அலை 26

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஹாய் ஹலோ டியர்ஸ்... என்னை மன்னிச்சிடுங்க.. இதை தவிர வேற வார்த்தை என்கிட்ட இல்லை உடம்பு ரொம்ப படுத்தி எடுத்து விட்டது அதுதான் யூடி போட முடியலை..‌. இனி இதுபோல நடக்காது... கதை முடிச்சிட்டு தான் போவேன்....

சோ என்னை பாலோவ் பண்ணுங்க செல்லங்களா....
......

அலை 🌊 26

“சுஜா இந்த ஜூசை மாப்பிள்ளைக்கும், நிஷாவுக்கும் கொடுத்துட்டு வாடா”

சுஜாதாவின் கரங்களில் பழச்சாறு அடங்கிய டிரேவை கொடுத்தார் கல்யாணி…

அன்னை  சொல்லியதை  தட்ட முடியாமல் வாங்கிக் கொண்டவளுக்கு தன்னை போல் ஒரு மெல்லிய படப்படப்பும் வந்து ஒட்டிக் கொண்டது.

நிஷாவுடன் பேசிக் கொண்டிருந்தாலும், சஞ்சையின்  பார்வை முழுவதும் தன்னை  விழுங்குவது போன்றே இருக்க, இயல்பாக அவனை எதிர் கொள்ள முடியாமல் தவித்தாள்..

கைகள் சில்லிட்டு, கால்கள் ஒன்றொடு ஒன்று பின்னிக் கொண்டு,  பாதங்கள் அடுத்த அடி வைக்க சண்டித்தனம் செய்ய, முயன்று அவர்களை நோக்கி முன்னேறினாள்.

தன்னை  நெருங்கி பழச்சாற்றை நீட்டியவளின் கடைக்கண் பார்வைக்கு ஏங்கி இருந்தவனோ, கண் இமைக்காது அவளை  தன் விழிகளால் சிறை எடுத்துக் கொண்டிருந்தான்.

அவன் இமைக்காத பார்வையில் கன்னங்கள் சூடேறி, வெட்கத்தில் சுஜாவின் கையில் இருக்கும் டிரே தன்னாலே ஆட்டம் கண்டதில்,

“சஞ்சய் ஜூஸ் எடுத்துக்குங்க” குரலே எழுப்பாது அவனிடம் கூறினாள் பேதை,

பார்வைகள் மட்டும் பறிமாறிக் கொள்ள, வெகுநேரம் சஞ்சையின் அருகில் குனிந்த நிலையிலேயே சுஜா நின்றுக் கொண்டிருப்பதை  கவனித்த நிஷா ,

“ப்ரோ… ஜூஸ் எடுக்கல”  தங்கையின் குரலில்  தன்னிலை மீண்டு,  அவசரமாக‌ ஒன்றை எடுத்துக் கொண்டவன்,

“லுக்கிங் ஸ்டனிங் டியர்… “தங்கை தங்களை நோட்டம் விடும் முன்னே உதட்டசைவில் தன்னவளுக்கு செய்தி அனுப்பி, சட்டென இதழ் குவித்து முத்தம் கொடுத்தவன்  போன் வரவும் இதுதான் சாக்கென அங்கிருந்து எழுந்து சென்று விட்டான்.

அவன் செய்கையில் குப்பென புது ரத்தம் முகத்தில் பயந்தது போன்ற சூட்டை உணர்ந்தவளுக்கு,  லட்சம்  பட்டாம்பூச்சிகள் வயிற்றுக்குள் பறப்பது போன்று இன்ப அவஸ்தையாகி போனது.

தள்ளாடிய கால்களை பெருவிரலை  அழுத்தி நின்றவள், இருக்கும் இடம் உணர்ந்து, சட்டென  தன்னை நிலைப்படுத்தி, “அண்ணி ஜூஸை எடுத்துக்குங்க” என நிஷாவிடம் ஒன்றை நீட்டினாள்.

விரும்பியோ விரும்பாமலோ நிஷாவை அண்ணனுக்கு பேசி முடித்தாகி விட்டது. இனி அவர் தானே  தன் அண்ணனுக்கு எல்லாம்… அண்ணனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை அண்ணிக்கும் கொடுத்து தானே ஆக வேண்டும், சஞ்சைக்காகவும், தன் அண்ணனுக்காகவும் அவளை‌ ஏற்றுக் கொள்ள முடிவு செய்தவள் நிஷாவிடம் இயல்பாக பேச ஆரம்பித்து இருந்தாள்.

“தேங்க்ஸ் சுஜா…”  பழச்சாற்றை எடுத்துக்கொண்ட நிஷா,   வாசலிலேயே விழியை வைத்துக் காத்திருந்தாள்.

அழகிய லாவண்டர் நிற ஷிப்பான் சேலையை ஒரு பக்கமாக அணிந்து, அதற்கேற்ற ஒப்பனையிலும், விரிந்த கூந்தல் அவள் தோள்களில் வழிய, அழகியாய் வந்திருந்தாள்.

“என்ன அண்ணி வாசலையே  பாக்குறிங்க….?”  நிஷாவை கேட்டுக்கொண்டே அவள்  பக்கத்தில் அமர்ந்தாள் சுஜா.

“உங்க அண்ணா இவினிங் வெளியே கூட்டிட்டுப் போறேனு  சொன்னாரு சுஜா… இன்னும் வரல…  கால் பண்ணேன் நாட் ரீச்சபல்ன்னு வருது  அதான் அவர் வர்றாரன்னு பாத்துட்டு இருக்கேன்… ஆமா நீ என் பிரதரோட எங்கேயும் வெளியே  போகலியா…?” அவள் பக்கத்தில் சாய்ந்து கேட்கவும்,

தன்னவனை பற்றி பேசியதில் தற்போது அவன் செய்த செயல்கள் யாவும், நினைவுக்கு வர, குங்குமமாய் சிவந்த கன்னங்கள் சுஜாவின்  வெட்கத்தை சொல்லாமல் சொல்லியது.

“ஹேய் சுஜா… யுவர் ப்ளஷிங்”, வியப்பாய் அவள் கன்னத்து சிவப்பை பார்த்து “என் ப்ரோவை பத்தி பேசினாலே ப்ளஷ் ஆகுற… நைஸ்… நல்லா இருக்கு…  பட் எனக்கு இப்படி ஆகுமா…?” சந்தேகமாக  தன் கன்னத்தை தொட்டு காட்டினாள் நிஷா.

“போங்க அண்ணி, கிண்டல் பண்ணாதிங்க  அம்மா கூப்பிடுறா மாதிரி இருக்கு” என நிஷா தடுப்பதற்குள் சுஜா  உள்ளே ஓடி விட்டாள்.

போனில் யாருடனோ பேசி முடித்த சஞ்சாய் ஹாலுக்கு வர, சுஜா ஓடுவதை கண்டு  “ஏய்  என்ன டா பண்ண அவளை எதுக்கு இப்படி ஓடுறா?” தங்கையிடம் அதிர்வாய் வினவினான் தமையன் ?

“கூல் கூல் ப்ரோ…  உன் ஆளை ஒன்னும் பண்ணிடலை… அத்த கூப்பிட்டாங்கன்னு உள்ள போய் இருக்காங்க… ஆமா, நீ என்ன மேன் பண்ண சுஜாவை…. உன்னை பத்தி பேசினால ப்ளஷ் ஆகுறா…? அதான் என்ன எப்படின்னு விசாரிச்சிக்கிட்டு இருந்தேன்…?” வெளிப்படையாகவே அண்ணனை கிண்டலடிக்க  தங்கையை காண முடியாமல், வாராத போனை வந்துவிட்டது போல  பேசியபடியே எழுந்துக் கொண்டான்.

அண்ணன் நழுவி ஓடுவதை பார்த்து, “நல்லா செய்றிங்க…”  இதழுக்குள்ளே புன்னகையை அடக்கிக் கொண்டவள், தன் மனதை கொள்ளை கொண்டவனுக்காக காத்திருந்தாள்.
…..

“ரேவதி….”  என அழைத்துக்கொண்டே அந்த வாகனத்தின் பின் ஓடிய  கார்த்திக்கின் வார்த்தைகள் யாவும் காற்றோடு காற்றாக கலந்து விட, “அய்யோ சார் யாரோ ரேவதியை கடத்திட்டு போறாங்க…”  என்றான் ரகு பதற்றம் நிறைந்த குரலில்,

அடுத்த நொடியே,  “பேச நேரம் இல்லை ரகு…  உன் பைக் கீயை கொடு”  அவசரகதியில் வாங்கிக் கொண்ட கார்த்திக் “ரகு… இதுல ஜீபீயஸ் இருக்குல என்னை பலோப் பண்ணிக்க” என்றபடி காற்றை விட வேகமாக பைக்கில் அவர்களை பின் தொடர்ந்து விட்டான்.

“சார் நம்ம ஆபீஸ்ல இருக்க‌ ரேவதி  பொண்ணை யாரோ  வண்டியில் இழுத்துக்கிட்டு போறாங்க சார்”  வேகமாக ஓடிவந்த காவலாளி ரகுவிடம் கூறிட, 

பட்டென அவன் கன்னத்தில் அறைந்த ரகு, “வேலை நேரத்துல நீ எங்கய்யா போய் தொலைஞ்ச” காவலாளியிடம்  எகிறினான் அவன்.

“சா…சார்… டீ… குடிக்க” அவன் பயத்துடன் விட்டு விட்டு சொல்ல

“அப்படியே போய் தொலைய வேண்டியது தானே… இப்போ எதுக்கு வந்த…‌எவன் எவனோ உள்ள வர்றான் போறான்‌ நீ என்ன கிழிக்க இங்க வேலைக்கு இருக்க இதுதான் நீ வேலை பாக்குற லட்சணமா…” ரகு, அவனை காய்ச்சி எடுத்த நேரம் அலுவலக வளாகத்திற்குள் காவல் துறை ஜீப் வந்து நின்றது.

“யாருய்யா இங்க போன் பண்ணது… என்ன கலாட்டா” கேட்டுக்கொண்டே எஸ் ஐ வண்டியிலிருந்து இறங்கினார்.

வேகமாக அவர்களை நெருங்கிய ரகு, “சார்…  சார்…  உங்களுக்காக தான் வைட் பண்றேன் இப்போ தான் எங்க ஆபீஸ்ல வேலை செய்ற ரேவதின்ற பொண்ணை வண்டியில் கடத்திக்கிட்டு போயிட்டாங்க” ரகு படப்படப்புடன் கூறினான்,

“உங்களுக்கு எப்படி தெரியும்…‌” அவர் குறுக்கு விசாரணையை தொடங்கிட,

“நான் தான் உங்களுக்கு இங்க பிரச்சனைன்னு போன் பண்ணேன் சார்….  பிரச்சனை‌ முடிஞ்சி அந்த பொண்ணு வெளிய போகும் போது தான் ஒரு கும்பல் மயக்க மருந்து கொடுத்து எங்க கண்ணு முன்னாடியே கடத்திட்டாங்க…”  என்றான் ரகு விலாவரியாக,

“வண்டி நம்பர் கடத்தினது யாருன்னு தெரியுமா‌…” இப்போதும் அவர் விசாரணையில் இருக்க,

“அய்யோ அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சின்னு தெரியலையே இவரு இப்பதான் எல்லாத்தையும் நிறுத்தி நிதானமா கேக்குறாரு” மனதிற்குள் புலம்பிய ரகு,

“அதெல்லாம் தெரியாது சார்…. அந்த வண்டிய பாலோவ் பண்ணி தான் எங்க பாஸ் போய் இருக்காரு…  அவர் போனது என்னோட பைக்ல தான்… அதுல ஜீபிஎஸ் செட் பண்ணி வைச்சி இருக்கேன்  சார்… எங்கே இருந்தாலும் என் வண்டியை கண்டு பிடிச்சிடலாம்” என்றான் தெளிவாகவே,

“அப்போ நீங்களும் வாங்க சார்” என ரகுவையும் அந்த ஜீப்பில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.

“சார் இது இங்க பாருங்க…”
ரகு அவனுடைய போனை போலீஸிடம்   காட்டினான்.  அதில் பைக்கின் ஜீபீஎஸ்‌ ஒரே இடத்தில் ஒளிர்வதை கவனித்த அதிகாரி அவர்களது வாகனத்தை அதை நோக்கி செலுத்த ஆணையிட்டார்…

……

மயக்க மருந்தின் வீரியத்தில் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தாள் ரேவதி. அவளின்   கை கால்களை கட்டிய நிலையில் வண்டியின் பின்பக்கம் படுக்க வைக்கப்பட்டிருக்க,
பாதி முகத்தை கைகுட்டையால் முடியபடி மூன்று  பேர் வண்டியின் முன் பக்கம் இரண்டு பேர் பின்பக்கமும் அமர்ந்திருந்தனர்.

“டேய் மணி ….
கஜா அண்ணனுக்கு போனைப் போடு”  அந்த கூட்டத்தில்  ஒருவன் ஆணையிட

“இதோணா..”  என்றபடி மணி என்பவன் கஜாவை  தொடர்பு கொண்டான்.

“அண்ணா பக்காவ ஸ்கெட் போட்டு ஆளை தூக்கியாச்சி ணா… பார்ட்டி  தொக்க சிக்கிருச்சி…” அவன் உற்சாகத்துடன் கஜாவிடம் கூறிட,.

கண்களில் குரூரமான  சிரிப்புடன் “நம்ம இடத்துக்கு தூக்கிட்டு வாங்கடா… அங்க வைச்சி அவளை பாத்துக்குறேன்…”  ரேவதியை அனுபவிக்க போகும் ஆசையில் வாயெல்லாம் பல்லாக  கூறினான் கஜேந்திரன்.

“அதுக்கு இன்னா தல இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்போம் அப்புறம் எங்களுக்கு துட்டு…” அவன் இளிக்க

“எத்தனை நாள் தண்ணி காட்டிட்டு இருந்தா அவளை தூக்கி என்னை குஷியாக்குன, உங்களுக்கு இல்லாததா டா….  அங்க வந்து வாங்கிக்க…”  என்றபடி போனை வைத்தவன்,

“அண்ணே‌ பார்டிய அந்த இடத்துக்கு தூக்கிட்டு போக சொல்லிட்டாரு” ஓட்டுபவனிடம் கூறிட அதிக வேகமெடுத்தது அந்த வாகனம்.

“அய்யோ நேரம் வேற போயிட்டே இருக்கே… சார் சாருக்கு கால் பண்ணலாமா அவர் வேற வண்டி ஓடிட்டு இருப்பாரு” ரகுவின் மனதில் நாலபுறமும் யோசனையில் ஓடிக் கொண்டிருக்க, அவன்  போன் அலறியது.

“சார் சார்…. எங்க எங்க பாஸ் தான் சார், கால் பண்றாரு…” ரகு பதறிக் கொண்டு  காவல் துறை அதிகாரியிடம் கூறினான்,

“எடுங்க சார் எடுத்து எங்க இருக்காருன்னு கேளுங்க,”

“பாஸ் என்ன ஆச்சு… ரேவதி ரேவதி எப்படி இருக்காங்க நீங்க சேஃப் தானே…” அவனை முந்திக் கொண்டு கேட்டான் ரகு…

“நான் ஓகே தான் ரகு… ரேவதியை  பாலோவ் பண்ணி இடத்துக்கு வந்துட்டேன்… நீ  போலீஸிக்கு இன்பார்ம் பண்ணிட்டியா அவங்க வந்துட்டாங்களா…”  மடமடவென கேள்விகளை அடக்கினான் கார்த்திக்.

“போலீஸ்  கூட தான் பாஸ் நான் இருக்கேன்… நீங்க போற  பைக்கோட ஜீபிஎஸ்ஸை பாலோவ் பண்ணிட்டு தான் பாஸ் வந்துட்டு இருக்கோம்” என்றான் அவனுக்கு தகவலாக,

“ஓகே ரகு சீக்கிரம் போலீஸோட வந்துடு” என்றபடி போனை வைத்தவன் மறைந்து மறைந்து அந்த பாழடைந்த கட்டிடத்திற்குள் நுழைந்தான்.

கைகால்களை கட்டிய நிலையில் மரக்கட்டையாக உணர்வில்லாது கிடந்தவளை ஒரு அறையில் அடைத்து வைத்தவர்கள் வெளியே காவலுக்கு நின்றுக் கொண்டிருந்தனர்.

அவர்களை அடிப்பதற்கு வாகாக கைக்கு ஏதாவது சிக்குகிறாதா என கண்காளால் துழாவிக்கொண்டே பதுங்கி பதுங்கி உள்ளே நுழைந்தவன் ஒரு இரும்பு பைப் கிடைக்கவும்  கையில் எடுத்துக் கொண்டவன், ரேவதி அடைத்து வைத்திருக்கும் அறையை தேடிக் கொண்டிருந்தான்.

ஏகப்பட்ட அறைகள் இருக்க ஒவ்வொரு அறையாக தேடிக்கொண்டே வந்தவனது விழிகளில் அவள் கைகால்கள் கட்டிய நிலையில் மயக்கி கிடப்பது  விழவும்  அடித்து பிடித்து அவளிடம் விரைந்தவன் “ரதிமா… ரதி…. இங்க பாருமா… இங்க பாருடா…” முகத்தை கைகளில் ஏந்தி தாடையின் இரு புறமும்  தட்டி அவளை சுயநினைவுக்கு வரவைக்க முயன்றான் கார்த்திக்…

தொடரும்..

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro