சொன்னேன் , மேரேஜ் நின்றுபோன விஷயத்தில் எல்லாரும் அப்சட்டா இருப்பாங்க நீ அவங்கள சமாதனப்படுத்து செந்து , நீ இங்க வந்தா நான் உன்கூடவே வரனும்னு தோணும் , உன்கூடவே இருக்கனும்னு தோணும் , ப்ளீஸ் நீ அங்கேயே இரு செந்து , என்றவளின் குரல் உடைந்திருந்தது , செந்து ப்ளீஸ் சொன்னாப் புரிஞ்சுக்கோ ...
நான் மேரைஜ் நிறுத்தச் சொன்னதால ... அப்பா என் மேல் கோபமா இருக்கார் , எந்த சூழ்நிலையிலும் இந்த மேரேஜ் நிற்ககூடாது நீ திரூப்பூருக்குப் போன்னு சொன்னார் , அப்புறம் நீ இங்க வந்தீன்னா உன்னோட அனுப்பிச்சுடுவார் , நான் அக்காவையும் மாமாவையும் விட்டுட்டு வர்ற நிலமையில் இல்லை செந்து இங்க இவங்களுக்கு என்னாகுமோன்னு ஒவ்வொரு நொடியும் பயமா இருக்கு , இப்போ மேரேஜ பத்தி யோசிக்ககூட முடியல , சாரி செந்து நீ அத்தை மாமா எல்லோரையும் சமாதானப்படுத்து , நீ இங்க வரவேண்டாம் " என்று ஃபோனைவைத்தாள் .

மீண்டும் அழைத்தான் , அவனுக்குள் கோபம் குடிகொண்டது , " சொல்லு ரஷ்மி நான் இப்போ மட்டும் வர வேண்டாமா ? இல்ல எப்பொழுதுமே வரவேண்டாமா ? " .. என்றான்

எதிர் முனையில் பதிலின்றிப் போகவே ஃபோனை சோபாமீது விசிறி எரிந்து விட்டு ,பின் தலை கோதியவாறு , கண்கள் மூடி தன்னை நிதானித்துக் கொண்டு , உள்ளே வந்த ஜெயராமிடம் , இப்போ என்னடாடி பன்றது ? என்றான் கவலை தோய்த்த குரலில் ,

ஜெயராம் , " நானும் ரஷ்மியிடம் எவ்ளவோ சொல்லிப் பார்த்துட்டேன் , கேட்கல , ஹம் ... கொஞ்சம் பொறுமையா இரு செந்து , வினயும் ஆகாஷிம் போயிருக்காங்க , ஆகாஷ் கண்டிப்பா ரஷ்மிய கன்வின்ஸ் பண்ணி கூட்டிட்டு வருவார் " , என்றார் .

" ஏன் டாடி இத ஆகாஷ்மாமாட்ட சொன்னப்பவே என்னிடமும் சொல்லி இருக்கலாம்ல , நானும் கொல்கட்டா போயிருப்பேன்ல டாடி " , என்றான் ,

நீ என்ன சொல்ற , நீ யும் அங்க போய்டா ? என்ன பண்றது மேரேஜ நிறுத்தனும்னு நினைக்கிறியா ? நீ நினைக்கிற மாதிரி மேரேஜ்ங்குறது சின்ன விஷயம் இல்ல , நினைச்சவுடன கேன்சல் பண்ணுவதற்க்கு ,
மேரேஜ் பண்ணாம ரஷ்மி அங்க ஹாஸ்பிட்டல்ல இருக்கதால எதுவும் மாறிடாது , அங்க அவங்க குணமாவதற்க்கு , தேவை டாக்டர்ஸ்தானே தவிர ரஷ்மி இல்லை , ரஷ்மி ஜஸ்ட் இங்க ஒரு மணிநேரம் ஸ்பென் பண்ணா உங்க ரெண்டு பேரு மேரேஜ் ம் முடிஞ்சிடும் , ட்ரேவல் டைம் ஜஸ்ட் ரஷ்மி தூங்குற நேரம் மாதிரிதான ,உங்க மேரேஜ் நின்னுச்சுன்னா பாதிக்கப்படப்போறது நீங்க இரண்டு பேரும்தான் ,திரும்பவும் அவ்வளவு சீக்கிரம் இந்த மேரேஜ் நடந்திரும்னு ,எந்த உத்திரவாதமும் இல்ல .. " என்றவர் மேலும் தொடர்ந்தார் ,

" ஏற்கனவே , ஈவ்னிங் ப்ரோக்ராம் எல்லாம் கேன்சல் பண்ணீட்டேன் , அழைச்சிருந்தவுங்க எல்லோருக்கும் கேன்சல் மெஜேச் அனுப்பிருக்கேன் , நாளைக்கு மாணிங் எங்கேஜ்மன்ட் கூட கேன்சல் பண்ணியாச்சு ,
ஈசியா கேன்சல் பண்ணிட்டேன் , இனி உங்க தாத்தா இரண்டு பேருக்கும் பாட்டிக்கும் நான் என்ன பதில் சொல்லட்டும் , கேட்கறவங்களுக்கு தகுந்த காரணம் சொல்லி சாமளிக்கனும் , இப்போ போன்ல எல்லாரோட நம்பரையும் ப்ளாக் பண்ணிருக்கேன் , முகூர்த்தம் மட்டும் கேன்சல் பண்ணல என்றவரின் குரல் சற்று உடையத்தான் செய்தது , எப்படியும் முகூர்தத்திற்க்கு ரஷ்மி வந்திரும்னு நம்புறேன் , என்றார் .

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro