அலை‌🌊14

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"இந்த பொண்ணு வர்றதுக்கு நேரமானா ஒரு ஃபோனையாவது பண்ணலாம்ல…? மணி பன்னிரண்டு ஆகப்போகுது இந்நேரம் வரை வீட்டுக்கு வரலன்னா என்னன்னு நினைக்கிறது…

 ஃபோனை பண்ணாவும் சுவிட்ச் ஆப்னுன்னு வருது…" காஞ்சனா புலம்பியபடியே தன் போனை சிவாவிடம் கொடுத்து திவ்யாவிற்கு அழைத்து விசாரிக்கச் சொன்னார்.

பத்து மணி இருக்கும் போது ஹோட்டலில் இருந்து கிளம்பிவிட்டேன் என்ற தவலை வீட்டுக்கு தெரிவித்தவள் இதுவரையிலும் வரவில்லை என்றால் என்ன நினைப்பது. இப்போதே மணி பன்னிரண்டு இதற்கு மேலும் நேரத்தை கடத்த விருப்பமின்றி தாய் தம்பி  இருவரும் அவளை தேடுவதற்கு துவங்கிவிட்டனர்.

காஞ்சனாவிற்கும் சிவாவிற்கு வயிற்றில் புளியை கரைத்தது. மெல்ல விழிகளில் நீர் படலம் உருவாகிட சிவா திவ்யாவை அலைபேசியில் அழைத்தான்.

"அக்கா…."

கண்ணை பாதி திறந்தும் திறவாமலும் தூக்க கலக்கத்துடன் எழுந்தவள் "என்னடா சிவா…? இந்த நேரத்துல கால் பண்ற…?" கொட்டாவி விட்டபடியே ஃபோனை எடுத்தாள் திவ்யா.

"அக்கா… நீங்க வீட்டுலயா இருக்கிங்க…? ரேவதி அக்கா உங்க கூட இல்லையா..?" அதிர்ச்சியும் பதற்றமுமாக விசாரித்தான் சிவா.

அவன் கேட்ட கேள்வியில் அடித்து பிடித்து படுக்கையை விட்டு  எழுந்தவளுக்கு தூக்கம் பின்னங்கால் புறணியில் அடித்து எங்கு ஓடியது  என்றே தெரியவில்லை…  "என்னடா சொல்ற… ரேவதி இன்னும் வீட்டுக்கு வரலையா…?" என்றாள் அதிர்ச்சியாக

"ஆ… ஆமாக்கா இன்னும் வீட்டுக்கு வரல… போன் பண்ணாலும் சுவிட்ச் ஆஃப்னு வருது… சரி பஸ் கிடைக்க லேட்டாகி இருக்கும்னு கொஞ்சம் வைட் பண்ணோம்… ஆனா இந்நேரம் வரை அக்கா வரலை…  போன் பண்ணி ரெண்டு மணி நேரம் ஆகுது அதான் பயமா இருக்கு" என்றான் சிவா நீர் திரையிட்ட கண்களுடன்.

அவன் குரலை  வைத்தே  அழுகிறான் என்பதை யூகித்திருந்தவள் "டேய் நீ ஏன்டா பயப்புடுற அவளுக்கு ஒன்னும் ஆகாது போன் சார்ஜ் இல்லாம ஆப் ஆகி இருக்கும். இன்னும் கொஞ்ச நேத்துல வந்துடுவா டா… இன்னைக்கு அக்காவுக்கு துணையா வீட்டுல இருக்க சொன்னதுனால என்னால அவ கூட போக முடியல…" தன் தலையில் தானே அடித்துக் கொண்டவள் "நீ பயப்படாத நான் இதோ வந்துடுறேன்" அவனிடம் தைரியமாக இருக்க சொன்னவள் இரவு பதினோரு மணியை போல் வீடு திரும்பிய தந்தையை எழுப்பி விஷயத்தைக் கூறி, அடுத்த ஐந்து நிமிடத்தில் ரேவதியின் வீட்டை அடைந்திருந்தவளுக்கு உச்சஸ்தாயில் கத்தி கொண்டிருந்த கஜேந்திரனின்  குரல் நாராசமாக காதில் விழுந்தது.

"இதுக்குத்தான் என்னை அவசரமா வரச் சொன்னியாக்கா….  எத்தனை முறை உன் வீட்டுக்கு நடையா நடந்தேன் அவ போக்கு சரியில்லை ஒரு கல்யாணத்தை பண்ணி வைய்யின்னு‌…"

"எனக்கு அப்போவே தெரியும் கா  ஒரு நாள் இல்ல ஒரு நாள் இப்படி‌ ஒரு விஷயம் நடக்கும்னு… யாரையும் மதிக்காம திமிரு காட்டிக்கிட்டு திரிஞ்சவ என்ன வேலை பண்ணி வைச்சிருக்கா பாத்தியாக்கா…?" 

"கஜா இப்போ என்னடா பண்றது…?" பயத்துடன் கேட்ட காஞ்சனாவின் வார்த்தைகள் கஜாவிற்கு யானை பலத்தை கொடுத்தது போல இஷ்டத்துக்கும் பேசிக் கொண்டிருந்தான்.

"ஆடுறேன் ஆடுறேன்னு நம்ம மானத்தை நடு ரோட்டுல சிரிப்பா சிரிக்க வச்சிட்டாளேக்கா… இதுக்காகத் தான் கல்யாணத்தை வேண்டான்னு சொன்னாளோ…!" அக்காவின் மனதில் கல் எறிந்து குழம்பிய குட்டையில் மீனுக்கு தூண்டிலை போடுவது போல ரேவதியின் மேல் இல்லாததையும் பொல்லாததையும்  சொல்லி காஞ்சனாவின் மனதில் குழப்பத்தையும் பயத்தையும் உண்டு செய்து ரேவதிக்கு தூண்டிலை போட்டான் கஜேந்திரன்.

அவனுக்கு அல்லக்கையின் மூலம் ஏற்கனவே ரேவதியின் பின் ராகவ் திரிவது அரசல் புரசலாக காதில் விழுந்து இருந்தது. ஒரிரு முறை நேரில் வேறு பார்த்து தொலைத்திருந்தான். அதுவுமின்றி தன்னிடமிருந்து தப்பிப்பதற்கு சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு அவனுடனே ஓடி விட்டாளோ என நினைத்துதான் கோபத்தோடே அவளின்‌ நடத்தையை பழித்தான்.

அதுவுமின்றி ஒருவேளை அவள் திரும்பி கிடைத்து விட்டாள் இந்த ஒழுக்கம் கெட்டவள் பட்டத்தால் யாரும் ரேவதியை திருமணம் செய்ய முன் வர மாட்டார்கள் என்றாவது ஒரு நாள் அவள் நமக்கு தானே  என்ற மமதையில், அவளின்‌ மேல் உள்ள வஞ்சத்தை எல்லாம் நஞ்சில் தோய்த்து காஞ்சனாவின் நெஞ்சில் இறக்கி கொண்டிருந்தான். 

மகளை காணவில்லை என்று தெரிந்துக் கொண்ட பின் கஜா பக்கபலமாக இருப்பான் தன் மகளை தேட உதவி செய்வான் என காஞ்சனா நினைத்திருக்க,  இங்கோ கொல்லிக் கட்டையை எடுத்து தலையை சொறிந்துக் கொண்டது போல  வலி நிறைந்த முகத்துடன் கஜாவின் வார்த்தைகளை ஜீரணிக்க முடியாது நின்றிருந்தார் அவர்.

'அடப்பாவி பயலே  முதல்ல என்ன நடந்ததுன்னு விசாரிக்கல அவளை தேட ஒரு முயற்சியும் எடுக்கல  வாய்க்கு வந்தபடி பேசுறானே இந்த மூதேவி". அவனை அறுவறுப்பாக பார்த்தபடியே சிவாவிடம் வந்து நின்றாள் திவ்யா.

கஜாவின் சொற்களில் கொதித்துக் கொண்டு இருந்த சிவா  திவ்யாவை கண்டதும் "அக்கா…"  என அவள் கைகளை பிடித்துக் கொண்டவனின் கண்களில் கட்டிய கண்ணீர் குளம் இப்போவோ அப்பவோ என அவன் கன்னங்களில் உருள காத்திருந்தது.

" ஏய் இருடா அழாத ட்ருப் டேன்சருங்க கிட்ட கேட்டு பாக்குறேன் அவங்களுக்கு விஷயம் தெரிஞ்சு இருக்கலாம்… "  என்றவள் சிலருக்கு அழைத்து விசாரிக்க அவள் முகம் இருண்டு விட்டது. சொல்லி வைத்தார் போல அனைவரும் ஒரே பதிலை கூற  இதயம் வேகமாக துடித்தது.

"அக்கா… என்ன சொன்னாங்க…?"

"அவ… அவ… அங்கிருந்து ஒன்பது மணிக்கே கிளம்பிட்டாலாம் டா இந்நேரத்துக்கு வீட்டுக்கு வந்து இருக்கனும்…" என்றவளுக்கும் ரேவதியை நினைத்து உள்ளுக்குள் உதறியது.

திவ்யாவின் வார்த்தைகளை கேட்டுக்கொண்டிருந்த கஜா "பாத்தியாக்கா  ஒன்பது மணிக்கு கிளம்பி இருக்குற பொண்ணு இதுவரையிலும் வீடு வந்து சேரலை… எனக்கு என்னமோ ரேவதி மேல சந்தேகமா இருக்குக்கா… நான் இப்படி பேசுறேன்னு கோவிச்சிக்காதக்கா ஒரு வேலை அவ யார் கூடவாவது அப்படி இப்படின்னு"  என கீழ்த்தரமான வார்த்தைகளை சொல்லி ஒரு பூகம்பத்தை உருவாக்க முயல பக்கத்தில் இருந்த மர ஸ்டூலை எட்டி உதைத்து தன் கோபத்தை வெளிப்படுத்தினான் பதினைந்தே வயதான சிவா…. 

அவன் கண்களில் வழியும் கண்ணீரை புறங்கைக்கொண்டு துடைத்து, கஜாவை தீயாய் முறைத்தவன், "வெளியே போயா…" என ஆவேசமாக கத்தினான். 

அதே ஆவேசத்துடன் "உனக்கு கொஞ்ச கூட பொண்ணுன்னு அக்கா மேல பாசமே‌ இல்லையாம்மா…? இந்த ஆளு சொல்றதை எல்லாம் அமைதியா நின்னு கேட்டுக்கிட்டு இருக்க…?" காஞ்சனாவின் மீதும் பாய்ந்தான்.

இதை எதிர் பார்க்காத கஜாவிற்கு சிவாவின் பேச்சு  கோபத்தை தூண்டி விட "டேய்… என்னடா மாமாங்குற மரியாதை இல்லாம வாயா போயான்னு பேசுற…? அதுவும் வெளியே போன்னு சொல்ற…! அக்காவையும் மரியாதை இல்லாம பேசுற…! கஜா கோபத்துடன் அவன் சட்டையின் மேல் கை வைக்க முன்னேறினான்.

அடங்காத ஆத்திரத்துடன் கஜாவின் கரங்களை தட்டிவிட்டு கீழே விழுந்த ஸ்டூலை கையில் எடுத்தவன் "இப்போ மரியதையா வெளியே போறியா…? இல்ல இதாலையே அடிச்சி உன் மண்டைய உடைக்கவா…? என்‌ அக்காவை பத்தி தப்பா பேச நீ யாருடா…?" திமிறிக்கொண்டு வந்த சிவாவை "டேய்‌… என்னடா பண்ற..? கொஞ்சம் இருடா.."  காஞ்சனா அவனை தடுக்க அதிர்ச்சியுடன் சிவாவின் செயல்களை பார்த்த கஜேந்திரன். அம்பை காஞ்சனாவின் பக்கம் திரும்பி விட்டான்.

யாரை பகைத்துக் கொண்டாலும் அக்காவை பகைத்து கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த கஜா, "நீ பசங்களை சரியாவே வளர்க்கலக்கா ஒருத்தி என்னடான்னா நடுராத்திரியாகுது இன்னும் வீட்டுக்கே வரலை… இவன் என்னடான்னா சின்னவங்க பெரியவங்கன்னு மட்டுமரியாதை இல்லாம பேசுறான்… ரெண்டும் வீட்டுக்கு அடங்காம… என்னவோ… சே என் மானம் போகுது…. இன்னாரோட சொந்தம் சொல்லி என்னத்தானே நாளைக்கு ஊர்ல பேசுவான்… என்‌ மதிப்பு என்ன ஆவது… உன் பெயரையும் கெடுத்து வைக்குதுங்க… இதுக்கும் மேல இங்க ஒருநிமிஷம் கூட என்னால இங்க இருக்க முடியாதுக்கா உனக்குன்னா சொல்லு வரேன்…" அவன் கிளம்ப முற்பட

*அய்யா கஜா… என் பொண்ணு…." என காஞ்சனா அழுத அழுகையில் சிவாவை ஒரு பார்வை பார்த்தவன் "அக்கா அழாத நான் பாக்குறேன் வெளி ஆளையும் விட்டு  தேடி பாக்குறேன்" என நாலு வீட்டுக்கு கேட்கும் படி அந்த அர்த்த ராத்திரியில் சத்தமிட்டபடி ஏதோ குல கௌரவமே அவன் சட்டை பாக்கெட்டுக்குள்ளும் காஞ்சனாவின் டிரங்க் பெட்டியிலும் உள்ளதை போல பேசிக்கொண்டு சென்றவனின் பேச்சில் கொதித்துப்போன சிவா,

"உன்னால தான்மா இந்த கழிசடை பேசுற பேச்செல்லாம் நாங்க கேட்க வேண்டி இருக்கு…  இவனை எல்லாம் யாரும்மா கூப்பிட்டா…   இதெல்லாம் உன்னால தாம்மா வருது… அக்காவை பத்தி உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் ஆனாலும் எப்படி பேசுறான் பத்தியா…? இதுக்கெல்லாம் காரணம் நீதாம்மா" கஜாவின் பேச்சை தாளாமுடியாது அம்மாவிடம் படபடத்தான் சிவா…

காஞ்சனாவிற்குமே கஜாவின் பேச்சில் நெஞ்சம் கொதித்து போனாலும் இப்போது அவன் தானே மகளை தேடி வருகிறேன் என சொன்னவன் என்பதால் வாயை திறந்து தம்பியை ஒரு வார்த்தை  எதிர்த்து பேசாமல் அழுதுக் கொண்டே இத்தனைக்கும்  காரணமான ரேவதியை நினைத்து தான் கண்ணீரை வடித்துக்கொண்டு இருந்தார். 

"சிவா விடுடா… இந்த ஆளு எல்லாம் ஒரு ஆளுன்னு மதிச்சி நீ பதில் கொடுத்ததே பெருசு… மலைய பாத்து ஏதோ குறைக்குதுன்னு விட்டு தள்ளுடா…  இப்போ நமக்கு ரேவதி தான்  முக்கியம் அதுக்கு என்ன பண்றது இப்போ மணி ஒன்னு ஆகப்போகுது… "  யோசனையுடன் சிவாவை பார்த்தாள் திவ்யா..

அதற்குள் அக்கம் பக்கம் வீட்டிலிருந்து சிலர் விளக்கை போட்டு எட்டி பார்ப்பது போல இருந்தது.

"அக்கா‌ என் கூட வரிங்களா..? அக்காவை தேடி பாக்கலாம்…" தவிப்புடன் கேட்ட சிவாவின் பேச்சில் மனம் நெகிழ்ந்தவள்,

"இதென்னடா கேள்வி வாடா போய் பாக்கலாம்" என்றாள் திவ்யா 

"இருங்கக்கா பக்கத்துல ரவி அண்ணா ஆட்டோ இருக்கு நான் கூட்டிட்டு வரேன்".

"இல்லடா என் பைக்குலயே போலாமே…"

"வேண்டாம் கா… அக்கா கிடைச்சிட்டா மூனு பேரூம் இதுல வர முடியாதுல… நான் ஆட்டோ கூட்டிட்டு வந்துடுறேன்". அக்கா வந்து விடுவாள் என நம்பிக்கையுடன் கூறியவன் அடுத்த  ஐந்து நிமிடங்களில் ஆட்டோவுடன் வந்து, திவ்யாவை‌ அழைத்துக் கொண்டு சென்றான்

"எம்மா திவ்யா இந்த ரோடா…". ஆட்டோக்காரர் வழியை கேட்க

"ஆமா‌ அண்ணா இந்த பக்கம் தான் போங்கன்னா" திவ்யா அந்த ஹோட்டல் அட்ரசை சொல்ல ஆட்டோவை அந்த பக்கம் திருப்பினார் ஓட்டுனர்..

……

மணி ஒன்னறையை கடந்து இருக்கும். தேவராஜிற்கு  சுஜியின் பயந்த முகம்  நினைத்து உறக்கம் வராமல் போக, மகளை கண்டு விட்டு திரும்பும் சமயம்  ரேவதி படுத்திருக்கும் அறையில் லேசாக திறந்திருந்த கதவில், மகன் சாய்ந்து அமர்ந்திருக்கும் கோலம் தெரிய, கதவை சத்தமில்லாது திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தார் அவர்.

காற்றில் அலைந்த கேசத்தை லாவகமாக கோதியவன் அவளிடம் நிலைத்த தன் பார்வையை விளக்கி சோர்வாய் கண்களை மூடிக்கொள்ள, "இங்க என்ன பண்ற.. கார்த்திக்.?." தேவராஜின் கணீர் அழைப்பில் சட்டென கண்களை திறந்தான்.

அவளையும் தந்தையையும் மாறி மாறி பார்த்தவன் அவரை சற்று தள்ளி அழைத்துச் சென்று, "இங்க என்ன அப்பா பண்றிங்க?" என சத்திமில்லாது  எதிர் கேள்வி கேட்டிருந்தான் அவரை.

மகனின் செயலை வித்தியசமாக பார்த்தார் தேவராஜ்.  எந்த பெண்ணிடமும் நெருக்கம் காட்டாத மகன் இந்த பெண்ணிடத்தில் அவன் நடவடிக்கைகள் சற்று அதிகப்படியாக தெரிய "இங்க என்ன பண்ற கார்த்திக்…?" ஆராய்ச்சியாக அவனை பார்த்தார்.

தந்தையின் ஆராய்ச்சி நிறைந்த பார்வையை‌ எதிர் கொண்டவனோ சற்றும் தடுமாறாமல் "அந்த பொண்ணு எப்ப கண் முழிக்கும்னு தெரியலப்பா…  இடையில் எந்திருச்சு எங்கே இருக்கேன்னு புரியாம குழம்பி பயந்துட்டா… அதான் பா இங்கே இருந்துட்டேன்". என்றான் விளக்கமாகவே

மகன் தடுமாறாமல் பதில் அளித்தாலும் அவன் கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடிய விஷயமாக தெரிந்தாலும், மனம் முழுவதுமாக  அதை ஏற்க மறுத்தது. 

ஏதோ ஒன்று இருப்பது போலவே அவருக்கு தோன்றியது…  இருந்தும் அதற்கு மேல் தோண்டி துருவி   தேவையில்லாத விஷயத்தை அவன் மனதில் உருவகம் செய்ய அவருக்கு விருப்பமின்றி 

"சரி கார்த்திக்…  கேக்கனும்னு நினைச்சேன்  இந்த பொண்ணு பத்தி வேற எந்த தகவலும் தெரியலையா இவங்க வீட்டுல இருந்து யாரும் போன் செய்தாங்களா?" மகளை காப்பற்றியவளாயிற்றே அக்கறையுடனே விசாரித்தார் தேவராஜ்.

"இல்லப்பா நானும் அவ பேக் செக் பண்ணிட்டேன் சார்ஜ் இல்லாம இருந்த மொபைல் தான் இருந்துச்சி…  வேற எதுவும் கிடைக்கல…  அதை சார்ஜ் போட்டு இருக்கேன் மொபைல் ஆன் பண்ணிட்டா கண்டுபிடிச்சிடுலாம்… ஆமா நீங்க இந்த நேரத்துல இங்க என்ன செய்றிங்க அம்மாவுக்கு ஒன்னுமில்லையே….?" இந்நேரத்தில் அவர் ஏன் இங்கு வந்தார்‌ என புரியாமல் கேட்டான் கார்த்திக்.

"அம்மா தூங்கறா கார்த்திக் அவளுக்கு ஒன்னுமில்லை…. எனக்கு தான் தூக்கமே வரலை  கண் மூடினா சுஜியோட பயந்த முகம் தான் ஞாபகத்துக்கு வருது அதான் குழந்தை என்ன பண்றான்னு பார்த்துட்டு போகலாம்னு வந்தேன் இங்க உன்னை பாக்கவும் உள்ளே வந்தேன்" என தான் வந்த காரணத்தை உரைத்தார்.

"சரிப்பா சுஜியை பாத்திங்களா …? "

"தூங்கறாப்பா இப்போ பரவாயில்லை …"

"ம் சரிப்பா நேரம் ஆகிடுச்சி  போய் படுங்க நாளைக்கு பேசிக்கலாம் நான் அவங்க மொபைலை செக் பண்ணி பாக்குறேன்…" 

"ஓகே… கார்த்திக்…   ஏதாவதுன்ன கால் பண்ணு" என்றவர் அறைக்கு திரும்பி விட சார்ஜில் போட்ட அவளின் செல்லை எடுத்து ஆன் செய்த 5வது நிமிடத்தில் அலரியது அவளின் அலைபேசி.

அவளை பார்த்தபடியே அலைபேசியில் மிளிரும் பெயரை பார்த்தவன் புருவம் ‌உயர்த்தினான்..

…..

"ரவி அண்ணா கொஞ்சம் அந்த பஸ் ஸ்டாண்ட் பக்கம் நிறுத்துங்களேன்" ஓட்டுனரிடம் கூறியவளுக்கு கலக்கமாக இருந்தது. ரேவதி ஏதோ ஒரு ஆபத்தில் சிக்கி கொண்டாளோ என மனம் அடித்து கொண்டது. 

ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி இருக்கும் இடத்தை பார்த்த சிவா "இங்க‌ எதுக்குக்கா நிக்க சொல்றிங்க…?"  கேள்வியாக திவ்யாவை பார்த்தான்.

"எனக்கும் சொல்ல தெரியலடா ஏதோ தோனுது கீழே இறங்கி பார்ப்போமே" அவனிடம் கூறியபடியே கீழே இறங்கி சுற்றி முற்றி பார்த்தாள். அவள் என்னப்படி ஆட்டோ ஏறி இருந்தாலும் இங்கே இருந்துதானே ஏறி இருக்க வேண்டும்…   இங்கு ஏதாவது தகவலோ தடையமோ கிடைக்கலாமே என நினைத்து தான் நிறுத்த சொன்னாள்.

அந்த இடமே வெறிச்சோடி இருந்தது. "ரேவதி…. ரேவதி…" சத்தமாகவே குரல் கொடுத்தாள். எங்கேனும் மாட்டிக் கொண்டாளோ மனம் தாறுமாறாக கண்டபடி யோசித்தது. ஒரு மனமோ சே.. சே… ரேவதி தைரியமா எதையும் பேஸ் பண்ணுவா என வாதிட்டது. சற்று தூரம் வரை சென்று தேடினர். 

இவர்களிடமிருந்து ஒரு பத்து அடி தூரத்தில் ரேவதியின் ஒற்றை கால் செருப்பு இருப்பதை கவனித்தான் சிவா.

"அக்கா…."  தூரமாக தேடிக் கொண்டிருந்தவளை கத்தி அழைத்தான். அவன் கத்தலில் திடுக்கிட்டு நிமிரந்த திவ்யா என்ன "சிவா ஏன் கத்தின…?"  கேட்டபடியே அவனருகில் வந்தாள்.

கீழே இருந்த செருப்பை கையில் எடுத்தவனோ "அக்கா இது இது ரேவதி அக்கா… செருப்பு இங்க இருக்கு" திக்கி திணறியது அவனது வார்த்தைகள்.

லேசாக கைகள் நடுங்க அதை வாங்கி பார்த்தாள் திவ்யா.  அது ரேவதியுடையது தான் என நன்றாக அறிவாளே அவளுக்கும்  கண்கள் கலங்கி விட்டது.   " ஏதாவது இருக்கான்னு செக் பண்ணு சிவா" அவனிடம் கூறியபடியே தானும் தேடினாள்.

"அக்கா எனக்கு பயமா இருக்கு நாம போலீஸுக்கு போயிடுவோமா இன்னும் லேட்டாகி ஏதாவது…" அதற்கு மேல் அவனால் யோசிக்க கூட முடியவில்லை வளர்ந்த பிள்ளை தானே நாட்டு நடப்பை ஓரளவு தெரிந்து வைத்திருக்க, பயம் நெஞ்சை கவ்விது.

"போலாம் சிவா... எனக்கும்‌ படபடன்னு வருது… இதுக்கு மேல லேட் பண்ண வேண்டாம்"'. என்றபடியே போனை எடுத்தவள் தந்தைக்கு தகவலை கொடுத்து பக்கத்தில் இருக்கும் காவல் நிலையத்திற்கு செல்வதை பற்றி காஞ்சனாவிடம் கூற சொன்னாள். அவரையும் அழைத்து வரும்படி கூறியிருந்தாள்.

ஆட்டோவில் ஏறியவர்கள் "அண்ணா பக்கத்துல இருக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு போங்கன்னா" ஓட்டுனரிடம் கூறியவள் சிவாவின் கையை ஆதரவாக தட்டி கொடுத்தாள்.

அவனுக்கு அழுகை வரும் போல இருந்தது. முயன்று அடக்கி கொண்டிருந்தவன் திவ்யா ஆறுதலாக தட்டி தரவும் "அக்கா பயமா இருக்குக்கா" என வெடித்து அழுதான். . 

"ஏய்…. சிவா ரேவதிக்கு ஒன்னும் ஆகி இருக்காது… நீ பயப்படாத நாம அவளை கண்டு பிடிச்சலாம்"  சிவாவுக்கு தைரியமூட்டியபடியே வர

"அக்கா எதுக்கும்‌ இன்னெரு முறை அக்கா செல்லுக்கு கால் பண்றிங்களா ?" 

"சுவிட்ச் ஆப்னு வருதே டா"

"இப்போ பண்ணுங்களேன்"  அவன் கெஞ்சலில்' சரிடா இரு பண்றேன் 'என்றவள் ரேவதியின்  எண்களுக்கு அழுத்தி காத்திருந்த மறு நிமிடம் அந்த பக்கம் அழைப்பு ஏற்றிருந்தான் கார்த்திக்.

……

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro