அனிச்சம் பூ 41

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

நிர்மல் " சரி செந்து நான் மாணிங் எர்லியா கிளம்பனும் , அதோட அப்புறம் பிசி ஆகிட்டா பேச டைம் கிடைக்காது , அதான் இங்கவந்து உன்னை டிஸ்டர்ப் பண்ணிடேன் சாரி டா , நான் மாணிங் கிளம்பும் போது நீ தூக்கத்தில் இருப்ப , அந்த டைம்ல நான் டிஸ்டர்ப் பண்ண விரும்பல செந்து , குட்நைட் , நெக்ஸ்ட் சன்டே ஃபிரி ஆகிட்டு வாரேன் .. " என்று உறங்க அறைக்குச் செல்ல , செந்துவின் நினைவுகளோ ரஷ்மியை நினைத்து பின்னோக்கி பயணிக்க ஆரம்பித்தது ,

அன்பில் எனையும் மிஞ்சி நின்றாய்
பூமுகம் காட்டிக் கொஞ்சி நின்றாய்
பூகம்பம் அதை பரிசளித்தே ஏனோ
புயல் வந்ததாய் பிரிந்து சென்றாய்
புதிராய் என் வாழ்வில் வந்துவிட்டு
புலம்பி ஏனோ தவிக்க விட்டாய் !

ஆம் நிர்மல் கூறுவது போல் என்காதல் இரக்கத்தில் பிறந்தது தான் , அதற்க்காக உன் துன்பத்தில் , நானே அரக்கத்னமாய் ஒதுங்கி செல்லத்தான் வேண்டுமோ ? உன்னைத் தனியாக தவிக்கவிடவா என் அன்பை காதலாக்கினேன் , இப்பொழுது நான் உன்னவனாக இல்லாமல் இருக்கலாம் , ஆனால் உன் நட்பெனும் ஆறுதலாய் , நான் வருதல் ஆகாதா ? ..
ஏன் பெண்ணே எனை விட்டு விலகி நின்றாய் ... ஆறுதல் கூறக்கூட நெருங்கவிடாமல் நீ இருக்க , விலகவும் முடியாமல் நான் இருக்க ... திருமணத்தை நிராகரித்தது உன் தவறாக இருந்தாலும் , அந்த முடிவும் உன் சுயநலத்திற்க்காய் எடுக்கவில்லையே ... எத்துனை வலியைத் தாங்கி , இத்துனை இன்பத்தை தானே உதரியிருப்பாய் ...

உன் நினைவுகள் என்னைக் குத்திக் கூறு போடுகிறதே !.. என்று தன்னுள் புலம்பித் தவிப்பின் உச்சம் தொட்டான் செந்து , அவளின் நினைவுகள் இவனுள் பிரளயத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தது ,

இரவு நடுநிசி , யாமம் , வைகறை என்று நிறம் மாறிக்கொண்டிருக்கும் நிமிடங்களில் ,
செந்து எத்துனை மணித்துளிகளைக் கடந்து அங்கே நிற்கின்றான் என அவன் அறியவில்லை ,
இதோ வைகறை விடியக் காத்திருந்தது , ஆனாலும் செந்துவின் கால் வேருன்றியதைப் போல அசையாது நிற்கிறது , அவன் விழிகளோ இதோ இப்பொழுதும் சாலையை வெறித்த வன்னமே இருக்கிறது , ஆனால் அவன் நினைவுகள் மட்டும் நீண்டு கொண்டிருக்கிறது ...

நிர்மல் அதிகாலை துயில் கலைந்து , அறையில் செந்து இல்லாதது கண்டு , ஒரு வேளை ஹாலில் சோபாவில் உறங்குகிறானோ ? என்று யோசித்துவிட்டு , குளித்துக் கிளம்பி அறையின் ஹால் பகுதிக்கு வந்து பாரக்க அங்கேயும் அவனில்லாதது கண்டு அதிர்ந்து , வினயை எழுப்பி .. " டேய் செந்து எங்கடா ? உன்னிடம் சொல்லிவிட்டு எங்கேயும் சென்றானா ? " எனக் கேட்க .. " இல்ல நிர்மா நைட் தூங்கியது , நீ எழுப்பவும் தான் எழுந்தேன் " என வினய் கூற .. தூக்கக் கலக்கத்தில் இருந்த தினேசோ " அவன் கொல்கட்டா போயிருந்தாலும் போயிருப்பான்டா நீங்க வேற .." என்று முனங்க ... நிர்மலும் வினயும் , ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள ,

நிர்மல் , " ஒருவேளை வெளில கிடக்கிற சேர்ல உட்காந்தபடி தூங்கீட்டானோ ?..
என்று அறையை விட்டு வெளியே வந்து , நீண்ட வராண்டாவைக் கடந்து , அந்தப் பார்டி பெரிய ஹாலை பார்வையிட்டவன் அங்கும் அவனில்லாதது கண்டு , முற்றத்தை நோக்கினான் , இரவு அவன் நின்ற இடத்திலையே இப்பொழுதும் நின்றுகொண்டிருக்க கண்டவன் அதிர்ந்தான் , அவன் அருகில் சென்று தோளைப் பற்ற ... திரும்பியவன் கண்கள் சிவந்து கலங்கி இருந்தது ...

https://www.youtube.com/watch?v=2yGuHvJDBSc

" என்ன செந்து நைட்டு நீ தூங்கலையா ? ரூமுக்கு வந்தியா ? வரலயா ? எனக்கேட்டவனிடம் " இல்ல தூக்கம் வரல .. இங்கதான் இருக்கேன் " என்றான், துணுக்குற்று ஏய் உனக்கு என்னடா ஆச்சு ? இப்படி விடிய விடிய ஒரே இடத்தில நின்னுட்டு இருக்க .. என்ற நிர்மலுக்குப் பதில் தாராது மீண்டும் சாலையை வெறிக்க ... அதைப் பார்த்த நிர்மலுக்கு கலக்கமும் கோபமும் ஒருசேர
" முதல்ல நீ ரூமுக்கு வாடா , என்று உலுக்கியவனின் கையை எடுத்துவிட்ட செந்தூவின் கண்களில் இருந்து நீர்துளிகள் சிதறியதைக் கண்டு பதறிய நிர்மல் , செந்துவின் கரங்களை ஆதறவாய்ப் பற்ற , அவனோ நிர்மலின் தோளில் தஞ்சம் பெற , அவனை ஆதரவாய் அனணத்தவனின் சிந்தனை கவலை சுமந்தது ,

" விடு செந்து ,அந்தப் பொண்ணுதான மேரேஜ் வேணாம்னு சொன்னுச்சு , இதுல உன்னோட தப்பு என்ன இருக்கு " ,

"இல்ல நிர்மா , அவ என்னோட வாழனும் அவ்வளவு ஆசை வச்சிருந்தாடா , அவளோட சூழ்நிலை , வேறு வழி தெரியாமத்தான் இப்படி முடிவெடுத்துட்டா , அவளைப் பார்த்து மன்னிப்பு கேட்கனும் , அவளுக்கு அட்லிஸ்ட் ஒரு ஃப்ரன்டாகவாவது துணை நிற்கனும் " என்றவனிடம் ,
நிர்மலோ , இவன் மனம் நாம் , சொல்லுவதை ஏற்றுக் கொள்ளும் நிலைமையில் இல்லை , என நினைத்து
" சரி டா உனக்கு என்ன தோனுதோ அப்படியே செய்யலாம் " என்றான் ,
செந்துவைத்தேடி அங்கே வந்த தினேஷ் கேள்வியாய் இருவரையும் பார்க்க , அறைக்குச் சென்ற செந்து குளிக்கச் செல்ல ,

நிர்மல் , தினேஷிடமும் , வினயிடமும் , " டேய் நேத்து நைட்ல இருந்து சிலை மாதிரி ஒரே இடத்திலேயே நின்று ரோட்டை வெறிச்சு பார்த்துட்டு இருக்கான்டா " எனக் கூற ,
மற்ற இருவரும் திகைப்பை விழியில் ஏந்த , வினய் தலையில் கைவைத்து உட்கார்ந்தான் , ஏதோ மேரேஜ் நிற்காம எப்படியோ நடந்துருச்சுன்னு நினைச்சா ... இவன் ஏன்டா இப்படி இருக்கான் , இவன நெனச்சா கவலையா இருக்குடா ..

நிர்மல் " ரஷ்மின்னு ரஷ்மின்னு புலம்புறான்டா .. தாங்கலடா ..." எனக்கூற ..

வினய் ," இல்லடா நிஜமாவே அந்தப் பொண்ணு பாவம்தான்டா
" செந்துவ மிஸ் பன்னிட்டா
ஹாஸ்பிட்டல்ல , ராகுல் உயிர் பிழைப்பாரா ? மாட்டாரான்னு , அவங்க அக்கா வாழ்கையை நினைச்சு வேற .. ஒவ்வொரு நிமிஷமும் பயந்து சாகுறாடா ..." என்றான் ,

நிர்மல் , " சரி வினய் செந்து தூங்கி மூனு நாள் இருக்கும் , அவன் குளிச்சிட்டு வந்து ரெஸ்ட் எடுக்கட்டும் , நான் அவன் குளிச்சுட்டு வந்தவுடன் கிளம்புகிறேன் , நீ அவனப் பார்த்துக்கோ , வேற எதுவும்னா எனக்குக்கால் பண்ணு , நான் ஆஃபீஸ் விட்டு ஈவ்னிங் மறுபடியும் வந்து பார்க்கிறேன் . கொல்கட்டா போற விஷயமா நெக்ஸ்ட் வீக் பேசலாம் ..." என்று பேசிக்கொண்டிருந்த நிர்மலை ... வினய் வெற்றுப் பார்வை பார்த்துக் கொண்டிருக்க ,

நிர்மலோ " என்னடா நான் பேசிட்டே இருக்கேன் நீ எனக்கென்னனு பார்த்துட்டு இருக்க ? .. என்று வினயை முறைக்க ...

வினயோ , " பின்ன என்னடா , இப்பதான் ஜீவி அப்பா கால் பன்னி , 9 மணிக்கு குலசாமி கோயில்ல இருக்கனும் செந்துவோட வந்திருங்கன்னு " சொல்றாரு , நீ என்னடான்னா செந்து தூங்கி மூனு நாள் ஆச்சுன்னு கதை
சொல்ற ... " என்றான் ,

அதைக் கேட்ட நிர்மலுக்கு ஏனோ செந்துவின் குடும்பம் மீது கோபம் எட்டிப் பார்த்தது " என்னடா இது இவங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்காங்க ... நடந்தது ஒரு கட்டாயக் கல்யாணம் , இதுல முறையா எல்லா விஷயமும் நடக்கனும்னா எப்படிடா ? இவங்க எல்லாரும் நல்லா ப்ளான் பண்ணி , வச்சு செய்றாங்கடா , நேற்று ஜெயராம் அங்கிள் கன்ட்ரோல்ல மேரேஜ் நடந்தது , அப்புறம் மேரேஜ் முடிஞ்சதும் அவங்க சித்தப்பா கார்த்திக் ஃபாலோ பண்ணி செந்துவப் பத்தி கேட்டுட்டு இருந்தாரு , அவங்க ஆசைப்படி அவனும் மேரேஜ் பண்ணிட்டான் , இதுக்கும் மேலையும் ஜெயராம் அங்கிளும் , கார்த்திக் அங்கிளும் சொல்றத கேட்கமாட்டன்னு முடிவு பண்ணி , இப்போ ஜீவி அப்பாவைக் கலத்தில் இறக்கிட்டாங்க , கண்டிப்பா அவர் சொல்லி செந்து மறுக்க முடியாதுன்னு இப்போ அவர யூஸ் பன்றாங்க ... ச்ச பாவம் டா அவன் , நேற்று கல்யாணம் நடந்ததால தூங்கல , அதற்கும் முன்தினம் கல்யாணம் நடக்குமா ? நடக்காதா? ன்னு தவிப்புல தூங்கல , அதற்க்கும் முதல்நாள் ரஷ்மியோட ஃபோன் பேசிட்டு தூங்கி இருக்க மாட்டான் ...
ஆனா ஒன்னு குலசாமி கோவில்ல போய் அவங்க பொங்கல் வைக்கிறாங்களோ இல்லையோ , ஆனா இவன் கண்டிப்பா பொங்க வச்சுருவான்டா , செம ப்ரஸ்ஸர்ல இருக்கான் , எப்போ வெடிப்பான்னு தெரியல , வினய் நீ அவன் கூட இருந்து பார்த்துக்க "என்றான் நிர்மல் .

வினயோ "நான் எப்படா உங்கிட்ட சொன்னேன் , செந்துவோட போறேன்னு , நான் இன்றைக்கு இங்கதான் இருக்கப் போறேன் ... நான் எங்கையும் போகலை" என்றான்.

"பின்ன , நீதான சொன்ன ஜீவி அப்பா வரச்சொன்னாங்கன்னு , "

" ஹம்... அவரு சொன்னா அவரு மருமகன் போகட்டும் , நான் போகலை , நீ போய்டு வா செந்துகூட ... " என்றான் வினய் ,

நிர்மலோ " நான் இப்போ கிளம்பனும் , எனக்கு வொர்க் இருக்கு வினய் , அதுவுமில்லாம உனக்கே தெரியும் பாப்பா பிறந்து பத்து நாள்தான் ஆகுது ... நான் கோவிலுக்கு வரக்கூடாது ... முப்பது நாள் ஆனாதான் கோவிலுக்குப்
போகலாம் "

"ஹம் ... அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை நீ கோவிலுக்கு உள்ள போகவேண்டாம் , வெளிமண்டபத்தில் இருந்துக்க , செந்துவுக்கும் எங்களுக்கும் ஒரே குலசாமிதான் , நோ ப்ராப்ளம் எங்கசாமி என்னை மாதிரித்தின் அதெல்லாம் அட்ஜஸ் பண்ணிக்கும் ... " என்றான் வினய் ,

" நான் போறது இருக்கம்டும் நீ ஏன்டா போக மாட்டேன்ற "

"ப்ளீஸ் நிர்மா புரிஞ்சிக்காடா ..."

" விஷயம் என்னனு சொன்னாதான புரிஞ்சுக்க முடியும் , நேற்று அப்படித்தான் செந்துவும் ஜீவியும் வீட்டுக்குள்ள இருந்தாங்க நீ அவங்க பக்கதிலையே போகலை , ஜஸ்ட் ஒரு ஃபோட்டோக்கு கூட நிற்கல , வாசல்லையே உட்கார்நதுட்டு எந்திருச்சு வந்துட்ட ... என்னடா பிரச்சன உனக்கு ? செந்து வீட்ல நீ செல்லப் பிள்ளையாச்சே ! ...நீ ஏன்ட இப்படி பண்ற ... " என்றான் நிர்மல் .

" அதெல்லாம் ஒன்னும் இல்லடா எனக்கு டையர்டா இருக்கு ... வேற ஒன்னும் இல்லை , என்றவனை , இதற்கும் மேலும் , கேட்டு இம்சிக்க விரும்பாமல் அவனைக் கேள்வியாய் பார்த்துவிட்டு தனது மொபலை எடுத்து , தனது P A விற்க்கு அழைத்து நீங்க ஆஃபீஸ் போய்டு , ப்ரொடக்சன் அப்டேட்டும் , நீயு ஆர்டரோட ப்ராசஸ் ப்ளேனும் வாட்ஸ் அப் பண்ணுங்க , என்று கூறி விட்டு , செந்துவுடன் செல்ல ஆயத்தமானான் ..

குளித்து விட்டு வந்த செந்துவிடம் பாலா கால் பண்ணிய விஷயத்தைக் கூற .. செந்து , தலையை பின் சாய்த்தபடி விழி மூடி பொறுமை வேண்டி மூளையிடம் யாசித்துக் கொண்டு விழி திறந்து , சரி கிளம்புங்க போலாம் ... என்றவன், நிர்மா உனக்கு வேலை இருக்குன்னு சொன்னில்ல .. என்று யோசனையாய் நிர்மலைப் பார்க்க , நிர்மல்
" இல்லடா இன்றைக்கு ஆஃபீஸ் போகவில்லை உன்னோடுதான் வரப்போகிறேன் .. என்றதும் , சம்மதமாய் தலையாட்டியவன் , தினேஷையும் வினயையும் கிளம்புமாறு கூற , தினேசோ
" இல்லடா நாங்க ரூம்லையே இருக்கோம் நீங்க இரண்டுபேரும் போங்க " என்று கூற ,

தினேஷை முறைத்த செந்து , " ஒன்னு எங்க கூட வரனும் , இல்லையா போய் வேலையப் பார்கனும் , இரண்டும் இல்லாம இங்க இருந்து என்னடா பண்ணப்போறீங்க ... " எனக் கோபமாய்க் கேட்க ..

" தினேசோ , ஆஹா ஆரம்பிச்சிட்டான்டா , இன்றைக்கு இவனுக்கு இருக்க டென்சனுக்கு கொலை கூட பண்ணுவான் ... என்று நினைத்தவன் , " என்ன செந்து ! நீ வான்னு சொன்னா வரப்போறேன் ... இதுக்கெதுக்கு டென்சனாகுற ... கூல் மச்சி இப்பப் பாரு எவ்வளவு ஃபாஸ்டா கிளம்புறேன்னு ... என்று பாத்ரூமிற்க்கு விரைய ,

வினயோ , " சரி நீங்க மூணு பேரும் போங்க , நான் வீட்டுக்கு கிளம்புறேன் , எனக் கூற .. வினயை செந்து கோபத்தோடு , கேள்வியாய்ப் பார்க்க ,

வினய் " சரிடா இப்ப என்ன ? ... நானும் வாரேன் ... " என்று கிளம்ப ஆயத்தமானான்

ஜெயராம் குடும்பத்தின் குலதெய்வம் அழகிய ஆற்றங்கரையில் வீற்றிருந்தது , ஆற்றங்கறையில் மிதக்கும் தாமரைப் பூக்கள் ஆற்றங்கரையைச் சுற்றி ஊதாப்பூக்கள் , ஆற்றங்கறை படித்துறையில் மஞ்சள் நிறம் கொண்டு காற்றோடு கொஞ்சி விளையாடும் தங்க அரலி மலர்கள் , அரசமறித்தடியில் பிள்ளையார் , அருகே இருக்கும் தென்னந்தோப்பு , அங்கிருந்து தொலைவில் தெரியும் மேற்க்குத் தொடர்ச்சி மலைகள் என , இயற்க்கையின் வாசத்தோடு எழிலாக அமைந்திருந்தது கோவில் ...

அழகிய பட்டுப் புடவையில் பொழிவாக பூத்திருந்த மலரென வந்திரங்கிய , ஜீவியையும் அவளோடு , அழகாய்ச் செதுக்கிய ஆண் சிற்ப்பமாய் வந்த செந்தூரனையும் தென்றல் சாமரம் வீசி வரவேற்றது ...

கோவிலுக்குள் நுழைவதற்க்கு முன் அனைவரும் ஆற்றில் கால் நனைத்துவிட்டு பிறகே உள்ளே செல்ல வேண்டும் என்பதால் , அனைவரும் ஆற்றை நோக்கிப்போக , லீலாவதியோ

"முதல்ல பொண்ணு மாப்பிள்ளையும் போய் கால் நனைச்சுட்டு நிறைகுடம் கொண்டு வாங்க , பிறகு நாம் போய் கால் நனைக்கலாம் " எனக்கூற , செந்துவும் ஜீவியும் ஆற்றங்கரையில் கால் நனைக்கச் செல்ல , அங்கு , கால் நனைத்து திரும்பிய செந்து , ஜீவிகாவைப் பார்க்க , அவளின் கண்களோ அங்கிருந்த தாமரையிலும் சுற்றிலும் இருக்கும் ஊதாப்பூக்களின் மீதும் லயித்திருக்க , செந்து , ஆற்று நீரை கைகளில் ஏந்தி அவளின் முகத்தில் சிறிதாக இறைக்க , சில்லென்ற நீர்பட்டு சிலிர்த்த அவள் முகம் தூரலில் சிலிர்த்த தாமரை மொட்டு போல் இருந்தது செந்துவின் கண்களுக்கு .. அவள் நீரைத்துடைத்து விட்டு செந்துவைப் பார்க்க , அவன் புன்சிரிப்பில் இவளை பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் ,
அந்த புன்சிரிப்பில் சில நொடி கரைந்து பின் எழுந்தவளின் கண்களில் ஆச்சர்யம் நிறைந்தது , என் மீது கோபம் இல்லையா ? நேற்று முழுவதும் இறுக்கமான முகத்துடன் தானே இருந்தார் , என்று அவனின் மென்சிரிப்பில் மெய்சிலிர்த்தவள் , என்ன மாமா ? எனக் கேட்க ...

அவனோ " கால் நனைக்காம அங்க என்னடா பார்த்துட்டு இருக்க .." எனக் கேட்க ..
அது வந்து .. என்று ஆரம்பிக்க , " சரிடா நீ கையில் இருக்கும் சொம்பைக் கொடு " , என்று வாங்கி அவன் அதில் நீரை மொண்டான் , அவள் தன் புடவையை நீரில் நனையா வண்ணம் கைகளில் பற்றி , சற்றே உள்ளே இறங்கி நடந்து , கால்களை நினைத்தவள் , திரும்பி வர எத்தனித்து சிறிய பாறை போன்ற கல்லில் கால் பதித்து அடுத்த கல்லில் கால் பதிக்க போவதைப் பார்த்த செந்து " ஜீவி பாறைல கால் வைக்காத , என்று கூறி அருகில் வர , அவளோ அவன் சொல்லி முடிப்பதற்குள் அதில் கால் வைத்து வழுக்கி விழப் போக அருகில் வந்த செந்தூரன் விழாமல் தன்னோடு சாய்த்துக் கொள்ள , ஜீவியோ விழப்போகிறோம் என நினைத்து இறுக மூடிய கண்களை மெதுவாய்த் திறக்கவே ... அவள் செந்தூரனில் சாய்ந்து அவன் கரங்களுக்குள் இருந்ததை உணர்ந்த ஜீவிக்கோ இப்பொழுது இதயம் அதிரடியாய் துடிக்க , வழக்கம் போல அதிர்ந்த விழிகளால் அவனை அசரடித்தாள் , என்னாச்சு ஜீவிமா ? என்று பதறியவனின் கண்களின் கதிர் வீச்சில் இருக்கும் அன்பு அவளின் ஒவ்வொரு அனுவையும் அசைத்துப் பார்த்தது , " என்ன இது மீண்டும் இவன்பால் நான் ஈர்க்கப் படுகிறேனே , அன்று தெரியாமல் இவனில் பைத்தியமானேன் ஆனால் இன்று இவன் இதயத்தில் நான் இல்லை என்று தெரிந்தே இவன் விழிக்கடலில் மூழ்கவோ , கடவுளே என் காதலே எனக்கு எதிரியாகிறதே ... " என்று தவித்தவளிடம் , பதில் வராமல் போகவே , மீண்டும் என்னாச்சு டா என்று செந்து கேட்க ...

" ஒன்னும் இல்ல மாமா  " என்று அவனிடம் இருந்து உடனே சட்டென வேகமாய் விலகிநின்றவளை யோசனையாய் பார்த்தவன் ,
அவளை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றான் .

இதையெல்லாம் ஆற்றின் மற்றொரு கரையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த நிர்மல் மனதுக்குள் சிரித்து கொண்டிருக்க ,
தினேசோ , ஏன்டா நிர்மா நீ என்னவோ செந்து ஃபுல் ப்ரஸ்சர்ல இருக்கான் , எப்ப வெடிப்பனோன்னு சொன்ன , இவன் என்னடான்னா தண்ணிய தெளிச்சு அனைச்சுட்டு இருக்கான் , என்றான் , என்று ஜீவியின் முகத்தில் தண்ணீர் தெளித்ததையும் , அவளை விழாமல் அணைத்தையும் கேலி பண்ணிக் கொண்டிருந்தான் .

கோவிலில் அபிஷேகம் முடித்து , பெண்கள் அணைவரும் பொங்கல் வைத்து அதில் மணப்பெண்னின் பொங்கலை அம்பாளுக்கு வைத்து பூஜை செய்யும் வழக்கதிறக்காய் , லீலாவதி தன் பேத்தி ஜீவிக்கான அடுப்பை அமைத்து அதில் ஜீவியை கற்பூரம் ஏற்றச்சொல்லி , பானையில் பாலை ஊற்றச் சொல்லி , அரிசி கழுவி என அனைத்தும் செய்து கொடுத்துவிட்டு , அவர் பொங்கல் வைக்கச் செல்ல , செந்தூரி , ஜெயந்தி , தேவி என அனனைவரும் தனித்தனியே பொங்கலிட , ஜீவிகாவின் அடுப்பின் புகையில் அவளின் கண்கள் கலங்க , அதைப் பார்த்த பாலா மகளிற்க்கு உதவி செய்ய எத்தனிக்க அதற்குள் அவளின் கலங்கிய கண்களைக் கண்ட செந்து ஜீவிக்கு உதவிசெய்யும் பொருட்டு , அவளருகில் சென்று அடுப்பை ஒழுங்கு செய்ய , அங்கே பாலா தேவிக்கு உதவும் பொருட்டு அவளை நகரச்சொல்லி விட்டு , பாலா பொங்கலிட , ஒரு வழியாக பொங்கலிட்டு முடிக்கவும் , அங்கே வினயின் தாய் தந்தை சக்திவேலும் ராஜத்தியும் வரவும் சரியாக இருந்தது , ராஜத்தியோ வினயையும் சாமி கும்பிடும் பொருட்டு சன்னிதிக்கு அழைத்து நிற்க்க வைக்க அவனும் அங்கே வேறு வழியில்லாமல் , நின்றுகொண்டிருந்தான் ,

பொங்கலை அம்பாளிற்குப் படைத்து , பூஜைசெய்து , அம்பாளின் மாலையை மணமக்களிடம் கொடுத்து மாலைமாற்றிக் கொள்ளச் சொல்ல , செந்து ஜீவியின் கழுத்தில் மாலையிட்டான் , மாலையிட்டவன் மனது நிலையில்லாமல் தவித்தது , ஜீவியியை கண்டவுடன் மனதில் மகிழ்ச்சி பனிமலை போல் அழகாய் உறைகிறது , ஆனால் திருமணம் புரிந்தோம் என்ற குற்ற உணர்ச்சியின் நிதர்சனம் சூரியனைப் போலே சுட்டெரித்து பனிமலை என இருக்கும் இன்பத்தை ஆவியாக்கிவிடுகறதே ! என்று தனக்குள் தவித்துக்கொண்டிருந்த
செந்துவின் கழுத்தில் ஜீவி மாலையிட்டாள் , அம்பாளின் குங்குமத்தை திருமாங்கல்யமதில் இடுமாறு கூறி செந்துவிடம் கொடுக்க , செந்து ஜீவியின் மாங்கல்யத்திற்கு குங்குமமிட்டான் , கடவுளே இந்த மாங்கல்யத்திற்க்கு நான் நியாயம் செய்வேனா ? இது என் ஜீவியின் வாழ்கையல்லவா ? எதையும் நினைக்காமல் குடும்பத்திற்க்காய் சிறு குழந்தையென என கரம் பிடித்தவள் ... நிர்மல் கூறுவது போல் இவள் வாழ்கை எனக்கு முக்கியல்லவா ?...

பூஜை முடித்து அனைவரும் சற்றே இளைப்பாற ... செந்து ஆற்றங்கரையின் ஓரத்தில் இருக்கும் ஊதாப்பூக்களைப் பறித்து , அதை ஜீவியி்ன் கைகளில் கொடுக்க அவளோ மகிழ்ச்சியில் மலர , வேறு எதுவும் பூ  வேணும்னா என்னிடம் கேளு ஜீவிமா , அப்புறம் நீ அன்றைக்கு சூரியகாந்தி பறிக்கிறேன்னு முள்ளு குத்தினமாதிரி எதாவது முள் குத்திரும் அதனால்தான் , சொல்றேன் என்றவன் , தன் நட்புக்களை தேட அவர்களோ இவனைப் பார்த்தபடி நின்றிருக்க , செந்து அவர்களை நோக்கிச் செல்ல ,

செந்து வருவதைப் பார்த்த தினேஷ் " நிர்மலிடம் நீ காலைல சொன்னியே வீட்ல பொங்க வைக்கிறாங்களோ இல்லையோ ஆனா இவன் பொங்க வச்சுருவான்னு , அதைக் கரக்டா பண்ணிட்டு வர்றான்டா , பொண்டாட்டிக்கு பூவெல்லாம் பரிச்சுத்தார்றான் ... " என்றவனை அமோதிப்பது போல்

"ஆமாம் , நேற்று நைட் , அவன் அவனாவே இல்லை , ஆனா இப்போ ரிலாக்ஸ்டா இருக்கான் " என்றான் நிர்மல் .

தினேஷ் , "ஆனா ஒன்னு செந்து கூட ஏதோ ஜீவிக்கு பொங்கல் வைக்க ஹெல்ப் தான் பண்ணினான் , ஆனா இவங்க மாமா , அதான் ஜீவியோட அப்பா பாலா அவரு ஒய்ஃப தள்ள சொல்லிட்டு பொங்கலே அவருதான்டா வச்சாரு ..." எனக்கூற நிர்மல் சிரித்துக் கொண்டிருந்தான் ,

அங்கே செந்துவர , நிர்மலின் அலைபேசி ஒலிக்க , வந்த அழைப்பை ஏற்றுப் பேசுவதற்க்காய் சற்றுதூரம் தள்ளி வந்து தோப்பில் நின்று பேசிமுடித்தவன் ,

அங்கே ஜெயராமும் வினயின் அப்பா சக்திவேலும் பேசுவதைக் கேட்க நேர்ந்தது ஜெயராம் ,
" ஜீவிய வினய்க்கு பேசலாம்னு நினைச்சோம் , உங்க வீட்டு மருமகளாக வருவான்னு இருந்தோம் , திடீர்னு இந்த மாதிரி நடக்குன்னு ஏதிர்பார்க்கல அண்ணா " என்று கூற ..

சக்திவேலோ " ஹம்.. நானும் ராஜாத்தியும் ஜீவி எங்க வீட்டு மருமகளாகிட்டா நம்ம இரண்டு குடு்ம்பமும் சொந்தமாகிடும்னு கனவு கண்டோம் , என்ன பண்ண நம்ம கையில என்ன இருக்கு ? .. விடு ஜெயாராம் .. " என்றார் ,

இதைக் கேட்ட நிர்மலுக்கு வினய் நேற்று மணமக்கள் அருகில் வராததற்கும் , காலையில் இங்கு வரமாட்டேன் என்று கூறியதற்கும் காரணமான வினயின் உணர்வுகள் புரிந்தது ..

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro