அலை 35

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

பரப்பரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சென்னை மாநகரத்தை போலவே, ரேவதியும் பரப்பரப்புடன் ஆட்டோவில் இருந்து இறங்கி அலுவலகத்தை நோக்கி நடந்துக் கொண்டிருந்தாள்.

கார்த்திக்கின் புரியாத பேச்சிலும், ஊசிப்போல் குத்தும் பார்வையிலும், சிக்கிக் கொள்ளாமல் இன்று எப்படியாவது  வேலையை சீக்கிரமே முடித்து  வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற முனைப்புடன், முதல் நாள் போல் அழுது வடியாமல்  சீக்கிரமே அலுவலகம் வர நினைத்தாள் ரேவதி. நேற்று மாலை வெகு நேரம்  மூளையை கசக்கி பிழிந்து யோசித்ததின் விளைவு, இத்தனையும்…

அவள் வரும் போது தான் ரகுவும் அலுவலகம் வந்திருந்தான். ரேவதியை கண்டவன் அவளை பார்த்து மெச்சுதலாக புன்னகைக்க, ரேவதியின் முகத்திலும் புன்னகையின் சாயல் தோன்றியது. 

“குட் மார்னிங் ரேவதி… என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க…?”  ஆச்சர்யமான பாவனையுன் அவளை பாரத்தான் ரகு.

மலர்ந்த முகத்துடன் புன்னகையித்தவள்,

 “குட் மார்னிங் ரகு சார்.., 

கொஞ்சம்  முடிக்க வேண்டிய வேலை பெண்டிங் இருக்கு அதான் இயர்லியா வந்துட்டேன்…” 

நின்று, இரண்டொரு வார்த்தை ரகுவிடம் பேசியவள் அதோடு தன் பகுதிக்கு சென்று விட்டாள். 

எல்லோருடனும் இயல்பாக பேசினாலும், யாரிடமும் அதீத நெருக்கத்தை காண்பிக்காத ரேவதிக்கு,  ரகுவிடம் அந்த விலகலை கடைபிடிக்க முடியவில்லை… நட்புடனும் சகோதரத்துடனும் பழகும் அவனை தள்ளி நிறுத்த முடியாமல் சிரித்த முகமாகவே பேசி சென்றிட  , அவள் சென்ற திக்கையே பார்த்திருந்தவன் சிறிது நேரம் கழித்து அவனும் அங்கே சென்று தன் வேலையை தொடர்ந்தான்.

முன் தினத்தை போன்று அதிக வேலை பளுவை கொடுக்காமல்,  அவளால் முடிந்த வேலைகளை கொடுத்தவன், அவளை கொஞ்சம் சுதந்திரமாக விட்டிருந்தான்.

கார்த்திக் கேட்டதும் இதைத் தானே…  அவளுக்கு வேலையை குறைத்து கொடுத்து அவள் பக்கத்திலும் இருந்துக் கொண்டான் ரகு. 

“ரேவதி அந்த பைலை கொடுங்க”

அவள் பார்த்துக் கொண்டிருந்த அக்கோன்ட்ஸ் ஃபையிலை கேட்டிருந்தான் ரகு.

“சார்… இது எல்லாம் பில் பண்ணி சிஸ்டமில் ஃபிட் பண்ணனும் சார் இன்னும் வேலை முடியலையே… மதியம் மேல ஆகிடும் இவினிங் தரட்டுமா…?” பணி முடியவில்லையே என ரகுவை தயக்கமாக பார்த்தாள்.

“பரவாயில்லை ரேவதி… அதை கணேசன் பாக்குறேன்னு சொல்லி இருக்காரு… நீங்க இதோ இதை பாருங்க”

ஒரு சிறிய ஃபைலை அவள் முன்னாடி வைத்து விட்டு அவள் கையில் இருந்த ஃபைலை வாங்கிக் கொண்டன். 

‘இங்க என்ன நடக்குது நேத்து அவ்வளவு வேலை கொடுத்து  மனுஷனை உட்கார முடியாதபடி விரட்டியடிச்சார்…  இன்னைக்கு வேலையை கொடுக்காம ஃப்ரியா இருக்க விடுறார்… இவருக்கு என்னமோ ஆகிடுச்சி…’  மண்டைக்குள் பல கேள்வி சுற்றிக் கொண்டிருக்க, ரகுவை நேரடியாகவே  கேட்டு விட்டாள் ரேவதி.

“ரகு சார்… ஒரு நிமிஷம்”. அவசரமாக சென்றுக் கொண்டிருந்தவனை நிறுத்தினாள் ரேவதி.

“சொல்லுங்க ரேவதி…” அவசரமிருந்தாலும் நிதானமாகவே பேசினான் அவளிடம்.

“சாரி சார் கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதிங்க நேத்து நிறைய வேலை கொடுத்திங்க இன்னைக்கு வேலையே கொடுக்காம என்னை ஃப்ரியா விடுறிங்க என்ன தான் நடக்குது இங்க…? காரணம் தெரியாம எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு…?” மெல்லிய குரலில் என்றாலும் அழுத்தமாகவே கேட்டிருந்தாள்.

கண்டுபிடித்து விட்டாளே‌ என, மனம் திடுக்கிட்டாலும், அதை வெளியே தெரியாமல் சாதரணமாக நின்றிருந்தவன், 

“இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு ரேவதி… உங்களுக்கு தோனுது நீங்க கேக்குறிங்க… நீங்க வந்த அன்னைக்கு அக்கௌன்ட்ஸ் டிபார்ட்மென்டல ஒருத்தர் லீவு அதான் அவரோட வேலையையும் சேர்த்து உங்களை பார்க்க செல்லிட்டேன்… இன்னைக்கு அவர் வந்துட்டார்  சோ வேலையை பிரிச்சி கொடுத்து இருக்கேன்… அதுவும் இல்லாமல்  இன்னைக்கு உங்களுக்கு அட்மின்ல தான் வேலை… நீங்க அங்க போங்க” அவள் நம்ப வேண்டுமே‌ என்று சில பல காரணங்களை சேர்த்து சொல்லி இருந்தான் ரகு.

அவன் கூறிய காரணங்கள்,  சரியாகவே இருந்தாலும், ஏதோ அவளுக்கு மனம் முரண்டிக் கொண்டு தான் இருந்தது. 

இன்னைக்கு ரகு சீக்கிரம் வந்ததிலிருந்து தனக்கு வேலையை பகிர்ந்து கொடுத்தது முதல், தான் இருக்கும் இடத்தில் வேலையை தொடர்ந்தது வரை எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், ‌‍‍‌அப்போதைக்கு சரியென தலை அசைத்து அங்கிருந்து நகர்ந்தவளுக்கு முகம் தெளியவே இல்லை… 

‘என்னவோ இருக்கு… இது கார்த்திக் வேலையா கூட இருக்கலாம்’ மனதில் எண்ணினாலும் வெளியே கேட்கும் எண்ணமும் இல்லை, தைரியமும் இல்லை…. அமைதியாகவே இருந்தாள். அதையும் கேட்டு அவனிடம் பேச்சு வாங்க வேண்டுமா என எண்ணியவள் வாய் திறக்கவே இல்லை…

அவள் குழப்ப முகத்தையும் அமைதியையும்  பார்த்த ரகுவிற்கு தான் அய்யோ என்றிருந்தது, உண்மையை சொல்லி விட நாக்கு துடித்தாலும் கார்த்திக்கை மனதில் நினைத்து அமைதி காத்தவன்… தலையை இடமும் வலமுமாக ஆட்டியபடி அவனது வேலைகளை பார்த்தான். 

ரகு வந்ததே அவளை பார்த்துக் கொள்ளத் தானே… அலுவலகம் கிளம்பி கொண்டிருந்த கார்த்திக்கிற்கு, ரேவதி எட்டு மணிக்கெல்லாம் கிளம்பி விட்டாள் என சிவாவிடமிருந்து தகவல் வரவும் ரகுவை அவளுக்கு துணையாக அலுவலகம் கிளம்ப சொல்லி இருந்தவன் தானுமே சீக்கிரமாக  வந்து விட்டான்.

கார்த்திக்  அலுவலகம் வந்தாலும் அவனைக் கண்டுக் கொள்ளாதவள், தான் உண்டு தன் வேலை உண்டு என்று  வேலையில் கவனமாக இருந்தாள். 

முக்கியமாக அவன் கவனம் தன் மேல் திரும்பாதவாறு வெகு சாமரத்தியமாக வேலை இருப்பது போல் காட்டிக் கொண்டாள்.

அலுவலகம் உள்ளே நுழைந்த கார்த்திக்கின் பார்வை முழுவதும்  மனைவியின்  மேல் தான் நிலைத்திருந்தது .

இன்று கரும்பச்சையில், வெள்ளை கொடிகளை வரைந்தது போல காட்டன் சுடிதார்  அணிந்திருந்தவள்,  தன் கழுத்தை சுற்றி துட்டப்பாட்டவை படர விட்டிருந்தாள்.

துப்பட்டாவில்  சரிபாதி  இடது  தோளில்   வழிய, அதன் பின் பாதி கழுத்தை சுற்றி இடது தோள் வழியாக அவளின்  பின் பக்கத்தில் வழிந்து, கழுத்தை முழுவதும் மறைத்து விட்டிருந்தது. 

முழுவதும் மூடி இருந்த மனைவியின் கழுத்தை தீவரமாக ஆராய்ந்ததில் இன்றும்  கண்களுக்கு சிக்காமல் போனது அவன் கட்டிய திருமாங்கல்யம்.

‘அவனே வேண்டாம்னு சொல்லிட்டோம் அப்புறம் அவன் கட்டிய இந்த தாலி மட்டும் எதுக்குன்னு தூக்கி எறிஞ்சிட்டாளா…!’ 

அவன்  நினைக்கும் போதே ஏதோ நெஞ்சை அழுத்தியதை போல வலி எடுக்க,  முயன்று தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டவன், அவளை கடந்து தான் வந்தான்.. 

இருந்தும் கடமையே கண்ணாக இருந்தவளை பார்த்தவனுக்கு கோபமாக வந்தது.

“ஒருத்தன் இவளுக்காவே இவ்வளவு அவசர அவசரமா கிளம்பி வந்து இருக்கான் நிமிந்து பாக்க கூட வலிக்குதா இவளுக்கு… திமிர் புடிச்சவ…” உள்ளுக்குள் புகைந்து வர, அதே வேகத்தில் விடு விடுவென அறைக்கு வந்து விட்டான். 

“எனக்கு மட்டும் ஃபீலிங் வந்து என்ன புண்ணியம்… வர வேண்டியவளுக்கு அது வரலையே…!!!”

ஒரு நிமிடம் உள்ளே கூப்பிட்டு பேசுவோமா என்று கூட இருந்தது. 

“பச்… தேவை இல்லாம சீன் கிரியேட் பண்ணி அதுக்கும் ஏதாவது ஏடகூடமா பேசுவா….  நமக்குதான் டென்ஷன் ஏறும் கொஞ்சம் விட்டு பிடிப்போம்” 

வாய் விட்டே எரிச்சலாக முனுமுனுத்து

தலையை உலுக்கி கொண்டு,  தன்னுடைய இருக்கையில் அமர்ந்து விட, வேலைகள் இழுத்துக் கொண்டதில், சற்றே இயல்பிற்கு மாறி இருந்தான்..

அவனிடமிருந்து பேச்சு வாங்கவில்லை என்ற நிம்மதியுடன் வேலையில் முழுமனதோடு ஈடுபட்டிருந்தவளது நிம்மதி பறிபோனது மதியத்திற்கு மேலே வந்த அலைபேசியின் அழைப்பில்,

இரண்டு மூன்று முறை அடித்து ஓய்ந்து போய்  மீண்டும் தன் செயல் திறனை காட்டிக் கொண்டிருந்தது அவளது அலைபேசி.

இம்முறை அதை கைகளில்  எடுத்து பார்த்தாள். புது எண்ணாக இருக்கவும் யோசனையுடன் இயக்கியவள் யார் என பார்க்க, அதில் கேட்ட குரலில் முகம் செந்தணலாய் மாறி கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.

…….

கார்த்திக்கின் வீட்டிற்கு வந்திருந்தனர் சஞ்ஜையின் பெற்றவர்கள்.

வலிய புன்னகைக்க முயன்றபடி அவர்களின் முன் ஜூஸ் தம்பளருடன் வந்து நின்றாள் சுஜாதா… 

உயிர்ப்பற்ற கண்களும், ஒளியற்ற முகமாய் வந்து நின்றவளின் மேல் நிலைத்தது மாதவியின்  பார்வை. மருமகளை ஆராய்ச்சியாக பார்த்தபடி ஜூஸை எடுத்துக் கொண்டார் மாதவி.

எங்களை தப்பா எடுகத்துக்காத தேவா…தழுதழுப்புடன்   சஞ்ஜயின் தகப்பனார் தேவராஜின்‌ கையை பிடித்துக் கொள்ள தேவராஜிற்கு ஒன்றும் புரியவில்லை… 

தாங்கள் தானே மன்னிப்பை கேட்க வேண்டும் இங்கே நிலமை அப்படியே தலை கீழே இருக்கே… அவருக்கு குழப்பமாக இருக்க,

என்ன அன்பு  எதுக்கு தப்பா எடுத்துக்க போறேன்… 

வந்திருந்தவர்களை புரியாமல் பார்த்தார் அவர்.

எப்படி ஆரம்பிப்பது வருத்தமாக அமர்ந்திருந்தார் அனபரசு., தங்கள் மகள் செய்த குளறுபடியை சொல்லித்தானே ஆக வேண்டும் வேறு வழியே இல்லாமல் இடிந்து போய் வந்தவர், 

“என் பொண்ணுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டா தேவா…”  என்றார் இறங்கிய குரலில்

“என்ன சொல்ற அன்பு..?” தேவராஜிற்கு இன்னும் விஷயம் விளங்காமல் தான் இருந்தது‌.

“ஆமா தேவா… நிஷா கல்யாணம் வேண்டாம்னு மறுத்துட்டா… அது… அதுக்காக சுஜா சஞ்ஜய்  கல்யாணத்தை நிறுத்த முடியாதே… அதனால குறிச்ச நேரத்துக்கே இந்த கல்யாணத்தை வைச்சிக்க முடியுமான்னு தான் கேட்க வந்தேன்…” நண்பனிடம் எப்படி கேட்பது என தயக்கம் பாதியாகவும் கலக்கம் மீதியாகவும் தேவராஜை பார்த்தார் அன்பரசு.

கல்யாணியின் கவலையான  முகத்தில் இப்போது தான் தெளிவே வந்தது… 

“அண்ணா என்ன சொல்றிங்க சஞ்ஜய் தம்பி என்ன சொன்னாங்க…? நிஷா என்ன சொன்னா…?” என்றார் அவர்கள் கூறியதை தெரிந்துக் கொள்ளும் வேகத்தில்.

“என் பொண்ணுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லம்மா… எவ்வளவோ எடுத்து சொன்னோம் வேண்டாம்னு ஒத்த காலில் நின்னு ஊருக்கு கிளம்பிட்டா… கல்யாணமே வேண்டான்னு பிடிவாதம் பிடிக்குற பொண்ணுக்கு எப்படி வலுக்கட்டாயமா பிடிச்சி கட்டி  வைக்கறது… வாழப் போறது அவங்க தானே ஒருத்தருக்கு ஒருத்தர் ஒப்பாமல் எப்படி…  அதான் வேற வழி இல்லாமல் விட்டுட்டோம்…  கார்த்திக் தம்பிய பாக்கவே கஷ்டமா இருக்கு… ஆனா அதனால என் மகனுக்கும் உங்க பொண்ணுக்கும் நடக்க வேண்டிய கல்யாணம் நிக்க கூடாது இல்லையா… அதான் உங்ககிட்ட கேட்டுட்டு போகலாம்னு வந்தோம்…” என்றார் அன்பரசு வருத்தமான குரலில். 

கார்த்திக் கல்யாணம் செய்து கொண்டு வந்த அன்று அன்பரசுவிற்கும் அழைத்த நேரம் வெளியூரில் இருப்பதால் லைன் கிடைக்காமல் போக திருமணம் நடந்த நிகழ்வை சொல்ல முடியாமல் போனது.. கூடவே கல்யாணியின் உடல் நிலையும் சரியில்லாது போனதில் இதை தள்ளி போட்டிருக்க,  இப்போது விஷயம் சுஜாதாவிற்கு சாதகமாக மாறி விட்டது.

இங்கே என்ன நடந்தது என்று தான் சுஜாதாவின் பெற்றவர்களுக்கு தெரியுமே… 

“ ரொம்ப ரொம்ப நன்றிண்ணா…”

 உணர்ச்சிப் பெருக்குடன் கைகளை கூப்பி அவர்களுக்கு நன்றியை தெரிவித்தவர், மானசீகமாக நிஷாவிற்கு தன் நன்றியை கூறிக் கொண்டார் கல்யாணி.

*என்ன அண்ணி  நீங்க..

கையெடுத்து கும்பிடுறிங்க… நாங்க தான் உங்க கிட்ட மன்னிப்பை கேட்கனும்” சஞ்ஜயின் தாய் கல்யாணியை 

சமாதனம் செய்ய அதில் நெகிழ்ந்தவர், 

“எல்லாமே நல்லபடியா நடக்கும் அண்ணி… பசங்க நல்லா இருப்பாங்க” என்றார் கல்யாணி உணர்ச்சி பெருக்குடன்.

சுஜாதவிற்கு இதை எப்படி எடுத்துக் கொள்வது என்றதான் புரியவில்லை… நேரில் சென்றால் கனலாய் கக்கினான் இன்று பெற்றவர்களை அனுப்பி

சம்மந்தம் பேச சொல்கிறான்… முழுதாக மகிழ முடியாமல் தங்கள் வாழ்க்கை எப்படி இருக்குமோ என்ற பயத்துடனே அறைக்கு சென்றாள். 

…….

யாரை இனி பார்க்கவே கூடாது  இனி யாரிடம் பேசவே கூடாது என உறுதியுடன் இருந்தாளோ அவன் குரல் கேட்கவும் ஸ்தம்பித்து விட்டாள் ரேவதி.

அழைத்தது வேறு யாரும் அல்ல அவளின் பழைய தலைவலி 

ராகவ் தான். இத்தனை நாள் நினைவுகளிலையே இல்லாதவன் இன்று தீடீரென அழைக்கவும் மூளை வேலை நிறுத்தம் செய்து விட்டது.

ரேவதியின்  அமைதியை கண்டு ராகவின் மனதில் பயப்பந்து உருண்டிட,

“ரேவதி.. ரேவதி… ப்ளீஸ்  மா பேசு… பேசு டா… ஏன் அமைதியாவே இருக்க… பேசு ரேவதி ப்ளீஸ்… நடந்தது எல்லாம் நானே எதிர்ப்பார்க்காதது ப்ளீஸ்டா…”

உருகி உருகி அவன் அழைக்கவும் அதில் ஏற்பட்ட அருவறுப்பில் அன்னிச்சையாக அலைபேசியை  கீழே தவற விட்டாள் ரேவதி.

ராகவின் மனைவி மீனாட்சி  பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஊசியாய் இப்போதும் அவள் உடலை துளைப்பது போன்ற வலியை இதயத்தில் எழுப்ப அவளுக்கு கண்கள் கலங்கி  உடல் கூசியது. 

ஒன்றும் புரியாமல் திக்க பிரம்மை பிடித்தவள் போல  தலையை பிடித்து அமர்ந்து விட்டாள் ரேவதி…

வேலை விஷயமாக அவளை கடந்து வந்த ரகுவின் பார்வைக்கு ரேவதியின் இந்த தோற்றம் விழுந்ததில், ஆராய்ச்சியாக அவளை பார்த்தபடியே வந்தவன்  கார்த்திக்கின்‌ அறைக்குள் நுழைந்தான்.

ரகு உள்ளே வரவும் “கிளம்பளாமா ரகு…”  என்றபடி இருக்கையை விட்டு எழுந்துக் கொண்டான் கார்த்திக்.

இரண்டு மூன்று சைட்டில் நடக்கும் வேலைகளை நேரில் சென்று பாக்க கிளம்பி இருந்தவன், எப்போதும் போல் கிளம்பும் நேரத்தில் ரேவதி இருந்த இருக்கையை பார்த்தான். 

மனைவி அமர்ந்திருந்த தோற்றம் கணவன் மனதை உறுத்தியதில் , என்ன ஆச்சி இவளுக்கு என்றபடி அவளையே தான் பார்த்தான்.

“சார்…”

 ரகு அழைக்க, கவனம் திரும்பாமல் ரேவதியின் பயந்த முகத்தையும் பதட்டத்தையுமே பார்த்துக் கொண்டிருத்தவன்

ரகுவின் அழுத்தமான இரண்டாவது அழைப்பில் கவனம் திரும்பியதில், .

“ரகு, ரேவதி ஏன்  ரெஸ்ட்லசா இருக்கா மாதிரி இருக்கு…? முகமெல்லாம் பயத்துல வெளுத்து போய்  இருக்கு…? என்ன நடந்துச்சி…?” 

அவளுக்கு என்ன ஆனதோ  என்ற ஆராய்ச்சி பார்வையுடன் ரகுவை பார்த்தான் கார்த்திக்.

“எனக்கும் தெரியல சார் நானும் அதை சொல்லத்தான் வந்தேன் அவங்க ஏதோ டென்ஷனான மாதிரி இருக்கு… என்னன்னு தெரியல நான் கேட்டா சொல்லுவாங்களான்னு தெரியல அதான் உங்க கிட்ட சொல்ல வந்தேன்…”

 ரகு கூறியதும்,  எதை பற்றியும் கவலைப்படாமல் அறையில் இருந்து வெளியேறியவன் அடுத்த நிமிடமே ரேவதியின் முன் நின்றான்.

அவன் வந்தது கூட தெரியாமல் தலையை தாங்கி பிடித்து அமர்ந்திருந்தாள் ரேவதி. அவள் அமர்ந்திருந்த தோற்றமே நிலைமை ஏதோ சரியில்லை என்பதை மட்டும் தெளிவாக அவனுக்கு உணர்த்தியது.

“ரேவதி… ரேவதி…. என்ன ஆச்சி ஏன் இப்படி உட்காந்து இருக்கிங்க…?” 

கார்த்திக் அழைத்த குரலுக்கு எந்த ஒரு எதிர்வினையையும் ஆற்றாமல் தலையை கவிழ்ந்தபடியே இருந்தாள் ரேவதி.

“ரேவதி உன்னைத்தான் கேக்குறேன்… என்ன ஆச்சி ஏன் இப்படி இருக்க…?”

சிறிது குரல் உயர்த்தி கேட்டபடியே கார்த்திக்  அவள் கையை தொட்டதும் டேபிளின் மீதே  மயங்கி சரிந்து விட்டாள் பாவை.

அவள் சரியவும் “ஓ…நோ…”

 பதட்டத்துடன் ரேவதியின் கன்னங்களை தட்டியவன்,

“ ரகு அந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துட்டு வா…”   

என்றான் அதே பதட்டமான  குரலில்.

அவள் மயக்கம் கொள்ளவும் அலுவலக ஊழியர்கள் அவள் டேபிளை சூழ்ந்துக்கொள்ள அவர்களை விலக்கிய ரகு, 

“கொஞ்சம் காத்து வர வழி விடுங்க …  ப்ளீஸ்  கொஞ்சம் விலகி போங்க… நாங்க பாத்துக்குறோம்…”

என்றபடி தண்ணீர் பாட்டிலை கார்த்திக்கிடம் கொடுக்க, அவள் முகத்தில் தெளித்த கார்த்திக், 

“ரேவதி ரேவதிமா…”

அவள் கன்னங்களை மீண்டும் தட்டி எழுப்ப இப்போது அரை மயக்கத்தில்  மெல்ல விழிகளை திறக்க முயன்றாள் ரேவதி. 

“இதோ ரேவதி எழுந்துட்டாங்க நீங்க எல்லாம் போங்க நாங்க சிக் ரூம் கூட்டிட்டு போறோம்”

 ரகு அங்கிருந்தவர்களை வேலை செய்யும் படி கூறிட, கார்த்திக் அவளை கைகளில் அள்ளிக் கொண்டு அந்த அறைக்கு சென்றான்.

பார்ப்பவர்களுக்கு தான் தங்கள் கண்களையெ நம்ப முடியவில்லை… தங்கள் முதலாளி ஒரு பெண்ணை அதுவும் தங்களுடன் பணிபுரியும்  ஒரு பெண்ணை இவ்வளவு அக்கரையாக தூக்கி செல்வதை பார்த்தவர்கள் அதற்கு கண் காது மூக்கு வைத்து தங்களுக்குள்ளாகவே கற்பனை குதிரைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.

இவர்களின் பேச்சிற்குற்கு  பதிலையும் சொல்ல முடியாமல், அவர்களுடனும் செல்லவும் முடியாமல்  சக பணியாளர்களை ஒரு பார்வை பார்த்த ரகு தன் வேலையை பார்க்க சென்றான்.

அறைக்குள் தூக்கி வந்தவன் மெத்தையில் கிடத்தி ஃபேனை சுழலவிட்டு கழுத்தில் சுற்றி இருந்த துப்பட்டாவை தளர்த்தி முகத்தை துடைத்தான்.

ஒற்றை படுக்கை கொண்ட அறை குளிர்சாதன வசதியுடன் இருக்க ஏசி ஆன் செய்தவன் 

“ரே மா… ரே…மா “

அவள் கன்னத்தை தட்டி எழுப்பிட,  கண்களை பிரிக்க‌ முடியாமல் பிரித்து பார்த்தாள் ரேவதி .

பார்வை ஒரு மாதிரி  தெளிவில்லாமல் மசமசவென தெரிய அன்னிச்சையாக அவன் கைகளை பிடித்துக்கொண்டு எழுந்து அமர்ந்தாள்.

பாத்து ரே மா… இப்போ ஓகே வா…

வாஞ்சையுடன் அவளை தன் கை வளைவில் எழுப்பி அமர வைத்து குடிக்க தண்ணீரை கொடுத்தான்.

ம் … அவன் குடுத்த தண்ணீரை குடித்தவளுக்கு அப்போது தான் தான் எங்கு யாருடன்  இருக்கிறோம் என்பதே புத்தியில் உரைக்க, சட்டென  அவனிடமிருந்து பதறி விலகியவள், நெகிழ்ந்திருந்த தன் துப்பட்டாவை சரிசெய்துக் கொண்டு, “நான்… நான் போறேன் சார்” படுக்கையிலிருந்து எழுந்துக் கொள்ள முயன்றாள்.

அதுவரை இலகு நிலையில் இருந்தவனுக்கு கோபம் வர அவள் கையை பிடித்து இழுத்து தன் அருகில் அமர வைத்தவன் “இப்படி உட்காரு…”  என்றான் அழுத்தமாக,

“பச் … விடுங்க சார்… என்ன இது கையெல்லாம் பிடிக்குறிங்க…?”  ரேவதி  அவனிடமிருந்து கையை உருவிக்கொள்ள முயன்றாள் .

அதில் எரிச்சலாகி,  “மரியாதையா உட்காரியா இல்ல நான் உட்கார வைக்கட்டுமா…?”  சீற்றமாக வந்த கார்த்திக்கின் குரலில் அமைதியானவள், உட்காரமால்

அவனை முறைத்துக் கொண்டு பக்கத்தில் நின்றிருந்தாள்.

“என்ன ஆச்சி உனக்கு…வீட்டுல ஏதாவது பிரச்சனையா…?” அக்கரையாக விசாரித்தாலும் அவன் குரலில் இருந்த அதிகாரத்தில் கடுப்பானவள், 

“எனக்கு என்ன ஆனா உங்களுக்கு என்ன சார்… நான் நல்லா தான் இருக்கேன்… எனக்கு வேலை இருக்கு நான் போறேன்” அங்கிருந்து கிளம்புவதிலையே  குறியாக இருந்தாள் அவள்,

ரேவதி எடுத்தெறிந்து பேசியதில்  கோபமானவன், “அறைஞ்சேனா  நான் என்ன கேட்டுக்கிட்டு இருக்கேன் நீ என்ன சொல்லிட்டு இருக்க… மயக்கம் போட்டு விழுற அளவுக்கு என்னடி பிரச்சனை உனக்கு..?” அவன் உரிமையுடன் கடிய அதில் ஒரு நொடி அதிர்ந்து விழித்தாலும், அடுத்த நிமிடமே சுதாரித்தவள்,

“எந்த உரிமையில் இது எல்லாம் சொல்லனும்னு நினைக்கிறிங்க  சார்… உங்களுக்கும்‌ எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை… நீங்க இப்படி பேசறதையும் நடந்துக்குறதையும் யாரவது பார்த்தா என்ன நினைப்பாங்க…? முதல்ல நீங்க கிளம்புங்க…  இல்லை என்னையாவது போக விடுங்க”  என்றாள் அழுத்தமாக,

“மத்தவங்க பாத்தா எனக்கு  என்ன டி… உன்னை தொட்டு தூக்குற அளவுக்கு  என்ன உரிமை இருக்குன்னு எனக்கு ஞாபகம் இருக்கு… அந்த ஞாபகம் உனக்கு இருக்கான்னு தான் தெரியல…?”

கார்த்திக்கின் பதிலில் ரேவதி அவனை முறைப்பாக பார்த்திட

முறைக்கிறதாலா எல்லாம் மாறிடுமா என்ன..? நமக்குள்ள என்ன உறவுன்னு நான் அடிக்கடி உனக்கு ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கனும் போலயே… !!” அவன் நக்கலாக கேட்கவும்

அதில் பல்லை கடித்தவள் “இப்போ என்ன வேணும் உங்களுக்கு எதுக்கு இழுத்து வைச்சி வம்பு பண்றிங்க அது எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு தானே வந்தேன்… மறுபடியும் மறுபடியும் அதை பத்தியே பேசினா‌ என்ன அர்த்தம்”  என்றாள் வார்த்தைகளில் காரத்தை கூட்டி…

நமக்குள்ள இருக்க உறவுக்கு என்ன அர்த்தம் இருக்கு இல்லைன்றதை   அப்புறம் பேசி தெளிவு படுத்திக்கலாம்… அதை விடு இப்போ அது பேச்சு இல்லை… பிரச்சனையும் இல்லை… உனக்கு என்ன ஆச்சு என்ன பிரச்சனை அதை சொல்லு நீ பதட்டமாகுற அளவுக்கு என்னடி நடந்தது” என்றான் சற்றே குரலை இளக்கியபடி  அதில் அவன் உரிமையும் அக்கரையும் தொணித்திட   கவலையாக அவனைப் பார்த்தாள்… 

அவனை வேண்டாம் என்று சொல்லி வந்து விட்டாலும்,  ஒரு கணவனாக கார்த்திக்கை மனம் ஏற்றுக் கொண்டதோ என்னவோ ராகவை பற்றி கூற தயக்கமாகவும்  இருந்தது… சங்கடமாகவும் இருந்தது.

‘அவனை  பற்றி தெரிந்தால் என்ன சொல்வானோ தன்னை  தவறாக நினைப்பானா….? கோவப்படுவானா… ?’  பல கேள்விகள் அவளை ஆட்டி படைத்திட, விழித்தபடி நின்றாள்… 

ரேவதி உன்னை தான் கேக்குறேன் அவன் அதட்டலில் தன்னிலை மீண்டவள்

“அது வந்து ரா… ராகவ் கால் பண்ணான்” என்றாள் திணறலாக…

“வாட்….  கம் அகைன்”  அவன் கர்ஜித்து எழுந்து நின்றதில் மிரண்டவள், 

“ச… சார்… எனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவனுக்கு கல்யாணம் கூட ஆகிடுச்சி…”

 பதட்டத்துடன் படப்படத்தவளின் முகமெல்லாம் வியர்த்து விட, கைகள் சில்லிட்டு நடுக்கம் கொண்டது… ஏன் இவ்வாறு பதட்டம் கொண்டாள் எதற்காக படப்படப்பானாள் என அவளுக்கே புரியவில்லை அவன் நம்ப வேண்டும் என்பது மட்டுமே மனதில் ஓடிக் கொண்டிருந்தது .

அவளின் பயத்தையும் பதட்டத்தையும் பார்த்து தன் கோபத்தை கட்டுப்படுத்தி அவள் அருகில் சென்றவன், 

“ஹே… ரேவதி… ஒன்னுமில்லைடா.. ஒன்னுமில்லை…” அவளை சமாதானம் செய்யும் விதமாக ரேவதியை தன்னோடு இழுத்து அணைத்து கொண்டவன், அவள் தலையை வருடி பதட்டத்தை தணித்து ஆஸ்வாசம் கொள்ள செய்தான். 

பயமும் படப்படப்புமாக, கார்த்திக்கின்  மார்பில் சாய்ந்திருந்தவளை  அவன் வருட  மெல்ல மெல்ல தன்னிலை மீட்டுக்கொண்டு வர… அவன்  அன்பிலும் அரவணைப்பிலும் ரேவதியின் உள்ளம் நெகிழ்ந்து விட்டது.

அவன் நம்பி விட்டானா…! என தெரியாது… ஆனால் இந்த அணைப்பு அவளுக்கு தேவையான ஒன்றாக இருக்க, தன்னையும் மறந்து தான் அவன் அணைப்பில் நின்றிருந்தாள். 

இருவருக்குமே  முதல் அணைப்பு. இரு வேறு சந்தர்ப்பங்களில் அவளை தொட்டு துக்கி இருந்தாலும், இந்த அணைப்பு அவன் மனதின் கொதிப்பை அடங்க செய்யும் அணைப்பாக இருக்க, அவனும் தன்னை மறந்து  தான் அவளை தாங்கி நின்றிருந்தான்.

அவன்  இதயத்தின் ஓசை பூவையின்‌ செவிமடலின் வழி அவளுள் தன் காதல் தடத்தை சிறிது சிறிதாக பதித்துக் கொண்டிருந்தது., 

கணவனின் முதல் ஸ்பரிசம் மேனியை  தீண்டியதில் அழமான மூச்சை இழுத்து விட்டவளுக்கு, புதுமையான பல உணர்வுகள் தாக்கியதில் தன்னிலை உணர்ந்தவள், 

அப்போது தான் கார்த்திக்கின் மீது சாய்ந்து கொண்டிருப்பது மூளைக்கு  உரைத்திட, தீயை தொட்டது போல் சட்டென அவனை விட்டு விலகி நின்றாள். 

நடந்த நிகழ்வில் ரேவதியின் முகம் கன்றி சிவந்து போய் இருக்க, அவஸ்தையுடன் அங்கே நின்றிருந்தாள்..

கார்த்திக்கின் முகத்தை பார்க்க வேண்டுமே,  பூவையை அணைத்த ஆனந்தத்தில் இருளை கிழித்துக் கொண்டு வந்த ஆதவனின் ஒளியை போல பிரகாசத்தை வாரி இறைத்து சிரித்துக் கொண்டிருக்க, அவளுக்கு தான் பத்திக் கொண்டு வந்தது... 

அவனை எதிர்க் கொள்ள முடியாமல்  “சா… சாரி…  … தெரியாமல் …” மன்னிப்பை கூட முழுமையாக அவன் முகம் பார்த்து கேட்க  முடியாது அவஸ்தையாகி போனதில் தலையை வேறுபக்கமாக திருப்பிக் கொண்டாள்.

சன்ன சிரிப்பை இதழ் வளைவில் படர விட்டவன், 

“நீ தெரிஞ்சே இது எல்லாம் பண்ணலாம் ரேவதி… உனக்கு இல்லாத உரிமை வேற யாருக்கும் இல்லை…”  நெஞ்சை தடவிக்கொண்டே உல்லசாமாக வந்த நாயகனின் குரலில்  தவிப்பாக அவனை பார்த்தவள் “நான் போறேன்” என்றபடி அங்கிருந்து விறுவிறுவென  சென்று விட்டாள்.

இதழ் குவித்து காற்றை ஊதி வெளியேற்றியவனுக்கும் அப்போதுதான் சீராக மூச்சு வந்தது. அவள் சாய்ந்த நெஞ்சை மெல்ல தொட்டு  தேய்த்துக் கொண்டவனுக்கு முகம் ழுவதும் புன்னகையின் ரேகை தான்….. இது போதுமே அவளை தன் வாழ்க்கைக்குள் கொண்டு வந்து விடுவதற்கு…

ஆனால் அதெல்லாம்  ராகவ்வை நினைத்த மாத்திரத்தில் எங்கோ தூரப் போய் விட்டது… “உனக்கு இருக்குடா” அவனை நினைத்து பல்லை கடித்தவன் மதுரையில் இருக்கும் தன் நண்பனுக்கு அழைத்து பேசிவிட்டு வைத்தான்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro