அலை 🌊20

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஒரு வார காலம் என்பது இரண்டு வாரமாக மாறி போக, அது எப்படி போனது என்பதே தெரியவில்லை… பறவையை போல கண்ணிமைக்கும் நேரத்தில் நாட்கள் சட்டென  பறந்து விட்டிருந்தது… அர்ஜூன் கூறிய சில விஷயங்கள் கார்த்திக்கின் மனதினை   சமநிலைக்கு எடுத்து வந்திருந்தது.

முதல் வாரமே வருகிறேன் என கூறியவன் தீபக் மற்றும் அர்ஜூனுடன்  நாட்களை கடத்தி விட்டு  இன்று தான் சென்னை திரும்பி இருந்தான்.

வரும் போதே ஒரு தெளிவான முடிவுடன் தான் வந்தான். இனி ரேவதியை பற்றி எக்காரணத்தை கொண்டும் நினைப்பதில்லை… அவளை  பார்ப்பதில்லை… என்பது தான் அது…

அதுமட்டுமின்றி நிஷாவுடன் ஒரு சுமுகமான மனநிலையில் இருக்க நினைத்தவன்,.  முதல் வேலையாக சென்னைக்கு வந்து விட்டதை அவளுக்கு தெரிவித்து சென்னைக்கு அழைத்திருத்தான்.

பார்த்தாலே முகத்தை திருப்பி கொள்பவன், ஒருதலை காதலுக்கே  இந்த அளவுக்கு  உருகுபவன், தன்னை பார்க்க வேண்டும் பேச வேண்டும் என அழைத்தவுடன், சிறகில்லாமல் வானில் பறந்தவள், அடுத்த இருநாட்களில் கிளம்பி வருவதாக தகவலை தெரிவித்து இருந்தாள்.

ஒரு வித தெளிவுடன் அலுவலகம் நுழைந்தவனை ரகு வாயில் புறத்தில் வந்து வரவேற்றான்.

*குட் மார்னிங் சார்…"

"குட் மார்னிங் ரகு…" பளிச்சென தெளிந்த முகத்துடன், எப்போதும் போல சிறு கீற்றாய் புன்னகைத்து,   அடுத்த அடுத்த வேலைகளை விசாரித்துக் கொண்டே சென்றான்…

ரகு தான் அகல விரிந்த கண்களுடன் அவனை பார்த்தான். கடந்த ஒரு‌மாத காலமாக இறுகிப் போய் சிரிப்பையே மறந்து சுற்றி வந்தவரா இவர்… தான் போனில் பேசிய போது கூட சிடுசிடுவென எரிந்து விழுந்தவர்…    இன்று எதுவுமே நடவாதது போல சாதரணமாக அதுவும் புன்னகையுடன் இருப்பது அவனுக்கு பெருத்த ஆச்சர்யத்தை கூட்டியது.,  கார்த்திக் அறியாதவாறு தனது அதிர்ச்சியான முகபாவத்தை மறைத்தவன்,

மலமலவென்று அவனுக்காக காத்திருந்த வேலைகளை பட்டியலிட்டவாறு, அவனுடன் அறைக்குள் நுழைந்தான்.

"ஓகே… ரகு… நான் பாக்குறேன்... அப்புறம் நான் இல்லாதப்போ சைட்டுக்கு யாரை அனுப்பி வைச்சிங்க  அந்த வொர்க் டீடியல்ஸ் எல்லாம் கொடுத்து விடுங்க… தென்‌ வொர்க் எதுவரையிலும் போயிருக்கு அந்த டீடிடையலும் வேணும்…" என்றான் ரகுவிடம்,

"எஸ் சார்...  லாட்ஸ் வீக் கனஸ்டக்ஷன் மெட்டிரியல் வந்து இறங்கி இருந்தது அதுக்கான டீடிடையலும் எடுத்துட்டு வர சொல்றேன் சார்." என்றபடி வெளியேறி இருந்தான் ரகு.

மும்மரமாக கணிணியில் கண்களை பதித்து இருந்தவனுக்கு கதவு தட்டும் ஓசை கேட்டது.  டிசைனிங்கில் இருந்து கண்ணை அகற்றாமல் எஸ் கமின் என்றவன் வேலையில் கவனமாக இருந்தான்.

உள்ளே வந்த நபரோ முகமன்னாக வணக்கம் வைத்து "சார் ஃபைல்" என நீட்டி இருந்தார்.

அந்த குரலில் அதிர்ச்சியாக தலையை உயர்த்தியவனின்  கண் முன் நின்று சோதித்தாள் ரேவதி.

யாரை பார்க்க வேண்டாம் யாரைப் பற்றி நினைக்க வேண்டாம் என்ற முடிவுடன் வந்தனோ அவளே கண் முன் நிற்கவும் அதிர்வில் உரைந்து விட்டவன் கண்கள் இடுங்க அவளைப் பார்த்தான்.

கையில் ஃபைலுடன் இருந்தவள், சங்கடத்துடன் அவன் முன் நின்றிருந்தாள்.

'நீயெல்லாம் ஒரு ஆளு உன் கம்பெனிக்கு‌ என்னை வரசொல்றியா...?' என்பது போல் அல்லவா அன்று பேசி வைத்திருந்தாள் இன்று அவன் அலுவலகத்திலேயே அவனுக்கு கீழே கைகட்டி வேலை செய்யும் நிலையை எண்ணி குமைந்தவள் அவனைப் பார்ப்பதை தவிர்த்து குனிந்துக் கொண்டாள்.

அவன் உரைந்து நின்றது என்னவோ ஒரு சில நிமிடங்கள் தான். சட்டென தன்னை சுதாரித்து கொண்டவன், போனை எடுத்து “ரகு ஒரு நிமிஷம் என் கேபினுக்கு வா” என ரகுவை அழைத்தவன் அவளையே தீர்க்கமான விழிகளுடன் பார்த்தான்.

'அன்னைக்கு கார்டு கொடுக்கும் போது என்னன்னமோ பேசினா இன்னைக்கு‌ என்ன இங்க வேலைக்கு வந்து இருக்கா… ஏதாவது பிரச்சனையா!?'  அவளை பற்றி சிந்திக்கவே கூடாது என நினைத்தவன்  மனதில் அவளை பற்றிய‌ எண்ணங்கள் மட்டும் தான் ஓடியது.

அவன் அழைத்த இரண்டு நிமிடத்தில்  கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்த ரகு,.  கார்த்திக்கின் பார்வையை வைத்தே அவன் கேள்வியை அனுமானித்தவன்,

"லாஸ்ட் மண்டே தான் சார் இவங்க நீயூவா அப்பாய்ண்மென்ட் ஆனங்க.. எம் டி சார் தான் சார் அப்பாய்ண்ட் பண்ணது…‌ அவங்க நீயூ என்பதால் அடமின்ல வொர்க் பண்றாங்க" என்றான் அந்த பார்வைக்கு பதிலாய்.

"ம் … ஓகே… மிஸ் ரேவதி நீங்க ஃபைல் வைச்சிட்டு போங்க" என்றவன் அவள் சென்றதும் ரகுவிடம் "ஏன் என்கிட்ட இந்த விஷயத்தை இன்பார்ம் பண்ணல...?" என்றான் கோபமாய்…

"சார் நான் உங்களுக்கு டெய்லி அப்டேட் கொடுக்க கால் பண்ணேன்… பட் நீங்க தான்...." அவன் கூறாது பாதியில் நிறுத்தி விட்டான். வேலை செய்யும் முதலாளியிடமே எல்லாவற்றிற்கும் காரணம் நீதான்‌ என சொல்ல முடியாமல் நிற்க,

"என்ன நான் தான்‌.... என்ன மேன் நான் தான்…" அவனிடம் எகிறியவன் தன் கோபம், எல்லை கடப்பதை உணர்ந்து "ஓகே… ரகு நீங்க போங்க... நான் பாத்துக்குறேன்" என்றவன் தலையை பிடித்துக் கொண்டு நாற்காலியில் சாய்ந்து விட்டான்.

யாரை பாக்கவே கூடாது பேசவே கூடாது நினைக்கக் கூட கூடாது என்று கட்டுப்பாடுகளை போட்டுக் கொண்டு வந்தானோ அவளையே தினம் தினம் பார்க்கும் படி செய்த விதியை என்ன வென்று சொல்வது… பெருமூச்சி ஒன்று எழுந்தது.

ரகுவிற்கு தான்‌ தலை வலித்தது 'அவருக்கு விஷயத்தை சொல்ல தானே போன் பண்ணேன் அவர் தான் எதுவுமே கேக்குற மூடில் இல்லைன்னு சொல்லி வைச்சிட்டார் இப்போ ஏன் சொல்லலைன்னு கேக்குறார்.
இப்போ ஏன் இந்த மோடில் இருக்காருன்னு தான் புரியல' மனதிற்குள் புலம்பிவன் தன் வேலையை பார்க்க சென்று விட்டான்.

உள்ளே அமர்ந்திருந்தவனுக்கோ 'இவளுக்கு பிரச்சனை யா… என்னவா இருக்கும்  தீடீரென… பார்த்த வேலை வேண்டான்னு விட்டு இந்த வேலைக்கு வர்றதுக்கு எப்படி முடிவெடுத்தா… ?' ரேவதியிடமும் கேட்க முடியாது கேட்டால் எப்படி‌ எடுத்துக் கொள்வாளோ என நினைத்து அதை தவிர்த்தவன், மனதில் அரித்துக் கொண்டிருக்கும் கேள்வியை எவரிடமும் கேட்க முடியாத நிலையில் தலையை அழுத்தமாக கோதிக் கொண்டான்.

தன் தரிப்பிடத்திற்கு வந்த ரேவதிக்குத் தான் அவமானமாக இருந்தது.  தன்னை பார்த்ததும் அவன்‌ கண்களில் தெரிந்த அதிர்ச்சி  பின் அது மலர்ந்து சிரித்தது… சிரித்ததா என சந்தேகிக்கும் முன்பே அழுத்தமாய் தன்னை பார்த்தது என மாறி மாறி அவன் கண்கள் காட்டிய பாவனைகள் அனைத்தும் அவளை ஏளனமாக பார்த்து போலவே நினைத்தாள்.

அவனே வலிய வந்து வேலையை கொடுக்கின்றேன் என  சொன்ன போது கூட‌ வேண்டாம்னு  ஜம்பமாய் சொல்லிட்டு, இப்போ கார்த்திக் முன்னையே வந்து நிற்பதை  நினைத்து தான்‌ தன்னை இப்படி ஏளனமாக பார்க்கிறான் என நினைத்தவள் ஒரு முடிவுடன் அவன் அறையை நோக்கி சென்றாள்.

தலையை பிடித்து அமர்ந்திருந்த கார்த்திக். கதவு தட்டும் ஓசையில் தன்னை இயல்பாக்கிக் கொண்டு எப்போதும் போல தோரணையுடன் அமர்ந்தவன், "எஸ் கமின்" என்றிட,. சத்தியமாய் மீண்டும்‌ அங்கே ரேவதியை அவன் எதிரப்பார்க்கவே இல்லை…

புருவ முடிச்சுடன் அவளை‌ பார்த்தான் கார்த்திக். அவளை மறந்து விட வேண்டும் என அத்தனை‌ உறுதியுடன்‌  எடுத்த முடிவு சற்று‌ ஆட்டம் காணுவது போல இருந்தது.

"உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்…" பிசிறின்றி ஒலித்தது அவளது வார்த்தைகள்.

'பேசனுமா எதை பத்தி பேசப் போறா?'என யோசனையின் பிடியில் அவளை‌ பார்த்தவன்,

"ம் உட்கார்ந்து பேசுங்க ரேவதி" என்றான் முன்னிருந்த இருக்கையை‌ சுட்டி காட்டி

"பரவாயில்லைங்க சார்… நான் உட்கார்ந்து பேச வரலை … உங்ககிட்ட சிலதை சொல்லனும் சொல்லிட்டு  கிளம்புறேன்" சற்றும் ஒட்டாத விலகல் தன்னைமையுடன் பதிலை கொடுத்தாள் ரேவதி.

“ஓகே… யுவர் விஷ்…நின்னுக்கிட்டே சொல்லுங்க…" என தோள்களை குலுக்கியவன் "என்ன சொல்லனும் சொல்லுங்க” என கேட்டு, தோரணையாக இருக்கையில் சாய்ந்து கால் மேல் காலை போட்டு அவளையே தீர்க்கமான பார்த்தான்.

என்ன தான் அவனை பிடிக்கவில்லை திமிர் பிடித்தவன்… கோபக்காரன் என தள்ளி நிறுத்தினாலும், அவனது தோரணையும் ஆளுமையும் அவனுக்கு பொருத்தமாக‌ இருப்பதாகத் தான்‌ ரேவதிக்கு தோன்றியது . அவனைபார்த்தது பார்த்தபடி நின்றாள்.

"என்ன ரேவதி... என்னமோ சொல்லனும்னு வந்துட்டு அமைதியா நிக்குறீங்க…?"  என்றான் அவள் அசையாது நிற்பதைப் பார்த்து.

சட்டென தன் நிலைக்கு திரும்பியவள் “இந்த வேலை வேண்டான்னு சொல்லிட்டு இங்க ஏன் வந்தேன்னு உங்களுக்கு தோனும்…" சங்கடமாக அவனை பார்த்தாள்.

"வாட்.,.. அப்படியெல்லாம் எனக்கு எதுவும் தோணலையே…." என்றான் சர்வசாதரணமாக,

"ப்ச்... சார் சொல்ல வந்ததை கொஞ்சம் முழுசா சொல்ல விடுங்களேன்" அவள் படப்படப்புடன் கூறிட,

ஏனோ கார்த்திக்கிற்கு பெண்ணவளின் கோபம் ரசனையாய் இருந்தது….

"ஓகே… ஓகே… இன்டர்கட் பண்ணல நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க” என்றதும்,

"நான் முன்னே வேலை பார்த்த இடத்தில் திடீர்னு வேலை போயிடுச்சி… எங்கெல்லாமோ வேலை தேடியும் எதுவும் சரியா அமையலை… என் தம்பி சொல்லி தான் உங்க அப்பாவைப் பார்த்து வேலை கேட்டேன்… இன்னும் ஒரு வருஷத்தில் என் சர்ட்டிபிகேட் கிடைச்சுடும்… மேல படிக்கவும் செய்வேன்… வேற வழி இல்லாம இங்கே வேலைக்கு வந்தவ தானேனு இளக்காரமா நினைச்சுடாதீங்க சார்.. வேலையை சரியா செய்வேன்… உங்க கம்பெனியோட உயர்வுக்குக் கடுமையா உழைப்பேன்… என் வேலையில் தப்புனா நீங்க தயங்காம என்னை கேளுங்க..." என படபடவென பட்டாசு போல வெடித்தாள் பாவை.

"ஹலோ…ஹலோ… ஸ்டாப் ஸ்டாப் ரேவதி உங்களை நான் எப்போ இளக்காரமா நினைச்சேன்…" என்றான் அவள் பேச்சினை தடைசெய்து….

"அதான் உங்க பார்வையே சொல்லுதே சார்… கொடுத்த வேலையை ஜம்பமா வேண்டான்னு சொல்லிட்டு இங்க வந்து நிக்கறாளேன்னு…. நீங்க அப்படி தானே பார்த்திங்க… எனக்கு தெரியும் சார்" என்றாள் விடாமல்.

"ஹோ… அவ்வளவு ஜீனியர்ஸா நீங்க?... நான் என்ன நினைக்கிறேன் என் பார்வைக்கு என்ன அர்த்தனும்னு கூட நான் சொல்லாமலே உங்களுக்கு புரியுமா ரேவதி..." என்றான் நக்கலாகவே,

"இதோ…இதோ.. இது தான் சார் இந்த பேச்சு அப்படி தானே சார் காட்டுது…" என்றவள் அவன் கேலியாய் இதழ் வளைத்து பேசியதை சுட்டி காட்டினாள்….

தன் பார்வைக்கும் பேச்சிக்கும் தானாக ஒரு அர்த்தத்தை கண்டுபிடித்து பேசுவதை பார்த்து கார்த்திக்கிற்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது…. அவள் செய்கையில் மூண்ட  கோவத்தை கட்டுப்படுத்தியவன்,

*முடிச்சிட்டிங்களா ரேவதி…. போங்க போய் வேலையை பாருங்க… அது என்னமோ சொன்னிங்களே கம்பெனிக்காக உழைப்பேன்னு முதல்ல அதை செய்யுங்க இங்கிருந்து கிளம்புங்க" என்றான் அவளைப் பாராமல் ஃபைலில் பார்வையைப் பதித்து.

அவன் தோரணையும் பேச்சும் ரேவதிக்கு கடுப்பாக இருக்க, அவனை முறைத்தபடியே அறையில் இருந்து வெளியேறி இருந்தாள்.

அவள் சென்றதும் மழையடித்து ஓய்ந்தது போல இருந்தது அவளது பேச்சு…. "அப்பா என்னடா இப்படி வீம்புக்குன்னு நிக்குறா!?… நான்‌ ஒரு எம். டி  அந்த பயம் கூட இல்லாம சர சரன்னு பேசிக்கிட்டே போறா…. ம் ரொம்ப தைரியம் தான்…. பாப்போம்‌ எது வரையும் போகுதுன்னு…" என்றவனுக்கு அவளுக்கு பிரச்சனை ஏதும் இல்லை என்பதே ஒருவகையில் நிம்மதியாக இருக்க ரகுவை அழைத்து அவளுக்கான வேலைகளை கொடுத்து பார்த்துக் கொள்ள கூறினான்.

வெளியே வந்தவளோ தனக்கு தானே புலம்பிய படி வந்தாள்.

"அறிவு இருக்காடி‌ உனக்கு… தத்தி தத்தி. அந்த திமிர் புடிச்சவனை போய் ஆன்னு பாக்குறா… அவன் என்ன நினைச்சி இருப்பான்... ஏற்கனவே எளக்காரமா தான் பார்ப்பான் இனி சுத்தம் வந்தோமா வேலையை பார்த்தோமா போயிட்டே இருக்கனும்…"   தலையில் இரு முறை தட்டிக்கொண்டு தனது இடத்தில் அமர்ந்தவளை ரகு வினோதமாக பார்த்தான்.

உள்ள இருப்பவர் தான் கடிக்கிறாருன்னு பார்த்தா இந்த பொண்ணு தனக்கு தானே புலம்பிட்டு வருது…‌  யோசனையாக பார்த்தவன் தன் வேலையை தொடர்ந்தான்..

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro